மனித உரிமைகளின் முதன்மைப் பாதுகாவலராக அரசாங்கம் திகழ வேண்டுமா? (பகுதி 1)
தனுஷ்க சில்வா
மனித உரிமைகள் மனிதர்களுக்கு அவர்களின் மனிதத்தன்மை காரணமாக உரித்துள்ளனவாக அமைந்துள்ளன. 1948 ஆம் ஆண்டின் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்துக்கு ஏற்ப, மனித உரிமைகள் உலகளாவியனதாகவும், ஈமமானதாகவும், பராதீனப்படுத்தப்பட முடியாதனவாகவும் மற்றும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பனவாகவும் அமைந்துள்ளன. மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியலின் தோற்றம் மனித உரிமைகள் என்ற எண்ணக்கரு உருவாகக் காரணமாக அமைந்ததுடன் தனிமனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் அனைத்துக்கும் மேலான கடமையாகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் அணுகுமுறையானது மிகவும் பரந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. அத்துடன் மனித உரிமைகள் என்ற எண்ணக்கரு நாடுகளின் சமுதாயத்துக்குள் இணைந்து காணப்படும் பன்மைத்துவத்தினால் இங்கு பேசப்படும் உலகளாவிய விழுமியம் அங்கீகரிக்கப்பட முடியததாகக் காணப்படுகின்றது. எனவே, அதிகமான சமகால நிலைகளில் மனித உரிமைகளைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அரசாங்கங்களே மனித உரிமைகளை மீறும் முதன்மையான அலகுகளாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்புகள் மற்றும் இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள் என்பவற்றின் இடையே விருப்புகளின் முரண்பாடு உருவாகின்றது. அதே நேரத்தில் தொடர்புடைய சர்வதேச செயற்பாட்டாளரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை உலகளாவிய ரீதியில் உள்ள சனத்தொகைகளுக்கு மனித உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் நாடுகள் தமது மனித உரிமைக் கடப்பாடுகளை பின்பற்றியொழுகுகின்றனவா என சோதனை செய்து பேணும் வகையில் அவ்வமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதற்கேற்ப, இந்நிலைப்பாட்டை அடையாளம் காணும் முக்கிய விவாதங்கள் பின்வரும் விடயங்களை நோக்க வேண்டும்: மனித உரிமைகள் என்ற எண்ணக்கரு மற்றும் தனி நபர்களைப் பாதுகாப்பதன் அவசியம் சர்வதேச நாடுகளின் மற்றும் சமூகங்களின் பன்மைத்துவம் அத்துடன் மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை; இறுதியாக மனித உரிமைகளின் முதன்மைப் பாதுகாவலர்களாகிய அரசாங்கங்களுடன் இணைந்து பணிபுரியும் விதத்தில் UNHRC அமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் கலந்துரையாடப்பட வேண்டும்.
முதலாவதாக, மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியல் மனித உரிமைகளை அரசாங்கங்கள், சமூகம் மற்றும் சர்வதேச முறைமைகளைக் கூடக் கடந்தவை என்பதால், யார் சிறந்த பாதுகாவலர் எனத் தீர்மானிப்பதற்கு முன்னர் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். Hough (2008) குறிப்பிடுவதைப் போன்று, பாதுகாப்பு என்பது மனித நிலைமையாகும். எனவே பாதுகாப்பு விவகாரங்களை மனிதக் கண்ணோட்டங்களில் கருத்திற்கொள்வது முக்கியமானதாகும். மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியல் மனித உரிமைகள் மனிதர்களுக்கு அவர்களின் தேசியம், பால்நிலை, இனத் தோற்றுவாய், மதம், மொழி, பால்நிலை நாட்டம், தோலின் நிறம் போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்படாமல் மனிதர்கள் அனைவருக்கும் உரித்துடையனவாகும். எனவே, குளிர் யுத்தத்துக்கு பின்னர் ஏற்பட்ட உலக ஒழுங்கில், தனி நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் மனிதநேய இடையீடுகள் மேலெழுந்தன. மேலும், குளிர் யுத்தத்துக்கு பின்னரான உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாடுகளுக்கு உள்ள நேரடிய வெளியக அச்சுறுத்தல்களாக அன்றி சனத்தொகைகளின் உள்ளக இடப்பெயர்வுகளில் வெளிப்படுகின்றன. மனிதப் பாதுகாப்பு நிலையம் (2005) மேற்கொண்ட தகவல் சேகரிப்புக்கு ஏற்ப, கனடா தொடக்கம் இந்தியா வரையான வேறுபட்ட நாடுகளில் நிலவும் பாரிய பாதுகாப்புப் பிரச்சினைகளாக குற்றம், பயங்கரவாதம், சுகாதார மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை என்பன அமைவதுடன் அவற்றைத் தொடர்ந்து இயற்கை அனர்த்தங்கள் இப்பட்டியலில் இடம் பிடிக்கின்றன. மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டு சூடான் தனது சொந்த மக்களுக்கு எதிராக பாரிய கொடுமைகள் இழைத்தது போல் தோல்வியுறும் அரசாங்கங்கள் நடந்துகொள்கின்றன. அதற்கு முன்னர் பொஸ்னிய யுத்தம் (1992 – 1995), கொசோவோ (1999), மற்றும் ருவாண்டாப் படுகொலைகள் (1994) போன்ற மனித உரிமை மீறல்கள் “நாட்டு எல்லைகளுக்கு குறுக்காக மற்றும் ஆளும் வர்க்கத்துக்கு” எதிராக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகின்றன (Our Global Neighborhood Report on the Commission of Global Governance, 1995). எனவே, ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களைக் கருத்திற்கொள்ளும் போது, பல தசாப்தங்களுக்கு முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குளிர் யுத்தத்துக்கு பின்னர் உருவான உலக ஒழுங்கில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. வெஸ்ட்பாலியனுக்கு பின்னரான உலக ஒழுங்கில் அரசாங்கங்கள் தமது சனத்தொகைகளின் மனித உரிமைகளை அழிக்கும் தெளிவான உதாரணங்கள் காணப்படும் நிலையில் நாடுகள் முக்கிய மனித உரிமைப் பாதுகாவலர்களாக காணப்படும் நிலையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இயங்கு நிலை கொண்ட மனித உரிமைப் பாதுகாப்புப் பொறிமுறைகள் உருவாக்கப்படும் தேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.