வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

புரவி சூறாவளி: இயற்கையை அழிக்கும் வகையான வெறுப்பு பேச்சுக்கள்

சச்சினி டி பெரேரா

இலங்கை என்பது ஒரு சிறிய தீவாகும், வருடத்தின் கடைசி  மற்றும் முதல் மாதங்களில் நாடு முழவதிலும் சில மாதங்களுக்கு பருவப்பெயர்ச்சி மழை பெய்கின்றது.  ஒவ்வொரு வருட டிசம்பர் மாதத்திலும் குளிர்ச்சியான காலநிலையும் நிலவுகின்றது.  எல்லா நாடுகளிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காணப்படுகிறது. மேலும் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சூறாவளி காற்று மூலம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்து வருகின்றது.  இது  குறித்து “புரவி” என்ற சூறாவளி தொடர்பாக இந்த ஆண்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அண்மையில் தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட பருவப்பெயர்ச்சி மழை மற்றும் சூறாவளி ஆகிய இயற்கையின் சீற்றம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஊடுறுவி தாக்கத்தை ஏற்படுத்தின.

புரவி சூறாவளி தொடர்பாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் பல விதமான முன்னெச்சரிக்கைகளை விடுத்து அதன் அபாய நிலையில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவித்திருந்தது.  இந்த அறிவித்தல்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல விமர்சனங்கள் நகைச்சுவை ரீதியாகவும் பரப்பப்ட்டு வந்தன. நகைச்சுவைகளுக்கு மத்தியில் டிசம்பர் முதல் வாரத்தில் வீசிய சூராவளி யாழ்ப்பாண தீபகற்பம் சாவகாச்சேரி பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதோடு, 13,052 குடும்பங்களைச் சேர்ந்த 43,814 பேர் பாதிக்கப்பட்டதோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளதோடு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூறாவளிகளுக்கு இவ்வாறு பெயர்களை இடுவதன் நோக்கம் அதனால் ஏற்படப்போகும் போழிவுகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காகவாகும்.  இருந்தாலும் அது தொடர்பாக பேஸ்புக், வட்ஸ் அப்(whats app) மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் “புரவி” என்ற சுராவளி குறித்த பெயர் தொடர்பான பதிவுகள், கருத்துகள் மற்றும் அது தொடர்டபான எதிர் வினைகளால் நிரம்பி வழிகின்றன.

அத்தகைய கருத்துக்களில் சில வருமாறு :-

பேரழிவிற்கு தயாராகி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, இலங்கையில் சமூக ஊடக பயனர்கள் ஆயிரக் கணக்கானவர்களை ஆபத்தில் ஆழ்த்திய பேரழிவை குறித்து கேலி செய்வதாக நடந்து கொண்டனர்.

அடிப்படையில், குறைந்ததரம் வாய்ந்த தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டன. இது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு மட்டங்களில் பல வருடங்களாக விவாதிக்கப்படுகிறது. பெரும்பாலும், இளைஞர்கள் சமூக ஊடகதளங்களில் இந்த பொருத்தமற்ற நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள், அவை சைபர் செயற்பாட்டில் பாதகமானவையாக அமைந்தன.புரவி தொடர்பான வெறுக்கத்தக்க பேச்சு நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாக அமைவதோடு, இலங்கையில் சமூக ஊடக பாவனையாளர்களின் அணுகு முறைகள் பற்றிய போக்கினை வெளிப்படுத்திக் காட்டுவதை உங்களால் காணமுடியும். இது தேசிய அளவில் ஒரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும், கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள படி பேரழிவு காலங்களில் தேசத்தின் அணுகுமுறை குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களை பரப்புவதை இந்த சமூக ஊடக பாவனையாளர்களில் சிலர் மேற்கொண்டு வந்தமையானது பொறுப்பற்ற நடத்தையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

மேலும் வெறுப்பூட்டும் வகையிலான இத்தகைய பதிவுகளில் பெண்களை அவமதித்தல், இலங்கையின் வானிலை அவதான நிலையம் மற்றும் ஏனைய சில அரசாங்க நிறுவனங்களின் சேவைகளை அவமானப்படுத்தும் வகையில் இழிவாக பேசுதல் போன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

புரவி சூராவளியைப் பற்றி மட்டுமல்ல, ஏனைய பகுதிகளிலும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் அதாரமற்ற செய்திகளை பரப்புவதில் ஆரம்ப கட்ட செயற்பாட்டில் சிங்கள மொழி மூலமான செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்துவருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதிர்பார்க்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான பதிவுகளுக்கு பதிலாக, சமூக ஊடக பயனர்கள் இந்த வகை பதிவுகளை விரும்புகிறார்கள். இதை ‘மெய் நிகர் துஷ் பிரயோகம்’ அல்லது சைபர் வெறுப்புட்டல் என்றும் அழைக்கலாம். பயனற்ற தகவல்களைச் சுற்றி பொது அணுகு முறை சூழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவற்றை பெறுநர்களுக்கான உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை பரப்புதல் எனும் தகவல் தொடர்பு அலைவரிசை/ஊடகங்களின் முந்தைய பாத்திரத்தை மாற்றியமைக்கிறது. வெறுக்கத்தக்க பேச்சுக்களை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் உள்ள பாதிப்புகளைப் பற்றி விவாதிக்கும் போது பொது தகவல் தொடர்புகளின் உணர்வுபூர்வமான நிலை மற்றும்  பாதுகாப்பின்மை பற்றிய கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்த தவறான சைபர் பயன்பாடானது ஒரு ஒரு பாரிய உணர்வு ரீதியான அச்சுறுத்தலாகும்.இத்தகைய நிலைமைகளானது பொது மக்களிடையே துல்லியமான, உண்யைமான தகவல்களை அறிவதற்கான ஆர்வத்தை பாதிப்பதாக அமைகின்றது. புரவி சூறாவளி தொடர்பாக பகிரப்பட்ட வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான பேச்சு உள்ளடக்கங்கள் ஒரு தேசியவாத, மத மற்றும் தீவிரவாத பிரச்சினை அல்ல என்றாலும் அது நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். ஆனால் நேரத்திற்கு கணிக்க முடியாத ‘வலை 2.0’ இளம் தளைமுறையினர் மத்தியில் அப்படியே வேரூன்றிய செயற்பாடாக அமையலாம். நவீன தகவல் தொடர்பு செயற்பாட்டை ஒரு சீரான மற்றும் வெளிப்படையான தகவல் மையமாக முன்னேற்றுவதற்காக இலங்கையில் உள்ள சமூக ஊடக நடைமுறைகளில் இருந்து இத்தகைய மோசமான நடத்தை பண்பு ஒழிக்கப்பட வேண்டும். அதை கட்டாயத்தால் செய்ய முடியாது. ஆனால் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பயன்படுத்தி புதிய ஊடக தளங்கள் உட்பட சைபர் வசதியை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதோடு அது தொடர்பான நடத்தை குறித்த கொள்கைகளும் அறிமுகபப்டுத்தபட வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts