சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தேசிய கீதத்தின் மொழி மற்றும் நெருக்கடியின் தன்மை பற்றிய கேள்வி (பகுதி 2)

தனுஷ்க சில்வா

D.S. சேனநாயக்காவின் அமைச்சரவையில் G.G. பொன்னம்பலம் மற்றும் C.சிற்றம்பலம் ஆகிய இரு தமிழர் அமைச்சர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டவுடன் தேசிய கீதத்திற்கு பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிஞர் பண்டிதர் M. நல்லதம்பி இந்த பணியை ஏற்றுக் கொண்டதுடன் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பையும் உருவாக்கினார்.

பிப்ரவரி 4, 1952 மற்றும் சிங்கள மொழியில் நமோ நமோ மாதா கீதம் அதிகாரப்பூர்வ தேசிய கீதமாக பாடப்பட்டதுடன், நமோ நமோ தாயே தமிழ் மொழிபெயர்ப்பு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் பாடப்பட்டது. . 1954 இல் சர் ஜான் கொத்தலாவல யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, பிரதமரை வரவேற்க தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பாடப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் ஆரம்ப வைபவத்தில் கூட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முன்னிலையில் தேசிய கீதம் இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் விக்கிபீடியா பின்வருமாறு கூறுகிறது, “இலங்கையின் தேசிய கீதத்தின் வரிகள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது முதலில் சிங்கள மொழியில் எழுதப்பட்டது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பு பெரும்பாலும் தமிழ் பெரும்பான்மை பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளில் சில நேரங்களில் பாடப்படுகிறது”. இலங்கையின் தேசிய கீதத்தின் உள்ளடக்கம் குறித்து கேட்டபோது, பிறக்கும் குழந்தையை லங்கா என்ற தாயுடன் ஒன்றிணைக்கும் தேசபக்தி ஒளி என்று அர்த்தப்படுகின்றது. எனவே, தேசிய கீதத்தின் உள்ளடக்கத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவோ அல்லது எதிர்க்கவோ எந்த காரணமும் இல்லை. பெரும்பாலும் அவர்களின் எதிர்ப்பு, அவர்களுக்கு நன்கு தெரியாத மொழியில் தேசிய கீதத்தை பாடுவதாலாகும்.

சிங்களமயமாக்கல்

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பல தசாப்தங்களாக தேசிய கீதம் பாடப்படுகிறது. அசல் சிங்கள கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பல அரச மற்றும் உத்தியோகபூர்வ விழாக்களில் இசைக்கப்பட்டது. தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படாதபோது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கூட இந்த விடயத்தில் அதிக புத்திசாலித்தனமாக இருந்தன. அஜித் திலகசேனா தனது மொழி நெருக்கடியின் பாதை என்ற புத்தகத்தில், இலங்கையின் நெருக்கடி ஒரு இனம் தொடர்பானதல்ல, ஆனால் மொழி தொடர்பான நெருக்கடியாகும் எனக் கூறுகின்றார். எனவே, 80 களில் இருந்து 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை, தமிழில் தேசிய கீதம் பாடுவது போர் காரணமாக நிறுத்தப்பட்டது.

போருக்குப் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட மொழி இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான உண்மையான விருப்பத்திலிருந்து அல்லாது அரசியல் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் 8, 2010 அன்று, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை பத்திரம் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ரத்துசெய்து சிங்கள மொழியில் மட்டுமே பாடுவதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டது. சிங்கப்பூர் சின்னம் தேசிய கொடி மற்றும் தேசிய கீத சட்டத்தின் பிரிவு 11 (6) இல் பொறிக்கப்பட்டுள்ளது, அதில் யாராவது தேசிய கீதம் பாடினால், அது உத்தியோகபூர்வ பிரதிக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இலங்கை உத்தியோகத்தர்கள் இலங்கை சட்டத்தின்படி இந்தச் சட்டத்தை இயற்றினர். சட்டத்தின் சாராம்சம் குறித்து உங்களுக்கு சரியான புரிதல் இருந்ததா? இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சிங்கப்பூரின் பெரும்பான்மையான மக்கள் (75.2%) சீனர்களாக இருக்கின்ற அதே நேரத்தில் சிங்கப்பூர் மஜுலா சிங்கபுர (சிங்கப்பூர் தேசிய கீதம்) பாடப்பட்டமையும் முதலில் இயற்றப்பட்டதும் மலாய் மொழியிலாகும். தேசிய கீதம் ஆங்கிலம், மண்டரின், சீன மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இருப்பினும், அரச விழாக்களில், சிறுபான்மையினர் மலாய் மொழியில் பாடுகிறார்கள்.

மொழி நெருக்கடி ஒரு காலத்தில் காலனித்துவப்படுத்தப்பட்ட பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. கனடா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில், மக்கள் சிறுபான்மை சமூகங்களை நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தி தங்கள் தேசிய கீதங்களை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பாடுகிறார்கள். மொழிபெயர்க்கப்பட்ட தேசிய கீதத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த பல நாடுகள் அனுமதித்துள்ளன. சிங்களம் என்பது இலங்கையில் பெரும்பான்மையினரின் மொழி மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உத்தியோகபூர்வ அரச மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதற்கான உரிமையைப் பறிப்பது அவர்கள் மீதான தாக்குதலாகும். மக்களை பிரிப்பதற்கான அழுத்தம் இதுவாகும். 2010 இல் தேசிய கீதத்தை சிங்களமயமாக்க முடிவு செய்த அரசாங்கத்திடம் இரவல் வாங்கிய சட்டத்தில் சாய்வதை விட தற்போதைய அரசாங்கம் அதன் முக்கியத்துவத்தை மறுபரிசீலனை செய்வது மிக முக்கியமாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts