Transparency தகவலறியும் உரிமை

தீர்க்கப்படாத யானை-மனித முரண்பாடு: யானைகளை விரட்டுவதற்கு ரூ .720 மில்லியன் செலவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014 முதல் 2020 வரை மட்டும் ரூ.722 மில்லியன்  பெறுமதியான பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவு பணம் செலவழித்த பிறகு நாம் அடைந்த விளைவுகளை நாம் கண்டறிய வேண்டும்.

மீதமுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளுக்கு போதுமான வாழ்விடம் இழக்கப்பட்டமையும் அவற்றுக்கு போதுமான உணவு இல்லாமையும் மனித-யானை மோதலை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைகள் உணவு தேடி கிராமங்களுக்கு வருகின்றன., அவை சொத்துக்களையும் உயிர்களையும் சேதப்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினையால் கிராமப்புற மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

பல தசாப்தங்களாக நீடிக்கும் மனித-யானை முரண்பாட்டிற்கு எந்த அரசாங்கத்தாலும் ஒரு அறிவியல் ரீதியான தீர்வைக் கொண்டு வர முடியவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் மின்சார வேலிகளை மட்டுமே கட்டி, கிராம மக்களுக்கு பட்டாசுகளை வழங்கினார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2014 முதல் 2020 வரை முரண்பாட்டுப் பகுதிகளில் 64 இலட்சத்து 68ஆயிரத்து 750 (6,468,750) பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் செலவழித்த தொகை 772 மில்லியன் ரூபாய்களாகும்.

2014 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டளவில் பட்டாசுகளின் பயன்பாடு 49% அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கையில் கடுமையான சமூக பிரச்சனையாக இருந்த மனித-யானை முரண்பாட்டிற்கு அறிவியல் ரீதியான தீர்வுகளை வழங்கத் தவறியமையானது பல ஆண்டுகளாக கணிசமான அளவு மனிதர் மற்றும் யானைகளின் உயிரிழப்புக்களை விலையாக்கியது. அதன்படி, 2019 ல், 407 யானைகளும் 122 நபர்களும் கொல்லப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் மட்டும், 327 காட்டு யானைகளும், 205 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் அதிக அளவில் விநியோகிக்கப்பட்ட போதிலும், மனிதன் மற்றும் யானையின் இறப்புகளின் இந்த அதிகரிப்பு இம்முரண்பாட்டிற்கு பட்டாசுகள் நிரந்தர தீர்வு அல்ல என்பதைக் காட்டுகிறது.

மேலும், வனவிலங்கு திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இலங்கை 6,000 யானைகளின் வாழ்விடமாக உள்ளது. யானைகளை விரட்டுவதற்காக விநியோகிக்கப்பட்ட பட்டாசுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​2014 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் ஒரு யானைக்கு 102 பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், காட்டில் வாழும் அனைத்து யானைகளும் கிராமங்களுக்குள் நடமாடுவதில்லை. காட்டு யானைகளில் 50 சதவிகிதம் மட்டுமே கிராமங்களுக்குள் உலாவித் திரியலாம் என்பதுடன் கிராமத்தில் உலாவித் திரியும் ஒரு யானைக்கென பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளின் உண்மையான எண்ணிக்கை 205 ஐ விட அதிகமாகும்.

வருடந்தோறும் பட்டாசு வாங்குவதுடன் இணைந்த மொத்தச் செலவு

வருடந்தோறும் வாங்கப்படும் பட்டாசுகளின் எண்ணிக்கை

அதிகளவான தொகையை செலவுசெய்து பட்டாசுகளை விநியோகிக்கும் மாவட்டம் அல்லது பிராந்தியத்தின் ஆய்வானது வருடந்தோறும் பட்டாசுகளின் பயன்பாட்டில் அதிகரிப்பைக் காட்டியது. அத்துடன் அந்த மாவட்டங்கள் அல்லது பிராந்தியங்களில் மனித-யானை முரண்பாடுகள் அதிகரித்திருப்பதையும் குறிக்கின்றது.

மாவட்டத்தால் வருடந்தோறும் பட்டாசுகள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன

பட்டாசுகள் ஒரு தீர்வு அல்ல

பட்டாசுகள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வாகும். ஆனால் பட்டாசுகளைப் பயன்படுத்தினாலும், அவற்றை பயன்படுத்தி இப்போது யானைகளை விரட்ட முடியாது என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

சூரியவெவ, மதுனகலவில் வசிக்கும் சுமனநந்த பின்வருமாறு தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்:

”நான் பல வருடங்களாக மதுனகலவில் வசிப்பவன். அந்தக் காலங்களில், யானைகளால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத காடழிப்பு காரணமாக, யானைகள் எங்கள் கிராமங்களுக்குள் நுழையத் தொடங்கின. வனப்பகுதிகளை அழித்ததால் யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதே அதற்கு காரணமாகும். அதன் பிறகு, யானைகளை விரட்டுவதற்காக பல ஆண்டுகளாக கிராமங்களில் பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டன. ஆனால் இப்போது, ​​நாம் பட்டாசுகளை கொளுத்தும் போது, ​​யானைகள் சிறிது நேரம் ஒளிந்திருந்துவிட்டு பின் திரும்பி வந்து பயிரை உண்ணுகின்றன. அவை தற்போது பட்டாசுகளுக்கு பழக்கமாகியுள்ளன. எனவே, பட்டாசுகளுக்கு இவ்வளவு செலவு செய்வது அர்த்தமற்றதாகும். அரச நிறுவனங்கள் வன ஒதுக்குகளைப் பாதுகாத்தால் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும். ”

அம்பலாந்தோட்டை கொகல்ல பகுதியைச் சேர்ந்த குணபால விதாரண, “நாங்கள் பல ஆண்டுகளாக யானை-மனித முரண்பாட்டால் அவதிப்பட்டு வருகிறோம். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. அந்திப்பொழுது முதல் அதிகாலை வரை யானைகளை விரட்ட வேண்டும். இரவில் எங்கள் பகுதிகளில் பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றதுடன், அதன் ஒலி யுத்தத்தைப் போன்றது. ஆனால் காலையில் நாங்கள் பார்க்கும் போது, ​​யானைகள் வீடுகளை உடைத்திருப்பதுடன் பயிர்களையும் அழித்துள்ளன. அவைகள் இப்போது பட்டாசுகளுக்குப் பழக்கமாகிவிட்டன.” என்றார்.

காட்டு யானைகள் பற்றிய ஆராய்ச்சியாளரான டாக்டர் பிருதுவிராஜ் பெர்னாண்டோ, பட்டாசு மூலம் யானை-மனித முரண்பாட்டிற்கு தீர்வு காண இயலாது என்கிறார்.

மக்களுக்கு பட்டாசு கொடுப்பதென்பது யானையுடன் முரண்பட்டு யானையை விரட்டுவதாகும். அது மனித-யானை முரண்பாட்டிற்கு மக்களை வழிப்படுத்துகின்றது. யானையை விரட்ட  வேண்டியிருக்கிறது. இருப்பினும், பட்டாசு வழங்குவது  அதிகரித்திருப்பதே பிரச்சினையாகும். அதாவது நாம் அதனை முழுமையாக சார்ந்திருக்கிறோம் என்பதே அர்த்மாகும். மற்றைய விடயம் என்னவென்றால், அது எந்தத் தீங்கும் விளைவிக்காத சத்தம் மட்டுமே என்பதை யானை கற்றுக் கொள்கின்றது. அதன் பிறகு யானை ஓடாது. அடுத்த விடயம் என்னவென்றால், நீங்கள் அந்த வகையில் யானைக்கு சவால் விட்டால், ஒருநாள் யானை திரும்பி பதிலடி கொடுக்கலாம். பின்னர் நீங்கள் உங்கள் உயிரைக்காக்க ஓட வேண்டும் அல்லது மிதிக்கப்பட்டு மரணமடைய வேண்டும். இதனை அனுபவித்த யானை, தான் மீண்டும் திரும்பி தாக்கினால் வெல்லும் என்பதை அறிகிறது. அப்படித்தான் நாங்கள் யானைகளை வன்முறையானவைகளாக ஆக்குகிறோம். மக்கள் சில நேரங்களில் காரணமின்றி பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், நாங்கள் பட்டாசுகளைப் பயன்படுத்தும் வரை முரண்பாடு அதிகரிக்கும்.

“இதற்கு சிறந்த தீர்வு மின்சார வேலியாகும். எங்கள் தோட்டம் அல்லது பண்ணைக்கு நல்ல மின்சார வேலியை உருவாக்க முடிந்தால் நாம் யானைகளுடன் மோத வேண்டியதில்லை. தற்போதுள்ள மின்சார வேலிகளின் இருபுறமும் யானைகள் உள்ளன, அதில் எந்த அர்த்தமும் இல்லை. ” என்று டாக்டர் ப்ருத்துவிராஜ் கூறினார்.

C:\Users\Sampath Deshapriya\Downloads\1.jpg

C:\Users\Sampath Deshapriya\Downloads\9.jpg

C:\Users\Sampath Deshapriya\Downloads\d2.JPG

Rs.720 Million Unresolved Elephant-Human Conflict

අලි එලවන්න කෝටි 72ක් වැය කරයි විසදුමක් නැති අලි මිනිස් ගැටුම

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts