கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக ஊடகங்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய வெளியீடு தொடர்பான சட்டங்கள் சில

உதேனி பெரேரா

இன்றைய காலகட்டத்தில்  நவீன ஊடகங்களால் மேற்கொள்ள முடிந்த பணிகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்துகின்ற போது சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ள முடிந்த செயற்பாடுகளையும் நாம் சாதாரணமாக கருதிக்கொள்ள முடியாது. நவீன ஊடகங்களுக்கு நிகரான முறையில் செய்திகளை மிகவும் வேகமாக சமூகத்திற்கு கொண்டு செல்லக்கூடிய இயலுமை, சமூக ஊடக கணக்கொன்று இருக்குமானால் எந்த வகையான தகவலையும் சமூக மயப்படுத்தக் கூடிய வசதிகள் காரணமாக ஒவ்வொருவரும் தத்தமது சுவைக்கு எற்ப தகவலை பரிமாறும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வசதியை நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள், மோசமான முறையில் கையாள்பவர்கள், ஏனையவர்களுக்கு தொல்லை தரும் முறையில் பயன்படுத்துபவர்கள், அவதூறு ஏற்படுத்தும் வகையாக பயன்படுத்துபவர் ஆகியோரை பரவலாக காண முடிகின்றது. தாம் சமூக ஊடகத்திற்குள் எவ்வாறான முறையில் நடந்து கொண்டாலும் எத்தகைய தவறை செய்தாலும், குற்றம் புரிந்தாலும் அத்தகையவர்களை தண்டிப்பதற்கான சட்டங்கள் எதுவும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டங்களுள் சமூக ஊடகங்களுக்கு செல்லுபடியாகக் கூடிய கட்டுப்படுத்தக்கூடிய  அதிகமான சட்டங்கள் உள்ளன. அதிகமானவர்கள் அது பற்றிய அறிவை கொண்டிருக்காவிட்டாலும் அத்தகைய சட்டங்களை தெரியாது என்று கூறுவது சுதந்திரமாக தெரிவிக்கக்கூடிய கருத்தாக அமைவதில்லை. அதனால் அத்தகைய சட்டங்கள் யாவை என்பது தொடர்பான அறிவை பெற்றிருப்பது அனைவருக்குமான கடமையாகும்.

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு காரணம் சமூக ஊடகங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்களால் ஆகும். அவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறும் போது அவை சட்டவிரோதமான செயல்கள் என்ற உணர்வு கூட வராமல் இருப்பதற்கு காரணம் அது தொடர்பான சட்டங்கள் பற்றிய அறிவு இல்லாமையாகும்.

இலங்கையில் அதிகமான பாவனையாளர்களால் பயன்படுத்தக்கூடிய சமூக ஊடகங்களாக பேஸ் புக் (Facebook)” இன்ஸ்டர்கிரேம் (Instargram)” வட்ஸ் அப் (WhatsApp)”  யூடியுப் (Youtube)” இமோ (Imo)” வய்பர் (Viber) போன்ற வலைப் பின்னல்களை குறிப்பிடலாம் இவற்றுள் பேஸ்புக் என்ற முகப்புத்தகத்திற்கு பிரதான இடம் வழங்கப்படுகிறது என்று கூற வேண்டும்.

இன்றைய சமூக ஊடக செயற்பாட்டில் பரவலாக இடம்பெறும் சைபர் குற்றச் செயல்களாக (Cyber Crime)  ஆபாசமான பாலியல் வெளியீடுகள், புகைப்படங்கள், அவதூறு அல்லது கௌரவத்தை கெடுக்கும் வகையிலான பதிவுகள், தனி நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்துதல், களங்கம் உண்டு பண்ணுதல், போன்ற காரணங்களுக்காக ஒரு சில தகாத பதிவுகளை வெளியிடுகின்றதை குறிப்பிடலாம். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுபவர்கள், நெருக்கடிகளை சந்திப்பவர்கள் உள்ளனர். அத்தகைய பாதிப்புக்களை அல்லது நெருக்கடிகளை சந்திப்பவர்களுக்கு உதவியாக சட்டத்தின் உதவியை நாடுவதற்காக இத்தகைய தகவல்கள் கைகொடுக்கலாம்.

மோசமான கீழ்த்தரமான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பாக இந்நாட்டில் இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன. அது தொடர்பான மிகவும் பழமை வாய்ந்த சட்டமாக இருந்து வருவது குற்றவியல் தண்டனை சட்டக் கோவையாகும். ஆபாசமான பாலியல் வெளியீடுகள், புகைப்படங்கள், அவதூறு அல்லது கௌரவத்தை கெடுக்கும் வகையிலான பதிவுகள், தனி நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்துதல், களங்கம் உண்டு பண்ணுதல், போன்ற விடயங்களை காட்சிப்படுத்துதல், வெளியிடுதல் அல்லது பதிப்பித்தல் போன்ற செயற்பாடுகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்று குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 285 ஆவது பிரிவு கூறுகின்றது. இரண்டாவது சட்டமாக இருந்து வருவது 1927 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஆபாச வெளியீடுகள் தடை சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ்; ஆபாச புகைப்படங்கள், வரைபடங்கள், வீடியோ விநியோகம், காட்சிப்படுத்தல் குற்றமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது சமூக ஊடகங்கள் மூலம்’ இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்டர்பாக பொருந்தக்கூடிய சட்டமாகும்.

மத ரீதியான அவதூறு ஏற்படுத்தல், இன முரண்பாடுகளுக்கு வழிவகுக்கக்கூடிய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமான செயல்கள் போன்றவை சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளாகும். இத்தகைய செயல்கள் சிலரால் அறிந்தும் அறியாதவர்களாகவும் மேற்கொள்ளக் கூடிய சட்டத்திற்கு முரணான செயல்களாகும். அதற்காக இலங்கை சட்டத்திற்குள் தண்டனை உள்ளன.

tttt      tttjyyu

அதே போன்று 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் படி போருக்கான சூழலை ஏற்படுத்துதல், வேறுபடுத்தி பராமரித்தல் அல்லது கவனித்தல், (பாரபட்சம் காட்டுதல்) இன வன்முறைகள் அல்லது மத அடிப்படையிலான கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளல், மத வெறுப்புணர்வை தூண்டுதல் போன்றவைகள் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக கருதப்படுகின்றது. குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 291 ஆம் பிரிவின்படி எழுத்து மூலமாக அல்லது வாய் மூலமான வெளிப்படுத்தல் அல்லது செய்கைகளால் மதத்திற்கு அல்லது மத நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படுத்துவது அல்லது களங்கம் உண்டு பண்ணுவது குற்றமாகும்.

அவ்வாறே 1958 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க மத நிந்தனை வெளியீட்டு சட்டத்தின் 02 ஆம் பிரிவின்படி மதங்களை இழிவுபடுத்தும் விதமான வெளியீடுகளை செய்தல், காட்சிப்படுத்துதல் என்பன குற்றமாகும். அவ்வாறே 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இனங்களுக்கிடையில் இனவாத உணர்வுகளை தூண்டுதல் குற்றமாகும். அவ்வாறான இனவாத உணர்வுகளை தூண்டி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை பகிர்வது, பரப்புவதும் குற்றமாகும். இப்படியான சட்டத்தை மீறியதற்கான அண்மைக்கால உதாரணமாக சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்ற வெளியீட்டை கூறலாம். இவ்வாறான பகிர்வானது சிலரால் பொழுது போக்கிற்காக பரப்பப்பட்டதாக இருந்தாலும் சட்டத்தின் முன் குற்றமாகும்.

56656     tytyersdfg

சமூக கலந்தரையாடலுக்கு வழிவகுக்கின்ற ஏதாவது குற்றச் செயல் ஒன்று நடந்துவிட்டால் அதுபற்றி தமது கருத்துக்களை பகிரும் போக்கானது இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக காண முடிகின்றது. அதே போன்று குற்றவாளிகள் அல்லது குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாகவும் பலவிதமான கருத்துக்கள் பகிரப்படுவதை காண முடிகின்றது. குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் படி அத்தகைய சில வகையான நடவடிக்கைகளும் குற்றமாகவே கருதப்படுகின்றது. குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 365 ஆவது பிரிவுக்கமைய குற்றமிழைத்தவர் பற்றிய அடையாளப்படுத்தல் குற்றமாகும். 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சட்டத்தின் 20 ஆவது பிரிவுக்கமைய கீழ் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படுகின்ற வழக்குகளோடு சம்பந்தப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். ஆனாலும் இன்றைய சமூக ஊடகங்களை பார்த்தால் இவ்வாறான செயல்களை பரவலாக காண முடிகின்றது. 2015 ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் பரவலாக பேசப்பட்ட கொடதெனியாவ 05 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பரிமாறப்பட்ட தகவல்களில் முதலில் சிறுமியின் தந்தை பற்றியும் பின்னர் அயலில் வசித்து வந்த பாடசாலை செல்லும் இளைஞன் தொடர்பாகவும் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் பிரதான ஊடகங்களில் கூட சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையான தகவல்கள் பரப்பப்பட்டது நீதிமன்றம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முன்னராகும்.

2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்களை தடுக்கும் வகையான சட்டங்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட அங்கீகாரம் இல்லாத செயற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாக அவற்றிற்கு எதிராக எவருக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகள் உள்ளன.

அதே போன்று வெளியீட்டாளர்களின் அல்லது ஆசிரியர்களின் முறையான அனுமதி இல்லாமல் வெளியீடுகளின் அல்லது பதிப்புக்களின் போலியான பிரதிகளை அச்சிட்டு பிரதிகளை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பதும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக காணக்கூடிய மற்றுமொரு சட்டவிரோத செயலாகும். சிலர் இத்தகைய செயலை குற்றம் இல்லை என்று நியாயப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் 06 ஆவது பிரிவுக்கமைய பதிப்பொன்றின் அல்லது வெளியீட்டின் ஆசிரியரின் அல்லது படைப்பை உருவாக்கியவரின் முறையான அனுமதி இல்லாமல் அந்த பதிப்பை (நூலை) அல்லது அதன் பகுதிகளை பிரசுரம் செய்வது அல்லது பதிப்பிப்பது புலமைச் சொத்து சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும்.

wwwwwwwwwwwwwwwwwwww

அதேபோன்று சமூக ஊடகங்களில் பரவலாக காணக்கூடிய மற்றுமொரு பிரதான செயலாக இருப்பது ஒருவர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமான தகவல்களை வெளியிடுவது அல்லது நடந்துகொள்வது. இவ்வாறான செயற்பாடுகள் பெண்களை அல்லது பிரபல்யம வாய்ந்த நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதை காணலாம். ஆனாலும் ஒரு நபருக்கு அல்லது குழுவினருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக பிரசுரம் செய்தால் அல்லது வெளியீடுகளை செய்தால் அதற்கு எதிராக சிவில் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும்.

 

சமூக ஊடக செயற்பாட்டாளராக இருக்கின்ற போது தம்மால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள், கட்டுரைகள், வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், மற்றும் எந்தவிதமான பதிவுகளை பதிவேற்றம் செய்தாலும் அல்லது வெளியிட்டாலும் அவை தொடர்பான உண்மைத்தன்மை, மற்றும் பொறுப்புணர்வுடன நடந்து கொள்ள வேண்டியது ஒரு பிரஜை என்ற முறையில் கடமையாக அமைவதோடு தமக்குள்ளேயே ஒருவிதமான சுய கட்டுப்பாட்டை மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நவீன கால ஊடகங்களையும் பின்தள்ளிக் கொண்டு முன்னோக்கி செல்கின்ற அளவிற்கு சமூக ஊடகங்கள் மாறி உள்ள யுகத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பாக நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதும் விவாதத்திற்குட்பட்டுள்ள தலைப்பாக மாறி இருக்கின்றது.

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts