கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நீல இதயங்களை கொண்டாடுவோம்! அவர்களின் அமைதியான சேவையை பாராட்டுவோம்!

ஐ.கே. பிரபா

கோவிட் 19 தொற்று நோய்க்கு மத்தியிலும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களின் சேவை தனித்து நின்றது. “நாம் ஒன்றிணைந்து சேவை செய்யலாம” என்பது இவ்வருடம் 2020 ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் தினத்திற்கான கருப் பொருளாகும். கோவிட் -19 இன் போது கூட உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் பங்களிப்புக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழியப் பட்ட தன்னார்வலர் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து ஒரு நீல இதயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகமூடியின் நீல நிறம், தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தொண்டூழியத்தில் கழித்த தொண்டர்களைப் பாராட்டுவதற்கானதாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களை (Heart your mask) அல்லது (Together we can) போன்ற பதாதைகளுடன் நீல இதயத்தின் படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்ற ஊக்குவித்தது. நீல இதயத்தைப் பயன்படுத்துவது தொற்று நோய்களின் போது பணிபுரியும் உலகம் பூராவும் உள்ள தன்னார்வலர்களிடம் (தொண்டர் சேவை) நேர்மறையான உணர்வுகளை மேம்படுத்தும். சமூக ஊடகங்களில் UN Volunteers, Together we can மற்றும் IVD 2020 போன்ற குறியீட்டு சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் இது தொடர்பான தகவல்களை நீங்கள் அறிந்துகோள்ள முடியும்.

1985 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி உலகம் பூராவும் இயங்கும் தன்னார்வலர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச தன்னார்வலர் தினமாக அதிகாரப் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தன்னார்வலர்களின் பணிகளை இலகுபடுத்துவது அவர்களுக்காக ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்துதல், அவர்களை ஊக்குவித்தல், அவர்களை அரசுகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் ஆதரவை பெற்றுக்கொடுப்பது மற்றும் அவர்களின் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றை கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 2001 ஆண்டை தன்னார்வ தொண்டர்களின் சர்வதேச ஆண்டாக பிரகடணப்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை, உலகம் பூராவும் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் துறை சங்கங்களின் பங்களிப்புடன், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் திகதி தன்னார்வலர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் தனிநபர் மற்றும் கூட்டு தன்னார்வப் பணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை அங்கீகரித்து நன்றி தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒற்றுமை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு, அனர்த்த நிவாரணம், சுகாதாரம், சுற்றுபுறச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் அபிவிருத்தி உள்ளிட்ட நோக்கங்களை இலக்காகக் கொண்ட தேசிய மற்றும் சர்வதேச சமூக குழுக்களின் தன்னார்வத் தொண்டர் சேவைகளை இது வலுப்படுத்துகிறது. மேலும் தன்னார்வலர்களின் சேவையை ஊக்குவிப்பதற்காக உலகம் முழுவதும் சாத்தியமான வழிகளிலான பிரச்சாரங்கள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.

உலகம் முழுவதிலும் உள்ள தன்னார்வலர்களை உலகளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் பின்வருமாறு அறிமுகப்படுத்தலாம் :

  • சர்வதேச தொண்டர் சேவையாளர்கள்.(Global volunteers)
  • பாதுகாப்பு சேவை தன்னார்வலர்கள்
  • வி.எஸ்.ஓ – பிரிட்டிஷ் தன்னார்வ நிறுவனங்கள் (VSO – British Volunteer Organizations)
  • சர்வதேச சிவில் சேவை (Service Civil International)
  • ஐ.நா. தொண்டர்கள் (UN Volunteers)

(https://www.volunteeringoptions.org/international-volunteer-organizations/ )

மேலே கூறப்பட்ட அமைப்புகளுடன் இணைந்த தொண்டர் சேவை நிறுவனங்கள் இலங்கை சமூகத்திற்கும் அதன் தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவையாவன :-

  • ஐ.நா. தொண்டர் சேவையாளர்கள் (UN Volunteers)
  • இலங்கைக்கான ஐ.நா. தொண்டர்கள் (UN Volunteer – Sri Lanka)
  • செஞ்சிலுவை சங்கம் (Red Cross)
  • V – Force (வீ போஸ்) அமைப்பு

இவற்றுக்கு மேலதிகமாக, அனைத்து வகையான தன்னார்வப் பணிகளை செய்யும் பல உள்ளூர் நிறுவனங்களும் இலங்கையில் இயங்குகின்றன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்வதன் மூலம் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அவர்களின் சேவை தொடர்ச்சியாக பாராட்டப்பட வேண்டும். (http://cabm.net/en/volunteer/rights )

“ஒரு தன்னார்வலர் என்பவர் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய தனது சேவைகளை வழங்கும் ஒருநபர். ஒரு தன்னார்வலரின் உரிமைகளில் கவனம் செலுத்தும்போது மற்றவர்களின் அதே உரிமைகள் அவர்களுக்கு இல்லை, ஆனால் அவர்களின் உடல் நலம், பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களைப் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு உரியதாகும்.” என சட்டத்தரணி கோசல பிரசன்ன யசரத்ன வலியுறுத்தினார்.

தன்னார்வத் தொண்டு என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான அடிப்படை உரிமைகள் மற்றும் அர்பப்ணிக்கப்பட்ட சேவைகளுக்காக பாடுபடுவதற்கும் பணியாற்றுவதற்குமான ஒரு அடிப்படை பணியாகும். கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகெங்கிலும் மனித உரிமைகளை அங்கீகரிப்பது உலகளாவிய முக்கியத் துவத்தைப் பெற்றிருந்தாலும், உலகம் முழுவதும் பரவலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக உலகப் போருக்குப் பிந்தைய கால சர்வதேச சட்டத்துறை அறிஞரான சர். ஹொர்ஷ் லோட்டர்பச் கூறுகின்றார்.  (https://www.srilankalaw.lk/Volume-II/convention-against-torture-and-other-cruel-inhuman-or-degrading-treatment-or-punishment-act.html )

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்களை அறிவூட்டுவதற்காக செயற்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. உதாரணமாக இலங்கையில் தன்னார்வத்துடன் பணியாற்றி வருகின்ற அத்தகைய சில நிறுவனங்கள் பின்வருமாரு:

  • சர்வதேச மனித உரிமைகள் ஆணைக் குழு (International Human Rights Commission)
  • இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு (International Human Rights Commission)
  • இலங்கை மனித உரிமைகள் அமைப்பு (Human Rights Organization of Sri Lanka)
  • மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organization – CSCN)
  • ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நேஷனல் (Transparency International)

இலங்கையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கும், நாடுகளுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அமைப்பு தன்னார்வ சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறது என இலங்கை மனித உரிமைகள் நடவடிக்கை அமைப்பின் தலைவர் திரு பி.எம். முர்ஷிதீன் கூறினார்.

“தன்னார்வத் தொண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு இல்லை, ஆனால் எந்தவொரு அமைப்பும் 14 வயதிற்குட்பட்ட நபரை நியமிக்கக் கூடாது. ஒரு தன்னார்வலருக்கு சம்பளம் கிடைக்காது. ஆனால் உணவு மற்றும் பானம் மற்றும் போக்குவரத்து செலவுகளைப் பெற உரிமை உண்டு. ஆனால் அவன் அல்லது அவள் தன்னார்வத் தொண்டர்களை புரிவதற்கு முன், சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பு அவன் அல்லது அவள் செய்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை காவல் துறை அல்லது நீதிமன்றத்தில் இருந்து பெறவேண்டும். இலாப நோக்கற்ற சட்டத்திற்கான சர்வதே நிலையம் (ICNL) மற்றும் இலாப நோக்கற்ற சட்டத்திற்கான ஐரோப்பிய நிலையம் (ECNL) ஆகியவை தன்னார்வ ஊழியர்களுக்கான விதிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இந்த அமைப்புகள் சிவில் சமூகத்தில் பணி புரியும் தன்னார்வலர்களின் பொதுவான உரிமைகள் பற்றி விவாதிக்கின்றன. இது தன்னார்வத்தை மேம்படுத்துதல், தன்னார்வலர்களின் நலனகள், அவர்களுக்கு காப்புறுதி வழங்குதல் மற்றும் சலுகைக்கான அவர்களின் உரிமைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. மாசிடோனியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு தொடர்ச்சியான சட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் 2003 ஆம் ஆண்டு சிவில் பொறுப்பு சட்டம் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இலங்கையைப் போன்ற ஒரு சட்ட அமைப்பைக் கொண்ட தென்னாப்பிரிக்காவில், 2004 குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டம் தன்னார்வலர்களுக்கு விசா வழங்குவது குறித்த புதிய முறையை அறிமுகப்படுத்தியது. சர்வதேச அளவில் தன்னார்வலர்களுக்கு பரந்த அளவிலான வசதிகளை வழங்கியது. தன்னார்வலர்களின் உரிமைகள் மற்றும் வசதிகள் குறித்த விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் 100,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு நிவாரணம் அளித்தது என்பதும் மிகவும் பிரபலமானது” என சட்டத்தரணி கோஷல யசரத்ன தெரிவிக்கின்றார்.

கோவிட் -19 தடுப்பூசி மருத்துவ பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு சீனா தடுப்பூசி போட்டது, எனினும் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சீன விஞ்ஞான துறை அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் தியான் பொகுவோ பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். (http://www.ada.lk/breaking_news/%E0 )

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளைச் செய்த ஒரு தன்னார்வலர் இறந்துவிட்டார் என்றும் சரியான தடுப்பூசி இல்லாததால் இறந்தார் என்றும்  ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (https://www.upworthy.com/hero-who-died-of-covid-in-moderna-vaccine-trial )  

2009 ஆம் ஆண்டில் தன்னார்வத் தொண்டு செய்யும் போது மூன்றுபேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (https://www.google.com/amp/s/www.nytimes.com/2020/10/02/us/politics/peace-corps-death.amp.html )

மவ்பிம பத்திரிகையின் செய்தியாளர் எம். எஸ். அனுராதா கூறுகையில் கோவிட் தொற்றுப் பரவலின் காலத்தில், அவரது பத்திரிகை அலுவலக பணிகளின் போது இரண்டு வைரஸ் தொற்று (பீ.சி.ஆர்) சோதனை மேற்கொண்ட போது அதன் பிரதிபலன் நேர்மறையானதாக இருந்தபோதும் தனது ஊடகக் கடமைகளை மிகுந்த திருப்தியுடன் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். “நான் வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு, என்னைப் பற்றி அவதூறு மற்றும்  தவறான வதந்திகள் பரப்பப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும், ஒரு பெண்ணாக இந்த நிலையில் விரும்பத்தகாத சம்பவங்கள் என் மன ஆரோக்கியத்தை பாதித்தாலும், நான் என் சிறப்பான பணிகளை மேற்கொள்ள தவறவில்லை. இது போன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு எனது செய்தி என்னவென்றால், கோவிட் மறைக்கப்பட வேண்டிய, அஞ்சப்பட வேண்டிய அல்லது அவமதிக்கப்பட வேண்டிய ஒரு நோய் அல்ல என்பதையும், தன்னார்வ சேவை தொழிலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். பலதொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில் முறை எல்லைகளுக்கு அப்பால் பொதுமக்களின் தகவல்களை அறியும் உரிமைக்கான தன்னார்வலராக அவர்களின் சமூக பொறுப்புக்காக பாராட்டப்பட வேண்டும்.பொது மற்றும் தனியார் துறைகளில் பொருளாதார, சமூக, அரசியல், வளர்ச்சி மற்றும் பல பகுதிகளை இலக்காக கொண்ட ஊடகவியலாளர்கள், பெண்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் தேசத்திற்காக தன்னார்வத் தொண்டுக்காக செலவு செய்கின்றார்கள். அது அவர்களுக்கு மகத்தான சுய திருப்தியை அளிக்கிறது. ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை விட, இனம், மதம், நிறம், பிரதேசம் என்ற பாகுபாடு இல்லாமல், தங்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அதிகமான மக்கள் கைகோர்த்து உழைத்தால், இந்த உலகின் எதிர்காலம் இன்னும் அழகாக இருக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும். உலகம் முழுவதிலும் உள்ள தன்னார்வலர்களுக்காக பல்வேறு சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் உருவாக்கப்படும் சூழலில், இலங்கை கலாச்சாரத்திற்கு ஏற்ப தன்னார்வலர்கள் தொடர்பான ஏனைய நாடுகளின் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்ட புதிய சட்டங்களை உருவாக்குதல் அவசர தேவையாக இருக்கின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts