கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்துச் சுதந்திரம் மற்றும் ‘800’ திரைப்படம் தொடர்பான கதை

தமிழ் சினிமாவின் சம்பிரதாயத்தை புரட்டிப்போடுவதாகவும் அதன் வெளியீட்டிற்காக உலக சினிமா மற்றும் கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமாகவும் ‘800’ காணப்படுகின்றது. இந்தத் திரைப்படம் இலங்கையின் புகழ்பெற்ற சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் கதையை மையமாகக் கொண்டது.

முரளிதரனின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியானது. எனினும், அவரது படத்தை தாங்கிய போஸ்டர் ஒன்று 2020 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்டதோடு சேர்ந்து சர்ச்சையும் ஆரம்பித்துவிட்டது. டுவிட்டரில் #ShameOnVijeySethupathi என்ற ஹேஷ்டேக்குடன் எதிர்ப்பு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய சமூக வலைத்தளங்களிலும் அது மிக வேகமாக பரவியது. வெறுப்புப் பேச்சின் வலிமையை இந்த பிரச்சாரம் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு, இது திரைப்படத் துறையையும் குறிப்பிட்ட திரைப்படத்தையும் பாதித்தது.

முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்த்து ஆரம்பத்தில் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. இந்த பிரச்சாரம் பின்னர் படிப்படியாக அரசியல், இனவாதம் மற்றும் போருக்கு பின்னரான வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தலைப்புகளுக்கு மாறியது. பல டுவிட்டர் பதிவுகள் மற்றும் ஏனைய சமூக வலைத்தள பதிவுகளில் இதுதொடர்பான வெறுப்புப் பேச்சு காணப்பட்டது.

 

fff

gg

விஜய் சேதுபதியின் ஆடையில் இலங்கை தேசிய கொடி காணப்பட்டமையே அவரது இரசிகர்கள் அவரை எதிர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. எனினும், இப்பிரச்சாரமானது படத்திற்கு அப்பால் சென்றது. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளிலும் காணப்படும் விடயங்கள், இப்படத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத பிரச்சினைகளை நோக்கி நகர்ந்துள்ளதை காணலாம். இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என்பது இந்த பிரச்சாரத்தின் மற்றுமொரு முக்கிய விடயமாகும். இப்பிரச்சினை தொடர்பாக பெரும்பாலான இலங்கையர்கள் அமைதியாகவே இருந்தனர்.

rr

திரைப்படத்தின் போஸ்டர் எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை மேலுள்ள டுவிட் காட்டுகின்றது. சமூக ஊடக பிரச்சாரத்தில் ஈடுபட்ட வெவ்வேறு நபர்கள், விஜய் சேதுபதியை அந்த கதாபாத்திரத்திலிருந்து விலகுமாறு கோரினர். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கடிதமொன்றை எழுதிய முத்தையா முரளிதரன், தனது கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்றும் அதனால் அந்த பாத்திரத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். வெறுப்புப் பேச்சு அந்தளவிற்கு உச்சகட்டத்திற்குச் சென்றதோடு, விஜய் சேதுபதியின் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதாக ஒருசிலர் அச்சுறுத்தினர்.

mm

hhgh

 

பொதுவாக சமூக ஊடகங்கள் வாயிலாக பரவும் வெறுப்பூட்டும் பிரச்சாரங்களையும் போலிச்செய்திகளையும் புறக்கணிக்கின்றோம். இத்தகைய வெறுப்புப் பேச்சு மற்றும் போலிச் செய்திகளால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பு இல்லை.

முகப்புத்தகம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இவ்வாறான புகைப்படங்களின் தோற்றம் மாற்றப்பட்டு, அவை பாலியல் துஷ்பிரயோகம் அல்லது குறிப்பிட்ட நபர்களை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறான உள்ளடக்கங்கள் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் தமது போலி அடையாளங்களை மாற்றி வேறு போலிக்கணக்குகளின் வாயிலாக அவ்வாறான செயற்பாடுகளை தொடர்கின்றனர். இவ்வாறான தந்திரங்களால் வெறுப்பூட்டும் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. சமூக ஊடக பாவனையாளர்கள் இவற்றை சாதாரணமாக கருதுவதும் புறக்கணிப்பதும் இவ்வாறான அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமைக்கான முக்கிய காரணமாகும்.

கடந்த வருடம் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சுக்களும் போலிச் செய்திகளும் பெருமளவில் பரப்பப்பட்டன. கொவிட்-19 நெருக்கடி தொடர்பாகவும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றதை நாம் அவதானிக்கலாம். கருத்துச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், ஒரு நபரோ

 

 

 

அல்லது குழுவோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இதனைப் பயன்படுத்தினால் அது சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. கடுமையான சட்டங்கள்> 800 போன்ற திரைப்படங்களை இவ்வாறான நிலையிலிருந்து காப்பாற்றும்.

 

 

 

 

 

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts