கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாட்டை நியாயப்படுத்தும் ஊடக நடைமுறைகள்

அஜித் பெரக்கும் ஜயசிங்க

மினுவாங்கொடையில் பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு கொவிட்-19 கொத்தாக தொற்றியதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதே நேரத்தில், தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இந்த போலி செய்தி ஜனாதிபதி செயலகத்தின் கடித்தலைப்பு  மற்றும் தெரண  தொலைகாட்சி ஊடக சின்னத்தை பயன்படுத்தி  உருவாக்கப்பட்டிருந்தது. இந்த போலி செய்தியை உருவாக்கிய 18 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து 2020 அக்டோபர் 09 அன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்க முயன்றதற்காகவும் 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச் சட்டத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து  அக்டோபர் 22 வரை இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பலருக்கு தெரியாது.

இப்போதெல்லாம் மக்கள் தங்கள் கணினியைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இதுபோன்ற ஒன்றை தயாரித்து, சமூக ஊடகங்களில் பதிவிடலாம். சில நிமிடங்களில் இது வைரல் ஆகலாம் அல்லது வேகமாக பரவலாம். இதனால் பாதகமான பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும்.

http://praja.lk/wp-content/uploads/2020/10/Computer_Crimes_Act_No_24_of_2007S-05-630x1024.jpg

2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச் சட்டத்தின் பிரிவு 6 (1) இன் படி: ஒரு கணினி வேண்டுமென்றே ஒரு செயல்பாட்டைச் செய்ய நோக்கம் கொண்டது என்றும் அது தீங்கு விளைவிக்கிறது என்றும் நம்புவதற்கு காரணம் உள்ளது அல்லது (அ) தேசிய பாதுகாப்புக்கு (ஆ) தேசிய பொருளாதாரத்திற்கு (இ) பொது பாதுகாப்புக்கு சேதம் விளைவிக்கும் என்று நம்புவதற்கான காரணம் இருக்குமானால் அதனால் ஏற்படும் விளைவுக்கு காரணமான நபருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்திற்கு சிறையில் அடைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் போலி செய்திகளை உருவாக்கியதற்காக இந்த ஆண்டு ஏராளமான இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரால் கவனிக்கப்படாத, பல்வேறு நபர்களைப் பற்றி, இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்குவது இன்று மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது. அவை சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. 

பின்வருபவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

http://praja.lk/wp-content/uploads/2020/10/harini-news-2.jpg

இந்த போலி செய்தியை உருவாக்க ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு உண்மையான அறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு படம் கீழே.

http://praja.lk/wp-content/uploads/2020/10/harini-news-3.jpg

இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்குவதையும் விநியோகிப்பதையும் சமாளிக்க போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. மேலும், இப்பிரச்சினைகளை சட்டத்தால் மட்டும் தீர்க்க முடியாது. இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்குவதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்கள் உள்ளன. எனவே அவர்கள் அப்படி உருவாக்குவதை நிறுத்த மாட்டார்கள். மாறாக, அவற்றை அடையாளம் காணும் ஊடக கல்வியறிவு வாசகர்களிடையே கட்டமைக்கப்பட வேண்டும். அதுவே நிலையான தீர்வுக்கான வழி.

சமூக ஊடகங்களின் யுகத்தில், ஒரு பத்திரிகையாளருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடு குறைந்துவிட்டது. எந்தவொரு வாசகனும் ஒரு பத்திரிகையாளராகி, தீவிரமான தகவல்தொடர்புகளில் ஈடுபடலாம். அவர்கள் தங்கள் உள்ளடக்கத்தை பரப்பக்கூடிய வரம்பிற்கு எல்லை இல்லை. இதன் விளைவாக ஊடகங்களில் ஊடக அறிவற்ற ஊடகவியலாளர்கள் குழு உருவாகி உள்ளது.

இந்த நிலைமை ஊடக தொழில்முறை மற்றும் கருத்து சுதந்திரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தவறான செய்திகள், தவறான தகவல்கள் மற்றும் பொய்யான  தகவல்கள் அரசுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட நபர்களின் உரிமைகளுக்கும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இத்தகைய பின்னணியில், குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்துவதற்கும் கண்டிப்பாக சட்டமியற்றுவதற்கும் சமூகம் அழுத்தம் கொடுத்துவருகிறது. கருத்துச் சுதந்திரத்தை விரும்பாத மக்கள் இந்த பொதுக் கருத்தை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தலாம். கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த மற்றும் புலனாய்வு நிருபர்களை சவாலுக்கு உட்படுத்த மற்றும் மக்கள் கருத்துருவாக்குவோருக்கு எதிராக அடக்குமுறையாளர்களால் கருத்து சுதந்திரம் கடுமையாக சவாலுக்குள்ளாக்கக் கூடும்.

எடுத்துக்காட்டாக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) எழுத்தாளர் சக்திக சத்குமார மற்றும் பிரபலமான சமூக ஊடகவியலாளர்  ரம்ஸி ராசிக் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்பட்டதும் அவர்கள் பிணை இல்லாமல் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரத்திற்கு கடுமையான சவால்களாகக் காணலாம்.

போலி செய்திகளைக் கையாளும் நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடாது, மிகவும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை ஆகும். ஊடக உள்ளடக்கத்தில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அதாவது: செய்தி, சித்தாந்தம, கருத்து அல்லது பிரச்சாரம் மற்றும் விளம்பரம்.

குறிப்பாக, விளம்பரத்தில் அல்லது பிரச்சாரத்தில் படைப்பாற்றல் மிக முக்கியமானது. அங்கு கவனத்தை ஈர்க்க சட்ட மற்றும் நெறிமுறை தந்திரங்கள் பின்பற்றப்படுவதால் அவை போலி செய்திகளாக மாறாது.

இந்நாட்களில் தெருவில் விற்கப்படும் சிறிய ரக ஆப்பிள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற ஆப்பிள்களை ராகலை ஆப்பிள் என விளம்பரம் செய்து விற்பனை செய்வது ஒரு படைப்பாற்றல் விளம்பரம் அல்ல. இது ஒரு சட்டவிரோத, ஒழுக்கக்கேடான செயல். உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விளம்பரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்த முடியும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், இப்போதெல்லாம் ஊடகங்களும் தெருவோர ஆப்பிள் சந்தையாக மாறியுள்ளன, மேலும் செய்திகள், சித்தாந்தம், பிரச்சாரம் மற்றும் விளம்பரம் ஆகியவை பிரித்தறிய முடியாதவையாக மாறியுள்ளன. உதாரணமாக, கடந்த தேர்தலின் போது அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் யூடியூப்பில் அடிக்கடி வெளியிடப்பட்டன. சேனலால் விளம்பரங்களுக்கு பணம் வாங்கப்பட்டதாக நேர்காணல்களில் குறிப்பிடப்படவில்லை. எல்லா தவறுகளும் சமூக ஊடகங்களில் மட்டும் இடம்பெறுவதில்லை. சமூக ஊடகங்கள் காரணமாக கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் பிரதான ஊடகங்களிலும் இதுபோன்ற நடத்தைகள் பொதுவானவையாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, கட்டண விளம்பரங்கள் செய்தி மற்றும் விவரண கட்டுரைகளாக எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பதை செய்தித்தாள்களில் காணலாம். பிரதான தொலைக்காட்சி செய்தி  சேனல்களில் சொல்லப்படும் அனைத்து அம்சங்களும் செய்தி அல்ல.

ஊடகங்களில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் கருத்துச் சுதந்திரத்துடன் பல புதிய சிக்கல்களை தோற்றுவித்துள்ளன. “உங்கள் கையில் உள்ள குச்சியைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை மட்டுமே” என்று ஒரு பிரபலமான பழமொழி உள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கும் பொருந்தும். கருத்து சுதந்திரத்தின் துஷ்பிரயோகம் ஊடகங்களிலேயே எழுகிறது. இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தையே பாதிக்கின்றன. இந்த தீய சுழற்சியில், ஊடகங்களை நன்கு நிர்வகிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் வாசகர்களின் கூட்டு பொறுப்பு அவசியம். எளிமையாகச் சொன்னால், ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.  இதுபோன்ற சூழ்நிலைகளை உடனடியாக அடையாளம் காணவும் ஊடக துஷ்பிரயோகங்களை உடனடியாக நிராகரிக்கவும் வாசகர்கள் விவேகத்துடன் இருக்க வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts