கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தத்தமது பாடசாலைகளுக்கான கல்வி வலைத்தளம் உருவாக்குவது சிறந்து

அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ

நிகழ்நிலை கல்வி இலங்கையின் பரந்த சமுதாயத்திற்கு  மிகவும் புதியதாக இருந்தபோதிலும் உலகிற்கு புதியதல்ல. மார்ச் 2020 இல் கொவிட்-19 இனால் இலங்கைத் தீவு ஆக்கிரமிக்கப்படாவிடின் பெரும்பான்மையான இலங்கையர்கள் இன்னமும் நிகழ்நிலை கல்வியை அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக, கல்வி முறைமை முக்கியமாக நிகழ்நிலை கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், கல்வியின் நோக்கம் நிகழ்நிலைக் கல்வியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதை இது நாளுக்கு நாள் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.   

இலங்கையில் நிகழ்நிலைக் கல்விக்கு மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ தயாராக இல்லையென்றாலும், அது அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்நிலை கல்விக்குத் தேவையான உபகரணங்களின் விலை குறித்து பெற்றோர்கள் நினைத்திருக்கவில்லை. இன்று, நிகழ்நிலை கல்வி என்பது இலங்கையில் வளங்களை விநியோகிப்பதில் உள்ள சமத்துவமின்மைகளின் விரிவாக்கமாகக் கருதமுடியும். இலவசக் கல்வியின் நோக்கங்கள் மீறும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை நிகழ்நிலை கல்வி உருவாக்கியுள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

வினைத்திறனான நிகழ்நிலை கல்வியின் மட்டத்துக்கு இலங்கையில் வலையமைப்பு திறன்   மேம்படுத்தப்பட்டிருக்கவில்லை. இணைய தரவின் பயன்பாடு விரைவாக அதிகரித்ததுடன், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் தங்கள் திறன்களை விரிவாக்க இயலும். இருப்பினும், அவர்கள் இணைப்புத்திறனை மேம்படுத்தாமல் இணைப்புகளின் விற்பனையை அதிகரிப்பதனையே மேற்கொண்டனர். கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், கொழும்பு மாவட்டத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கும் கூட சரியான இணைய இணைப்பின் பற்றாக்குறை உள்ளது. நிகழ்நிலை கற்றலுக்கான சமிக்ஞையைக் பெறுவதற்காக சிலர் மரங்கள், பாறைகள் மற்றும் கூரைகளில் ஏற வேண்டுயிருக்கிறது. சேவை வழங்குநர்கள் தரவை பகல் மற்றும் இரவு ஒதுக்கீடுகளாகப் பிரிக்கும் தந்திரமான முறையை மாற்றவில்லை. இந்த நிறுவனங்கள் வகிக்கும் வகிபாகம் திருடர்களின் செயற்பாடுகளை ஒத்ததாகும். இன்று, பெற்றோர்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த நாளாந்த செலவுகளை இணைய தரவுகளுக்காக சுமக்கக்கூடும். மத்தியஸ்தம் செய்யக்கூடிய அரச நிறுவனங்கள் இருக்கின்றன, ஆனால் எவையும் சம்பந்தப்படுவதாக தெரியவில்லை. அரசுக்கு சொந்தமான ஶ்ரீ லங்கா ரெலிகொம் மூலம் நியாயமான விலையில் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. 

உபகரணங்கள் இல்லாதது மற்றொரு நெருக்கடியாகும். நிகழ்நிலை கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக வரைபட்டிகைகள்(Tab) மற்றும் மடிக்கணினிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே அதற்கான அணுகல் இருப்பதுடன், பெரும்பாலான மாணவர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். வரைபட்டிகை மற்றும் மடிக்கணினிகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் விலை குறைவாக உள்ளது. இருப்பினும், தொலைபேசி திரையின் சிறிய அளவு பிரச்சினைகளை உருவாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஆசிரியர்களால் காட்டப்படும் குறிப்புகளை ஸ்மார்ட் தொலைபேசி திரைகளில் எளிதாக வாசிக்க முடியாது. மேலும், ஆசிரியரின் ஒலியின் தரமும் கேட்பதற்கு மிகவும் மோசமாக உள்ளது. ஸ்மார்ட் தொலைபேசிகளை கண்களுக்கு மிக அருகில் வைத்திருப்பதால் பல மாணவர்கள் இப்போது பார்வை தொடர்பான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று கண் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிகழ்நிலை கற்றலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் நிகழ்நிலை கற்றலில் பங்கேற்க வேண்டிய நேரங்களும் உள்ளன. மூன்று மலிவான ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு பெற்றோருக்கு ரூ. 50,000 தேவைப்படலாம். பிள்ளைகள் பெற்றோரின் தொலைபேசிகளைப் பயன்படுத்தும்போது, ​​பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் தொலைபேசிகளை பிள்ளைகள் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வது எளிதல்ல. சில நேரங்களில், பெற்றோரின் வருமானம் ஈட்டும் செயற்பாடுகள் கைத்தொலைபேசிகளுடன் தொடர்புடையவையாகும். இது பெரியவர்களுக்கு சமூகத்துடனான உறவுகளைப் பேணுவதற்கான ஒரு முக்கிய கருவியாகும். உபகரணங்களை வாங்கிக்கொள்வதற்கு பெற்றோருக்கான பொருளாதார நெருக்கடி வழி வகுக்காது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆரம்ப வகுப்பு மாணவர்களின், குறிப்பாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகள் பல மணி நேரமாக தொடர்ந்து நடத்தப்படுகிறது. இத்தகைய பாடங்கள் பிள்ளைகளை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இந்த கட்டுரையின் எழுத்தாளர் சில வாரங்களுக்கு முன்பு கொழும்பு மாவட்டத்தில் வதரேகவில் கற்கும் மாணவர் தலைவலி மற்றும் பார்வை பிரச்சினைகள் குறித்து முறைப்பாடளித்தமையை அவதானித்தார். பெரும்பான்மையான பெற்றோர்கள் ஏதோ ஒருவிதமான கற்பித்தலால் மகிழ்ச்சியடைகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகளின் மனதிலெழும் இந்த வகையான அழுத்தமான கற்பித்தலின் பயங்கரமான தாக்கத்தை புறக்கணிக்கிறார்கள். 

பிரச்சினைகள் இருந்தாலும், நிகழ்நிலை கல்வியை எங்களால் கைவிட முடியாது. புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், நிகழ்நிலை கல்வி வகுப்பறை கற்பித்தலுக்கு ஒரு துணைக்கருவியாக இருக்கும். தொலைதூரக் கல்விக்காக தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் அனுபவத்தை நாங்கள் கொண்டிருந்தால், நிகழ்நிலை கல்வியுடன் விரைவாக சரிசெய்யப்பட்டிருக்கமுடியும். எனவே, இந்த நேரத்தில் நிகழ்நிலை கல்வியை முறையாக திட்டமிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். முந்தைய அரசாங்கம் மாணவர்களுக்கு வரைபட்டிகைகளை வழங்க முன்மொழிந்ததுடன், அப்போதைய எதிர்க்கட்சி அதை எதிர்த்தது. இந்த முன்மொழிவு அரசியல் செல்வாக்கை பெறாமல் செயற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு உபகரணங்கள் மற்றும் எடிட்டிங் கருவிகள் போன்ற மென்பொருள்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து கற்பிக்க முடியும். ஒவ்வொரு பாடசாலையும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி கல்வி நிகழ்ச்சிகளை பதிவிடுவதற்கு அதனைப் பயன்படுத்தலாம். பிள்ளைகளுக்கு சிறந்த சொத்துக்களுக்கான உரிமை உள்ளதுடன் அவர்களின் தேவைகள் வெறும் அரசியல் முழக்கங்களாக இருக்கக்கூடாது.

தொலைதொடர்பின் வலையமைப்பு திறனை மேம்படுத்தி  மின் வழிக்கற்கை நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். மடிக்கணினிகள் மற்றும்  வரைபட்டிகை கல்விக்கான கருவிகளாக கருதப்பட வேண்டும் என்பதுடன், அவற்றுக்கான வரிகளும் குறைக்கப்பட வேண்டும். பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க நிகழ்நிலை கல்வி பயன்படுத்தப்படுவதுடன்,  மாணவர்களுக்கள் அறிவை சுதந்திரமாக விரிவாக்குவதற்கு வாய்ப்பு வழங்கியிருக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகள் நெருக்கடி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளால் மாணவரின் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகளவில் ஆராய்ச்சி மற்றும் சுய கற்றலைப் பயிற்சி செய்யலாம். சுருக்கமாக, நிகழ்நிலை கல்வியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் கல்வியின் தரத்தை அதிகரிக்க முடியும்.

ඔන්ලයින් අධ්‍යාපනය සහ අධ්‍යාපනයේ සම අයිතිය

Online Education And Equal Right To Education

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts