கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இன்னும் முடிவிலியாக திகழும் இடம்பெயர்தவர்களின் கதை

2020 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் உட்பட  இன்னும் மூன்று நபர்கள் மீண்டும்  சிறையிடப்பட்டனர்.குறித்த வழக்கை விசாரித்த கோட்டை மஜிஸ்திரேட் நீதிபதி கௌரவ. பிரியந்த லியனகே குறிப்பிட்ட விடயம் சந்தேகநபர்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு எதிகாலங்களில் கருத்தில் கொள்ளப்படும் என்பது ஆகும்.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உட்பட சந்தேகநபர்கள் மூன்று பேரும் 2020 நவம்பர் 13 ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர் (அத தெரண). கடந்த ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் இடம்பெயர்ந்த வடக்கு  மக்களை வாக்கு அளிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதி செய்துகொடுக்கப்பட்டமை தொடர்பில் ரிசாத் பதியுதீன்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அதன் காரணமாக அவர் 2020 அக்டோபர் 19 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

இந்த கட்டுரையின் நோக்கமானது அந்த வழக்கு தொடர்பாக விவாதிப்பதற்கு அல்ல, மாறாக வாக்கு அளிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அழைத்துவரப்பட்ட அம்மக்கள் யார் என்பது தொடர்பாக ஆராய்வுக்கு உட்படுத்துவதே ஆகும்.   

1990 அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வட மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட சுமார் 75,000 முஸ்லிம்  மக்கள் பலவந்தமாக துரத்தியடிக்கப்பட்டனர். அரசியல் ஆய்வாளரான டி.எஸ்.பி ஜெயராஜ் இந்த நிகழ்வு நடைபெற்ற மாதமான அக்டோபர் மாதத்தினை “கறுப்பு அக்டோபர்” என குறிப்பிடுகிறார். கிளர்ச்சியாளர்களால் முஸ்லிம்களுக்கு  தாம் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியேறுவதற்காக வெறும் 48 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அக்டோபர் 15 ஆம் திகதி சாவகச்சேரியில் ஆரம்பித்து அக்டோபர் 30ஆம் திகதி ஆகும் போது மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். சில குடும்பங்களுக்கு வெறும் ரூபா 500.00 மற்றும் சில துணிமணிகள் மாத்திரமே  எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அம் மக்களுக்கு தமது சொந்த நிலம் உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டி இருந்தது. போக்குவரத்து வசதி கிடைக்கபெறாத அதிகமான மக்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் தெற்கு பிரதேச நகரங்களை அடையும் வரை சரியான உணவு மற்றும் தண்ணீர் வசதி கூட இல்லாமல் நடந்தே பயணித்தனர்.

1981 சனத்தொகை கணக்கெடுப்பின்படி மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 26% ஆகும். மன்னார் தீவில் 46% தள்ளடி கடல்வழியாக தொடர்புபற்றுள்ளது. மன்னார் தீபகற்பத்தில் ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்த முஸ்லிம் ஊராக திகழ்வது எருக்கலம்பிட்டி எனும் பிரதேசம் ஆகும். 1990 அக்டோபர் 21 ஆம் திகதி சுமார்  300 விடுதலைப்புலி உறுப்பினர்கள் எருக்கிலம்பிட்டி பிரதேசத்தை சுற்றிவளைத்து முஸ்லிம் மக்களின் பணம், தங்க ஆபரணம் மற்றும் பெறுமதி மிக்க இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்டதுடன் சுமார் 800-850 வீடுகளையும் இலக்கு வைத்தனர். (டி.பி.எஸ் ஜெயராஜ்,2015)

வடக்கில் வெளியாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் மொத்த  இழப்பானது டொலர் 110 மில்லியன் என  யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களான டெனிஸ் பீ மெக்கில்வ்ரே மற்றும் மிறாக் றஹீம் ஆகிய இருவரும் 1990 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தினால்  மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைக்கான இரண்டு  மாற்று விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.

Muslim Perspectives on the Sri Lankan Conflict எனும் ஆராய்ச்சி அறிக்கையில் விவரிக்கப்படுவதற்கு அமைய “ இது ஒரு கூட்டு தண்டனை மற்றும் அரசுடன் முஸ்லிம் மக்களுக்கு உள்ள ஒத்துழைப்புக்கு எதிரான   முன்னெச்சரிக்கை நடவடிக்கை” ஆகும். இரண்டாவது “ ஈழப்போராட்ட தனித்துவ அரசியலின் இயல்பான விளைவு  மற்றும் ஆழமான தமிழ் பேரினவாதத்தின் வெளிப்பாடே ஆகும்” என்பதாகும். இந்த ஆராய்ச்சி அறிக்கையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்கள் தமது இனரீதியான அடையாளத்தை கைவிட்டு தமிழ் மொழியை பேசும் சமூகமாக கைகோர்த்து எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் நோக்கங்களை அடைவதற்கு முஸ்லிம் சமூகத்தை ஒன்றுசேர்த்து ஒத்துழைப்பை பெற்றுகொள்ள முடியாமல் போனது பிரதான காரணமாக குறிப்பிடப்படுகின்றது..

1990 அக்டோபர் மாதம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தமது குடியேற்றங்களை தெற்கில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து குடியேறினர். இந்த மக்கள் புத்தளம், பாணந்துறை, பலகத்துறை, போருத்தொட, பெரியமுள்ள, மதுரங்குளி, வானத்தவில்லு, புழிஞ்சகுளம், சாரிகமுல்லை, தொடவத்த, குருநாகல், கெகுனுகொல்ல, அகுறனை, பேருவல, கடுகஸ்தொட்ட, அடுளுகம, ஆணமடுவ, நீர்கொழும்பு, கல்பிட்டி போன்ற பிரதேசங்களில் இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்ததுடன் சில மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தமது முதல் மண்ணான வடக்கில் மீண்டும் குடியேறினர். இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பெருமளவான மக்கள் தமது சொத்துரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். வடக்கில் முஸ்லிம்கள் திரும்ப ஒரு போதும் மீள்வருகைதரமாட்டார்கள் என்ற அனுமானத்தில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களை வேறு சமூகத்தினர் கைப்பற்ற ஆரம்பித்து இருப்பதுடன் இன்னும் சில சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவில் பிரதேச மக்கள் சிலர் போலி ஆவணங்கள் மற்றும் பூரண தகவல்கள் இன்றி வடக்கு முஸ்லிம் மக்களுக்கு உரிமையான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துள்ளனர் (New Frame,2020).ஏ.ஆர் .எம் இம்தியாஸ் மற்றும் எம்.சீ.எம் இக்பால் தமது ஆய்வில் ஊடாக  வெளிப்படுத்தும் விடயமாவது இலங்கை இராணுவம் தமது வெற்றியை உறுதிபடுத்திக்கொள்வதற்காக முகாம்களை அமைத்துள்ளதுடன் சிங்கள மக்களை குடியமர்த்தியும் உள்ளனர் .அதிகளவாக வேளாண்மை நிலங்களை கொண்ட  முல்லைத்தீவு மாவட்டத்தில்  முஸ்லிம் மக்கள் சொத்துரிமை தொடர்பில் பல சவால்களுக்கும்  சிரமங்களுக்கும் உள்ளாகுவதுடன், அரசாங்கம் மீண்டும் மீண்டும் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களுக்குள் செயல்படுத்தப்படுமாயின் அவர்கள் மேன்மேலும் வடக்கை கவனத்தில்கொள்ளாது செயல்படக்கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. 

மனித உரிமை ஆர்வலரான சிறீன் சரூர் குறிப்பிடுவதாவது மீள்குடியேற்றம் தொடர்பாக இன்னும் இலங்கை அரசிற்கு எந்த விதமான கொள்கையோ  திட்டமோ இல்லை என்பதாகும். அவ்வாறே இலங்கை புள்ளிவிவரங்களில் அடிப்படையில்  நாட்டில் எந்த ஒரு பிரதேசத்திலும் இடம்பெயர்ந்தவர்கள் இருப்பதாக அறிக்கையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு  நீதி பெற்றுகொள்ள வேண்டுமாயின் அவர்கள் மீண்டும் தமது முதல் குடியேற்றமான வடக்கிற்கு செல்ல வேண்டும் என்பது வடக்கு முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். . (New Frame, 2020).

2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிற்கு புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட  மக்களானது இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களே ஆகும். “வேர்களினதும் மீளதிரும்பலினதும் கதைகள்” அறிக்கையில் வெளிக்கொண்டுவரும் விடயமானது மன்னாருக்கு தமது வாக்கை அளிப்பதற்காக  அழைத்துச்செல்லப்பட்ட இடம்பெயர் நபர்களானது இடம்பெயர்ந்து இருக்கும் வடக்கு முஸ்லிம் சமூகமே ஆகும். இந்த மக்களின் மீது வாக்களிக்க அழைத்துச்செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2019 நவம்பர் 16 ஆம் திகதி காலை மன்னார் நோக்கி பயணிக்கும் போது தந்திரிமலை எனும் பிரதேசத்தில் வைத்து  அவர்களின் பஸ்வண்டி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வாக்களித்துவிட்டு மாலை திரும்பிகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்  மெதவாச்சிய பிரதேசத்தில் வைத்து மீண்டும் குண்டர்கள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டது. பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் காயமடைந்தனர் ஆனாலும் அது தொடர்பில் இது வரையும் எந்த விதமான விசாரணை நடவடிக்கையும் நடைபெறவில்லை. மெதவாச்சிய தாக்குதலுக்கு முதல் அவர்களின் பஸ்வண்டி காவல்துறையினரால் சிலமணித்தியாலங்கள் வேச்சிகுளம் என்ற பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. காயமடைந்த பல வாக்காளர்கள் பழிவாங்ககூடும் எனும் அச்சம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை “ வேர்களினதும் மீளதிரும்பலினதும் கதைகள்” அறிக்கை குறிப்பிடுகின்றது. நிலைமாறு காலத்திற்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் போது இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்த பிரச்சனைகளை மறந்தோ அல்லது ஒடுக்கப்பட்டோ செயற்பட  முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.

 

ஆதாரம்- அமலினி டீ சேரா மற்றும் நடாசா வேன் – ஹோப் அவர்களின் “ வேர்களினதும் மீளத் திருபலினதும் கதைகள் விரட்டியடிக்கப்பட்டு 30 வருட முடிவை நினைவுகோரும் வடக்கு முஸ்லிம்கள்” எனும் அறிக்கை இந்த கட்டுரைக்கு அடிப்படையாக கொள்ளப்பட்டது. இந்த அறிக்கையானது Law and Society Trust மற்றும் PARL எனும் நிறுவனங்களின் அனுசரணையுடன் கடந்த ஆண்டு வெளியிட்டது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts