மத சுதந்திரத்திற்கான உரிமை ஏனைய மனித உரிமைகளுடன் முரண்படுகின்றதா?
தாம் விரும்புகின்ற மதத்தை ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றுவதற்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமையானது மனித அடிப்படை உரிமையாகும். அதே போன்று எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்வதற்கும் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு சுதந்திரம் இருக்கின்றது. மதமானது மனிதனில் இருந்து பிரிக்க முடியாத ஒரு விடயமாகும். மதத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவானது வரலாற்று காலம் தொட்டு இருந்து வருகின்ற மனித நடத்தையாகும். மதத்தை பின்பற்றுவதையும் மனிதனின் தனிப்பட்ட உரிமை ஆகிய இரண்டையும் முரண்படாது கடைபிடிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் அதன் முன்னுரையில் “மனிதர்களது குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரதும் கௌரவம் மற்றும் பிரித்து நோக்க முடியாத ஒவ்வொரு உரிமையையும் ஏற்றுக்கொள்வது உலக சமாதானத்தின் அடிப்படையாக அமைவதோடு மனித உரிமைகளை புறக்கணிப்பது, மதிக்காமல் நடந்துகொள்வது என்பது மிலேச்சத்தனமான செயலாக அமைவதோடு பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமானது எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் அச்சம் பீதி என்பவற்றுக்கு உள்ளாகாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது மனிதர்களது மிக உயர்வான எதிர்பார்ப்பாகும். எல்லா பிரஜைகளுக்கும் அவர்களது விருப்பத்திற்கமைய விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கும் உள்ள சுதந்திரம் மற்றும் மனச்சாட்சிக்கமைவாக சிந்திப்பதற்கும் உரிமை பெற்றுள்ளனர் என்று இலங்கையின் அரசியல் அமைப்பின் 12 ஆவது சரத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அவ்வாறே இன்னும் பல பிரிவுகளின் மூலம் சுதந்திரமாக சிந்திப்பது, மதங்களை பின்பற்றுவது கடைபிடிப்பது மற்றும் வாழ்வது தொடர்பாக பிரசைகளது உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கையானது பல்லின பல மதங்களை கொண்ட நாடாகும். இங்கு பல மதங்களுக்கிடையில் ஒன்றிணைந்த சகவாழ்வு, பரந்த செயற்பாடு நிலவுவதைப் போன்று அவ்வப்போது சில வகையான வேறுபாடுகளும் மன உளைச்சல்களும் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இலங்கை சமூக நிலையில் இவ்வாறான இன மற்றும் மத ரீதியான அடையாளம் மிகவும் பிரதான இடத்தை வகிப்பதோடு அதனை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவது மற்றும் தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகளும் இடம்பெறுவதை காண முடிகின்றது. உள்நாட்டு சட்டங்களிலும் சர்வதேச சட்டங்களை அவதானித்தாலும் மத சுதந்திரம் தொடர்பான பரந்துபட்ட விடயதானத்திற்கு உட்பட்டதாக அரசியல் அமைப்பு மற்றும் வழக்கு தீர்ப்புகள் வரையில் அதிகாரம் இருக்கின்றது. அதற்குள் கடவுள் வாதிகள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தல், மத சுதந்திரத்தை சட்ட அடிப்படையில் மட்டுப்படுத்துவது உட்பட அதனோடு சம்பந்தப்படும் வகையில் ஆலோசனை வழிகாட்டல்கள் மரபு ரீதியான மற்றும் மத விழுமியங்களின் அடிப்படையிலான அறிவுரைகளாகவும் உள்ளன.
இவ்வாறாக பலவிதமான சட்டங்கள் வாயிலாக பாதுகாக்கப்பட்டு வருகின்ற மத சுதந்திரம் தற்போதைய சூழ்நிலையில் நெருக்கடிக்கு உள்ளாகிய நிலை இருந்து வருகின்றது. சட்டத்தின் மூலமான மத சுதந்திரத்தையும் உரிமையையும் பின்பற்றுவது கடைபிடிப்பதில் தனிநபர் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அதற்கான பொறுப்புணர்ச்சி போன்ற விடயங்களில் மூன்றாம் தரப்பினரின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு விதமான தலையீடுகள் காரணமாக அது தொடர்பான உரிமைகள் மீறப்பட்டு வருவதால் இத்தகைய நெருக்கடி நிலை உருவாகி இருக்கின்றது. மறுபுறமாக அரச நடத்தை மற்றும் சட்டத்திற்கு மத செயற்பாடுகளில் தலையிடுவதானது பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறலாம். மதம் அல்லது நம்பிக்கைகளை கடைபிடிப்பது தொடர்பாக அரசாங்கம் விஷேடமான சட்டங்களை பிறப்பிக்கா விட்டாலும் ஒரு மதப் பிரிவினரை அல்லது சமூகத்தின் மீது வன்முறைப் பிரயோகம் அல்லது தொந்தரவுகளை ஏற்படுத்தும் மதப் பிரிவினரை அல்லது குழுவை கட்டுப்படுத்தி பாதிக்கப்படும் மத பிரிவினரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.
பலவிதமான மத செயற்பாடுகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் மனிதர்களது கருத்து வெளியிடும் உரிமை பாதிப்புக்கு உட்பட்டிருக்கின்றது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மதம் சம்பந்தான எதிர்ப்பு மனப்பான்மையற்ற நியாயபூர்வமான கருத்து வெளியீட்டுக்கான தணிக்கை, ICCPR சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுவது தொடர்பாகவும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தி உயர்வாக கவனிப்பது போன்ற நிலைமைகளையும் காணலாம் 2003 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உயர் நீதிமன்றத்தின் அறிக்கையை அவதானிக்கும் போது ஒரு மதத்தை ஏற்கும் உரிமையை மதித்தல், பாதிகாப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள், மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமையை அரசியல் அமைப்பு அங்கீகரிக்க தவறிவிட்டது என்ற அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் அல்லாத மதக் குழுக்களின் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஒன்றின் ஊடாக அங்கீகரிக்கும் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. சர்வதேச சட்டம் மூலம் அந்த உரிமை பாதுகாக்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு மதத்திற்கு மதமாற்றம் செய்வது, அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமையாகுமா என்பது தொடர்பாக இலங்கை சட்டத்திற்குள் சர்ச்சை நிலவி வருகின்றது.
மத ஸ்தலங்களை பதிவு செய்தல் தொடர்பாகவும் இலங்கையில் காணப்படுகின்ற வழிகாட்டல்களில் தெளிவானதொரு குறைபாடு காணப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் மக்களின் தேவைக்கு மிஞ்சிய மத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் மனிதாபிமானமற்ற முறையிலானதும் வன்முறை சூழ்நிலைகளும் தலைதூக்கியதை காண முடிந்தது. பல சந்தர்ப்பங்களில் இங்கு ஏற்பட்ட வன்முறைகள் போது மத விடயங்கள் அவற்றுக்கு வழிவகுத்த அடிப்படை காரணியாக அமைந்துள்ளன. தனி நபர் உரிமை அல்லது சுதந்திரங்களை எல்லை கடந்த நிலையில் பயன்படுத்த முற்பட்டமை, இனம் தொடர்பான கவனிப்புக்கள், குறிப்பிட்ட பிரதேசங்களில் குறிப்பிட்டதொரு மதத்திற்கான முக்கியத்துவம், கூடுதல் கவனிப்பு, அதன் காரணமாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சட்ட ஆட்சியின் உரிய கவனம் செலுத்தப்படாமை, பொறுப்புக் கூறல் அல்லது நிறைவேற்று அதிகாரம், தனிப்பட்ட கவனிப்பு, ஊடக நடத்தை, வெறுப்பூட்டும் கதைகள் பிரச்சாரங்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கியத்துவம், போன்றவைகள் இவ்வாறான நிலைமைகள் வலுவடைய காரணமாக அமைகின்றன. மதம், அந்த மத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் தொடர்பாக சட்டங்களில் காணப்படுகின்ற வேறுபாடுகள் காரணமாக நடைமுறையில் உள்ள சட்டங்கள் எப்போதும் நடைமுறைக்கு பொருந்தக்கூடியதாக அமைய வேண்டும். அவ்வாறான நிலைமைகள் இல்லாவிட்டால் தொடரும் நெருக்கடி நிலைமைகள் மேலும் விரிவடைவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.