Home Articles posted by Admin (Page 15)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தத்தமது பாடசாலைகளுக்கான கல்வி வலைத்தளம் உருவாக்குவது சிறந்து

அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ நிகழ்நிலை கல்வி இலங்கையின் பரந்த சமுதாயத்திற்கு  மிகவும் புதியதாக இருந்தபோதிலும் உலகிற்கு புதியதல்ல. மார்ச் 2020 இல் கொவிட்-19 இனால் இலங்கைத் தீவு ஆக்கிரமிக்கப்படாவிடின் பெரும்பான்மையான இலங்கையர்கள் இன்னமும் நிகழ்நிலை கல்வியை அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக உள்ளதா?

விஸ்வாஜித் கொடிகர பல இலங்கையர்கள் வைகாசி மாதத்தை வெசாக் காலமாக அறிமுகப்படுத்துகிறார்கள், ஏனெனில் அந்த மாதத்தின் பௌர்ணமி நாள் புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் முக்தியை குறிக்கிறது. பாரம்பரியமாக, பௌத்தர்கள் இந்த காலத்தில் அக மற்றும் புறத் தானங்களை   மேற்கொள்கிறார்கள். அதனைத் தவிர, வைகாசி மாதம் தென்மேற்கு பருவமழையின் மூலமாக கனமழையைக் கொண்டு வருகின்றது. 
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சர்ச்சைக்குள் சிக்கிய நிலாவரை!

பார்த்தீபன் வரலாற்றுத் தொன்மையையும், இயற்கையின் அதிசயங்களையும் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலாவரைப் பகுதி அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. தொல்பொருள் திணைக்களம் இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டதையடுத்தே சர்ச்சை உருவாகியது. இதற்கு அனுமதிப்பதில்லை என்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுதியான நிலைப்பாடு இந்தப் பகுதியில்
சமூகம்

அபிவிருத்திக்காய் ஏங்கிநிற்கும் வாகரை ஆதிவாசிகள்

வ.சக்திவேல் மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான். அவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் மனிதன் சாதாரணமாக முன்னேறவில்லை அவனது அயாராத முயற்சிகள், அவ்வாறு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவுகளும் இன்றியமையாததாகி விடுகின்றன. முயற்சிகளோடு முன்னேறத் துடிக்கும் ஒரு தமிழ் கிராமத்தின் கதையே இது… மட்டக்களப்பு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சமூகம்

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்பா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிங்கள வர்த்தக ஆதிக்கம்

நெவில் உதித வீரசிங்க இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலையில் உள்ள உப்புவெளி கடற்கரை பிரதான சுற்றுலா மையமாக மாறியது. உப்புவெளி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கு உப்புவெளியிலுள்ள அலஸ்தோட்டம் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களில் ஏராளமான தங்குமிடங்களும்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பொலீஸ்! குற்றவாளியா? சுற்றவாளியா?

எம்.பி. முகமட் நாட்டில் மீண்டும் பொலிஸ் துன்புறுத்தல்கள் (Police Brutality) பற்றிய கதையாடல்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளன. #Endpolicebrutality எனும் ஹாஷ்டெக்கினை பயன்படுத்தி பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் எனும் கறுப்பினத்தவர், பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட போது சீற்றமடைந்த நாம், இலங்கையில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

நாதஸ்வரக் கலைஞர் ஒருவரின் ஆதங்கம்

பா. சந்தனேஸ்வரன் “என்னுடைய 12 வயதில் நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினனான். 50 வருடங்களாக தொடர்ந்தும் இதே தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறன். எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்களைக் கண்டிருக்கிறன். ஆனால், இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைப்போல அது ஒன்றும் இருக்கவில்லை…” என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்கின்றார் யாழ்ப்பாணம் தாவடியின் பிரபல நாதஸ்வரக் கலைஞர்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மலையகத் தோட்டச் சமூகம் அரசுக்கு அந்நியமானதா?

ஜீவா சதாசிவம் இலங்கையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது தேயிலைத் தொழிற்துறை. இது பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது.  ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் ‘பிராண்ட்’ ஆகி இருக்கையில் அந்த தேயிலை உற்பத்தியின் பின்னால் உள்ள அந்தத்  தொழிற்துறை சார்ந்த  மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் அதற்கு மாறான விதத்தில் ‘பிராண்ட்’ பண்ணப்பட்டுள்ளது . இதனை 
சமூகம்

மீளவும் புதுப்பிக்கப்பட வேண்டிய பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்

மல்லியப்புசந்தி திலகர்  மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகம் எனும் அடையாளத்தைக் கொண்ட மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்த சனத்தொகையில் உத்தியோகபூர்வமாக ‘இந்தியத் தமிழர்’ என 4.8% சதவீதமாகவும் உத்தியோகப்பற்றற்ற வகையில் மலையகத் தமிழர் என 8% சதவீமாகவும் அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் சில மாவட்டங்களில் செரிவாகவும் பல மாவட்டங்களில்
சமூகம்

கோஷங்கள் மாத்திரமே மரணங்களைத் தடுக்குமா?மலையக சிறுமியின் மரணத்தை முன்னிறுத்தி…

ஜீவா சதாசிவம் ஹட்டன் – டயகமவைச் சேர்ந்த ஹிசாலினியின் சம்பவம் 15/07/2021 முதல் பரபரப்பான சம்பவமாகவும் அதிகம் பேசு பொருளாகியுள்ளதாகவும் இருக்கின்றது. பல்வேறு கருத்துக்கள், கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. காத்திரமான நியாயமான கருத்துக்களை பதிவு செய்கின்றவர்களாக சிலரும் உள்மனதில் உள்ள உணர்ச்சியை கொட்டுபவர்களாக சிலரும் இருப்பதை அவர்களது கருத்துக்கள்