Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

அரசியலமைப்பு தொகுப்புக்கு பொதுமக்களின் கருத்து மற்றும் அபிப்பிராயத்தை பெறுதல்

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டில் காணப்படும் மிக முக்கியமான  உயர்வானதும் அடிப்படை சட்டமும் ஆகும். அது பொதுமக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் ஆட்சி பலத்தை வெளிப்படுத்தும் ஆவணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசியலமைப்பு (இறையாண்மை அதிகாரம்) பல நிறுவன அமைப்புகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கப்படும் மிக முக்கிய அடிப்படை ஆவணமாகத் திகழ்கின்றது.இன்னொருவிதத்தில் குறிப்பிடுவதாயின், அரசியலமைப்பு என்பது பொதுமக்களின் இறையாண்மையை பெற்று  அரசியல் செயற்பாடுகளுக்கான  மக்கள் அதிகாரங்களை ஒன்றுதிரட்டும் ஒரு ஆவணம் ஆகும். அரசியலமைப்பு உருவாக்கமானது  பொதுமக்களின் அதிகார சேர்க்கையில்  இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. ஆகவே அரசியலமைப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதல் மிகவும் இன்றியமையாததாக  காணப்படுகின்றன. மக்களின் கருத்துகளை உள்ளடக்கப்படாத அல்லது மக்களின் கருத்துகளுக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பை நிர்மாணிக்க முடியுமாக இருந்த போதிலும், அத்தகையதொரு அரசியலைமைப்பிற்கு நீண்டகால மக்களின் அனுமதி மற்றும் ஒப்புதல் கிடைக்கபெறாது. 

 

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு  பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகள் இன்றியமையாத காரணியாக காணப்படுகின்றது  என்பது நவீனகால அரசிலமைப்பு தொடர்பான வல்லுனர்களின் ஏகோபித்த கருத்தாகும்.1990 ஆம் ஆண்டு வரையப்பட்ட தென்னாபிரிக்கா நாட்டின் அரசியலமைப்பு மற்றும் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய நாட்டு அரசிலமைப்பு மற்றும் நவீன கால பங்களாதேஷ் நாட்டின் அரசியலமைப்பு  என்பன இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. மேலே குறிப்பிட்ட மூன்று நாட்டு அரசியலைமைப்புகளுக்கும் பொதுவாக காணக்கூடியதாக இருக்கும் பண்பானது  அந்நாட்டு பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளினால் கட்டியெழுப்பபட்ட தசாப்தகாலங்களாக நிலைக்கக்கூடிய  வலிமை மிக்க  அரசியலமைப்பாக காணப்படுவதாகும். நவீன உலகத்தில் ஜனநாயக  ஈர்ப்புகொண்ட சிறந்ததொரு அரசியலமைப்பாக ஆபிரிக்க அரசியலமைப்பு திகழ்கின்றது. நிற பேதத்தினால் ஏற்பட்ட கொடூரமான போருக்கு பின்னரான சமூக  பிளவுகளை உரிய முறையில் முகங்கொடுத்து அவற்றை வெற்றிகொண்டு தென்னாபிரிக்கா இனமாக, தேசமாக கட்டியெழுப்புவதில் ஆழமான தாக்கத்தை செலுத்திய பிரதான காரணியாக திகழ்வது தென்னாபிரிக்க அரசியலமைப்பே ஆகும். அந்நாட்டு அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை சுமார் ஆறு ஆண்டுகளாக நீடித்தது. 06 ஆண்டுகள் பூராகவும் அரசியலமைப்பின் தன்மை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் சுமுகமாக கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததுடன்  அரசியலமைப்புக்கு தேவையான கொள்கைகள் வகுக்கும்  செயல்முறையில்  நகரப்புற உயரடுக்கு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கருத்துக்களுக்கு மேலதிகமாக அந்நாட்டு சிறுபான்மையினர், குறைந்த சலுகைகளை பெறுபவர்கள் மற்றும் பூர்வீக குடிமக்கள் சகலரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. அரசியலமைப்பு வரைபவர்கள் அரசியலமைப்பு வரைவு செயல்முறை முழுவதுமாக கல்வியறிவற்ற மக்களிடம் கேள்விகளை தொடுத்தல் மூலமாக மற்றும் அரசியலமைப்பு அடிப்படை தத்துவங்கள் மற்றும் கொள்கைகளை கேலிச்சித்திரங்கள், வரைபுகள் ,மேடை நாடகங்கள் மற்றும் சைகை மொழி கருவிகளை பயன்படுத்தி தமது  கருத்துக்களை அவர்களிடத்தில் சிறந்த முறையில் கொண்டுசேர்த்தனர். தென்னாப்பிரிக்காவைப் போல பெரிதாக இல்லாவிட்டாலும், இந்திய அரசியலமைப்பின் ஆசிரியரான பேராசிரியர் அம்பேத்கர் இதேபோன்ற முறையை கடைபிடித்தார்.

 

இன்று நம் நாட்டில்  காணப்படும்  தமது உயர் சட்டமான 1978 அரசியலமைப்பு, சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட  மூன்றாவது அரசியலமைப்பு ஆகும். இந்த அரசியலமைப்பு மூன்றையும் கருத்திற்கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது இம் மூன்று யாப்புகளினதும் காணப்படும் பொதுப்பண்பொன்று காணப்படுவதை கண்டுகொள்ள முடியுமாக இருக்கின்றது. அது, இந்த மூன்று அரசியலமைப்புக்களும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் அபிலாசைகளை உள்ளடக்காமல்  வரையப்பட்டுள்ளது என்பதை தெளிவாகிறது. 1978 அரசிலமைப்பை எடுத்துகொண்டால், அது 1997 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது. பாராளுமன்ற அரசியல் முறையின்  கீழ் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் அரசாங்கத்தால்  ஒரு நிலையான அரசியல் சூழலை உருவாக்க முடியாது என்பதை கௌரவ ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் குறிப்பிட்டார். பாராளுமன்ற ஆட்சி முறைக்கு  பதிலாக  ஜனாதிபதி ஆட்சி முறையை  கொண்டுவர  வேண்டும் என்பதே ஜே ஆர் ஜயவர்தனவின் நிலைப்பாடாகும். அரசியலமைப்பு மிகக் குறுகிய காலத்தில் (ஒரு வருடத்திற்கும் குறைவான) வரையப்பட்டதுடன், பொதுமக்களின் கருத்துக்கள் அபிலாசைகள் எதுவும்  அதில் உள்வங்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசியலமைப்பில் எழுந்துள்ள சில அடிப்படை தத்துவ மற்றும் கொள்கை ரீதியான  பிரச்சினைகள் மற்றும் “எங்களுக்கு ஏன் புதிய அரசியலமைப்பு தேவை?” என்ற கட்டுரையில் ஆசிரியர் சுருக்கமாக விளக்கியுள்ளார்..

 

1978 அரசியலமைப்பில் பொதுமக்களின் கருத்து மற்றும் அபிலாசைகள் உள்ளடக்கபடாமையின் அடிப்படை பிரச்சினையை பேராசிரியர் என்.எம். பெரேரா முதன்முதலில் “A critical Analysis of the new Constitution  of the Sri Lankan Government” என்ற புத்தகத்தின் மூலம் கவனத்திற்கு கொண்டு வந்தார். மக்களின் கருத்துக்களை உள்ளடக்காமல் நிறுவப்படும் அரசியலைப்பானது  சிலகாலங்களில் மக்களினால் புறக்கணிக்கப்பட்டு நிராகரிக்கபட கூடும் என்பதினை பேராசிரியர் என்.எம்.பெரேரா வாதிட்டார். 90களில் இருந்து அனைத்து தேர்தல் மேடைகளிலும்  மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் அவசியத்தை மக்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அடிப்படை அரசியலமைப்பு வரைபு வரையப்பட்டபோதிலும் அங்கு பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கபடவில்லை, அதன் பிற்பாடு பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அரசிலமைப்பை நிறுவுவதற்காக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடைமுறை சிக்கல்கள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்கு முடியாவிட்டாலும், பொதுமக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் ஆணையகத்தின் அறிக்கை எதிர்கால அரசியலமைபிற்கான வழிகாட்டும் பாத்திரமாக திகழக்கூடும். அந்த ஆணைக்குழு அறிக்கையின்  வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அரசியலமைப்பை உருவாக்க பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டமையும், 5000 தனிநபர்களின் (சாதாரண மக்கள்) கருத்துக்களையும் பிரதிநிதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது .தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts