கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொல்லும் உறவு- குடும்ப வன்முறையை வெளிப்படுத்துதல் வழங்கியவர்

“குடும்ப வன்முறையை வீட்டிலேயே சரிசெய்ய முடியும் என்று சிறுவர்களுக்கு; நாங்கள் கற்பித்தால், உலக மோதல்களை பலத்தால் தீர்க்கும் முட்டாள்தனமான தூண்டுதலை எவ்வாறு குணப்படுத்துவோம் என்று நம்புகிறோம்?” என அமெரிக்க எழுத்தாளரும் ஆர்வலருமாகிய் லெட்டி காட்டின் பொக்ரெபின் கேட்கின்றார்.  இந்த ஆரம்பத்துடன்;, இங்கு நாம் அடிக்கடி உதாசீனப்படுத்தும்  மறந்து விடும் ஒரு தீவிரமான பிரச்சினையைப் பற்றிய எச்சரிப்பது சிறந்ததாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது சரிபார்க்கப்படாவிட்டால் எம்மைக் கொல்லக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட எமது குடும்ப எதிரிகளைப் பற்றியதாகும். 

இலங்கையில் பொதுவான வழக்கில் குடும்ப வன்முறை என்பது அடிக்கடி நிகழும் தலைப்பு என்றாலும், பெரும்பாலும் “குடும்ப வன்முறை” என்ற பதத்தைப் புறக்கணித்தல் அல்லது அழித்து விடுதல் காணப்படுகின்றது. குடும்ப வன்முறையானது, வாழ்க்கைத் துணை / சேர்ந்து வாழ்வோரிடையே மட்டுமே நிகழ்கிறது என்று நம்மிடம் காணப்படுவது ஒரு தவறான நம்பிக்கையாகும்.  நாங்கள் பார்வையாளர்களை – சிறுவர்களை ஒதுக்கித் தள்ளுகிறோம். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், ஒரு துஷ்பிரயோகம் செய்யும்  வாழ்க்கைத் துணையை  விவாகரத்துச் செய்யும் உரிமையைக் கூட ‘பிள்ளைகளின் நலனுக்காக’ மத்தியஸ்தம் செய்யும் நிலைமை இன்னும் காணப்படுகின்றது. முரணாக, இங்கு நாங்கள் சிறுவர்களின் நல்வாழ்வையே சமரசம் செய்கின்றோம். வன்முறையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளைக்கு ஏற்படும் உளவியல் அதிர்ச்சி அதனால் பாதிக்கப்படுவது போன்றே  பயங்கரமானதும் மிகவும் தீவிரமானதுமாகும். இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பாதிக்கப்படும் நிலைமையாகும். சிறுவர்களுக்கு, குடும்ப வன்முறை என்பது கூச்ச சுபாவமிக்க நடத்தைக்கு வழிவகுக்கும். குடும்ப வன்முறையைக் காணும் பிள்ளைகள் உலகம் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடும். சிறுவர்களின் உளவியல் அபிவிருத்தியின் பியாஜெட்டின் கட்டங்களின்படி, 2 வயதிற்குட்பட்ட ஒரு பிள்ளை கூட அவளை / அவனைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும், மேலும் “அவர்களின் இயக்கங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் உலகை அறிவார்கள்” (செர்ரி, 2020).

 

இலங்கையில், தற்கொலை என்பது ஒரு சிறைப்படுத்தப்பட்ட காதல் கதையின் விளைவாக இருப்பதாக நாங்கள் அடிக்கடி முத்திரை குத்துகிறோம். உலக மக்கள்தொகை மீளாய்வு வலைத்தளத்தின்படி, தற்கொலைகளின் இலங்கை நாட்டின் பட்டியலில் ஒரு முன்னணி இடத்தில் அதாவது   தற்கொலையில் உலகளாவிய ரீதியில் 29 வது இடத்திலும்; தற்கொலை வீதத்தில் 2019 ஆம் ஆண்டில் 100,000 க்கு 14.6 தற்கொலைகள் என்ற வீதத்திலும் உள்ளோம் (http://archive.cmb.ac.lk/), அத்துடன் இவை அனைத்தும் காதல் கதைகளின் சோகமான முடிவுகள் அல்ல. பல தற்கொலைகள் மனச்சோர்வுமிக்க இளவயது அனுபவத்தால் ஏற்படுகின்றன, ஏனெனில் அவர்கள் சுற்றியுள்ள சூழல்கள் எவ்வளவு நம்பிக்கையற்றவை என்பதைப் பார்க்கிறார்கள். குடும்ப வன்முறை இளைஞர்கள் தாங்களே குற்றவாளிகளாக வளரக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கலாம் அல்லது பாலியல் பங்காளிகள் உட்பட சக மனிதர்களுடன் மனித தொடர்புகளை நிராகரிக்க முடியும். இலங்கையில் குடும்ப வன்முறையை சாதாரணமானவையாகக் கருதும் ஆபத்தான போக்கும் உள்ளது, இங்கு “ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளன, இவை சாதாரணமானவை” என்று மக்கள் சொல்வதை அடிக்கடி கேட்கலாம். இத்தகைய கருத்துக்கள் சமுதாயத்தில் ஏற்கனவே இருக்கும் ஆணாதிக்க சித்தாந்தங்களுக்கு வலுச் சேர்க்கின்றன, இதனால் பெண்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுபவர்களாகவும் ஆண்கள் பாதிப்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். குடும்பம் ஒரு சீரான, மனிதாபிமான, அமைதியான தனிநபருக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய ஒரு அலகாகும், அதற்கு பதிலாக அங்கு வன்முறை மீதான நியமங்கள் அலட்சியப்படுத்தப்படுவதுடன் அங்கு வெறும் குடும்பத்தின் சமூக கட்டமைப்பிற்குள் இருப்பதன் மூலம் வன்முறை சட்டபூர்வமாக்கப்படும் ஒரு சமூகம் உருவாக்கப்படுகின்றது.

 

தற்போதைய கொவிட்-19 சூழ்நிலையின் கீழ் மக்கள் மிக நீண்ட காலமாக வீடுகளுக்குள் அடைபட்டு இருப்பதால், மேலும் அதிகமான வீட்டு வன்முறைகள் மற்றும் குறிப்பாக குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன. இத்தகைய அதிகரிப்புடன், குடும்ப வன்முறையின் எதிர்மறையான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இத்தகைய வன்முறைச் சூழ்நிலைகளில் இருக்கும் மக்களுக்கு ஆதரவை வழங்குவதும் மிக முக்கியமானதாகும். சுமித்ரயோ மற்றும் பல நிறுவனங்கள் இலங்கையில் இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றன, ஆயினும் செய்ய வேண்டியது என்னவென்றால், ‘குடும்ப வன்முறை’ எந்த நிலையிலும் சாதாரணமானது அல்ல என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு சொற்பொழிவை உருவாக்க வேண்டும். குடும்பம் ஒரு சிறந்த சமுதாயத்தை ஸ்தாபிக்க வேண்டிய சிறந்த அடிக்கல்லாக மாற வேண்டுமானால், எங்களுடன் வாழும் மன அமைதியின் எதிரிகள் வெளியேற்றப்பட்ட வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts