ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியும் ஒட்சிசனுக்கு நிகரானது
ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவை ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து இறக்குமதி செய்ய அல்லது தினிப்பதற்கு முடியாததாகும்
எமில் லாஹ_ட் – லெபனான் முன்னாள் ஜனாதிபதி
ஆட்சியியல் மற்றும் நல்லாட்சி தொடர்பாக (Governance & Good Governance) தற்போது பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. சில அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் இலங்கையில் 2015 – 2019 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆட்சியை நல்லாட்சி என்று அடையாளப்படுத்த முற்படுகின்றனர். இன்னும் சிலர் திட்டமிட்ட அடிப்படையில் ஆட்சியை இகழ்வதற்காக இந்த பதத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சியானது அனேகமாக மொழியுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. நல்லாட்சியை இழிவாகப் பேசக்கூடிய சிலர் இந்த கோட்பாட்டிற்கே அதிருப்தி தெரிவிப்பவர்களாக உள்ளனர்
அரசாட்சியானது மிகவும் பழமைவாய்ந்த சித்தாந்தமாகும். அதன் சாதாரண அர்த்தமாக அமைவது ஆட்சியாளர்களால் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வது, தீர்மானம் எடுக்காமல் விடுவது, அமுலாக்கம் செய்வது அல்லது அமுலாக்கம் செய்யாமல் விட்டுவிடுவது ஆகும். ஆட்சியாளர்கள் சர்வதேச, தேசிய மற்றும் பிரதேச அடிப்படையில் இருக்கலாம். இருந்தாலும் ஆட்சி நிர்வாகம் என்பது அரசாங்கத்தை மாத்திரம் குறிப்பதில்லை. இலங்கையை எடுத்துக்கொண்டால் தற்போதைய கட்டமைப்புக்குள் ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள், இராணுவம், மதகுருமார், ஐ.நா. சபையின் பிரநிதிதித்துவ நிறுவனம், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நிறுவனங்களைப் போன்றே மோசடிக்காரர்கள் போன்றே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் அரசாட்சியுடன் பல்வேறுவிதமான தொடர்டபுகளை வைத்துள்ளனர்.
பொதுவான ஆட்சி நிர்வாகத்திற்கும் நல்லாட்சிக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டைக் காணலாம். நல்லாட்சி என்பது சிறந்த ஆட்சி முறையை குறிப்பதை அந்த சொற்பதம் ஊடாக உணர முடிகின்றது.
ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்குள் ஐ.நா. அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) நல்லாட்சி என்பதற்கான 08 பிரதான பண்புகளை அடையாளப்படுத்தி காட்டியுள்ளனர்.
பங்குபற்றுதல்: தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஆண் பெண் ஆகிய இருபாலாரதும் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறே மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் சிவில் சமூக செயற்பாடும் அவசியமாகின்றது. அவ்வாறே தீர்மானங்களை எடுக்கின்ற போது அவதானத்தை ஈர்க்கக்கூடிய தரப்பினரது கருத்துக்களை கவனத்தில் எடுப்பதும் அத்தகைய தகவல்களை அடிப்படையாக வைத்து முடிவுகளை மேற்கொள்வதும் முக்கியமானதாகும்.
சட்ட ஆட்சி : நியாயமான சட்ட ஆதிபத்தியம் நிலவ வேண்டி இருப்பதோடு மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் சிறுபான்மை சமூகங்கள் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. சுயாதீனாமான நீதிதுறை மற்றும் ஊழல் மோசடிகளுக்குட்படாத பொலீஸ் சேவையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வெளிப்படைத் தன்மை: தீர்மானங்களை மேற்கொள்வதும் அவற்றை அமுல்படுத்துவதும் சட்டரீதியான முறையில் இடம்பெற வேண்டும். திர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு அடிப்படையாக அமையும் விடயங்கள் தொடர்பான தகவல்களை இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய இயலுமை காணப்பட வேண்டும். எடுக்கப்படுகின்ற தீர்மானங்களால் பாதிப்புக்குள்ளாகின்ற தரப்பினருக்கு சமூகத்திற்கு இந்த வசதி பயனுடையதாக அமைகின்றது.
பதிலளிப்பதற்கு ஏற்ற நிலை: நிறுவனங்கள் மற்றும் செயலணிகள் மூலம் எல்லாத் தரப்பினருக்கும் போதுமான கால எல்லைக்குள் பதிலளிக்கப்படும் நிலை
இணக்கப்பாடு: தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது சமூகத்தில் காணப்படுகின்ற எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூக, கலாசார, குழுக்களை உள்ளடக்கிய தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அவர்களது அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலும் நிலையான சமூக அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட பரந்தளவிலான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைய வேண்டும்.
நியாயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல்: சமூகத்தில் உள்ள எல்லாத் தரப்பினர்களும் தாம் ஆட்சியின் பங்காளிகளாக கருதிக்கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய யாரையும் ஓரம் கட்ட முடியாது.
பிரதிபலன் மற்றும் செயல் திறன்: நல்லாட்சியில் நிறுவன அடிப்படையில் மற்றும் செயற்றிட்டங்கள் மூலம் சமூகத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய பிரதிபலன்களை வெளிப்படுத்த முடியும். பயனுள்ள அடிப்படையில் வளங்களை பயன்படுத்த முடியும். சுற்றாடலையும் பாதுகாக்கலாம்.
பொறுப்பாதல் : சட்ட ஆட்சி மூலம் நேர்மையை வெளிப்படுத்தக் கூடியதாக அரச, தனியார் மற்றும் சிவில் சமூகங்கள் என்ற அனைத்து தரப்பினரும் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட காரணிகளின் அடிப்படையில் நல்லாட்சி பற்றி கவனம் செலுத்தினால் அது ஒரு வித்தியாசமான கோட்பாடு அல்ல என்பதோடு, எங்களது அண்மைக்கால வரலாறு முழுவதுமாக குறைந்தபட்சம் தேர்தல் விஞ்ஞாபனங்களை தயார்ப்படுத்தும் போது இந்த நல்லாட்சி சிந்தனையை காண முடிகின்றது. ஆனாலும் வரலாற்றில் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்திற்குள் இந்த நல்லாட்சிக்கு எதிரான சிந்தனைகளும் நிலவி வந்திருக்கின்றது. எவ்வாறாயினும் எந்தவொரு ஆட்சியாளரும் தாம் வெளிப்படையாக நல்லாட்சிக்கு எதிரானவர் என்பதை காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.
நல்லாட்சிக்கு எதிரான கருத்துக்களாக அடையாளப்படுத்தக் கூடிய விடயங்கள் யாவை என்பது தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியமாகின்றது. பின்வரும் விடயங்கள் அந்த முயற்சியாக அடையாளப்படுத்தக் கூடியவைகளாகும்.
- தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது தனி நபரின் அபிலாசைக்கு ஏற்ப அல்லது ஒரு தனி நபரை சூழ்ந்ததாக மட்டுப்படுத்தப்பட்டதாக பங்களிப்பு இருத்தல்.
- பாராளுமன்றம் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அதிகாரத்தை குவித்து வைத்ததாக அமைதல்.
- நீதிமன்றம், அரச சேவை, பொலீஸ் போன்ற நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட விரும்பாமை.
- பெண்கள் பங்குபற்றல், சிறுபான்மையினரின் அபிலாசைகள் மற்றும் கலாசார பன்முகத்தன்மை இல்லாதிருத்தல்.
- பால் நிலையாக சிறுபான்மை சமூகம், புரிந்துணர்வுள்ள தரப்பினர் போன்ற ஒதுக்கப்பட்ட பிரிவினரை ஒதுக்கி வைத்தல்
- கொள்கை வகுத்தல் தொடர்பாக தாக்கத்தை செலுத்தக்கூடிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பொறுமை இழந்த நிலை
- கொள்கை வகுப்பு மற்றும் தீர்மானங்களை எடுக்கும் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற சமூகம் தொடர்பாக கவனம் செலுத்தாதிருத்தல்
- அரச நிர்வாகம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கு அதிருப்தி காட்டுதல்
- மக்களின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்கள் தொடர்பாக அவசரமாகவும் அவசியமான முறையிலும் கவனம் செலுத்தாமல் இருத்தல்.
- அதிகார வர்க்கம் மற்றும் ஊழல்
- குற்றம் புரிபவர்களை பாதுகாத்தல்
- கணக்காய்வு, பொறுப்புக் கூறல், பதிலளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காதிருத்தல்
இந்த பட்டியலுக்குள் இன்னும் ஏராளமான விடயங்களை உட்படுத்தலாம். இருந்தாலும் நாம் முயற்சி செய்வது நல்லாட்சி என்றால் என்ன என்பது தொடர்டபாக ஆரம்ப கட்ட புரிதலை ஏற்படுத்துவதாகும்.
நல்லாட்சி என்ற சொல்லின் தற்போதைய அர்த்தம் திரிபடைந்ததாக இருக்கின்றது. கடந்த ஆட்சியை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவே இந்த நல்லாட்சி என்ற சொற்பதம் பன்படுத்தப்பட்டது. அதன் காரணமாக இந்த நல்லாட்சி என்ற சொல்லுக்கு தவறான அர்த்தம் முன்வைக்கப்பட்டது.
செலலிஹிணி சந்தேசவில் குறிப்பிடப்பட்டுள்ள “கற்பனையில் உயர்வான பார்வையில் சிறியதான” என்பது போல் சிந்தனையில் கூடுதல் என்றும் செயலில் தாழ்வு என்றும் கடந்த கால பார்வையில் நலம் என்பதில் குறைவையும் காட்டுவதாக இருக்கின்றது. ஆனாலும் தற்போதைய நிலையில் பார்க்கும் போது நல்லாட்சிக்கான அர்த்தமானது வீழ்ச்சி கண்டிருக்கின்றது. அதன்படி நல்லாட்சிக்கு பாதகம் ஏற்பட்டிருக்கின்றது.
எவ்வாறாயினும் நல்லாட்சி என்ற சொல்லுக்கு பிரயோக பதத்தை விட அரசியல் விஞ்ஞான நோக்கிலான பிரச்சினைகள் பலம் வாய்ந்தவைகளாகும். எங்களது முயற்சியாக அமைவது இந்த விடயங்களிலான சிக்கல்களை தீர்த்து வைப்பதாகும்.
சிங்கள மொழியில் நல்லாட்சி தொடர்பாக இருக்கின்ற கண்ணோட்டம் எத்தகையதாக இருந்தாலும் சர்வதேச பார்வையில் நல்லாட்சி என்றால் (Good governance) மிகவும் தூய அங்கீகரிக்கத்தக்க கோட்பாடு காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்ற போது, வர்த்தகம், உதவிகளை பெற்றுக்கொள்ளல் உட்பட இன்னும் பல நடவடிக்கைகளின் போது இலங்கை நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
ஜனநாயகத்தைப் போன்றே நல்லாட்சியும் ஒட்சிசனுக்கு நிகரானது. அதன் பெறுமதியை நாங்கள் உணர முடிவது எங்களுக்கு அது கிடைக்காமல் போகும் போதே. அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மிகவும் தாமதித்து விட்டவர்களாவோம்.