பிரியந்த கருணாரத்ன ஜனவரி 8, 2015 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு ஆளானமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
ஜூட் ஆர். முத்துக்குடா இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இவற்றில் சில, முரண்பாடுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களாகும். அதே சந்தர்ப்பத்தில் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படும் போலிச் செய்திகள்
கபில குமார கலிங்க நகரமொன்றில் ஆண்களிடையே தொலைந்துபோன ஒரு சீனப் பெண்ணுக்கு, தனது கணவனை கண்டுபிடிப்பது சவாலான விடயமென சிலர் கூறுகின்றனர். சீன ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால், சீன மக்கள் அத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனையோருக்கு முடியாவிட்டாலும் அவர்கள் வேறுபாடுகளை அறிந்துகொள்கின்றனர். எமது முகம் மற்றும் தோற்றம் குறித்து
சி.ஜே.அமரதுங்கா ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது சமீபத்தில் பிரபலமான ஒரு கோஷமாகும். இதன் பொருள் நாட்டை ஒன்றாக பேணவேண்டுமென்றால், அனைவரும் ஒரே சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் குறிப்பாக, இந்த வாதத்தின்படி, வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாகாணங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் இருக்க முடியாது. இந்த கோஷத்தின் உடனடியான இலக்கு இலங்கையின் முஸ்லிம்கள், குறிப்பாக
அருள்கார்க்கி இலங்கையில் நெல், மரக்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் பசளையாக பாவிக்கப்பட்டது இரசாயன உரங்களே. இவற்றின் மூலம் விவசாயிகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்களும் பீடை கொல்லிகளும் விளைச்சலையும் அதிகப்படுத்தியிருந்தன. ஆனால்
ஹயா ஆர்வா இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும், அதன் விளைவாக அடிக்கட அரசினால் அமுல்படுத்தப்படும் பொதுமுடக்கம்,பயணத்தடைகள் தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை, பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள், பாதிப்புக்களில் அரச,தனியார் துறை ஊழியர்களும், பாடசாலை மாணவர்களுமே புதிய
வ.சக்திவேல் “நான் களுதாவளையிலிருந்து கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக இருந்து கடல் மீன் வியாபாரத்தில்தான் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது இலங்கையின் தென்பகுதி கடலில் கப்பல் ஒன்று எரிந்ததன் பின்னர் சில கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் என்னிடம் மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்றார்களில்லை. நானும் நாளாந்தம் எனது வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைக்
கயான் யாதேஹிகே “இலங்கை என்பது அனைத்து மத மக்களும் வாழும் ஒரு பல்தேசிய நாடாகும். அவர்கள் அனைவரும் தங்களுக்கான தனித்துவமான கலாச்சாரங்ளைக் கொண்டிருக்கின்றனர். அது நாட்டில் ஒரு தனித்துவமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது. இன, மத பிளவுகள் இல்லாமல் அந்த பன்முகத்தன்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆனால் துரதிர்ஷ்டவசமாக,
நிமல் அபேசிங்க சமல் கேகாலை பகுதியின் சிங்கள கிராமங்களில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் தொழிலாளியாவார். அவர் நன்கு வளர்ந்த, வலிமையான மனிதர். அவரது புன்னகையும், கழுத்தில் உள்ள உலோக சிலுவையும் அவருக்கு ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் தோற்றத்தை அளிக்கிறது. அவர் கொம்பனிவத்தையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். என் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமம். அவர் தினமும்
நிமல் அபேசிங்க இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது மனிதநேயமுள்ள மக்கள் தாமாகவே ஒன்றிணைகின்றனர். அந்த ஒற்றுமைக்கு இனம் அல்லது நிற வேறுபாடில்லை. ஆகவே, மனிதநேயத்தின் தனிச்சிறப்புமிக்க உண்மையை எமது நாட்டிலுள்ள பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? மறுபுறம், இயற்கை பேரழிவுகள் இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த









