கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மக்கள் கூட்டத்தின் தீவிர உணர்ச்சி கோளாறும் வெகுஜன ஊடகமும்

நாம் வாழும் இந்த யுகத்தில், எதுவுமே ஊடகத்தின் பார்வையிலிருந்து தப்புவதில்லை – இது சாதாரணமாக கவனத்திற்கு எடுக்கப்படாத காரியங்களைக் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய உந்துதலை ஏற்படுத்த பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும்.  பொதுமக்களின் விழிப்புணர்வை ஓரளவிலேனும் உருவாக்க எதிர்பார்க்கும் உங்களுக்கு வேறு ஏதேனும் வழி இல்லாத போதும் யாரும் நீங்கள் சொல்வதை கேட்காத போதும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு வழி ஊடகமாகும். ஊடகமானது, சாதாரண சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படாத எட்வர்ட் ஸ்னோவ்டன் முதல் சேனல் மிலர் என்பவர்களின் நிலமைகள் போன்ற பிரச்சனைகளுக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.  எனினும், டயானா ஸ்பென்சரின் கதையை பொறுத்தவரை, ஊடகம் அவரை எழுத்தளவில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  மற்றும் ஓ.ஜே சிம்சன் வழக்கு போன்றவற்றில் ஊடகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பெருவாரியான சீற்றமும் தீவிர உணர்ச்சி கோளாறும் (hysteria) நன்மையை விட தீமையையே விழைவித்திருக்கின்றது.  ஊடகங்கள் மூலம் நிகழ்வுகளைப் பற்றி வெளியிடும் செய்திகளின் விளைவால் ஏற்படும் தீவிர உணர்ச்சி கோளாறானது, இன்று மக்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அவர்களின் அபிப்பிராயம் மனப்பான்மை என்பவற்றில் ஏற்படுத்தும் விளைவுகள் என்பன தற்போது நாளுக்கு நாள் அதிகளவாக கலந்துரையாடப்படுகின்றது.  

 

தீவிர உணர்ச்சி கோளாறு என்பது “ஓரு மக்கள் கூட்டத்தை பாதிக்கும் பரபரப்பு, பதற்றம், பகுத்தறிவின்றிய நடத்தை மற்றும் நம்பிக்கை அல்லது விபரிக்க முடியாத நோயின் அறிகுறிகள்” என வரையறுக்கப்படும்.  மக்கள் கூட்டங்கள் கூடும் காலங்களிலிருந்து, சில சந்தர்ப்பங்களில் சமூக அரசியல் கட்டமைப்பை தலைகீழாக்கும் பெரும்பான்மை தீவிர உணர்ச்சி கோளாறு இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் கிராமங்களிலுள்ள வதந்தி தீவிர உணர்ச்சி கோளாறு அலைகள் கதைகளை புனைந்து, அவற்றை மக்கள் பரப்புவதற்கு உதவின.  17ம் நூற்றாண்டின் சேலம் சூனியக்காரி வழக்கு, வதந்திகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட அபாயகரமான தீவிர உணர்ச்சி கோளாறுக்கான உதாரணமாகும்.  இன்று, ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, உள்நாட்டிலும் உலகளாவிய வகையிலும் இஸ்லாமியரை வெறுக்கும் தீவிர உணர்ச்சி கோளாறு காணப்படுகிறது.  ஆரம்ப காலங்களில் மக்களிடையே கொவிட் 19ஐ பற்றிய பயம், பதற்றம் காணப்பட்டதால், தமது அயலவர்கள் நோயுள்ளவர்கள் என பரிசோதனைகளால் நிரூபிக்கப்பட்டால் அவர்களை தாக்கவும் தயாராக இருந்தார்கள்.  வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள்.  இங்கு ஊடகத்திற்கும்  தீவிர உணர்ச்சி கோளாறுக்குமான உறவை இவ்வுதாரணங்கள் மூலமும் எவ்வாறு முன்னையது பின்னையதை உருவாக்குகிறது என்பதையும் காணலாம்.  பெரும்பான்மை ஊடகங்களுக்கு அப்பாற்பட்ட முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் தீவிர வெறித்தன்மையான ‘செய்திகளை’ பரப்பும் செயல்பாடு கலக்கத்தை உண்டாக்கும் செயலாகும்.  அரைவாசிக்கும் மேலான இப்பகிர்வுகளும் செய்திகளும் போலியானவை, எனவே, அவை கவலையையும் பகுத்தறிவின்றிய அச்சத்தையும் உருவாக்கக் கூடியது.  எனவே, இத்தளங்கள் பாரம்பரிய செய்திபரிமாற்றத்தை விட இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.  மக்கள் போலி செய்திகள் என்று அறிந்தும் கூட அவர்களுக்குள் இருக்கும் கூட்டுமனநிலை (herd instinct) அவர்களை, தேனுக்கு வண்டு ஈர்ந்து போவது போல, அவற்றை பரிமாற செயல்படுகின்றனர்.  எனவே, ஊடகங்களினால் உருவாக்கப்பட்ட தீவிர உணர்ச்சி கோளாறுக்கு எமது தீவிரமான கவனத்தை செலுத்த வேண்டும்.

 

எம்மிடம் செய்தி அறிக்கைகளை நிர்வகிக்கும் சட்டதிட்டங்கள் உள்ளன.  2019ம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் 2020இல் பரவிய கோவிட் 19 தொற்றினைத் தொடர்ந்து பரவியுள்ள போலிச் செய்திகளை பகிர்வோருக்கு, பரந்தவகையில் குற்றத்திற்கு தண்டனை விதிக்க அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  எவ்வாறாயினும், மக்கள் ஏன் தெரிந்துகொண்டே ஊடகப் பரபரப்பிற்கு இரையாகின்றனர் என்பதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை காண்பது முக்கியமாகும்.  மக்கள் பாரம்பரிய செய்தி அறிக்கைகளில் வைத்திருந்த நம்பிக்கை இழப்பு இதற்கு ஒரு காரணமாகும்.  ஏனெனில், சில கருத்துக்கள் உண்மையாக அறிக்கை செய்யப்படவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.  முக்கியமான தகவல்கள் மறைக்கப்படாமல் வெளிப்படுத்துவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், அது செய்திகள் ஊகிக்கப்பட்டு பரவுதலுக்கு வழிவகுக்கும்.  எனவே, வெளிப்பாட்டுத்தன்மை பகுத்தறிவு மட்டத்தில் அவசியம், முழுமையான வெளிப்பாட்டுத்தன்மை புத்திசாலித்தனமற்றது.  மேலும், ஊடகவியலாளர்களுக்கு, ஊடக நெறிமுறைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் – அதாவது, ஒரு நிழற்படக் கருவியும் குறிப்புப் புத்தகமும் வைத்திருந்தால் மட்டும் ஒரு பத்திரிகையாளராக அல்லது நிருபராக முடியாது.  எனவே, தீவிர உணர்ச்சி கோளாறை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை பின்பற்றுவதை விட பெரும்பான்மை ஊடகங்களினுள் கட்டுப்பாடு செயல்பட வேண்டும். 

 

      

    

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts