சமூகம்

மடு பௌத்த விகாரை பௌத்தர்களது மேலதிக்கத்தை வெளிப்படுத்துவதல்ல இது!

சரத் மனுல விக்கிரம

“நான் ஐ.தே.க. வை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். இந்த பிரதேச சபையில் மாவட்டம் முழுவதற்குமாக ஐ.தே.க.வை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரே தமிழ் பிரதி நிதியாக நான் இருக்கின்றோன். ஏனைய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சோந்தவர்களாவர்.”

நெற்றியில் மஞ்சல் பொட்டு ஒரு மதத்தின் அடையாளமக அன்றி வடக்கின் ஐக்கியத்தின் அடையாளமாகும். பௌத்த மதத்தில் போதிக்கப்படுகின்ற சில விடயங்கள் தமிழ் மொழியிலும் ஒன்றாக ஒற்றுமை உள்ளவைகளாக இருக்கின்றன. மதத்தின் அடிப்படையில் அல்லது மொழியால் வேறுபட்டு ஒன்றாக வாழ மறுக்கும் மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட கதையாக இந்த விடயம் அமைகின்றது.
மன்னார் மாவட்டத்தில் மடுவில் பிறந்தவரே 73 வயதுடைய குமாரிஹாமி. யுத்த காலத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி வேறுபிரதேசத்தில் வாழ்ந்தாலும் சொந்த இடமான மன்னார் விக்கிரமபுர பகுதிக்கு மீண்டும் 2010 ஆம் ஆண்டு திரும்பி வந்துள்ளார். மடு தேவாலயத்திற்கான மன்னார் மதவாச்சி வீதியில் அந்த இடம் அமைந்திருக்கின்றது.

இந்த பிரதேசம் வடக்கு நோக்கியதாக மறுபக்கத்தில் மல்வத்து ஓயா அமைந்திருக்கின்றது. அந்த வழியானது மடுவுக்கான பாதைய என்று அழைக்கப்படுகின்றது. 66 வயதுடைய பிரேமவதி அவளது தாயான குமாரிஹாமியுடன் வாழ்ந்து வருவதோடு அவர் தெரிவிக்கையில் கூறியதாவது  “அநுராதபுரத்தில் இருக்கும் மல்வத்து ஓயா ஸ்ரீ மஹா போதியை நினைவு படுத்துவதோடு அவளுக்கு அண்மையில் இருக்கும் கிறிஸ்தவர்களை மடு தேவாலயம் நினைவு படுத்துவதாக இருக்கின்றது.
இங்குள்ள நிலைமைகளானது முற்றிலும் வேறுபாடானதாகும். பௌத்தர்கள், இந்துக்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தேவாலயத்திற்கு செல்வது இங்கு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்து வருகின்றது. இப்பிரதேசத்தில் ஒரு சில முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களும் இவர்களோடு இணைந்து பொதுவான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பிரதான ஜீவனோபாயம் வியாபாரமாகும். இந்த இனங்களுக்குள் 50 சிங்கள குடும்பங்கள் அளவில் வாழ்ந்து வருவதோடு அவர்கள் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். நாங்கள் அனைவரும் இன்ப துன்பங்களை ஒன்றாகப் பங்கெடுத்து பகிர்ந்து கொள்கின்றோம்.

மக்கள் நலன்களில் மிகவும் கரிசனையுடன் ஈடுபட்டு வரும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு சமூகத் தலைவராக சிரான் இருந்து வருகின்றார். அவர் சிரான் என்று அழைக்கப்பட்டாலும் அவரது முழுமையான பெயர் ஞானப்பிரகாசம் மரியசிரான் என்பதாகும். அவர் நானாட்டான் பிரதேச சபையின் ஒரு உறுப்பினருமாவார். இவர் முஸ்லிம், சிங்களவர் என்ற இன மத பேதங்களும் பாராமல் அனைவரதும் தேவைகளுக்கும் உரிமைகளுக்குமாக குரல் கொடுக்கக் கூடிய ஒரு சமூகத் தொண்டனாக இருந்து வருகின்றார். மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகின்ற நிதியை அவர் பள்ளிவாயல்கள், தேவாலயங்கள் மற்றும் விகாரைகளை புனரமைப்பதற்காக செலவிட்டு வரும் ஒருவராகவும் இருக்கின்றார்.
“நான் ஐ.தே.க. வை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். இந்த பிரதேச சபையில் மாவட்டம் முழுவதற்குமாக ஐ.தே.க.வை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரே தமிழ் பிரதி நிதியாக நான் இருக்கின்றோன். ஏனைய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சோந்தவர்களாவர். அவர்களது கட்டுப்பாட்டிலே இப் பிரதேசசபை இருக்கின்றது. எனது செயற்பாடுகள் அல்லது நிதி பயன்படுத்தல்களில் அவர்களது கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை. அதனால் நான் இந்த பிரதேசத்தில் நிலவும் பலவிதமான குறiபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை முன்வைக்கிறேன். அப்போது ஒரே ஒரு அமைச்சு மாத்திரம் அதற்கு சாதகமான பதிலை கூடியதாக இருக்கின்றது. அது மனோ கணேசனின் அமைச்சாகும். அந்த அமைச்சின் நிதியால் நான் பௌத்த விகாரைகளுக்கும் உதவிகளை செய்தேன். இந்த மாகாணத்திற்கு அதிகமான வேலைகள் செய்யப்பட வேண்டிய தேவை இருந்து வருகின்றது” என்று சிரான் குறிப்பிட்டார்.

இனங்கள்  ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய ஒரு மத்திய நிலையமாக இருந்து வருகின்றது.

போதி ரஜமகா விரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியை திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த பௌத்த பிக்கு குறிப்பிடுகையில் இந்த பௌத்த விகாரையானது பௌத்தர்களது மேலதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு இடமாகவன்றி எல்லா இனங்களும் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய ஒரு மத்திய நிலையமாக இருந்து வருகின்றது என்றார். அபயகிரிய பூர்வாராமய விகாரையின் பிரதம பிக்குவான சங்கைக்குரிய பொதானே தம்மானந்த தேரர் பேசுகையில் போதிராஜ விகாரையானது வடக்கில் நல்லிணக்கத்தின் அடிப்படையில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடும் இடமாக இருந்து வருவதாக தெரிவித்தார்.

“ நாட்டில் யுத்த சூழல் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டதே இந்த விகாரையாகும். யுத்த காலப்பகுதியிலும் கூட யாரும் இந்த விகாரையை சேதப்படுத்தவோ அழிக்கவோ இல்லை. அதற்குக் காரணம் இந்த இடம் எல்லா மக்களுக்கும் இனங்களுக்கும் உரிய இடமானதால் ஆகும். மடு பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ போதிராஜ விகாரைக்கு நீண்ட காலமாகவே பக்தர்கள் உதவிகளை செய்து வருவதோடு அங்குள்ள தேரர்களும் அவர்களுடனான உறவை பலமான முறையில் பேணி வருகின்றனர். எந்தவிதமான வேறுபாடுகள் இல்லாத முறையில் இப்பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த பௌத்த விகாரைக்கு வழிபாட்டிற்காக வருகின்றனர். இங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். படையினர், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரசியல்வாதிகள் என்று அனைவருமே இந்த விகாரைக்கு உதவிகளைச் செய்து வருவதாக பொத்தனே தம்மானந்த தேரர் தொவிக்கின்றார். சங்கைக்குரிய பாரதி நாயக்க தேரர் குறிப்பிடுகையில் இந்த இடமானது பௌத்த மக்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக இருந்து வருகின்றது. பிரதானமாக மத விவகார சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவது போன்றே வடக்கில் இருந்து வரும் மக்களுக்காக ஏனைய சமூக சேவைகளும் இங்கிருந்து மேற் கொள்ளப்படுகின்றது” என்றார்.

mariyasiran-offering-alms

அத்துடன் கொஸ்கொட ரத்னசீல தேரர் மற்றும் மஹா சங்கத்தை சேர்ந்த ஏனைய பிக்குகள் ஆகியோரும் இங்கு தொடர்ச்சியாக விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவியாளர்கள், பொலீஸ் மற்றும் ஆயுதப் படையினரின் உதவிகளுடன் இந்த விகாரையின் தாதுகோபுரம் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு செய்து திறந்து வைக்கும் நிகழ்வுக்கு மன்னார் பிராந்திய பொலீஸ் பொறுப் பதிகாரியான பந்துல வீரசிங்க, பிரிவு 542 இன் இராணுவ அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அன்றைய நிகழ்வுக்கு எல்லா மதங்களையும் சேர்ந்த மக்கள் வேறுபாடுகள் இன்றி கலந்து கொண்டதோடு பிக்குமாருக்கு தானமும் வழங்கி பகல் போசனம் அருந்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts