கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சுகாதார தொடர்பாடலும் ஊடகங்கள் மீதுள்ள பொறுப்பும்

கொவிட் 19 வைரஸ் என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச சமூகம் அச்சம், பீதி, மன உளைச்சல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களாக அதில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல வருடங்களுக்கு இவ்வாறான வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுர்ணர்கள் நம்புகின்றனர். கொரோனாவை மக்கள் மத்தியில் இருந்து ஒழித்துக் கட்டுவது எவ்வாறாக இருந்தாலும் இந்த தொற்று பரவல் நிலைக்கு எப்படியேனும் முகங்கொடுக்கும் நிலையில் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக அதனை தோற்கடிக்கும் வரையில் நாம் அதனோடு இணைந்தவர்களாக வாழ்வதா? அல்லது உலகில் அனைத்து நடவடிக்கைகளையும் தடையின்றி அவ்வாறே மேற்கொள்வதோடு அவ்வாறான ஒரு நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதா என்ற பிரச்சினை இன்றைய சர்வதேச சமூகம் எதிர் நோக்குகின்ற பாரிய சவாலாக மாறி இருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் சர்வதேச சமூகம் இன்று இரண்டாவது மாற்று வழியை தேர்ந்தெடுத்து இருக்கின்றது. சற்று கடினமானதாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் உலகிற்கு மிகவும் பொருத்தமான வழிமுறையாக அது அமைகின்றது.

அத்துடன் கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு அல்லது முற்றாக ஒழிப்பதற்கு ஏற்ற விதமாக மருந்து வகைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் (ஊசி) இங்கிலாந்தில் ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டு பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது என்ற செய்திகள் மக்களை ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கின்றது. ஆனாலும் அத்தகைய மருந்து வகைகளை இன்னும் சிறிது காலத்திற்கு பரிசோதனை செய்ய வேண்டி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. 

இவ்வாறு எதிர்பார்ப்புக்களை சுமந்தவர்களாக உலகில் முன்னோக்கி செல்லும் மக்கள் இன்னும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் உத்தியோக பூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையிலும் மருந்து வகைகளை கண்டறிதல், பரிசோதனைகள நடத்துதல், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில வகையான முயற்சிகள் விஞ்ஞான பூர்வமானதாக அமைவதோடு சில முயற்சிகள் மரபு ரீதியான வழக்காறுகளை அல்லது பாரம்பரிய முறைகளை அடிப்படையாகக் கொண்ட முறைகளாகும். அதில் முக்கியமானதாக ஆயுள்வேத மருத்துவமுறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. எவ்வாறாயினும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது. அவ்வாறான பலவிதமான உள்நாட்டு மரபு ரீதியாக வழிமுறைகளை பின்பற்றிய பானங்கள், கை மருந்துகள் தொடர்பாக மக்களது ஈடுபாடு அதிகரித்திருக்கின்றது. அவற்றால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.

எவ்வாறாக இருந்தாலும் கொரோனா வைரசை தோற்கடிக்கும் பானம், வைரசை அழிக்க வல்ல மருந்து, உள்நாட்டு கண்டுபிடிப்பு, கைமருந்து, கொரொனாவுக்கு விரைவான நிவாரணம் வழங்கக்கூடிய ஆயுள்வேத மருத்துவமும் வைத்தியர்களும் என்ற அடிப்படையில் எல்லாம் மரபு ரீதியான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கூடுதலான இடங்களை ஒதுக்கி கலந்துரையாடும் நிலைமைகள் அதிகரித்துள்ளன. ஏதோ ஒரு வகையில் ஏதாவதொரு நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கின்ற மக்களுக்கு இத்தகைய கதைகள் ஒருவிதமான சுவாரஷ்யத்தை ஏற்படுத்தலாம். பல்வேறுவிதமான சுதேச மருந்து வகைகள், பரீட்சார்த்த முயற்சிகள் என்றெல்லாம் மேற்கொள்ள முடிந்தாலும் கொவிட் 19 வைரஸ் தொற்றிற்காக என்று மருந்து கண்டுபிடிப்பதற்காக பரிசோதனைகளை மேற்கொண்டதன் பிரதி பலனாக கண்டுபிடித்துள்ள மருந்துகைள உத்தியோக பூர்வமான முறையில் இன்னும் சிபாரிசு செய்யவில்லை.

இவ்வாறான ஒரு நிலைமையில் கொவிட் 19 வைரசின் முன்னிலையில் இதுவரையில் எந்தவிதமான நம்பிக்கை தரக்கூடியதுமான மருந்துகள் இல்லாத நிலையில் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்துவது அல்லது ஏற்படுவதானது தற்போதைய நிலைமைகளுக்கு முகம் கொடுப்பதில் கடினமான நிலைமையை ஏற்படுத்தலாம். அவ்வாறே இத்தகைய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் போது அரசாங்கம், சம்பிரதாய பூர்வமான ஊடகங்கள் ஆகியவற்றிற்கு அவ்வாறே புது ஊடகங்களுக்கு கணிசமான பொறுப்பு காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களுக்கு அரசாங்கம் அணுசரனை வழங்கும் போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் அல்லது உத்தியோக பூர்வமான அங்கீகாரம் வழங்கும் நிலை ஏற்படுகின்றது. சமூக ஊடகங்களில் இவ்வாறான நிலைமைகளை கண்காணிப்பது கடினமானதாக இருந்தாலும் மரபு ரீதியான ஊடகங்களால் அந்த நிலைமைகளை ஏதோ ஒருவகையில் கண்காணிப்பு அல்லது முகாமைத்துவம் செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. மக்கள் கஷ்டத்தில் இருக்கின்ற சந்தர்ப்ப சூழ்நிலையில் சுகாதார தொடர்பாடலில் (Health Communication)   எல்லா ஊடகங்களும் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக அறிக்கையிடுவது தொடர்பாக தமக்குள் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது. உண்மையாக சொல்வாதாக இருந்தால் ஊடகங்கள் மக்கள் மனதில் தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடாது. அது இன்றைய கால கட்டத்தில் ஊடக செயற்பாட்டில் மிகவும் முக்கியமான தேவையாகும். இத்தகைய நிலைமைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தாமல் உதாசீனப் போக்குடன் நடந்து கொள்வதானது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அமையும் எனலாம்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts