வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சும் – உண்மையின் மறைவிற்குப் பிந்திய காலப்பகுதி

நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

பல வருடங்களாக இதனை இலங்கையிலே பெருவழக்கிற் காணக்கூடியதாக உள்ளதுடன் இதுபற்றி சமூக ஆர்வலர்கள், ஆரய்ச்சியாளர்களுடன் கொள்கை வகுப்பாளர்களும், கொள்கைகளுக்காகப் பரிந்து பேசுவோர் மற்றும் கல்வியாளர்கள் போன்ற தளங்களிற் பல்வேறு பரிமாணங்களிற் கலந்து உரையாடப்படுகிறது.; இணையவழி ஊடகத்தளங்கள் அண்மையிற் தோற்றம் பெற்றதிலிருந்து   வெறுப்பூட்டும் பேச்சுகளை உருவாக்கும் சக்திகள் கடந்த காலத்தில் இருந்ததிலும் பார்க்கப் பிரமாண்டமாக வளர்ச்சி பெற்றமைபற்றி விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

image1

“ஒரு சில சமூகரீதியான ஜனநாயகக் குழுக்களுடன் சேர்த்து அடையாளங்காணப்பட்ட இலக்குகளுக்கு கேடு விளைவிப்தற்கு ஆதரவான பேச்சுள்” என 2015ல் UNESCO நிறுவனம் வெறுப்பூட்டும் பேச்சை அடையாளங்கண்டுள்ளது.

மிகப் பரந்த அவையினர் மத்தியில் செய்திகளையும் கருத்துகளையும் பரப்பும் பிரதான ஊடகமாகச் சமூக ஊடகங்கள் இருக்கின்றன. இந்த ஊடகங்களைப் பின் தொடர்பவர்களும் பயன்படுத்துபவர்களும் இலங்கையின் சனத்தொகையில் அதிகரித்தவண்ணம் இருக்கின்றனர். பெரும்பாலானவர்களிடம் இருக்கும் செல்லிடத் தொலைபேசிகளில் இணையத்தள இணைப்புகள் இருப்பதுடன் ஏதேனும் ஒரு வகையான சமூக ஊடகத்துடனும் தொடர்பை ஏற்படுத்தியவையாகவும் இருக்கின்றன. சமூகத்தில் பாரம்பரியமாக இருந்த செய்தித் தளங்களிலிருந்து கிடைத்த செய்திகளிலும் கூடுதலானவற்றை  இவைகளினூடாகச் சமூகம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இதில் ஒரு முக்கிய பரிணாமமாகக் காணப்படுவது யாதெனில் பெரும்பாலான வெறுப்பூட்டும் பேச்சுகள் சமூகமட்டத்தில் இளவயதினரைக் குறிவைப்பவையாக இருக்கின்றன. பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது இளைஞர்கள் பரவலான குழுக்களுடன் செய்திகளைப் பகிரக் கூடியவர்களாய் இருக்கின்றனர்.

image2

போலிச் செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் எதிர்த்து நிற்பதற்கு அரசாங்கங்கள், கல்விமான்கள், வெளியீட்டாளர்களர், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் சிவில் உரிமைக் குழுக்கள் ஆகியவர்களுக்கிடையில் மிகக் கவனமான பரிசீலனையும் ஒத்துழைப்பும் அவசியமாக இருத்தல் வேண்டும். இதே வேளை இப் பிரச்சனையைக் கையாள்வதற்கு நாம் எல்லோரும் பங்களிப்புச் செய்தல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எங்களைத் தனிமனிதர்களாப் பாவித்து நாங்கள் வாசிப்பவைகள் உண்மையானவையா அல்லது இல்லையா என எங்களையே  கேட்க வேண்டும். எங்களுக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் மற்றும் காணொளிகள் பற்றிக் கேள்வி எழுப்புதல் வேண்டும். வன்செயலைத் தூண்டும் வெறுப்புப் பதிவுகளாக இருந்தால் அது பற்றிப் புகார் அளிக்க வேண்டும். 

மறுபுறத்தில், அரசாங்கத்தினாற் பரப்பப்படும் வெறுப்பூட்டும் பேச்சுகளும் போலிச் செய்திகளும் மில்லியன் கணக்கான மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதுடன் தேர்தல்கள் மற்றும் நிதிச் சந்தைகள் மீதும் தாக்கஞ் செலுத்தும். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் சம்பந்தமான ஒட்டு மொத்தப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்துள்ளது. நாட்டிலிருக்கும் சூழ்நிலை மற்றும் நாட்டில் நடைபெறுபவை பற்றி மிகவும் சரியான தகவலை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். ஒரு ஜனநாயக நாடு என்றபடியால் தகவல் அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது.  பெரும்பாலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் தகவல்களில் மக்களுக்கு நிறைய நம்பிக்கையுண்டு.  ஆகவே மக்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.

“இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சட்டம் ஏற்கெனவே விரிவானதாக இருக்கிறது. ICCPR சட்டத்துடன் அவசரகாலச் சட்டங்களும் மிகவும் விரிவானவைகளாகவே உள்ளன.  ஆனால் இவ் விரிவான சட்டங்கள்கூட வன்முறையைத் தூண்டுபவர்கள்மீது வழக்குத் தொடர்வதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.” என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் மதும பண்டார தெரிவித்தார்.

இலங்கையிற் தற்போது இருக்கும் சூழ்நிலை பற்றி நோக்கினால், சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டும் மற்றும் தேசிய பாதுகாப்பிற் தாக்கஞ் செலுத்தும் அறிக்கைகள் அடங்கலாகப் போலிச் செய்திகளைப் பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்கக்கூடியவகையில் நாட்டின் தண்டனைக் கோவை மற்றும் குற்றவியல் சட்டக் கோவை ஆகியவை அமைச்சரவையினாற் திருத்தஞ் செய்யப்பட்டுள்ளன.  இதில் முன்மொழியப்பட்டுள்ளபடி, போலிச் செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் பரப்புவதாகப் கண்டு பிடிக்கப்படுபவர்கள் ஐந்து வருடச் சிறைத் தண்டனையுடன் ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் செலுத்த வேண்டி ஏற்படும். தீங்கு விளைவிக்கும் வகையிற் செலவாக்குச் செலுத்தும் தகவல்களைப் பரப்பும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்கள் பற்றி இலங்கை ஆராய்ந்து வருகிறது. முக்கிய தகவல்களையும் அத்தியாவசிய சேவைகளையும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் சைபர் பாதுகாப்புச் சட்டமூலமொன்றை இந்த நாடு அண்மையில் வரைந்துள்ளது. ஒருசில சமயங்களில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்ற நிலைகளைத் தொடர்ந்து தப்பான தகவல்கள் பரவுவதைக் கட்டுபடுத்துவதற்காக அரசு பல சமூகஊடக வலைத்தளங்களைத் தடைசெய்தது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts