சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமூக ஊடகங்களை பயன்படுத்தல் மற்றும் மனித இயல்பு பற்றிய பௌத்த ஆய்வு கண்ணோட்டம்

ஐ.கே. பிரபா

எல்லா மனிதர்களும் கலாச்சார பண்புகள் மற்றும் நடத்தைகளுடன் பிறந்தவர்கள் என்பது உலகின் கோட்பாடு. ஒரு குழந்தை கருப்பையில் கருத்தரிக்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையின் கடைசி தருணம் வரை, அவர்கள் ஒரு மத மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட சடங்குகளை பின்பற்றுகின்றார்கள். அது மனித இயல்பு. ஏனென்றால் மனிதர்கள் அத்தகைய பழக்கங்களை மரபுரிமையாகப் பெறுகிறார்கள். ஒரு நபர் தனது மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதுபோல, விசுவாசிகள் அல்லாதவர்களின் நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பது தேசிய ரீதியில் ஒரு நல்ல குணம்  சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்ட வேண்டும். எனினும், எந்தவொரு நபரும் தனித் தனியாக அல்லது குழுக்களாக தனது  நபர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மதம் அல்லது இனக்குழு, உடை, உணவுகள் மற்றும் மற்றொரு இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின் மத நம்பிக்கைகள் போன்ற எண்ணங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதனால் அவன் அல்லது அவள் வன்முறையில் நடந்து கொள்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சமூக ஊடகங்களாகும். வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு மத்தியில், நவீன மனிதன் மத ஸ்திரத்தன்மைக்கு தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதற்கு இடையிலான பனிப் போரை சந்தித்து வருகிறான்.

உலகலாவிய ரீதியில் ஊடக பண்பாட்டுடன் ஒப்பிடும் போது, சமூக ஊடகங்கள் இன்னும் இலங்கையர்களுக்கு ஒருபுதிய அனுபவமாகும். இலங்கையின் பெரும்பான்மையானவர்கள் மதரீதியான கருத்துக்களை பரப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எவ்வளவு நியாயமற்ற செயல்.  ஆதி நவீன தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்வதை உறுதி செய்வதற்கும் உலகம் புதியதகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்திவரும் இத்தகைய சூழலில் வன்முறை யோசனைகள் மனித குலம் முன்வைப்பது எவ்வளவு பொருத்தமற்றது? நீங்கள் அத்தகைய ஒரு இயற்கைக்கு மாறான நோக்கம் கொண்டவரா என்பது தான் நீங்கள் உங்கள் மனசாட்சியை கேட்க வேண்டிய கேள்வியாகும்.

“ஒரு நாய் நம் காலை கடித்தாலும், அந்த நாய் காலை நாம் கடிக்கலாமா?”

நீங்கள் ஒரு பௌத்தராக இருந்தால் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். “வசல” சூத்திரம் கூட ஒரு நபரினது மேன்மை அல்லது தாழ்வு மனப்பான்மை அவரது செயல்களால் தீர்மானிக்கப் படுகின்றது என்று கூறுகிறது.

“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பரஹ்மணோ

கம்மனா வசலோ ஹோதி – கம்மனா ஹோதி பிரஹ்மணோ””இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல், சமூக அந்தஸ்து தேசியம் அல்லது சொத்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடும் இன்றி, இப் பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு எல்லோரும் உரித்துடையவராவர். மேலும், எவரும் அவரவருக்கு உரித்துள்ள நாட்டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், சட்ட அல்லது அவர் அல்லது அவள் வாழும் நாட்டின் சர்வதேச அந்தஸ்து அடிப்படையில் — சுதந்திர நாடாக, அடக்கு முறைக்குட்பட்ட, அல்லது இறைமையுள்ள சுயாட்சி நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினும் —எந்தவிதமான வேறுபாடுகளும் காட்க்கூடாது.” என்று சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தில், உறுப்புரை 02 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இலங்கையில் வடக்கு மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றிய பிரீமியர் லீக் போட்டி குறித்தும், மற்றும் பல்வேறு மத நிகழ்வுகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகள் மற்றும் பதிவுகள் இடப்பட்டுள்ளன.

  • கொவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் உடல்களை தகனம் செய்தல் குறித்த அறிக்கைகள், PCR பரிசோதனைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் பெண்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்வது பற்றிய பதிவுகள்.

  • தமிழ் மக்களால் வழிபடக்கூடிய காளி அம்மா கனவில் தோன்றி கூறியதாக கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியரால் தயாரிக்கப்பட்ட கொரொனா வைரஸ் தொற்றிற்கு நிவாரணமாக தயாரிக்கப்பட்ட பாணி பற்றிய பதிவுகள்.

  • வெசாக் மற்றும் பொசொன் காலங்களில் பல ஆண்டுகளாக குருவிட்ட இராணுவ முகாமில் காட்சிப் படுத்தப்பட்டு பின்னர் அப்புறப் படுத்தப்பட்ட புத்தர் படத்தை எரித்தல்.
  • நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊடகவியலாளர் அவரது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட கருத்து
  • விமானப் படை வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஈடபடுத்தப்பட்டிருந்த  PT6 பயிற்சி விமானம், கந்தலே ஜனரஞ்சன ஏரியின் அருகே விபத்துக்குள்ளயகிதில் அதன் விமானி உயிரிழந்தமை தொடர்பாக ‘ஹாஹா’என்ற எதிர் வினைகளை வெளிப்படுத்தும் விதமாக கேளிக்க்கையான பதிவுகள் மூலம் பலர் பதிலளித்தனர்.

சமூக ஊடகங்களில் இவ்வாறாக முறைகேடாக பதிவுகளை இட்டு நடந்துகொள்பவர்களால் தம்ம பதய, பகவத் கீதை, புனித பைபிள் அல்லது அல்-குர் ஆன் எந்த வகையிலும் அவமதிக்காத விதமாக நடந்துகொள்வார்கள் என்று கருத முடிகின்றது? இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கையர்கள் இவ்வாறான அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டு வருவது நாடு தழுவிய பின்னடைவைக் காட்டுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் வருங்கால சந்ததியினருக்கும் தவறான முன்மாதிரிகளை வழங்குகின்றன. இது தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளையும் மிக மோசமாக பாதிப்பதாக அமைகின்றது. எந்த வொரு மதத்தை சேர்ந்தவர்களையும் மற்ற மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒப்பிட்டு இழிவு படுத்துவதன் மூலம் கிடைக்கும் சுய திருப்தி ஒரு தனிப்பட்ட மன நோயாளியின் உடல் ஆரோக்கிய நிலைக்கு ஒத்ததாகும் என்பதையும் குறிப்பிடலாம்.

இங்கே நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்ன வென்றால், நீங்கள் மற்ற மதங்களை பின்பற்றினாலும் புறக்கணித்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒருவரின் இனம் அல்லது மதத்தை ஒருவரின் சொந்த மதத்தின் அடிப்படையில் கேலி செய்வது அல்லது ஒரு தனி நபரை அல்லது ஒரு குழுவினரை துன்புறுத்துவது என்பது ஒரு மனிதனாக பிறந்ததற்கான இந்த அரிய வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பானதாகும். நீங்கள் செய்யும் செயல்களின் தீங்கிழைக்கும் நோக்கங்கள் மற்றும் உங்கள்  நடத்தைகளின் உடனடி விளைவுகள் இரு வேறுபட்ட செயலாக மட்டும் பார்க்கப்படாது. ஆனால் நீங்கள் மரணத்தின் விளிம்பில் மயக்கத்தில் இருக்கும் போது எழும் ‘சூதி சித’ (ஒரு வேளை) கூட, ஒரு திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட தொடர் காட்சிகளைப் போல நீங்கள் உதவியற்றவர்களாக இருப்பீர்கள்.

தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை குறைத்து மதிப்பிடுவது பற்றி மற்றவர்களின் நடத்தையை நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்பு உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல் அல்லது வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் மறற்வர்களின் பணத்திற்காக கைப்பாவைகளாக மாறவேண்டாம். பிற மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் அயலவர்கள் தொடர்பில் உங்கள் இதயத்தில் தாழ்ந்த எண்ணத்தை அல்லது ஆணவத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு பதிலாக, சகோதரத்துவத்தையும் தேசிய உணர்வையும், வளர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருவரின் தேசத்தை உயர்த்தும் அல்லது சமூக ஊடகங்களில் பிற இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தும் ஒரு பதிவு, கருத்து அல்லது புகைப்படத்தைப் பார்த்தால் கவலைப்பட வேண்டாம், எப்போதும் உங்கள் சொந்த, தூர நோக்கத்தை உடைய மனநிலையை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் நடவடிக்கை தேசிய சமாதானத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்குமா என்பதை மீள் பரிசீலனை செய்து முடிவுகளை எடுங்கள்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்லின கலாசாரத்தை உடைய நாடுகள் குறுகிய காலத்தில் தங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொண்டுள்ளன, தனிப்பட்ட ஆதாயத்திற்கான கருத்துகளையும் மனப்பான்மையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. ஏனெனில் உலகின் ஏனைய நாடுகள் அனைத்தும் தங்கள் தேசிய நலனையும் ஸ்தீரத் தன்மையையும் குறிக்கோளாகக் கொண்டு குரல் கொடுக்கின்றன. அதன்படி, முழு நாட்டின் ஆன்மீக மற்றும் பௌதீக வளர்ச்சியின் இருப்பு தனி நபர்களின் நடத்தையைப் பொறுத்தது என்று முடிவு செய்யலாம்.தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தேசிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் நீண்டகால நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதை அரச அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களால் மட்டும் செய்ய முடியாது. இது முழு அளவிலான பிரசைகளுக்கு ஒரு சவாலான பொறுப்பாகும். மற்றொரு நபர் தனது மதத்தை வன்முறை அடிப்படையில்யில் கண்டிப்பது மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்துகொள்வதானது அவன் அல்லது அவள் சார்ந்த மதத்தவர்களை எந்தளவிற்கு புண்படுத்தவதாக அமைகின்றது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் அவன் அல்லது அவள் மற்றவர்களிடமும் கருணை காட்டவேண்டும். தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பதாக இருப்பதோடு மத விரோத நடத்தைகள் மற்றும் எதிர்மறை மனப்பான்மைகளில் இருந்து விடுபட்ட ஒரு நபராக உங்கள் அடையாளத்தை நீங்கள் வெளிக்காட்ட விரும்புவராக இருந்தால் இன்றே மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். நாளை அல்ல. ஒரு மத அடிப்படையிலான விடயத்தை பரப்ப அலல்து தேசிய ரீதியாகவும் வெளிப்படுத்த முன்னர் அல்லது ஊடகங்களில் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு மற்றும் ஒரு வார்த்தையை வெளியிட முன், இரண்டு அல்லது மூன்று முறை சிந்தியுங்கள். அது பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்துங்கள். இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நட்பை வளர்க்கும் வகையில் செய்திகள், ஆலோசனைகள், பதிவுகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர பாதிப்பை ஏற்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts