வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுச் சுதந்திரம்

உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டினதும் தரநியம அளவீடாகப் பேச்சுச் சுதந்திரமே உள்ளது. ஒரு நாட்டு மக்களின் மனமகிழ்ச்சி மட்டம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றைக் குறிக்கும் சுட்டி அம்மக்களின் பேச்சுச் சுதந்திரம் சிறப்பாகச் செயற்படும் அளவின் அடிப் படையிலேயே தயாரிக்கப்படுகிறது.

கி.மு. 6ம் நூற்றாண்டு அளவிலான முற் காலத்தில் புராதன கிரேக்கர்கள் அந்த அடிப்படை அவசியத்தை முதலில் அறிமுகப்படுத்தியதுடன் அதனை வழக்கப்படுத்தினர். அப்போது ஏதென்ஸிலுள்ள தத்துவ ஞானிகள் நாடகாசிரியர்கள் அடங்கலான சகல மக்களும் சமயமும் அரசியலும் பொது மக்கள் மத்தியில் நன்மை தரக்கூடியவையாகக் காணப்படாது விட்டால் அவைபற்றி வெளிப்படையாகக் கலந்துரையாடினர்ஃகுறைகூறினர். இருந்தபோதிலும் ‘பேச்சுச் சுதந்திரம்’ என்னும் சொற்பதம் இது விடயம் தொடர்பிலிருந்து நீக்கப்பட்டதுடன் மனிதகுல வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பலவிதமாகப் பொருள் விளக்கஞ் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகம் சிறப்பாகச் செயற்படும் நாடுகளான ஐக்கிய அமெரிக்காஇ ஐக்கிய இராச்சியம்இ பிரான்ஸ்இ டென்மார்க் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகியவை தங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் வழங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் தொடர்பிற் சிறப்பாகச் செயற்படாத சில நாடுகளாவன வட கொரியாஇ எகிப்துஇ சிரியாஇ சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற எதேச்சாதிகார ஆட்சிகள்இ சாவாதிகாரம் மற்றும் வலிமையற்ற ஜனநாயகங்கள்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் ஆகிய இரண்டையும் அருகருகாக வைத்துச் சமநிலை பேணுவதே உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்குச் சிறப்பான நிலையாயிருக்கும். கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகச் சட்டம் ஒழுங்கு பற்றிக் கண்களை மூடிக்கொள்ளுதல் அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகக் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் சிறந்த  நிலைமைகள் ஆகமாட்டா. ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் எதுவாயிருந்தாலும் அதன் கீழிருக்கும் சகலரது நலன்களும் சிறப்பதற்காக இவையிரண்டும் சேர்ந்து இயங்குதல் வேண்டும்.

இப்போது எமது கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்புவோமாகில் அண்மைய வருடங்களில் பேச்சுச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய துறைகளில் நிலையான முன்னேற்றத்தை அவதானிக்க முடிகிறது.  2017ல் 180 நாடுகள் மத்தியில் 141வது இடத்திலிருந்து அதன் தரநிலை 2018ல் 131வது இடத்திற்குச் சீரான அதிகரிப்பைக் கண்டுள்ளதுடன் மிகவும் அண்மையில் இற்றபை;படுத்தப்பட்ட 2019ம் ஆண்டிற்கான உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியில் 126 வது இடத்தை அடைந்துள்ளது.

அரசியலமைப்பின் உறுப்புரை 14(1) பிரஜை ஒருவருக்குப் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பிரசுரம் ஊடனதும் அடங்கலான உரிமையை வழங்குகிறது.  கருத்துச் சுதந்திரம் எனப்படுவது  தனிநபர்கள் அல்லது தனிநபர்களைக் கொண்ட குழுக்கள் தங்கள் கருத்துகளை அல்லது அனுபவங்களை மற்றைவர்ளுடன் பகிர்ந்து கொள்வதிற் தடையேதுமில்லாம் இருப்பதாகும். பொது வெளியில் பேசுதல்இ அரசியல் அணிவகுப்புகள்இ பொது மேடை நிகழ்ச்சிகள்இ காண்பியற் கலைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமான இற்றபை;படுத்தல்களும் அடங்கலானவற்றையும் இது உள்ளடக்குகிறது. இருப்பினும்இ இச் சுதந்திரங்கள் ஏனைய வர்களின் சுதந்திரத்துடன் அவதூறு விளைவித்தல் தனிமனித அந்தரங்கத்தில் அத்துமீறுதல் இரகசியம் பேணும் சட்டம் போன்ற சட்டரீதியான வரையறைகள் ஆகியவற்றிற்கு அமைவானவையாகும்.

எண்ணிம ஊடகம் (னுபைவையட ஆநனயை) இலங்கைக்குப் புது வகையான சாவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டுவந்துள்ளது. தொடர்பாடலில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட படிநிலையை அது தட்டையாக்கியுள்ளதுடன் அதிகரத்தில் உள்ளவர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையிலுள்ள உறவுகளையும் மீள் வடிவமைத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அணுக்ககூடியதாய் இருப்பதனால்  எவராயிருந்தாலும் பொது வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடக்கூடியதாகச் செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் மட்டுமன்றிச் சராசரி குடிமக்களுங்கூட உலகம் முழுவதற்குமெனத் தொலைக்காட்சியிற் காட்சிப்படுத்தப்பட்ட அல்லது பத்திரிகையில் அச்சிடப்பட்ட அல்லது வானொலியில் ஒலிபரப்பப்பட்டவற்றின் துணுக்குகளைச் சமூக ஊடகத் தளங்களுக்கு அனுப்பிவைப்பதன்மூலம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும.; இது அனுமதியளிக்கப்பட வேண்டிய சுயவெளிப்பாட்டின் இன்றியமையாத பகுதி யாயிருப்பதுடன் அபிப்பிராயங்களை ஏற்படுத்திக்கொள்ளுவதற்கும் தகவல்களையும் கருத்துகளையும் பெற்றுக்கொள்வதற்கும் பிறருக்கு வழங்குவதற்கும் ஆட்சி அதிகாரத்தின் குறுக்கிடு இல்லாத சுதந்திரத்தையும் உள்ளடக்குகிறது.  அதே நேரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரமானது தடைகளற்ற பூரணமானதல்ல.  பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் தங்கள் கருத்து வெளிப்பாட்டில் வன்முறைஇ மதவெறிஇ வெறுப்புணர்ச்சி மற்றும் பதற்ற நிலைகளைத் தோற்றுவித்தலாகாது. இதனால் பேச்சுச் சுதந்திரம் முதலில் எதற்காக அனுமதிக்கப்பட்டNதூ அதே காரணத்திற்கு முரண்பாடாகக் கெடுதலையே விளைவிக்கும்.  பேச்சுச் சுதந்திரம் ஒரு நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கக்கூடாது. கொறோனா செய்திகள் தொடர்பில் ஏப்ரல் 2020ல் சில சமூக ஊடக வலைத்தளங்கள் இலங்கையிற் தடைசெய்யப்பட்டன.  இதனை அரசாங்கம் புனைவுச் செய்திகள் பரவுவதையும் நாட்டிலே செயற்கையான பதற்றம் ஏற்படுவதையும் தடுப்பதற்காக செய்ததல்லாமல் ஜனநாயகப் பெறுமானங்களை மடக்குவதற்கல்ல.

தேவைக்கதிகமான தகவல்களும் தப்பான பொருள் விளக்கங்களும் வளம்பெறக்கூடிய பகைமை உணர்வும் பிரிவினையும் நிலவும் ஒரு சூழலிற் சமூக ஊடகங்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றி வாதப் பிரதி வாதங்களும் கலந்துரையாடல்களும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தும் அதேவேளை விழிப்புணர்வையும் மேம்படுத்த வேண்டியதுடன் மின்-வன்முறை(ந-எழைடநnஉந) யின் செல்வாக்கையும் தடைசெய்ய தலுமே இப்பொழுது கையில் உள்ள சவால்களாகும்

ஊடகமெனப்படுவது நாடொன்றின் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதுடன்; ஜனநாயக வழிமுறைகளின் காவலர்கள் என்ற வகிபாகத்தையும் கொண்டுள்ளது என்பன தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு பற்றிக் கடுமையான கவலையை ஊடக கமூகத்தினர் வெளிப்படுத்தும் நேரத்தில் 20வது திருத்த சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் உறுப்புரை 14யு யிலிருக்கும் தகவல் அறியும் உரிமை தொடர்ந்தும் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ளும் அதேநேரம் இலங்கையில் தகவலறியும் உரிமையின் மூலாதாரமான 2016ம் ஆண்டின் தகவலறியும் உரிமைச் சட்டம் இல. 12ன்படி சுயாதீனமான தகவல் அறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கபட்டதுடன் அவ்வுரிமைளை முறையாகப்பயன்படுத்தும் வகையில் அரச அதிகார மையங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டமையையும் வலியுறுத்தல் அவசியமாயுள்ளது. 2017லிருந்து ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை ஆர்வமுடன் பயன்படுத்தியமையால் இலங்கை உலகிற் சிறந்த நடைமுறைகளுக்கு ஒரு முன்மாதிரியான வகிபாகத்தைப் பெற்றிருந்தது.

நிறைவாகஇ இலங்கையை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியலமைப்பும் பேச்சுஇ கருத்து மற்றும் வெளியீட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பவை என அறியக்கூடியதாயிருந்தது.  இதன் மறு பக்கத்தைப் பார்க்கும் பொழுது தனது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விடயத்தில் நாளாந்த வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் வேறுவிதமான கதைகளைச் சொல்லுகின்றன. ஊடகங்கள் இன்னமும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை யெனவும் ஆபத்துக்கள் ஏற்படக்கூடுமென்ற ஒரு பய உணர்வு காணப்படுகிறது.  டாக்டர். ஜோடன் ‘மனுக்குலத்தின் அடிப்படைப் பிரச்சனை தீர்க்கும் பொறிமுறையாகப் பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது’ என எங்களுக்குக் கூறுகிறார்.  ஆகவே 20வது திருத்தம் உள்ளதோ இல்லையோஇ உங்கள் கருத்தை வெளிப்படுத்தும சுதந்திரம் உடையவர்கள் என்பதை அறிந்திருப்பதே மாற்றங்கள் எல்லாவற்றையும் ஏற்படுத்தக்கூடியது.  ஓரு நாட்டிலுள்ள முறைமைகள் பற்றிக் கேட்பதற்கும்இ குறைகூறுவதற்கும் சவால் கிடுவதற்கும் உரிமை இல்லாது விட்டால் அந்த நாடு முன்னேற்றம் காணமுடியாதுஇ

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts