கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மஹர சிறை தாக்குதல் சம்பவமும் ஊடக செய்திகளும்

தனுஷ்க சில்வா

நவம்பர் 30 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர். 71 பேர் காயமடைந்தனர். காயமடைந்த இன்னும் சிலர் சிறையில் இருக்கலாம், அந்த எண்ணிக்கை பற்றி அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை மோசமானது என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். என்ன நடந்தது என்பதை முழுமையாக விசாரிக்க நான்கு குழுக்களை நியமித்துள்ளது. இன்று வரை மோதல் தொடர்பாக  சொல்லப்பட்ட சில சிறப்பம்சங்கள் இவை. சம்பவத்தின் சரியான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், மேற்கூறியவற்றின் அடிப்படையில் ஒரு படத்தை கற்பனைசெய்ய முடியும். 

கைதிகளை பாதுகாக்கும் முழு பொறுப்பும் அரசுக்கு  உள்ளது. இந்த கைதிகள், சர்வதேச சட்டம் மற்றும் உள்நாட்டு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் சிறைகளில் அல்லது புனர்வாழ்வு முகாம்களில் கைதிகளைக் கொன்ற ஒரு மோசமான வரலாறு இலங்கைக்கு உண்டு. 1983 இல் 53 கைதிகள் கொல்லப்பட்டனர் 2000 அக்டோபர் 25, அன்று பிந்துநுவெவ புனர்வாழ்வு மையத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். 2012 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையின் 27 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்தனர். மஹர கொலை சமீபத்திய சம்பவமாகும். 

குறிப்பிட்ட சர்வதேச நியதிகளுக்கு முரணான சம்பவங்கள் தொடர்பாக எவ்வாறு மக்கள் சிந்திக்கின்றனர் என்பதை ஆராய்ந்ததிலிருந்து புலப்படுவதாவது: கைதிகள் கொல்லப்படுவது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்ற ஒரு மனப்பான்மை நம் நாட்டில் உள்ளது, இது தொடர்பாக ஆராய்ந்த இக்கட்டுரையாளர் அரசியல்வாதிகள், ராணுவத்தினர், பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களையும் தொடர்புகொண்டு, ஒவ்வொரு தரப்பினரும்   வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பதை அறிந்துகொண்டார்.

இந்த கட்டுரையின் நோக்கம் மஹர படுகொலை பற்றிய சிங்கள ஊடகங்கள் பிரசுரித்த தலையங்கங்கள் மற்றும் பத்திரிகையாளரின் பங்கு ஆகியவற்றை ஆராய்வதாகும்.

2020 நவம்பர் 30 அன்று நடந்த இந்த தாக்குதல் டிசம்பர் 1 அன்று கிட்டத்தட்ட சகல தினசரி செய்தித்தாளிலும் தலைப்புச் செய்தாக அமைந்தது.

மவ்பிம செய்தித்தாளில் தலையங்கம் (கைதிகளும் மனிதர்கள்தான் ஆனால்—-) அவர்கள் தொடர்பாக அது அளிக்கும் விளக்கம் மிகவும் சுவாரஸ்யமானது – ஆசிரியர் சில கைதிகளை  “போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், முட்டாள்கள், பிடிவாதமானவர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், குண்டர்கள்” போன்ற சொற்களை கொண்டு விபரிக்கிறார். அப்பத்திரிகையின் ஆசிரியர் சிறைக்கைதிகளை எவ்வாறு அடையாளம் காட்டுகிறார் என்பது இலங்கையில் கணிசமான மக்கள்தொகையினரின் கைதிகள் தொடர்பான பொதுவான கருத்தை வெளிக்காட்டுகிறது. சில கைதிகளை சமூக ஒழுங்கில் நுழைய அனுமதிக்கக் கூடாது, ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய தீயவர்கள் என்ற கருத்தை அவர் நேரடியாக பரிந்துரைக்கின்றார், அதே நேரத்தில் ஆசிரியர் தீவிரமான முன்முடிவுகளுக்கும் வருகிறார்.

சிறைச்சாலைகள் நல்ல மனிதர்களுக்கு உரிய இடமல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அங்குள்ள அனைவரும் மவ்பிம ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல கொலைகாரர்களோ, போதைப்பொருள் பாவனையாளர்களோ, அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களோ, பாதாள உலக கோஷ்டியினரோ, குண்டர்களோ அல்லது குற்றவாளிகளோ அல்ல. உதாரணமாக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத, விளக்கமறியலில் இருக்கும் ஒருவரை எவ்வாறு குற்றவாளியாக அடையாளம் காண முடியும்…? இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் வழங்கும் சில விளக்கங்கள் சம்பவத்தை நியாயப்படுத்துவதற்காக அதிகாரிகளுக்கு இடமளித்துள்ளார் என்பது இங்கே தெளிவாகிறது.கைதிகள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்” என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது,

2020-12-02 அன்று மவ்பிம ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி

சிறைக் கலவரம் தொடர்பாக தினமின தலையங்கம்

தினமின பத்திரிகை ஆசிரியரின் கூற்றுப்படி, “போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் சிறைகளில் இருந்து வெளியேறினால், நாடு பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். மேலும், அது சட்டத்தின் ஆட்சிக்கு சவால்விடுக்கும் ஒன்று என்றும் அது எச்சரிக்கை செய்கிறது. மறுபுறம், இது போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பாதாள உலக எதிர்ப்பு திட்டத்தை சீர்குலைக்கிறது.” இங்கு அவர்கள் சொல்லவருவது என்னவென்றால் கைதிகளின் கூடாத நடத்தையின் காரணமாகவே அவர்கள் கொல்லப்பட்டனர், என்பதே இதன் உட்கருத்து. இதனூடாக தினமின ஆசிரியர் ஒரு கற்பனை கதைக்கான கருவை உருவாக்கியுள்ளார்.

தினமின ஆசிரியரின் கூற்றுப்படி, மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது இதுதான் நடந்தது:

  1. மஹர சிறை தாக்குதலில் ஈடுபட்டோர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
  2. அவர்கள் சிறைகளில் இருந்து தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள்
  3. அதன் மூலம் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது  
  4. குறிப்பிட்ட சம்பவம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள எதிர்ப்பு பிரச்சாரங்களை சீர்குலைக்கிறது

2020-12-01 அன்றைய தினமின பத்திரிகை தலையங்கத்தின் ஒரு பகுதி

ஆனால் இந்த ஆசிரியரின் கைதிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? என்பதை விளக்காமல், எதையோ மறைக்க முயற்சிப்பது புலனாகிறது.

தலையங்கத்தின் கடைசி பகுதி பின்வருமாறு கூறுகிறது: “ஒருவேளை குற்றவாளிகள் வைரஸ்களை விட ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும். குற்றவாளிகள் ஆபத்தானவர்கள் என்பதை மனதில் வைத்து இந்த சம்பவத்தை நாங்கள் அணுக வேண்டும்.”

ஆசிரியர் குறிப்பிடுவதைப் பார்த்தால், மஹர சிறையில் உள்ள “அனைத்து கைதிகளும் குற்றவாளிகள்” என்ற பொருளில் விளக்க முயற்சிக்கிறார். அதன்படி, இலங்கை அரசால் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குற்றவாளிகளின் உடல்ரீதியாக  அழித்தல் என்ற செயலைத்  தொடர தினமின ஆசிரியர் தைரியம்  அளிக்கிறார்.

Screenshot (2)
Screenshot (4)

2020-12-01 அன்றைய அருண பத்திரிகை தலையங்கத்தின் ஒரு பகுதி

அருண தனது தலையங்கத்தை “மஹர விடுகதைக்கு விடிவு காண வேண்டும்” என்று இருந்தது.

சமூகத்திற்குத் தேவையான தகவல்களை வழங்கும் ஊடகங்களால் மக்களை அரசியல் ஆர்வலர்களாக மாற்ற முடியும்- ஆனால் ஊடகங்களின் அரசியல் பங்கை அடையாளம் காண்பது எளிதல்ல ஏனென்றால், தமது அரசியல் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகளையும் அவற்றை உருவாக்கிய செயல்பாடுகளையும் வெவ்வேறு வழிகளில் சித்தரிக்கும் திறன் ஊடகங்களுக்கு உண்டு.

சுவாரஸ்யமானவை என்று நான் கண்டறிந்த சில இங்கே:

இந்த நாட்டில் 80 கைதிகள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ளனர் – அல்லது சிறைகளில் உள்ள அனைவரும் ஒருவித சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர் – அவர்களிடமிருந்து எந்த சட்டபூர்வமான நடவடிக்கையும் எதிர்பார்க்க முடியாது.”

கைதிகள் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிகள் – அதைப் பற்றி எந்த வாதமும் இல்லை”

மேலே உள்ள அருணவின் தலையங்கத்தை உற்று நோக்கினால் நல்ல சமுதாயத்திற்கும் மோசமான சமுதாயத்திற்கும் இடையில் ஒரு கதைவடிவத்தை வரைய வேண்டியதன் அவசியம் வெளிப்படுகிறது.

சட்டத்தை மதிக்கும் அரசு ஒன்றினால் போதைப்பொருள் இல்லாதஒரு நல்ல சமூகத்தை எதிர்பார்க்க முடியும். மோசமான சமூக கைதிகள் போதைப்பொருள் வியாபாரிகள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சட்டத்தை மதித்து நடப்பர் என்று எதிர்பார்க்க முடியாது.

அருண பத்திரிகை தலையங்கத்தின் குறிப்பிட்ட அந்த பகுதி இலங்கை அரசினதும்  மற்றும் தனியார் ஊடகங்களினதும் சமீபத்திய நிலை, அடிப்படை படத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது இலங்கையின் ஒரு பகுதியினரை நல்ல சமுதாயமாக சித்தரிக்கும் அதேவேளை, ஏனையோரை போதைப்பொருள் பாவனையாளர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் கைதிகளை அந்த சமுதாயத்தின் மற்ற பகுதிகளாக உருவாக்கப்படுத்துகிறது.

அடுத்தது என்ன? அடக்குமுறை திட்டம் ஒன்று இங்கு பரிந்துரைக்கப்படுகிறது.-இதுபோன்ற விபரத்தையே ஏனைய செய்தித்தாள் அறிக்கைகளிலும், கூடக்குறைய காணக்கூடியதாக இருந்தது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts