கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மனித உரிமைகளின் முதன்மைப் பாதுகாவலராக அரசாங்கம் திகழ வேண்டுமா? (பகுதி II)

தனுஷ்க சில்வா   

சர்வதேச முறைமையின் பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்ற கருதுகோளின் உலகளாவிய தன்மை என்பவற்றுக்கு இடையான வேறுபாடு ஏனைய செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் பாதுகாப்பில் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வரையறை செய்கின்றது. மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியல் மனித உரிமைகள் உலகளாவியனவாகக் காணப்படுவதால் மனித உரிமைகளை ஒற்றுமைமிக்க கருதுகோளாகக் காண்கின்றது. எவ்வாறாயினும், மாற்றமாக அக்கருதுகோள் பன்மைத்துவம் கொண்ட சர்வதேச சமூகத்தில் தங்கியுள்ளது. இச்சர்வதேச சமூகத்தில் அதிக பல்வகைத்தன்மை மற்றும் வேறுபாடுகள் கொண்ட நாடுகள் காணப்படுகின்றன. எனவே, J.J. Preece (Bain, 2006) குறிப்பிடுவதைப் போன்று தனிநபர்களின் சமமான கௌரவம் என்ற எண்ணக்கரு அனுபவ உலகில் காணப்படும் இன, சமூக, மற்றும் மத விழுமிய வேறுபாடுகளை முக்கியத்துவமற்றதாக அல்லது புறக்கணிக்கக் கூடியதாக அமைகின்றது. இந்நிலைக்குரிய உதாரணங்களில் ஒன்றாக நாம் சவூதி அரேபியாவைக் குறிப்பிடலாம். அங்கு குறிப்பிட்ட கலாச்சார மற்றும் மத விழுமியங்கள் மனித சுதந்திரங்கள் மற்றும் உரிமைகளை தடுப்பனவாக அமைந்துள்ளன, விசேடமாக பெண்கள் இவ்வாறான நிலையினை எதிர்நோக்குகின்றனர். மேலும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனி நபர்களின் ஆளுகைமிக்க அரசியல் முறைமைகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நெறிமுறைகள் உள்ள நிலையிலும் அங்கு மனித உரிமைகள் கருத்திற்கொள்ளப்படுவதில்லை. எனவே, நாடுகளின் பல்வகைத்தன்மை கொண்ட சமூகக் கலாச்சாரம் மற்றும் அரசியல் சூழ்நிலை கொண்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அபிவிருத்தியை முன் நகர்த்தும் காரணியான மனிதச் சுதந்திரங்களுக்கு அத்தியாவசியமான மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கும் கடமை முற்றுமுழுதாக அந்நாடுகளுக்கு சுமத்தப்பட முடியாததாகக் காணப்படுகின்றது (Sen, 2001). இது முதற்கொண்டு, மனித உரிமைகளின் பாதுகாப்பு உலகளாவிய பொறிமுறையொன்றில் அல்லது மாற்றீடாக அவ்வாறான உரிமைகளை உறுதி செய்வது பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் சமுதாயம் ஒன்றின் அதிகாரத்தில் தங்கியிருக்க வேண்டும். உலகளாவிய தன்மை என்ற எண்ணக்கருவில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச முறைமையில் உள்ள பெரும்பான்மையான உறுப்புரிமை நாடுகளால் ஏற்கப்பட்ட அமைப்பாகக் காணப்படுகின்றது, அதன் காரணமாக உலகளாவிய அதிகாரம் மிக்கதான அவ்வமைப்பு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதிக வாழ்திறன் கொண்ட பொறிமுறைகளை வழங்கும் அமைப்பாக நடைமுறையில் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பகுதியொன்றாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC), தேசிய மட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சமாந்தரமான முதன்மை பிரதான செயற்பாட்டாளராக தனது முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் UNHRC இனது உலகளாவிய தன்மையினைக் கருத்திற் கொண்டு சனத்தொகைகளின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் அவ்வமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் (UNGA) இரண்டாம் நிலை உறுப்பினராக உள்ள UNHRC 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். இத்தெரிவின் போது வேட்பாளர் நாட்டின் மனித உரிமைகள் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் அவற்றின் மீதான பங்களிப்பு என்பன கருத்திற்கொள்ளப்படுகின்றன. எனவே, Hurd (2011) குறிப்பிடுவதைப் போன்று, பாதுகாப்புச் சபை தொடர்பாக, மனித உரிமைப் பாதுகாப்பு என்ற பெயரில் நாடுகளின் இறையாண்மையைக் குறைப்பதில் அல்லது மேற்கத்திய விழுமியங்களை புகுத்துவதில் UNHRC அமைப்பு அதிகார நலன்கள் அற்றதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் அமைந்துள்ளது. எனவே, தேசிய சனத்தொகைகளின் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கு UNHRC அமைப்பினை வலுப்படுத்தல் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இச்செயற்பாட்டில் மனித உரிமை மீறல்களை கண்காணித்து அறிக்கையிடும் இயலுமை, சமூகங்களை அவற்றின் அடிமட்டத்தில் அவதானித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், அறிக்கையிடப்படாத மனித உரிமை மீறல்களை கண்காணித்தல் மற்றும் அதிகாரம் மிகுந்த அரசுகளுக்கு எதிராக அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பை (R2P) வலுப்படுத்தும் நெறிமுறைகள் ஆகிய அனைத்து விடயங்களும் முக்கியமானவை. மேலும், பாதுகாப்புப் பொறிமுறைகளை அமுல்படுத்தும் இயலுமையை ஊக்குவித்தல் மற்றும் குற்றமிழைத்தோரைத் தண்டித்தல் என்பனவும் முக்கியமானவையாகும். தேசிய அரசியலமைப்புகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் நாடுகளின் மட்டத்தில் மனித உரிமைச் சட்டங்களை அமுல்படுத்தல் என்பன அரசாங்கங்களின் பொறுப்புகளாகக் காணப்படுகின்றன. அரசாங்கங்கள் தமது மனித உரிமைக் கடப்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் மனித பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களை அகற்றுதல் போன்றவற்றை மேற்கொள்வதை கண்காணிக்கும் பாதுகாப்பு பொறிமுறையாக UNHRC அமைப்பு செயற்படலாம்.

மனித உரிமைகளின் பிரதான பாதுகாவலர்களாக அரசாங்கங்கள் மற்றும் UNHRC அமைப்பு என்பனவற்றை ஒரே நேரத்தில் வலுப்படுத்தல் அவசியமாகும். அது மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை நோக்குதல் மற்றும் கடந்த காலங்களில் மனித உரிமைகளை அமுல்படுத்துவதில் நாடு ஒன்று கொண்டிருந்த வகிபாகத்தினை நோக்குதல் என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த எண்ணக்கரு நாடுகளின் பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகளின் உலகளாவிய இயல்பு என்பவற்றுக்கு இடையே காணப்படும் முரண்பாட்டினை வரையறுத்தல், மனித உரிமைகளின் முதன்மையான பாதுகாவலராக செயற்படுவதில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை சுட்டிக்காட்டுதல் பற்றியதாகும். இறுதியாக, UNHRC அமைப்பின் வகிபாகம் அத்தியாவசியமானதாகும், நீண்டகாலம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் இணைந்த அமைப்பாக அதன் உலகளாவிய தன்மை, தேசிய அரசாங்கங்கள் தமது மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை சோதனை செய்தல் என்பன இம்முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.  

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts