நேற்றைய நாளை மாற்ற முடியாது!இன்றை நாள் நமது கையிலுள்ளது, நாளைய நாளை சிறப்பாக்குவோம்!
எ.எம்.பாய்ஸ்
‘தன்னம்பிகை, நல்லுறவு, தலைமைத்துவம் என்பவற்றை மாணவர்களிடையே உருவாக்கி ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் அளவிற்கு புரிந்துணர்வை ஏற்படுத்துகிறோம். சமூக ஊடகங்களினூடாக அவர்களது நட்பும் அறிவுப்பரிமாற்றமும் நிகழ்கிறது. அதுவே நாம் உருவாக்கிய பந்தம். அதுவே நாம் இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் வருமானம்.’ ன்கிறார் Unity Mission Trust இன் நிறுவுனரும் ஒருங்கி ணைப்பாளருமான பேர்ட்டல் பின்றோ ஜயவர்த்தன. த கட்டுமரனுக்கு அவர் வழங்கிய செவ்வி.
த கட்டுமரன் : யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் யூனிற்றிமிஷன் ரஸ்ட் நிறுவனம் ஆரம்பத்தில் எத்தகைய ஒத்துழைப்புகளை வழங்கினீர்கள்?
பதில்: யுத்தத்தின் இறுதிக்ககாலங்களில் இருந்து முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு உணவும் கல்வியும் அளிக்கும் விடயத்தில் நாம் தீவிரமாகச் செயற்பட்டோம். பின்னர் மீள தமது இடங்களுக்கு அவர்கள் சென்றபின் மிகவும் வறிய நிலையிலுள்ள கிராமங்களை இனங்கண்டு அவற்றுக்கு நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு உதவிகளை வழங்கினோம்.
அத்துடன் சுகாதார வசதிகள் மிகவும் பின்தங்கியிருந்ததால் நாம் மருத்துவ முகாம்களை ஆரம்பித்தோம். ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் அப்போது 25,000 பேருக்கு ஒரு வைத்தியரே காணப்பட்டார் . அப்போது 40 வைத்தியர்களை அழைத்து பல இடங்களில் வைத்திய முகாமை ஆரம்பித்தோம். இதனை அடுத்து மன்னாரின் விடத்தல் தீவிலும் இத்தகைள வைத்திய முகாம்களை நடத்தினோம்.
த கட்டுமரன் : இவற்றையெல்லாம் உடனடியாக மேற்கொள்ளவதற்கான வளங்கள் ஆளனிகளை எவ்hவறு பெறக்கூடியதாக இருந்தது?
பதில்: நான் வங்கியொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்ததேன் எனது மனைவி ஓவிய வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தவர். இருவரது தனிப்பட்ட தொடர்புகளுடாகவும் மேலும் பல உதவிகளுடாகவும் வளங்களையும் ஆளணிகளையும் பெறமுடிந்தது. அத்துடன் அந்த நேரத்தில் களத்தில் செயற்படுவதற்கு பேருதவியாக இராணுவத்தினரும் இருந்தனர். இராணுவ செயலணியின் ஓய்வு பெற்ற பிரதானியான லொஹான் குணவர்தனவே இந்த அமைப்புக்குத்த தலைவராகவும் இருந்தார்.
த கட்டுமரன் : இராணுவத்தாலேயே தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்திருந்த மக்களை இராணுவ உதவியுடன் ஒன்றிணைக்க முடிந்ததா?
பதில்: மக்களின் போக்குவரத்திற்கும் தங்குமிட ஒழுங்கிற்கும் உணவிற்காகவும் நாம் இராணுவத்தை நாடினோம். ஏனெனில் தமிழ் பிரதேசங்களில் பெரியளவில் இவற்றைசெய்து தருவதற்கு இராணுவத்தை தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. அப்போது நாம் இராணுவத்தினரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து இருந்தோம். இதன் போது நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என்பதே அக்கோரிக்கை. அவர்கள் எமது கோரிக்கையை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
த கட்டுமரன் : யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளம் தலைமுறையினரை வலுவூட்டுவதற்காக எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன?
பதில்: குறிப்பாக பௌதீகரீதியான உதவிகளை விட அப்போது உளரீதியான நம்பிக்கையும் ஆற்றுப்படுத்தலுமே தேவையாக இருந்தது. இதற்காக நாம் அங்கிருந்த சிவில் சமூகத்தில் சிலரையும் அழைத்து சிறு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். நீங்கள் குழந்தைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றீர்கள். ஏன் அவர்கள் தொடர்பில் ஏதாவது மற்றுமொரு திட்டத்தை செய்யக்கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பினர். அக்கேள்வி எனக்கு உத்வேகமாக அமைந்தது. நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அதன்படி சிறுவாகளில் சற்றுவளர்ந்ர் பக்கம் எமது கவனத்தைத்திருப்பினோம். உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களை அதில் உள்வாங்கினோம். அவர்கள்தான் கருத்ததுக்களை உருவாக்கப்போகும் அடுத் படிநிலை மக்கள். அன்தபடி முதலில் வடக்கில் இருந்து சுமார் 500 பேரை கொழும்புக்கு அழைத்து வந்தோம். கொழும்பில் இருந்து 150 சிறுவர்கள் இணைந்தனர். அதற்கு அமைய 650 பேர் இதில் பங்குபற்றினர். நான்கு நாட்கள் மிகவும் சிறப்பான நிகழ்வுகளை நடத்தினோம். கொழும்பிற்கு ஒருபோதும் வந்திராத பல சிறுவர்கள் இதில் இருந்தனர். பேரிய பெரிய கட்டிடங்கள் வாகனங்கள் கடைகளை வியந்து பார்த்தனர். இதனூடாக அவர்களுக்கான சிந்தனை உலகத்தை விரிவாக்கினோம்.
“நேற்றைய தினம் மிகக் கொடூரமானதும் கடினமானதுமாக எமக்கு அமைந்தது. ஆனால் அந்த நேற்றைய தினத்தை எம்மால் மாற்ற முடியாது. நாளை இனித்தான் வரப்போகிறது. ஆனால் இப்போது எமது கையில் இருப்பது ‘இன்று’ என்பது மட்டுமே. இன்றைய நாளில் நாம் ஏதாவது செய்வோம். எவ்வாறாவது படித்து சிந்தித்து நாளைய நாளை சிறப்பாக மாற்றுவதற்காக வாழ்வோம்.” ஏன்ன தொனிப்பொருளைத்தான் அந்த சிறுவர்களிடம் விதைத்தோம். தற்பொழுது 25, 26 வயது உடையவர்கள் எம்முடன் இருக்கின்றனர் . அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எமது சிறுவர்கள் கல்வி கற்கின்றனர். பல்கலைக்கழகங்கள் ரீதியிலும் நாம் எமது திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம்.
எமது மாணவர்களுக்கு சமூக ஊடகத் தொடர்பினால் அவர்களது இலக்கை அடிக்கடி ஞாபகமூட்டுகிறோம். அனைத்து சிறுவர் சிறுமிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டிய ஒரு தாயின் குழந்தைகள். அவர்கள் எந்த பிராந்தியமாக இருந்தாலும் இலங்கை தாயின் சிறுவர்களே. இலங்கையின் மிகப் பெறுமதிவாய்ந்த சொத்து அவர்கள்.
த கட்டுமரன் : இலங்கையின் பெறுமதிவாய்ந்த சொத்துக்களை ஒன்றாக இணைப்பதில் எவ்வளவுதூரம் வெற்றிகண்டுள்ளதாக எண்ணுகிறீர்கள்?
பதில்: இலங்கையின் வெற்றி மற்றும் உறுதித்தன்மை அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதிலேயே தங்கியுள்ளது. எமது கலாச்சார பன்முகத்தன்மையே இலங்கையை செழிப்பான நாடாக காண்பிக்கிறது. செல்வம் பணத்தினால் மட்டும் வருவதல்ல கலாச்சார பன்முகத்தினாலும் அது உருவாக்கப்படுகின்றது என்பது எமது அமைப்பின் துணைக் கொள்கைகளாகும். இதையே நாம் ஒவ்வொரு சிறார்களிடமும் விதைக்கிறோம்.
முதலில் அந்தந்த பிரதேசங்களில் பிரதேச ஒன்றிணைப்பை செய்யும்போது நல்லிணக்கம் உருவாகும். அதற்காகவே நாம் கிராம ஒன்றிணைப்பு திட்டம் என்பதை உருவாக்கி சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறோம். அவ்வப் பிரதேசங்களிலேயே சிறுகச் சிறுக பணத்தை சேகரித்து தங்களை விட பொருளாதாரத்தில் குறைந்த நபர்களுக்கு அல்லது குடும்பத்திற்கு இளைஞர்களுக்கு எமது மாணவர்கள் உதவிவருகிறார்கள். கடந்த வருடம் மிகவும் வெற்றிகரமாக திட்டமிட்டு அதனை மேற்கொண்டோம். சமூக அக்கறை திட்டம் என நாம் அதனை அழைத்தோம். கிராமிய அபிவிருத்தி, நல்லிணக்க திட்டம் என்பனவும் அடங்கும்.
வடக்கு திட்டத்தில் வடக்கு பிள்ளைகள் தெற்கிற்கும் தெற்கு திட்டத்தில் தெற்கு பிள்ளைகள் வடக்கிற்கும் சென்று ஒன்றாக பணிபுரிய வேண்டும். அதை செயற்படுத்தி எமது மாணவர்களிடையே ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் தொடர்ந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள்.
இளைஞர் பயிற்சி முகாம்களினூடாக அவர்கள் ஒன்றாக 4 நாட்கள் தங்கியிருந்து தன்னம்பிகை, நல்லுறவு, தலைமைத்துவம் என்பவற்றை உருவாக்க ஒருவருக்கொருவர் துணையாக நிற்கின்றனர். சமூக ஊடகங்களினூடாக அவர்களது நட்பும் அறிவுப்பரிமாற்றமும் நிகழ்கிறது. அதுவே நாம் உருவாக்கிய பந்தம். அதுவே நாம் இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் வருமானம். நீங்களும் எமது பங்காளர்களாக மாறலாம். எம்முடன் இணைந்து பணியாற்றலாம். எம்முடன் இணைந்து பயணிக்கலாம். எம்மால் முடிந்த விதத்தில் நாட்டை கட்டியெழுப்புவோம். ஒரு ஊரில் ஒருவர் மாறினால் போதும். ஒருவர் சென்று மற்றொருவரை சந்தித்து இச்செய்தியை கூறுவதன் மூலம் இதனை அடையலாம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
This article was originally published on the catamaran.com