சித்திரவதை என்றால் என்ன, அதனைத் தடுக்கும் சட்டங்கள் யாவை என்பதை அறிந்து கொள்வோம் (பகுதி ஒன்று)
சித்திரவதை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடத்தை ஆகும், ஆனால் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் சித்திரவதை ஊடாக ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். வரலாற்று ஆதாரங்களைப் பார்க்கும்போது பழங்காலத்தில் இருந்து, சித்திரவதை மற்றும் பிற வகையான தொந்தரவுகள் இந்த நாட்டில் தண்டனையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம்.
1975 ஆம் ஆண்டில் உலக மருத்துவ நிபுணர்களின் கூட்டமைப்பினால் வரையறுக்கப்பட்டபடி சித்திரவதை என்பது, “ஒரு நபர் அல்லது பல நபர்களால் தனிப்பட்ட ரீதியில் அல்லது அதிகாரத்திலுள்ள மற்றொரு நபரின் கட்டளைக்கு அடி பணிந்து ஒரு நபரின் யாதாயினும் தகவல்களை பெற்றுக் கொள்ளுவதற்காக அல்லது ஒப்புதல் பெறுவதற்காக அல்லது வேறு யாதாயினும் காரணத்திற்காக வேண்டுமென்றே அல்லது திட்டமிட்டு மன அல்லது உடல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுப்பது சித்திரவதை எனப்படும்.”
சித்திரவதையிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது ஒரு மனித உரிமை ஆகும் மற்றும் 1982 மனித உரிமைகள் சாசனத்தின் முன்னுரையிலிருந்தே பல்வேறு இடங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விஷேடமாக அதன் 5 ஆவது பந்தியில் ‘no one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment’. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பது எமது நாட்டின் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு அதன் 11 ஆவது பிரிவில் ஒரு அடிப்படை உரிமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேபோல், டிசம்பர் 9, 1975 அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திலும் மற்றும் டிசம்பர் 10, 1984 அன்றைய தின அது தொடர்பான மாநாடு என்பவற்றிலும் மனித கௌரவம் மற்றும் அபிமானத்தை அங்கீகரிக்கும் முகமாக சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மனிதர்களை இழிவுபடுத்தும் விடயங்களில் இருந்து விடுதலை பெறுவது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதைப் போன்றே, 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை மற்றும் கொடுமை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனை தடுப்புச் சட்டத்தின் மூலமும், 1984 இன் சித்திரவதை மற்றும் கொடுமை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு எதிரான மாநாடு என்பவற்றின் மூலமும் சித்திரவதைக்கு எதிரான சட்டம் இலங்கையில் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுச் சட்டத்தின் பிரிவு 2(1) இன் படி, ஒரு நபரை சித்திரவதை செய்வது, அதற்காக முயற்சிப்பது அல்லது அதற்கு உதவுவது என்பவை தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு 2(4) குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பற்றி விளக்குகிறது. மாநாட்டின் சர்வதேச தன்மையைப் பிரதிபலிக்கும் பிரிவு 4(1), குற்றவாளி இலங்கை பிரஜையா, இல்லையா என்பதை பொருட்படுத்தாது இலங்கைக்கு வெளியே செய்யப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இலங்கை உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு எனக் குறிப்பிடுகிறது.
இவ்வாறான ஒரு வழக்கில், சித்திரவதை ஒரு அரசாங்க அதிகாரியால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக உள்நாட்டுச் சட்டத்தில் சர்வதேச சட்ட விதிகளை உள்ளடக்கிய இந்த சட்டம், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகளை விளக்குகிறது. உடல் ரீதியான மற்றும் உள ரீதியான சித்திரவதைகள் ஆகிய இரண்டும் இதில் உள்ளடங்குகின்றன.
1995 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 25 மற்றும் 26(1) பிரிவுகள் முக்கியமானவை. ஒருவருக்கு எதிரான குற்றத்தினை ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ஊடாக நிரூபித்தால் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்க முடியும், மாறாக அவரை எந்த சித்திரவதைக்கும் ஆளாக்க முடியாது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்டத்தின் 28 மற்றும் 38 ஆவது பிரிவுகள் முக்கியத்துவமானவையாகும். இவை கைதிகள் காவல்துறை அல்லது பிற அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுக்கிறன.