இராணுவ அதிகாரி: “நாங்கள் வாழ்ந்து வருவது சவுதி அரேபியாவில் அல்ல, இலங்கையில்”
மங்களநாத் லியானார்ச்சி
வன்முறையானது இஸ்லாத்தின் ஒரு அங்கம் அல்ல என்பதோடு முஸ்லிம் சமூகத்தினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் ஐக்கியம் நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் அதற்கான காரணிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகின்றது…
“சிங்கள – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக முறையான விசாணைகள் நடத்தப்பட வேண்டி இருப்பதோடு இன்றைய சூழ்நிலையில் நடைபெறுவது போன்ற அநீதியானதும் இனவாத அடிப்படையிலுமான குறுகிய நோக்கம் கொண்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அது முரண்பாடான சூழ்நிலைகளுக்கு முற்றுப் புள்ளியாயாக அமையும்.”என்று இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் அசார் இஸடீன் தெரிவிக்கின்றார்.
சிங்கள மக்களின் பொருட்களைப் பாதுகாப்பவர்கள் இஸ்லாமியர் என்று..
“சிங்கள மக்கள் எங்காவது சுற்றுப் பிரயாணங்கள் போகும் போது அவர்களது விலை மதிப்பற்ற பெறுமதியான பொருட்களை திரும்பி வரும் வரையில் பாதுகாப்பிற்றாகக முஸ்லிம் மக்களிடம் ஒப்படைத்து விட்டு செல்லும் மரபு ரீதியான வழக்கம் முன்னைய சிங்கள கிராமங்களில் இருந்து வந்தது. சிங்கள மக்கள் அவர்களது பிரயாணங்களை முடித்துக் கொண்டு கிராமத்திற்கு திரும்பி வரும் வரையில் அவர்களது விலை மதிப்பற்ற பொருட்களை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பு “கமே நானா” (முஸ்லிம் கிராமத்தின் பிரதானி) விடம் இருந்து வந்தது. அப்படிப்பட்ட ஒரு யுகம் இந்த நாட்டில் இருந்தது. அந்த நம்பிக்கை இன்று முஸ்லிம் சமூகம் குறித்து இல்லாமல் போய்விட்டது”. இனவாதத்தின் மூலம் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாப்பதற்காக திருகோணமலையின் வடக்கு கடற்கரை பிரதேசத்தில் உள்ள மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் பக்கமாக இருந்து சிங்கள குரல் ஒலிக்கின்றது. இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரியான அசாத் இஸதீன் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்ட காலமாக மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்து வந்த ஒற்றுமையானது சீர்குலைவதற்கான காரணங்களை கண்டறியும் முயற்சியில் மிகவும் கடுமையாக ஈடுபட்டுள்ளார்.
இனத்தின் பெயரால் கடந்த காலப்பகுதியில் நடைபெற்றது போன்ற இனவாதத்தின் அடிப்படையிலான மிக மோசமான கசப்பான செயற்பாடுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அதனை நோக்கில் கொண்டு இராணுவத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை புரிய வைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தற்போதைய இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் பெரோரவின் தலைமையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதோடு அவரது பிரதான திட்டமாக முன்வைக்கப் பட்டிருப்பது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவும் சந்தேகங்களை போக்குவதற்கும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
“ஏற்கனவே நாங்கள் திகனை மற்றும் பேருவலை சம்பவங்களின் போதும் இதே போன் நிலைமைகளுக்கு முகம் கொடுத்தோம். மக்கள் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் வாழ்ந்து வருகின்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது குறிப்பாக இனப்பிரச்சினை அல்லது முரண்பாடுகளின் ஒரு பகுதியாக முஸ்லிம் சமூகம் உள்வாங்கப்படுவது இலங்கையின் போக்கில் பொதுவானதாக மாறி இருக்கின்றது. இது இலங்கையின் போக்கில் ஒரு பிரதான பலவீனமாகும். இன ரீதியான நட்புறவு என்ற செய்தி எங்களது சமூகத்தில் உள்ள இளம் தளைமுறையினர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய விடயமாக இருந்து வருகின்றது” என்று பிரிகேடியர் இஸ்ஸதீன் குறிப்பிடுகின்றார். வன்முறையானது இஸ்லாத்தின் ஒரு அங்கம் அல்ல என்பதோடு முஸ்லிம் சமூகத்தினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் ஐக்கியம் நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் அதற்கான காரணிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகின்றது.
“நாங்கள் வாழ்ந்து வருவது சவுதி அரேபியாவில் அல்ல. நாம் வாழ்வது இலங்கையிலாகும். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அரபி மொழியையும் ஏனைய மாற்று மொழிகளையும் கற்பிப்பதற்கு முன்னர் சிங்கள மொழியை கற்பித்தால் பிரச்சினை இந்தளவிற்கு மோசமானதாக மாறாது. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் பிரதான கருவியாக அமைவது மொழியாகும்” என்றும் பிரிகேடியர் அசாத் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.