கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

அன்பை இழக்க செய்ய முடியாது. காணமலாக்கப்பட்ட அன்புக்குரியவர்களது தினம்

“ அன்று உன்னை எனது உலகத்தில் இருந்து காணமால் போகச் செய்தாலும் உன் நினைவுகள் என்றைக்கும் என்னோடு. அதை யாராலும் இல்லாமல் போக செய்ய முடியாது. என் அன்பு என்றென்றும் உயிருள்ளது”

 

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று விஹாரமஹா தேவி தேசிய பூங்காவிற்கு அருகில் வைத்து அவளை சந்தித்தோம். காணமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களது ஒன்று சேர்வுடன் அவளது கணவரின் நினைவுகள் பற்றி இவ்வாறு தெரிவித்தாள். 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரின் பலவந்தமான காணமலாக்கல் மூலம் இழந்த அவளது கணவரின் மீது வைத்துள்ள அன்பு இன்றும் மறையவில்லை. அவள் மட்டுமல்லாமல் அவளுடன் சேர்த்து எத்தனையோ கணவன்மாரை இராணுவம் பலவந்தமாக காணாமல் போகச் செய்திருக்கின்ற காரணத்தால் அவர்களை தேடியலையும் எத்தனையோ  மனைவிமார், காணமலாக்கப்பட்ட மனைவிகளை தேடி அழையும் எத்தனையோ கணவன்மார், தாய் தந்தையரை தேடி அழையும் எத்தனையோ பிள்ளைகள், அதே போன்று பிள்ளைகளை தேடி அழையும் எத்தனையோ பெற்றோர் அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு நீதியை நிலைநாட்ட கோரி திண்டாடியவர்களாக அலைகின்றனர். இனவாத யுத்த முரண்பாடு முடிவுக்கு வந்து இன்றைக்கு 11 வருடங்கள் பூர்த்தியடைந்திருந்தாலும் யுத்தத்தின் போது பலவந்தமான காணாமலாக்கப்படல், கொல்லப்பட்டவர்கள் மீதான ஒவ்வொருவர் தொடர்பாகவும் அன்புக்குரியவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கென்று துயரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

 

அவர்களது அன்புக்கு செவிமடுப்பதற்காக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி “காணாமலாக்கப்பட்ட அன்புக்குரியவர்களது தினம்” அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆனாலும் இந்த வருடம் அந்த நாளை நினைவு கூருவதற்கு முடியாதவாறு தொடரும் கொரொனா அச்சுறுத்தல் தடையாக அமைந்திருப்பதால் இணையம் வழியாக அந்த நாளை அவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

 

அன்பு என்பது இரண்டு பேருக்கிடையில் ஏற்படும் இறுக்கமான பிணைப்பு என்பதாக பலரும் கருதுகின்றனர். சில சந்தர்ப்பங்கள் பாடல் வரிகள் மூலம் அன்புக்கு இடைவெளிகள் இல்லை என்பதாக வர்ணிக்கப்படுகின்றது. அன்பு பற்றி இவ்வாறான பல்வேறுவிதமான கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவது அன்பு தனிப்பட்ட வாழ்க்கையால் சிறைப்படுத்தப்படுகின்றது என்பதையாகும். ஆனாலும் அன்பை பற்றி ஒருமுறை வீ. அய். லெனின் குறிப்பிடுகையில் அவர் மூலம் எழுப்பப்பட்ட ஒரு வினா நினைவுக்கு வருகின்றது. “சமூகம் குறித்து அன்பு செலுத்தாத ஒருவரால் எப்படி தமது காதலன் அல்லது காதலி மீது அன்பு செலுத்த முடியும்” என்பதே அந்த வினாவாகும். உலகின் மிகப் பிரபல்யம் வாய்ந்த புரட்சிவாதியான சேக்வேரா என்பவர் குறிப்பிடுகையில் “ ஒருவர் புரட்சிவாதியாக வேண்டுமானால் அதற்கான முதலாவது தகைமையாக அமைவது உலகத்தவர்கள் மீது காதல் கொள்வதாகும்” என்றார். இதில் இருந்து புலனாகின்ற விடயம் அன்பு என்பதை மனிதனது சமூக வாழ்க்கையில் இருந்து வேறுபடுத்தி நோக்க முடியாது என்பதாகும். ஆனாலும் இன்று அன்பு என்பது தனிப்பட்ட சொத்தாக மாறி வருவது கவலை தரும் விடயமாகும்.

 

அன்பு குறித்த தொடர்பு பற்றிய சந்தர்ப்பங்களில் கூட  அதிகமான சந்தர்ப்பங்களில் ஒரு சொத்தின் பெறுமதிக்கு இன்னொரு சொத்தை ஒப்பிடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறே அன்பானது இன்றைய உலகில் ஒரு வர்த்தக சரக்காக மாறி இருக்கின்றது. சந்தையில் அன்புக்கு விலை பேசப்படுகின்றது. நினைவு மடல்கள், ஞாபக சின்னங்களை அதிகமாக விற்பனை செய்யும் தினமாக வருடாந்தம் வருகின்ற பெப்ரவரி 14 ஆம் திகதி மாறி இருக்கின்றது. அதிகமான மோசடி நடவடிக்கைகளுக்கு இந்த காதலர் தினம் இலகுவாக பயன்படுத்த முடியுமான ஆயுதமாக மாறி இருக்கின்றது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட கைத் தொலைபேசிக்கு வந்த ஒரு தகவலின்படி காதலர் தினத்தை முன்னிட்டு உங்களது கைத் தொலைபேசிக்கு அல்லது பேஸ்புக் கணக்கிற்கு ஏதாவது அன்பளிப்புகள் அனுப்பி இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்ள ஏதாவது கட்டணங்கள் செலுத்துமாறு அல்லது வழங்கப்படும் கணக்கிற்கு வைப்பிலிடுமாறு கேட்கப்பட்டால் அவை மோசடிகாரர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதால் அவற்றை நம்பி ஏமாற மேண்டாம் என்றும் காதலர்கள் தினத்தில் அன்புக்குரியவர்களுக்கு அறிவூட்டப்படுகின்றது.

 

ஆனாலும் அன்பு என்பது ஒரு போராட்டமாகும். காதலர்கள் தினமானது காதலர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட புரட்சியின் விளைவு அதுவாகும். உரோம சாம்ராச்சியத்தில் உரோம சக்கரவர்தி காதல் உறவு மேற்கொள்வதற்கும் அத்தகைய திருமணங்களுக்கும் தடைவிதிக்கும் வகையில் அறிவித்தலை செய்தார். ஆனாலும் வெலன்டைன் என்ற மதகுரு அவரது தலைமையில் அரசனின் கட்டளையை எதிர்க்கும் வகையில் ஏராளமான காதலர்களை திருமண பந்தத்தில் நுழையச் செய்து திருமணம் முடித்து வைத்தார். பின்னர் அரசனின் கட்டளையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு வெலன்டைண் என்ற மதகுருவை கி.பி. 270 ஆம் ஆண்டு அரசன் கொலை செய்தான். 

 

இத்தனைக்கும் மத்தியில் காணாமலாக்கப்பட்டவர்களது அன்பு தொடர்பாக நாம் ஏன் பேச வேண்டும்? பலவந்தமாக மனிதர்களை காணாமலாக்கியமையானது மனிதவர்க்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறலாகும்;. பலவந்தமான காணாமலாக்கப்படும் சம்பவத்தில் அதற்கு உள்ளான அன்புக்குரியவரின் வாழும் உரிமை மற்றும் சட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு என்பவை மீறப்படுவதோடு அவரின் அல்லது அவளின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவர்கள் அநீதி, பாதிப்பு மற்றும் அநியாயத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களாகின்றமை இந்த காதலர் தினத்தில் சிறப்பம்சமாகும். தனிப்பட்ட நலன்கள் மற்றும் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்காமல் அவர்களது போராட்டமானது பொதுவான சமூக நலனை அடிப்படையாகக் கொண்டதாக அமைவதோடு அரசாங்கத்தின் தலைமையில் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூறும் அவர்களது அன்பை சுமந்தவர்களது உண்மையான உறவினர்களாக அவர்கள் உள்ளனர்.

 

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி நியாயத்திற்கான நடவடிக்கைகள் குறித்த சிவில் சமூகத்தின் போராட்டம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இந்த அரசாங்கத்தால் ஸ்தம்பிதமடையச் செய்யப்பட்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மூலமாக அவர்களது குடும்பங்களுக்கான மாதாந்தம் வழங்கபப்டும் 6000 ரூபா கொடுப்பனவுக்கான 500 மில்லியன் (50 கோடி) ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாது என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு என்ற அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கான இடைக்கால கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டதாயினும் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டது 11 மில்லியன் ரூபா மாத்திரமாகும். ஏனைய 489 மில்லியன் ரூபா தொடர்பாக காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களை கொண்ட அமைப்பு அரசாங்கத்திடம் அதுபற்றி கேள்வி எழுப்பிய போதும் அரசாங்கம் அதற்கு நியாயமான அல்லது உறுதியான பதிலை வழங்கவில்லை. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த தொகையை ஒதுக்குமாறு கோரப்பட்டதாயினும் அதிலும் ஒதுக்கப்படவில்லை. உண்மையாக நீங்கள் மனிதர்கள் மீது அன்பு செலுத்தக் கூடியவர்களாக இருந்தால் அன்பை இழந்து பலவிதமான இன்னல்களுக்கும் பாதிப்புகளுக்கும் ஆளாகி துயரங்களை அனுபவிக்கும் நீதியை நிலை நாட்ட கோரி குரல் எழுப்பும் சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக நீங்களும் மாற வேண்டும். அவர்களுக்காக குரல் எழுப்புங்கள்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts