கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கை நடைமுறையில் தனிமைப்பட்ட தாய்

நடாலி டி சொய்சா

ஒரு பெண் தனியாக தாய் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு குடும்பத்தை வழிநடத்துவதை தாய் வழி குடும்பம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய பெண்கள் ஒன்றில் விதவைகளாக அல்லது வேறு காரணத்தின் அடிப்படையில் கணவனை இழந்து குடும்ப சுமையை தனியாக தாங்கி நடத்துபவராக இருக்கலாம். ஆனாலும் விதவையான ஒரு பெண் விவாகரத்து பெறும் போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய கணவனிடம் இருந்து குறிப்பிட்ட பெண்ணுக்கு குழந்தைகள் இருப்பின் அவர்களது பராமரிப்பு செலவுகளுக்காக நீதிமன்றத்தால் குறிப்பிடப்படுகின்ற தொகையை மாதாந்தம் உரிய பெண்ணுக்கு வழங்க வேண்டும். அந்த உதவு தொகை மூலம் அந்த பெண்ணால் குடும்பத்தை வழிநடத்த முடிகின்றது. ஆனாலும் 30 வருடங்களாக நடைபெற்ற சிவில் யுத்தத்தின் விளைவு அதைவிட மோசமானதாக இருக்கின்றது. இத்தகைய பெண்கள் ஒன்றில் அவர்களது பெற்றோர்களால் அல்லது அவரின் கணவரின் குடும்பத்தாரால் அப் பெண்ணையும் அவரது குழந்தைகளையும் பராமரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. யுத்தத்தில் கொல்லப்பட்ட படைவீரர்களது மனைவிமாருக்கு அரசாங்கம் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியமாக மாதாந்தம் ஒரு தொகையை வழங்கி வருகின்றது. இருந்தாலும் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத குழுவில் இணைந்திருந்து உயிரிழந்த ஆண்களை கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பாக அத்தகைய கணவனை இழந்த குடும்பங்களால் அன்றாட ஜீவியம் நடத்த சிரமப்படுகின்ற நிலைமைகளை காண முடிகின்றது. யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போதுதான் அவர்களது வாழ்க்கையில் ஒருவிதமான ஒளிக் கீற்று தென்பட ஆரம்பித்திருக்கின்றது.

இவர் இன்னுமொரு விதமான தனிமை பெண் ஆவார். அவரது வாழ்க்கை வித்தியாசமானதாகும். திருமணம் முடிக்காமல் ஏற்பட்ட உறவு மூலம் குழந்தை பெற்று பராமரித்து வருபவர் ஆவார். திருமணம் முடிக்காமல் குழந்தைக்கு தாயாக உள்ள இத்தகைய பெண்களை திருமண பந்தத்திற்குள் கொண்டு வந்து சட்டரீதியான விவாக அந்தஸ்தை பெற்றுக்கொடுத்து பொதுவான சமூக நீரோட்டத்திற்குள் அவர்களையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை அவசியமாகின்றது. இத்தகைய பெண்களுக்கு அவர்கள் சார்ந்த குடும்பங்களது உதவியோ அல்லது அவர்களது வாழ்க்கை துணை என்று கருதக்கூடிய ஆணின் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லை. இவர்கள் சில சந்தர்ப்பங்களில் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனித்து வாழக் கூடியவர்களாவர். இத்தகையவர்களுக்கே விரைவான உதவிகள் அவசியமாகின்றது. எவ்வாறாயினும் தனிமைக்குள் வாழ்ந்துகொண்டு கடுமையான பொருளாதார கஷ்டத்திற்குள்ளும் வெளி வாழ்வாதார உதவிகள் இன்றி வாழும் பெண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர். இந்த கட்டுரையானது திருமணம் முடிக்காமல் தனித்து வாழும் (Single Women) பெண்கள் பற்றி கவனம் செலுத்துவதாகும்.

பிறப்பு சான்றிதழும் பாடசாலை அனுமதியும் 

குழந்தையை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக வரும் போது பெற்றோரின் திருமண விபரம் அல்லது திருமண நிலை அவசியமற்றதாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் இது முக்கியமானதாக இல்லை. பிறப்பு சான்றிதழானது பெற்றோர் திருமணம் முடித்தவர்களா? அல்லது தந்தை பற்றிய தகவல் தெரியாதவரா? என்ற அடிப்படையில் தாயின் திருமணம் பற்றிய தகவல்களானது இயல்பாகவே சமூக சார்பான நிலைக்குள் தள்ளிவிடுவதாக அமைகின்றது. சில சந்தர்ப்பங்களில் பாடசாலை நிர்வாகம் இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு குழந்தையை பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க செய்வதாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தனித்த தாய் என்ற நிலையில் வாழும் ஒருவருக்கு நிலைமைகள் தலைகீழாக மாறுகின்ற போது அந்த விடயம் தாயை மட்டுமல்லாது குழந்தையையும் பாதிப்பதாக அமைவதால் மேலதிக உதவி வழங்க வேண்டிய நிலை உருவாகின்றது.

வாடகை குடியிருப்பு

இவ்வாறான ஒரு நிலையில் தனிமையாக வாழும் தாய் ஒருவருக்கு சொந்தமாக குடியிருக்க வீடு இல்லாத நிலையில் அவர் வாடகைக்கு வீடு எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாகின்றார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டை வாடகைக்கு கொடுப்பவர்கள் அவரது திருமண விபரங்கள் தொடர்பாக வேண்டாத கேள்விகளை கேட்பதோடு கணவன் இல்லாத நிலையில் அவளால் தனியாக இருந்துகொண்டு எவ்வாறு வாடகை செலுத்த முடியும் என்று சிந்திக்கின்றனர். எவ்வாறோ சிரமங்களுக்கு மத்தியில் வீடொன்றை வாடகைக்கு வாங்கி விட்டாலும் சில பாடசாலைகள் கடைபிடிக்கின்ற அணுகுமுறைகள் காரணமாக அத்தகைய தாய்மாருக்கு அவர்கள் முகம் கொடுக்கின்ற கஷ்ட நிலைமைகளை சமாளிப்பதற்காக உதவிகளை செய்ய வேண்டி இருக்கின்றது.

பராமரிப்பாளரும் வழங்குனரும்

தனிமையாக வாழும் தாய் அவர்களுக்கு குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாத போது பொருளாதார தேவைகளை ஈடு செய்து கொள்வதற்காக தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றாள். ஆண்களை பாதுகாவலர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும் கொண்ட சமூக அந்தஸ்தை மதிக்கும் சமூகத்தில் இந்த தனித்த பெண்ணின் நடத்தை மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஒரு தாயாகவும் குழந்தையை பராமரிப்பாளராகவும் இரண்டு விதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் இத்தகைய பெண்களுக்கு இவ்வாறான சமூக பார்வை நெருக்கடியை கொடுக்கின்றது பொதுவான விடயமாகும். தனது குடும்ப தேவைக்காக முழு நேரமும் உழைக்கும் அதே நேரம் வேறு பராமரிப்பு நிலையங்களில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக இருந்தால் அத்தகைய பராமரிப்பு நிலையங்களுக்காகவும் உழைப்பை செலவிட வேண்டி இருப்பதால் மேலதிக பண விரயத்தை தவிர்ப்பதற்காக நாளில் ஒரு பகுதியை வீட்டு வேலைகளுக்காகவும் நல்லதொரு தாய் என்ற அந்தஸ்தில் செலவிட வேண்டி இருக்கின்றது. தந்தை இல்லாத தனி ஒரு தாயின் பராமரிப்பு குழந்தைகளை நிராகரிக்கும் சமூகம் இந்த பக்கங்களை காண தவறிவிடுகின்றது.

சமூக தீர்ப்பு

சமூக அந்தஸ்தை வழங்கக்கூடிய திருமண நடைமுறைக்கு அப்பால் சென்று குழந்தைகளை பெற்று தந்தையின் துணை இன்றி தனிமைப்பட்டவர்களாக குழந்தைகளை பராமரித்தவர்களாக சமூக நீரோட்டத்தில் போராட்டம் நடத்தி வரும் இவ்வாறான பெண்கள் தொடர்பாக பொதுவான சிந்தனைப் போக்கில் இருந்து அவர்களை தண்டிப்பதை விட சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டியதாக இருக்கின்றது. இவ்வாறான பெண்கள் நண்பர்களை அல்லது உறவினர்களை சந்திக்க செல்கின்ற போது அவர்களை பாலியல் தொழிலாளர்களாக கருதி அதிகாரிகளுக்கு முறைப்பாடுகளை செய்யும் சந்தேகப் பார்வை இல்லாதொழிக்கப்பட வேண்டும். பொலீஸ் அதிகாரிகளும் இவ்வாறான திருமணம் முடிக்காத தாய் என்ற அந்தஸ்திலான பெண்கள் குறித்து சமூகம் தீர்ப்பளிக்கின்ற போது எந்நேரமும் அவர்கள் குறித்து மனித நேயத்துடன் பார்ப்பதில்லை. இத்தகைய நிலைமைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாக அமைகின்றது. இத்தகைய தாய்மார்களை விசாரணை என்ற நிலையில் பொலீஸ் நடைமுறைக்கு அப்பால் அழைத்துச் செல்லப்பட்டு அணுக முற்படுகின்ற போது வேறுவிதமான அச்சுறுத்தல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகின்றது. இவ்வாறான பெண்கள் அவர்களது குழந்தைகளுடன் விசாரணை என்ற பெயரில் பொலீஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்படுகின்ற போது சாதாரண சமூக தாரதரத்தில் திருமணம் முடித்து பொது வாழ்க்கை நடத்தும் பெண் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கூட இத்தகைய பெண்கள் குறித்து அனுதாப கண்ணோட்டத்தில் பார்க்க தவறிவிடுகின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களாக சமூகத்தில் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற மனப்பக்குவம் தொடர்கின்றது.

ஒரு தாய் என்ற நிலையில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியதாக திருமண பந்தத்தில் நுழைந்து சமூக எதிர்பார்ப்பை திருப்தி செய்பவர்களாக இருக்கின்ற போது அவர்களுக்கு சமூகத்தில் ஓரளவிற்கு அந்தஸ்து வழங்கப்பட்டு நோக்கப்படுகின்றது. ஆனாலும் திருமணம் முடிக்காமல் தாய் என்ற அந்தஸ்தில் வாழும் பெண்களை சமூகம் அங்கீகரிக்காத போது சிக்கலான பிரச்சினைகள் ஏற்படுவதோடு நாமும் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் எங்களால் மனிதர்கள் என்ற அந்தஸ்தில் வாழும் பிரஜைகளுக்கு செய்ய வேண்டிய பொறுப்பை மீறுபவர்களாக இருக்கின்றோம்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts