Transparency

லொக்டவுனால் ஏற்பட்ட முடக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

சச்சினி டி பெரேரா

இலங்கை தற்போது கோவிட் -19 இன் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது.  2020 மார்ச் நடுப்பகுதியில் இருந்து கொரோனாவின் முதலாவது அலையின் போது சமூக இடைவெளியை பேணுவதற்கும், சமூக பரவலை தடுப்பதற்குமாக ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமுல்படுத்தி இருந்தது. அவசரகால சட்டத்தின் கீழான ஊரடங்கு சட்ட உத்தரவு என்பது மக்கள் பொதுவாக அனுபவித்த ஒன்று. நாடு அபாய நிலைமையிலிருந்து தப்பியுள்ளது என்பதை உணரும் வரையிலான நீண்டகால பொது முடக்கம் என்பது ஒரு பொறுப்பான நடைமுறையாகும். இருப்பினும் இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்காக பொது முடக்க உத்திகளை ஏற்றுக் கொள்ளுதல் மனித மற்றும் மருத்துவ வளங்கள் கணிசமாக அதிக அளவில் காணப்படுவதனால் ஆhகும். ஆரம்ப அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப் பட்டதால், பல்வேறு அளவுகளில் எதிர்மறையான பொருளாதார தாக்கம் ஏற்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட பொது முடக்கத்தை சமாளிப்பதற்கு கணிசமான பொருளாதார முறைகளை முன்னெடுப்பதற்கு மாறாக உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததன் காரணமாக அதனோடிணைந்த ஏனைய துறைகளிலான செயற்பாடுகளும்; ஒரு கடுமையான சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காரணத்தால் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிதிக்கும் பொழுது, வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தடையை ஏற்படுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. எனவே, நான்கில் மூன்று பங்கை கொண்ட அரச மற்றும் தனியார் துறைகளிலான் நடவடிக்கைகள் திடீரென சரிந்தன. இது இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த சிறிய பொருளாதார மையங்களை பெரிதும் பாதித்தது.” என கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத ;துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்தன அழுத்கே கூறுகின்றார்;. தினசரி ஊதியம் பெறுபவர்கள் அவர்களுக்கு மிகவும் குறைந்த மட்ட உதவிகளுடன் மிகவும் கடினமான முறையில் காலத்தை கழிக்க வேண்டிய நிலை உருவாகியது. இலங்கையின் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளில் 52%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் (SME) துறைகளின் செயற்பாட்டை அரசு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. இந்த நோய்த் தொற்று காரணமாக மற்றொரு பாரியளவிலான வருமானத்தை ஈட்டித் தரும் சுற்றுலாத் துறையும் ஸ்தம்பிதமடைந்ததால் அதனால் கிடைக்கும் அந்நிய செலாவணியும் கிடைக்காத நிலையில் வீழ்ச்சியi சந்திக்க நேர்ந்துள்ளது. நிச்சயமற்ற தன்மையால் ஒரு குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக மக்கள் அந்த நேரத்தில் தயக்கத்துடன் எதிர்பார்த்திருக்கலாம். தொற்று நோயுடன் சேர்ந்து உலகம் முழுவதும் குறைந்த நுகர்வோர் வடிவங்கள் திடீரென தோற்றம் பெற்றதுஇ முதல்தர உலகநாடுகளுக்கு கூட அதிர்ச்சியை அனுபவிக்க செய்தது.

கொரோனாவின் முதல் அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் முடக்கம் அடைந்த போது நிகழ்ந்த பொருளாதார அடிப்படையிலான ஊழல் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ள இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் அதன் கணக் கெடுப்புக்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இப் பகுப்பாய்வானது நம்பிக்கையான மற்றும் நமபிக்கையற்ற சாட்சியங்கள் என்ற இரு வேறு அடிப்படைகள் கீழ் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச தனியார் நிறுவன அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வின்படி, ஒட்டு மொத்தமான நம்பிக்கைக்குரி உள்நாட்டு வருமான வளங்களில் 24% மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் 39% என்ற எதிர்மறை தாக்கத்தை காட்டுவதாக இருக்கின்றது. ஒட்டு மொத்த பகுப்பாய்வின் படி, பொது முடக்க காலத்தில் நம்பிக்கையான சூழ்நிலையை விட எதிர்பார்ப்பு குறைவான சூழ்நிலை 50% அதிகமாக உள்ளது. பொது முடக்கத்தினால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகள் (SME) 514.8 பில்லியன் ரூபா வருவாயை இழந்ததால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% ஆக வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப் படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும், கொரோனா முதல் அலையின் பொது முடக்கத்தின் போது தனிமைப் படுத்தப்பட்ட மையங்களை பராமரித்தல், நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள், தங்குமிட வசதிகள், அத்தியாவசிய மனித வள சக்தி, போக்குவரத்து சேவைகள் போன்றவற்றிற்கு அரசு பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. “2019 ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து மீண்டாலும் வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறையினால் கிடைக்கு வருமானம், உற்பத்தி செயல்பாடு மற்றும் தொற்று நோயுடன் தொடர்புடைய சேவைகள் திட்டமிடப்பட்டுள்ள அடிப்படையில் முன்னெடுகக்ப்படுவதால் ஒட்டுமொத்தமான பாதிப்பு 3.2% வீதமாக அமையலாம் என இலங்கையின் நிலைமை குறித்த உலக வங்கி அறிக்கை கூறுகின்றது. 

பொதுமுடக்கத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்க்கும் போது, தேசிய பொருளாதாரத்தினை முக்கியமாக பாதிக்கும் பல அம்சங்கள் கடுமையான மற்றும் ஓரளவு எதிர் மறையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசிய மற்றும் அவசியமற்ற உற்பத்தி பொருட்கள், விவசாயம், நடந்து கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள், வங்கி மற்றும் நிதி சேவைகள், வாடகை மற்றும் குத்தகை நடவடிக்கைகள், சட்ட மற்றும் கணக்கியல் நடவடிக்கைகள், தனியார் கல்வித் துறை, முக்கிய பொழுது போக்கு நிகழ்வுகள், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி போன்ற பாதிக்கப்பட்ட அம்சங்கள் இன்னும் மீண்டு வரும் செயல் முறையிலேயே உள்ளன. கோவிட் -19 இன் பரவல் காரணமாக துப்புரவுப் பொருட்களின் உற்பத்தியின்  குறிப்பிட்டகால இடை வெளியிலான தேவை காணப்படுகிறது. பொது சுகாதார சேவைகள், பொது நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, எரி சக்தி உற்பத்தி, நீர் வழங்கல், ஒளிபரப்பு சேவைகள் மற்றும் மருந்து உற்பத்தி போன்றவை பொது முடக்கத்தின் போது நேர்மறையான நிதி தாக்கத்தை ஏற்படுத்திய தொழில்களாகும்.

முன்னர் 4% இருந்த பணவீக்கம் இப்போது 6 -7% வரை உயர்வடைந்திருக்கின்றது. பொது முடக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் உடனடியாக இந்த நிலையில் மீட்சியை ஏற்படுத்துவது சற்று கடினமானதாக இருக்கின்றது. எமது பொருளாதார அமைப்பில் பலவிதமான பலவீனங்கள் உள்ளன.  அவை பொது முடக்கத்திற்கு பின்னரான சவால்களை எதிர்கொள்ளும் திறனை பாதிப்பதோடு, இந்த நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கான செயல் முறையை தாமதப்படுத்துகிறது. நாட்டிற்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித்தருகின்ற பிரதான துறைகளில் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்படையாக இருப்பவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது மினுவாங்கொடை கோவிட் கொத்தணி அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மேல் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டதால்; இந்த இரண்டாவது அலையில் 50மூக்கும் அதிகமான நிதி பொருளாதார மற்றும் வருமான இழப்பை நாடு சந்தித்து வருகின்றது என்பது மிகவும் வெளிப்படையானது என கலாநிதி அழுத்கே தெரிவிக்கின்றார்.
நாம் மாற்றீடுகளுடன் உலகம் முழுவதிலும் அதிக தேவையை ஏற்படுத்தக்கூடிய கேள்வி அதிகமாக உள்ள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் புதிய வழிமுறைகளின் ஊடாக புதிய வழிகளை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையான ஏற்றுமதி பொருளாதாரம், கோவிட் பாதித்ததால் கூட பொருளாதாரத்தை தாக்காது. மேலும், எமது நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர் படையில் காணப்படும் தகைமையற்ற வெளிநாடுகளுக்கான தொழிலாளரகளை அனுப்பும்; நடை முறைகளை நாம் குறைக்க வேண்டும். அரசாங்கம் இந்த பணியை மேற் கொள்ளா விட்டால் நாட்டை விரைவில் மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் நிலை ஏற்படலாம். நாம் முதலில் உள்ளூர் தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் தரமான செயல் திறனை அதிகரிக்கக்ககூடிய மூன்றாம் நிலை தொழிலாளர்களுக்கு முரண்பாடற்ற ஊதியம் வழங்கும் நிலையை அறிமுகப்படுத்த வேண்டும். இலங்கை பேரண்ட சந்தைகளை இலக்காக கொண்டு செயற்படுவதை விட உலகம் பூராவும் உள்ள நுண்பாக (சிறிய) மட்டத்திலான சந்தைகளை ஆக்கிரமிக்கும் திறன் கொண்டதாகையால் அவ்வாறான அணுகு முறைகளை பின்பற்ற வேண்டும்.. இதனால் எதிர்காலத்தில் நமது பொருளாதார ஸ்திரத் தன்மையை பலமடையச் செய்ய தமுடியும். அதிக கேள்வி உள்ள கொண்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை பெறக்கூடிய வகையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும் வளங்களை ஒதுகக்வும் ஏற்ற வகையில்  கொள்கை வகுகக்ப்பட வேண்டும். பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் தற்போதைய சவால்களை சந்திப்பதற்கான ஒரு சில ஆலோசனைகளாக இவை அமையலாம் என்று கலாநிதி அழுத்தகே மேலும் தெரிவிக்கையில் கூறுகின்றார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts