சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 1)

“அகப்பை பிடித்த கரங்கள் உலகை ஆளும் கரங்களாகும்”

                     வில்லியம் ரோஸ் வெலஸ்

என்னைப் போன்ற அதிகமான இலங்கையர்களுக்கு இந்த அடை மொழியானது இலங்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். பெண்கள் சமூக வாழ்க்கையில் பல பாத்திரங்களை சிறப்பான முறையில் ஏற்று நடத்தி பல்வேறு விதமான பங்களிப்புக்களை செய்து வருகின்றார்கள் என்பதற்கு இலங்கையில் வரலாற்றில் நிறைய ஆதாரங்களை காண முடிகின்றது. இலங்கையின் வரலாற்று மூலாதாரமாக கருதப்படும் ‘மஹாவம்சத்தின்’ படி இலங்கையில் பெண் ராணி ஒருவர் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருப்பதன் மூலம் சமூக வாழ்க்கையில் எந்தளவிற்கு முக்கியமானவர்களாக பெண்கள் இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.  இலங்கையில் அண்மைக் காலம் வரையில் கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்த சிவில் யுத்தம் மக்களது வாழ்க்கைக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக அமைந்துவிட்டது. அதன் காரணமாக பெண்கள் அவர்களது சொத்து செல்வங்களை இழந்தது மாத்திரமன்றி பயங்காரவாத செயற்பாடுகள் காரணமாக சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் அவசியம் பற்றி பேசப்பட்டு வந்ததால் இலங்கை சர்வதேச அவதானத்தை ஈர்த்துள்ள ஒரு தேசமாக மாறி இருக்கின்றது.

 

சமகால சர்வதேச முறையானது உள்ளக மற்றும் வெளியிலான அரச மட்ட முரண்பாடுகள் எந்தளவிற்கு எமது சமூகத்தை சூழ்ந்திருக்கின்றது என்ற தகவல்களை வழங்குவதாக இருக்கின்றது. உண்மை எதுவென்றால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களே அதிகமாக பல்வேறு விதமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடியும். சமூகத்திற்குள் காணப்படுகின்ற பெண்கள் மீதான நெருக்குதல்கள், புறக்கணிப்புக்கள் போன்ற ஓரங்கட்டல்கள் காரணமாக அவர்கள் வன்முறைகளுக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனாலும் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பெண்களே மிக முக்கியமான பங்காளிகளாக இருந்து வருவதோடு குறிப்பாக இலங்கை போன்ற யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நாட்டில் அரச சார்பற்ற தூதுவர்களாவர்.

இந்த விடயம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பரவலாக பேசப்படுகின்ற விடயம் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி 30 வருட காலமாக சிவில் யுத்தம் நடைபெற்ற ஒரு நாடு என்ற வகையில் பெண்களை சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுக்க தகுதியானவர்களாக ஈடுபடுத்த முற்படுகின்ற போது அரச மட்ட மற்றும் சிவில் சமூகத்திலும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

பயங்கரவாதமும் பெண்களும் : 30 வருட யுத்தத்தின் மறு பக்கம்

வடக்கில் நடைபெற்ற பிரிவினைவாத இன முரண்பாட்டு சூழ்நிலை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் இலங்கையில் இந்த முரண்பாடு காரணமாக பெண்கள் ஐந்து விதமான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்ததாக கலாநிதி ராதிகா குமாரசுவாமி ஆய்வு செய்திருக்கின்றார். நேரடியான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் கற்பழிக்கப்பட்டும், வன்முறைகளின் போது கொலை செய்யப்பட்டும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக இடம் பெயர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் இந்த பாதிப்புக்கள் உள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் அவர்கள் பற்றி தேடிப்பார்த்தால் அதிகமான பெண்கள் யுத்தம் காரணமாக கணவனை இழந்த விதவைகளாக உள்ளனர். மற்றும் ஏனைய சமூக பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாலியல் தொழிலாளர்கள் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இறுதியாக உள்நாட்டில் இடம்பெற்ற ஆயுத முரண்பாட்டுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களாக  நேரடியாக ஆயுதம் ஏந்திய படை வீராங்கனைகளாகவும் மாறியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலப்பகுதியில் பெண்கள் இவ்வாறான துயரங்களை சந்தித்தமை புதிய விடயமாக இருக்கவில்லை. யுத்த பிரதேசங்களில் வாழ்ந்த யுவதிகளை பலவந்தமாக அல்லது விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆயுத போராட்ட குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு அவர்கள் தற்கொலை குண்டுதாரிகயாகவும் பயன்படுத்தப்பட்ட சந்தர்பப்ங்களும் உள்ளன. அதிகமான பெண்கள் புலிகளில் அமைப்பில் இணைந்தது அவர்களது நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பவர்களாகவும்  ஆயுத போராட்ட களத்தில் போராடும் பெண் போராளிகளாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டமையானது பல்வேறு விதமான ஊக்குவிப்புக்களின் அடிப்படையிலாகும் என்று குமாரசுவாமி தெரிவிக்கின்றார். இவ்வாறாக பார்க்கும் போது பெண்கள் போராட்ட களத்திற்கு பொருத்தமானவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட சூழ்நிலையானது சிவில் சமூகத்தை ஆயுத மயப்படுத்தலுக்கு உட்படுத்திய புதிய நாகரீகத்தை ஏற்படுத்திய சந்தர்ப்பமாகும என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts