சர்வாதிகார அரசியல் என்றால் என்ன?
பெர்னாட் எதிரிசிங்க
ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பின் பண்புகள் குறித்து ஒரு பிரபலமான நம்பிக்கை உள்ளது. அவற்றில் பல்லினத்தன்மை, கருத்து வேறுபாடு, பாலின சமத்துவம், சிவில் சமூகத்திற்கான இடம், ஊடக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சியாளர்களின் நேர்மை ஆகியவை அடங்கும். ஜனநாயகத்தின் உண்மைகள் 2020 ஆண்டு அறிக்கை, இந்த பண்புகள் இப்போது ஜனநாயக விரோதமாகக் கருதப்படும் நிலையான அரசியல் அமைப்புகளிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன என்று கூறுகிறது.
அந்த அறிக்கையின்படி, 2001 க்குப் பிறகு முதன்முறையாக, 92 நாடுகளில், உலக சனத்தொகையில் 52 சதவீதம் பேர் இப்போது சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் வாழ்கின்றனர். உலக சனத்தொகையில் மற்றொரு 35 சதவிகிதம் அல்லது 2.6 பில்லியன் மக்கள் சர்வாதிகாரத்தை நோக்கி மெதுவாக நகரும் நாடுகளில் வாழ்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பு நாடான ஹங்கேரி உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த அறிக்கையின்படி, ‘சர்வாதிகாரத்தின் மூன்றாவது அலை’ என்னவென்றால், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், மத்திய கிழக்கில் ஐரோப்பாவின் நுழைவாயிலாகக் கருதப்படும் துருக்கி, ஆசியாவிலிருந்து இந்தியா ஆகியவை சர்வாதிகார அரசியல் அமைப்பிற்குரிய அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளன.
ஒரு சர்வாதிகார அரசியல் அமைப்பின் அம்சங்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
அரசியல் விஞ்ஞானி ஜுவான் லின்ஸ் ஒரு சர்வாதிகார ஆட்சியின் சில முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டினார். அதன்படி சர்வாதிகாரம்;
1- பல்லினத்தன்மையை கட்டுப்படுத்துகிறது.
ஒரு அரசியல் தத்துவமாக பல்லினத்துவத்துவம் என்பது குறிப்பிட்ட அரசியல் சமூகத்தில் நிலவும் பல்லினத்துவத்தன்மையை அங்கீகரிப்பதுடன் பல்லினத்துவம் இருப்பதை உறுதி செய்கிறது. வெவ்வேறு இனக்குழுக்கள் தங்கள் கலாச்சார மற்றும் மத அடையாளங்கள், உறவுகள் மற்றும் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் அதே வேளையில் நிம்மதியாக ஒன்றாக வாழ முடியும். தனி மனித விழுமியங்களை நியாயமான மற்றும் திறமையான முறையில் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பில் மட்டுமே பராமரிக்க முடியும் என்பதை அது அங்கீகரிக்கிறது.
ஆனால் ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாகும்போது, ஒரு தேசம், ஒரு மதம், ஒரு கலாச்சாரம், ஒரு வாழ்க்கை முறைமை முதலியன, பின்னர் அந்த சமூகங்களில் உள்ள மீதமுள்ள மக்கள் அரசின் ஒப்புதலுடன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நிறைவேற்றுவதன் மூலமோ, அரசியல் கட்சிகளை தடை செய்வதன் மூலமோ அல்லது கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது ஆட்சியாளர்களால் மக்களைத் தூண்டுவதன் மூலமோ இந்த செயன்முறையை மேற்கொள்ளலாம்.
இதற்கு ஒரு உதாரணமாக அரசியல் அறிஞர்களால் 2019 ல் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய அரசு நிறைவேற்றிய ‘குடிமக்கள் (திருத்தம்) சட்டம்’ என்று கருதப்படுகிறது. இந்த மசோதா நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு எதிரான மசோதாவாக கருதப்படுகிறது.
2- ஆட்சியாளர் தனது அரசியல் அதிகாரத்தை எவ்வாறு நியாயப்படுத்துகிறனர்
சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளை அசாதாரணமான முறையில் முன்னிலைப்படுத்தி தங்கள் இருப்பை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். ‘பயங்கரவாத’ அச்சத்தின் பரவல்தான் இதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் தலைப்பாகும். ‘இஸ்லாமியவாதிகளின் அச்சுறுத்தல்’ என்று அழைக்கப்படுபவர்களால் முஸ்லிம்களின் அடக்குமுறை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. மோடியின் கீழ் உள்ள இந்தியாவும், டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்காவும் இதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்களாகும்.
மனிதகுலத்தின் எதிர்கால போக்கை மாற்றும் உலகளாவிய பேரழிவான கோவிட் -19, பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தை காலவரையின்றி விரிவாக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 2020 க்குள், அர்ஜென்டினா கோவிட் 19 பற்றிய போலியான செய்திகளை வெளியிட்டதுடன் இது தண்டனைச் சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு புதிய குற்றமாகும், மேலும் இலங்கை தனது கோவிட் -19 தேசிய செயற்பாட்டு மையத்தை இராணுவத் தலைமைக்கு மாற்றியமை சர்வதேச அமைப்பால் வெளியிடப்பட்ட IDEA அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3- அரசியல் பங்கேற்பு மற்றும் சர்வாதிகார எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை அடக்குதல்:
ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பில், கொள்கை முடிவுகளை எடுப்பதில் மக்களின் கருத்துகளைப் பெறுவது ஜனநாயகத்தின் மிகவும் மேம்பட்ட அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் அறிஞர்களின் கவனத்திற்கு வந்துள்ள ஒரு முக்கியமான போக்கு என்னவென்றால், பொதுக் கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் வெளியிடும் சமிக்ஞைகள் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தவோ அல்லது கலைக்கவோ முடியும் என்பதாகும்.
சர்வாதிகார போக்குகளைக் காட்டும் இந்தியாவில் மோடியின் உரைகள் முஸ்லிம்களுக்கு எதிராக வழிநடத்தின, அமெரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கத்திற்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியமை ஜனநாயக கட்டமைப்புகளில் தனிப்பட்ட நாடுகளின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பானவை அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு சர்வாதிகார ஆட்சியாளர்களின் முயற்சிகளாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கருத்து வேறுபாடுகளைப் வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களே சர்வாதிகார ஆட்சியினால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களாவர்.
4- நிர்வாக அதிகாரங்களை வரையறுத்தல்:
ஒரு ஜனநாயக அரசியலமைப்பில், நிறைவேற்று அதிகாரம் இயக்கம் மற்றும் சமநிலையின் அமைப்புக்கு உட்பட்டது. கொள்கையளவில், சட்டமன்றமும் மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏகபோக போக்கை வெளிப்படுத்தும் நாடுகளில் இதற்கு நேர்மாறாக நடக்கின்றது. நிர்வாகம் தனது அதிகாரங்களை விரிவுபடுத்துகின்றதுடன் அதன் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும் சமப்படுத்தவும் சட்ட ஏற்பாடுகளை உடைக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலவீனமடைவதுடன் நீதித்துறையின் சுதந்திரம் கையகப்படுத்தப்படுகிறது.
இந்த அம்சங்கள் ஒரு நாட்டிற்குள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விருத்தியாகும்போது அரசியல் அறிஞர்கள் ஜனநாயக அரசுகளை சர்வாதிகார நாடுகள் என்று குறிப்பிடுகின்றனர்.