வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

“Red Mercury” உடனான பெரிய ஒப்பந்தம் என்பது என்ன?

சசினி டி. பெரேரா

பல தசாப்தங்களாக மேற்கத்தைய உலகம் ஒரு சிவப்பு நிற பொருள் மீது பார்வையை செலுத்தி வந்தது. அதன் அமைப்பு மற்றும் இருப்பு தொடர்பான திட்டவட்டமான தகவல்கள் எதுவும் இல்லாதிருந்த போதும், எளிதில் பணத்தை பெருக்கக்கூடிய ஒன்றாக நம்பப்பட்டது.

1980களின் தொடக்கத்தில் முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில கம்யூனிச நாடுகளிடமிருந்து சில வழக்குகளின் முதல் ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.  அணுகுண்டு வெடிப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சர்வதேச கறுப்பு சந்தையில் இப்பொருள் கிடைப்பதாக வதந்திகள் பரவி வந்தன. 1990 களில் “Red Mercury ” என்பது சமூகத்தில் ஒரு பொது வார்த்தையாக மாறியது.  இது விண்வெளி மற்றும் அணுசக்தி தொழில்களில் பயன்படுத்தும் ஒரு இரசாயன பொருளாக அறியப்பட்டது. மேலும் பல கடத்தல் வழக்குகளிலும் பரவலாக பேசப்பட்டது. 

சோவியத் யூனியனின் தொழிலதிபர்கள் ஐரோப்பாவுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் பாரிய அளவிலான “Red Mercury” ஒப்பந்தங்களை செய்து வந்த அதேவேளை, அமெரிக்காவும் பிரான்ஸூம் இதன் மிக முக்கிய நுகர்வோராக கருதப்பட்டது.  ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்ட சில இராணுவ குண்டு வெடிப்பு சம்பவங்கள் “Red Mercury “யடன் தொடர்புபட்டிருப்பதால் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.  பெண் மம்மிகளின் தொண்டையில் இவ்விரசாயன பொருளைக் கொண்டிருப்பதாக வதந்திகள் பரவியதோடு,  பண்டைய எகிப்திய மம்மிகள் கூட அளிக்கப்பட்டன. நோய்க்கான எந்த ஒரு அறிகுறியும் இவ்க்விரசாயனப் பொருள் உடலில் இருக்கும் வரையே குணப்படுத்த முடியும் என பண்டைய எகிப்திய மக்கள் நம்பினர். மேலும் இவ்விரசாயனப் பொருட்கள் அவ் மம்மிகளில் கண்டுபிடிக்கவோ, அடையாளம் காணவோ முடியாத நிலையில் இது ஒரு கட்டுக்கதையாகவே கருதப்பட்டது. 

பொதுவாக “மெர்குரி” என்பது வெள்ளை வெள்ளி திரவமாகும்.  சாதாரண வெப்பநிலை, அழுத்த நிலைகளில் திரவ நிலையிலான இரசாயனப்பதார்த்தம் ஆகும். “தூய மெர்க்குரி”யில்  சிவப்பு நிற அமைப்பு ஏதும் இல்லை.  

செரிப்பழ சிவப்பு நிறம் என்பது இயற்கை வேதியல் பொருட்களில் அரிதான ஒன்றாகும்.  அதேவேளை கிழக்கு மேற்கு போதனைகளில் “Red Mercury “என்பதில் ‘Red’ என்பதற்கான திட்டவட்டமான மேற்கோள்கள் எதுவுமில்லை. இருப்பினும் சின்னாபாரில் பொதுவாக நிகழும் வெடிக்காத மெர்குரி  சல்பைட் என்பது “வெர்மிலியின்” என்று அழைக்கப்படும் ஒரு சிவப்பு நிறமி ஆகும்.  இது ஆயுர்வேத மருந்துகளில் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறதென கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர்.எம்.என். கௌமல் தெரிவித்தார்.  

மேலும் “Red Mercury” (சிவப்பு பாதரசம்)  என்றழைக்கப்படும் ‘வெடிபொருள்’எதுவும் பகிரங்கமாக ஆவணப்படுத்தப்படவில்லை.  அல்லது அணுஆயுத வடிவமைப்பில் பயன்படுத்தப்படுவதாக தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. 

டாக்டர்.எம்.என்.கௌமலின் அறிக்கையின் அடிப்படையில் பாதரசமானது(Mercury) வெடிப்பொருட்களை தயாரிக்கும் ஒரு இரசாயன மூலப்பொருளாக இருப்பதற்கு அரிதான திறன் கொண்டிருப்பதோடு, வெடிப்பின் போது வெப்பநிலை உயர்வினால் விரைவாக அளிக்கப்படுவதால் வெடிப்பொருட்களில் இதனை மூலப்பொருள் ஒன்றாக சேர்ப்பது பயனற்றதாகும். இது போன்ற வேதியியல் பொருட்கள் சிறிது காலத்தின்பின் தாக்கம் புரியக்கூடியவை என்பதால் ஓர் செயலற்ற வெடிகுண்டினுள் நீண்டகாலம் நீடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.  

இந்த மோசடிப்பொருட்கள் செல்வாக்கற்ற இரசாயன பண்புகளுடன் தயாரிக்கப்படுவதால் உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினர் சிவப்புப்பாதரசம் (Red Mercury)  போல் தோற்றமளிக்கும்(HgS,  HgO, HgI2 அல்லது பாதரசம் கலக்கப்பட்ட சிவப்பு சாயம்) மட்டுமே கண்டறிந்துள்ளனர்.

ஒப்பீட்டளவில் ரெட் மெர்குரி என சந்தேகிக்கப்பட்டும் பல வழக்குகளில் தடை செய்யப்பட இரசாயன பதார்த்தங்களை ஏற்றுமதி செய்வதோ இறக்குமதி செய்வதோ சம்பந்தப்பட்டுள்ளது. இவ்விராசயனப்பொருள் (Hg2Sb2O7) ) மேலும் இது ரஷ்ய குறியீட்டில் (Li6D)  என சந்தேகிக்கப்படுகிறது. சிவப்பு பாதரசம் (Red mercury) ஒரு வெடிபொருளாக பயன்படுத்தமுடியுமாயின், அதை விட மலிவான பல வெடிபொருட்ட்கள் சந்தையில் காணப்படுகிறது என்று டாக்டர்.எம்.என்.கௌமல் தெரிவித்தார்.

கடந்த தசசப்தங்களில் இலங்கையிலும் சுலபமாக பணம் சம்பாதிப்பதற்கும் , பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கும்(WMD)  இரகசிய விநியோகஸ்தர்கள் மூலம் சிவப்பு பாதரசம்(Red Mercury) விற்கவும் வாங்கவும் முயற்றசிகள் மேட்கொள்ளப்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. சிவப்பு பாதரசம் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட ஒரே சம்பவம் 2002 இல் இருந்து கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் வெகுஜன அளவில்  அறியப்படாத இரசாயன உட்பதியில் இருந்த  நிறுவனத்தோடு,  2006 மற்றும் 2008 ஆண்டுகளில்  மோசடி இரசாயன சொத்துக்களை வாங்க முயட்சித்த உள்நாட்டு போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட அணு பயங்கரவாத குற்றச்சாட்டாகும். விக்கிலீஸின் கூற்றுப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த சட்ட விரோத கடத்தல் அச்சுறுத்தல் சம்பவம் மற்றும்  கலிபோர்னியா உடற்பத்தி நிறுவனத்தின் இருப்பிடம் குறித்து நமபகமான தகவல்களை வாஷிங்டன் மாநிலம் கூட வெளியிடவில்லை என கொழும்பு தூதரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது.இந்த சம்பவத்தையும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பேப்பரியளவில் சேதங்களை ஏட்படுத்தக்கூடிய ஆயுதங்களை (WMD) கொண்ட முரட்டு நாடுகளை சிக்கவைப்பதற்க்காக ‘கான் ஆர்டிஸ்ட்கள் ‘ செய்த மோசடி என்று அறிக்கை பதிவுசெய்கிறது.

தற்றபோது ரெட் மெர்குரி தொடர்பாக காணப்படும் பெரிய வதந்தி என்னவென்றால் அது பழைய கால வயர்லஸ் ரேடியோக்கள் மற்றும் சிவப்பு திரவத்தை கொண்ட உருகி போல் தோன்றும் ‘சிங்கர்’ தையல் இயந்திரங்களுக்குள் காணப்படுகிறது என்பதாகும். சமூக ஊடகப்பதிவுகள் இது அமெரிக்க டாலர்களில் மில்லியன் முதல் பில்லியன் வரை பெறுமதி வாய்ந்தது என குறிப்பிடுகிறது. இவ்விரசாயனப் பொருளின் புகைப்படம் அதன் நன்மைகள்  மற்றும் விலை என்பன சமூக வலைத்தத்தங்களில் பரவி வந்தபோதிலும்  இந்த புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் கணனியில் செப்பம் செய்து (Edit) கையாளப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுக்களை காலம் காலமாக கைமுறையில்உற்பத்தி செய்வதால், தொழிலாளர்களால்  சுவாசிக்கப்படும்  ஒரு நச்சுப்பொருளாக காணப்படுவதால் பாதரசப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் மின்சுற்றுக்களில் சேர்க்க சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என டாக்டர்.எம்.என்.கௌமல் தெரிவித்தார். 

சிவப்பு பாதரசம்(Red Mercury) வைத்திருந்ததால் 2019 ஜனவரி 11ஆம் திகதி மொஹமட்  நியாஸ் என்பவர் கண்டியில் கைது செய்யப்பட்டார் என செய்திக்கற்றுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2019 இல் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கொழும்பு ஷங்கிரி-லா  ஹோட்டலைத் தாக்கிய தொடர்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஸீமுடன் நெருங்கிய தொடர்பை மொஹமட் நியாஸ்  வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் வரலாற்று பதிவுகளை ஆராய்ந்தபோது கண்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி இது போன்ற  சம்பவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இந்தப்பேந்தப்பதிவு போலியானது எனவும் தெரிவித்தார். இப்போலி பதிவானது சிவப்பு பாதரச(Red Mercury) மோசடியை முறையிடுவதற்கு   இலங்கை இராணுவத்தின் வேதியியல்,உயிரியல்,கதிரியக்க மற்றும் அணுசக்தி பாதுகாப்பு(CBRN)  மற்றும் போலீஸ் அவசரகால பதிலளிப்பு பிரிவின் தொலைபேசி இலக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளது. 

வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் சிவப்பு பாதரசத்தை(Red Mercury) வைத்திருத்தல், விற்றபனை செய்தல், மற்றும் கொண்டு செல்வோர் ஆகியோரை கைது செய்ய காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு சட்டபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்த உண்மைகளை ஆழமாக விசாரித்தால் இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை என இலங்கை ராணுவத்தின் CBRN தலைவர் தெரிவித்தார். அதே நேரத்தில் காவல்துறை ஊடகப்பேச்சாளர்   ஜாலியா சேனாரத்ன இதே அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கைகளின் அடிப்படையில்  Red Mercury தொடர்பாக எந்தவொரு தெளிவான தகவல்களும் பதிவு செய்யப்படவில்லை என தெளிவாகிறது. எவ்வாறாயினும் பல்வேறு உள்ளூர் சமூகங்களை குறிவைத்து அவர்களுக்கிடையில் நெருக்கடிகளைத் தூண்டுவதற்காக அனைத்து மோசடி  இரசாயனப்பொருட்களையும் விற்றபனை செய்வதன் மூலம், வாங்கிவைத்தான் மூலமும் பொதுமக்களை தவறாக வழிநடத்த சிலர் முயறசிக்கின்றனர். இவ்வேதியியல் பொருள் உண்மையாக இருந்தாலும் கூட, இத்தகைய பாரிய கடத்தல் சம்பவங்களை கையாள இலங்கைக்கு திறன் இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். சில உலகளாவிய மற்றும் பிராந்திய பயங்கரவாத குழுக்கள் அந்த ஒப்பந்தங்களை அடைய முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுவதால், அவர்களால் சிவப்பு பாதரசத்தை அடைய முடியவில்லை. வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளின் உள்ளடக்கங்களை தவிர்ப்பதற்கான  உலகளாவிய அணுசக்தி கொள்கை உத்திகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அணுசக்தி தொழில்நுட்ப தயாரிப்பு அனேக அணுசக்தி கடத்தலுக்குஒரு மூலோபாயமாக பயன்படுத்தப்படுகிறது. 

இது சர்வதேச புலனாய்வு அமைப்புகளான KGB மற்றும் GRU  கருப்பு சந்தை அணு ஆயுதங்கள், அணுகுண்டு வடிவமைப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களை மாநிலத்தினுள்ளும் வெளியேயும் கண்டறிந்துள்ளது. 

சிவப்பு பாதரசம் என்பது பாதரசம் அல்லாத ஒரு பொருளை ரகசியமாக கருப்பு சந்தையில் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் இராணுவ குறியீடாக இருக்கலாம். சிவப்பு பாதரசம் வாங்குபவர்கள் சில நேரங்களில் ஒரு கிலோவிற்கு மில்லியன் டொலர்களை செலவிடுவதாகவும் வழக்குகள் தெரிவிக்கின்றன.மேலும் உலகின் பல பகுதிகளிலும் உயர் மட்ட அரசியல் மற்றும் இராணுவ சூழ்ச்சிக்கு ஒரு பொருளாக பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts