பொருளாதாரம்

தேசிய கீதத்தின் தமிழ் அடையாளம்?

மெலானி மானெல் பெரேரா, கார்த்திகேசு கமலரானி
“இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அமையப் போவதில்லை. எவ்வாறாயினும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதாக இருந்தால் அது தமிழ் மக்களை உதவியற்றவர்கள் என்ற நிலைமைக்கு தள்ளுவதாக அமையலாம்…
பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகும். தேசிய வைபவமாக நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதத்தின் சிங்கள மொழியலான பகுதி மட்டுமே இம்முறை பாடப்பட்டது. ஆனாலும் அதற்கு மாறாக மாற்றுக் கருத்துடைய சிங்கள மற்றும் தமிழர்கள் ஒன்றாக இணைந்து பிரத்தியேகமாக சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தேசிய கீதத்தை பாடினர்.
புதிய அரசாங்கம் 72 ஆவது சுத்நதிர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் இசைப்பதென்ற முடிவை எடுத்திருந்தது. 2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தேசிய கீதத்தை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பொது வைபவங்களில் இசைத்தது.
“தமிழில் தேசிய கீதம் ஒத்திகை பார்க்கப்பட்டதை நாம் பார்த்தோம். தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை நாங்கள் கேட்டுள்ளோம். ஆனாலும் எங்களுக்கு தமிழில் பாடி பரீட்சயம் இல்லை. தமிழில் உச்சரிப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது. நாங்கள் ஒத்திகை பார்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது உச்சரிப்பு முக்கியமானதாக அமைவதால் ஆகும்” என்று இந்த நடவடிக்கையை வழி நடத்தும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மரிசா டி. சில்வா கூறினார்.
இத்தகைய செயற்பாட்டாளர்களுள் ஒருவரான ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவரான சிரிதுங்க ஜயசூரிய மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பு பொரளை சுற்று வட்டத்தில் கூட்டம் நடத்திய ஒரே அரசியல் வாதியாவார். தேசிய கீதத்தை தமிழை விட்டுவிட்டு சிங்கள மொழியில் பாட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையை எந்தவொரு அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் மறுக்கவில்லை என்பதை அவர் மட்டுமே சுட்டிக் காட்டினார்.
“தேசிய தினமானது நாட்டிற்கும் மக்களுக்கும் என்ற அடிப்படையில் இரண்டு விதமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அதனால் தேசிய கீதத்தை சிங்கம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இசைக்கப்படுவதை எமது அரசியல் யாப்பு அங்கீகரித்திருக்கின்றது. அதனால் அதிகாரிகள் அதனை உதாசீனம் செய்துவிட்டு சிங்கள மொழியில் மாத்திரம் இசைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். நான் அந்த முடிவை எதிர்ப்பதோடு தமிழ் மக்களது உரிமைக்காக இவ்வாறு குரல் எழுப்ப வீதியில் இறங்குகின்றேன்” என்று ஜயசூரிய தெரிவிக்கின்றார்.
நாட்டில் அதிகமான மக்கள் இவ்வாறு தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டதையிட்டு அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். ஆனாலும் இவ்வாறு உரிமை ஒன்று இழக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் மக்கள் பகிரங்கமாக பேசவில்லை. அவர்கள் இந்த நடவடிக்கை குறித்து கவலையடைந்திருப்பதை அவர்களது கருத்துக்கள் வெளிப்படுத்தவதாக உள்ளன. அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவ்வாறு தைரியமாக அவர்களது கவலையை அவர்கள் வெளிப்படுத்தினர்.
அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமானது அவர்களின் உரிமை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


      Father-Sarath-Iddamalgoda-ii

“ஒருவரது தாய், தாய் நாடு அல்லது தெய்வம் பற்றி விளக்கும் போது தாய் மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது எமது தாய் நாட்டிற்கான பற்றுதலை வெளிநாட்டு அல்லது பிற மொழியில் வெளிப்படுத்துவது மிகவும் கஷ்டமானதாகும். அவ்வாறு நாங்கள் செய்ய முற்படுவதாயின் அது எந்தவிதமான உணர்வுகளும் அற்ற ஒருவிதமான செயற்பாடு மட்டுமேயாகும்.” என்று 65 வயதுடைய யோகராஜா கூறுகின்றார். யோகராஜா யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்து மதத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளராவார்.” அது ஜனநாயக மற்றும் மனித உரிமையுமாகும். நாங்கள் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை யாரும் மறுக்க முடியாது” என்று அவர் தெரிவிக்கின்றார்.
ரெஜினாவும் அந்தேனிப் பிள்ளையும் காங்கேசன்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களாவர். தமிழ் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் அவர்கள் குறிப்பிடுகையில் ஒருவரது தாய் மொழியில் சேவையாற்ற இருக்கின்ற உரிமையானது பிறப்பால் கிடைக்கின்ற உரிமையாகும்.எங்களால் சிங்கள மொழியை புரிந்துகொள்ள முடியாது. சில சந்தர்ப்பங்களில் உணர்வை வெளிப்படுத்த முடியாத நிலையில் நாங்கள் எவ்வாறு தேசிய கீதத்தை பாட ஒன்றாக இணைவது. எங்களுக்கு உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எங்கள் உரிமையை அனுபவிக்க எங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
யோகராஜா, ரெஜினா மற்றும் அந்தோனிப் பிள்ளை ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் தேசிய கீதத்தை தமிழ் மக்கள் அவர்களது தாய் மொழியில் பாடும் போதே அவர்களால் நாம் இலங்கையர் என்ற உண்மையான உணர்வை வெளிப்படுத்த முடிவதாக தெரிவிக்கின்றனர். இனங்களுக்கிடையில் உள்ள பிணைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினைகளை புரிந்து கொண்டிருந்ததால் தமிழர்களது தேவைகளை அறிந்து தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதி வழங்கி இருந்தது. 2019 ஆம் ஆண்டு அரசியல் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதால் சிங்கள மொழியில் மட்டுமே என்ற தேசிய கீத கொள்கையும் நவீன கொள்கை மாற்றமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடும் நிகழ்வில் பங்குபற்றிய சுவஸ்திகா அருள்லிங்கம் என்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தெரிவிக்கையில் கூறியதாவது :
“இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அமையப் போவதில்லை. எவ்வாறாயினும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதாக இருந்தால் அது தமிழ் மக்களை உதவியற்றவர்கள் என்ற நிலைமைக்கு தள்ளுவதாக அமையலாம். அதனால்தான் நாங்கள் தமிழ் மக்களுக்காக ஒன்றுபட்டு எங்களது ஒத்துழைப்பை வெளிப்படுத்த முடிவு செய்தோம்.”
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடும் குழுவில் அங்கம் வகித்த ஒருவரே சிவில் சமூக செயற்பாட்டாளரான அமாலி வெலகெதர ஆவார். அவர் தெரிவிக்கையில் கூறியதாவது:
தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஓரணியில் திரண்ட பிரமாண்டமான அடையளமாக இந்த நிகழ்வு அமைகின்றது. சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதென்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் நாம் அனைவரும் பொரளை பொது மயானத்திற்கு அருகாமையில் உள்ள சுற்று வட்டத்தில் ஒன்று திரண்டோம்”.
கொழும்பைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதியான நதீரா பிரியதர்சினி தெரிவிக்கையில் தமிழ் மக்களின் மொழி உரிமைக்காக குரல் எழுப்புவதற்காக ஒன்று சேர்ந்ததாக கூறினார்.
“நான் அந்த நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்குபற்றினேன். தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என்ற அபிப்பிரயம் நிலவியது. அந்த சிந்தனையை தோற்கடிக்கும் வகையில் நாங்கள் தமிழ் மொழியிலும் இசைத்தோம்” என்று பிரசித்தி பெற்ற சிவில் சமூக செயற்பாட்டாளரான கத்தோலிக்க ஆயரான சரத் இத்தமல்கொட தெரிவிக்கின்றார்.
“நாங்கள தேசிய ஒருமைப்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு அதற்காக பாடுபடுவதற்காக மற்ற இனத்தவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்காகவும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த சமூகம் ஒன்றில் இன ஐக்கியமானது பிரதான பண்பாக இருந்து வருகின்றது. இன ஐக்கியம் இல்லாமல் எங்களுக்கு எதிர்காலம் இல்லை. இவ்வாறான இன அடிப்படையிலான பிளவுகளின் முன்னால் நாங்கள் உயிர்களைப் பலி கொடுக்க தயாராக இல்லை. ஆனாலும் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறு ஒன்றாக குரல் எழுப்பி ஒன்றாக செயற்படுகின்றோம்” என்று ஆயர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் தெரிவித்த ஒரே கருத்து தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் மிகவும் கவலைக்குரியதும் மீளாய்வு செய்யப்பட வேண்டியதும் ஆகும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாத்திரம் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படும் என்று அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கின்றது.
மரிஸ்ஸா டி.சில்வா தெரிவிக்கையில் ஸ்ரீ லங்கா தாயே என்று தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைத்து அதற்காக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கான உதாரணமாக இவ்வாறு ஓரணியில் திரண்டமையானது மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும் என்று திருப்தியை வெளியிட்டார்.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts