வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இளவயது திருமணம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஊடக நெறிமுறைகள்

p111111

மேற்குறிப்பிடப்பட்டுள்ள படமானது, 2020 நவம்பர் மாதம் 8ஆம் திகதி சிலுமின சிங்கள பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் ஒரு பகுதியாகும்.(http://www.silumina.lk/) குறித்த செய்தி அறிக்கையின் பிரகாரம், அம்பாறை மாவட்டத்தின் உஹண பகுதியைச் சேர்ந்த தாயொருவர் தனது 14 வயதான மகளை 22 வயதான ஆணொருவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் இளவயது திருமணத்திற்கு குறித்த சிறுமி கட்டாயப்படுத்தப்பட்ட அச்சந்தர்ப்பத்தில், அவர் அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். குறித்த செய்தி அறிக்கை சில முக்கியமான கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது. இச்செய்தி அறிக்கையுடன்

வெளியிடப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கிணங்க, முதலாவது கலந்துரையாடலானது ஊடக ஒழுக்க நெறிமுறைகளுடன் தொடர்புபட்டதாகும். குறித்த புகைப்படமானது அச்செய்தி அறிக்கையுடன் முற்றிலும்

தொடர்பில்லாததாகும். இக்கதையுடன் தொடர்புடைய 35 வயதான தாயின் புகைப்படமாக இது இருக்க முடியாது. அவர், கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய நிலையில் காணப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண தொழிலாளியாவார். ஆனால், புகைப்படத்தில் கண்ணை மறைத்து காணப்படுபவர் ஒரு மொடல் அழகியாக இருக்கலாம். அநேகமாக இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம். இந்த புகைப்படம் வாசகரை தவறாக வழிநடத்துகின்றது என்பது தெளிவாகின்றது. இந்த செய்தி அறிக்கையுடன் அவ்வாறான ஒரு புகைப்படத்தை குறித்த பத்திரிகை பயன்படுத்த

வேண்டியதன் நோக்கம் என்ன? அதனை விட தீவிரமான சிக்கல்களை குறித்த செய்தி அறிக்கை கொண்டுள்ளது. 14 வயதான சிறுமியொருவர் 22

வயதான இளைஞனுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 363 ,“உடலுறவுக்கு அனுமதி வழங்கும் பெண்ணின் சட்டபூர்வ வயது 16 ஆண்டுகள்” என சுட்டிக்காட்டுகின்றது. 16 வயதுக்கு குறைவான ஒருவருடன், அவருடைய சம்மதத்துடன் பாலியல் உடலுறவு

வைத்துக்கொண்டாலும் அது “நியதிச்சட்ட பாலியல் வன்புணர்வு (statutory rape)” என்றே கருதப்படுகின்றது.

 

அந்தவகையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கடுமையான குற்றச்செயலை செய்துள்ளார். அத்தோடு, குறித்த குற்றச்செயலுக்கு சிறுமியின் தாயார் உதவி செய்துள்ளார். இச்செய்தி அறிக்கையுடன் தொடர்புடைய மற்றுமொரு பிரச்சினையாக கருத்தடை காணப்படுகின்றது. சிறுமியின்

தாய் தனது வயதுகுறைந்த மகளை திருமணம் செய்து வைக்க சதி செய்ததன் மூலம் கடுமையான குற்றத்தைச் செய்திருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நல்ல விடயத்தையாவது செய்துள்ளார். அதாவது குறித்த சிறுமிக்கு சட்டப்பூர்வமாக கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலையொன்றில் சிறிய அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது ஜெடெல்

கருத்தடை முறையாக இருக்கலாம் என்றும் செய்தி அறிக்கை குறிப்பிடுகின்றது. இலங்கை குடும்பத்திட்டச் சங்கமானது ஜெடெல் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது “இது தோலுக்கு அடியில் புகுத்தும் மிகவும் பயனுள்ள,  மீளக்கூடிய ஒரு கருத்தடை முறையாகும். இது நீண்டகால பலன் தரக்கூடியது. ஐந்து வருடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கர்ப்பமடைய விரும்பினால் ஐந்து வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரமும் அகற்றிவிடமுடியும்” (http://www.fpasrilanka.org/si/content/jddel)

 

 

இது நிரந்தர கருத்தடை முறையென குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. உண்மையில் இது பிழையானது. இந்த குறைந்த வயதுடைய பெண்ணுக்கு கருத்தடை அவசியம். காரணம், குழந்தையொன்றை பெற்றெடுக்க அவள் போதுமானளவு வளரவில்லை. இலங்கையில் சராசரியாக 5 வீதமான கர்ப்பம் குறைந்த வயதுடையவர்களில் காணப்படுவதாகவும் சில பிரதேசங்களில் இது 8 வீதம் என்ற அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

இளவயது திருமணம் நடக்கின்ற காலம் குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இது கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள காலமாகும். அத்தோடு, பாடசாலைகளை நீண்டகாலமாக மூடிவைத்தல் மற்றும் கிராமப்புற

பொருளாதாரத்தில் தொற்றுநோய் செலுத்தும் தாக்கம் என்பன இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கலாம். இந்த சிறுமியின் பெற்றோர் பிரிந்துவிட்டனர். அத்தோடு,  தாய் ஒற்றை பெற்றோராக சாதாரண தொழிலாளியாக ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்தை வழிநடத்துகின்றார். குறித்த செய்தி அறிக்கையில் நாம் மீண்டும் கவனம் செலுத்தினால்,  அரசுக்கு சொந்தமான சிலுமின சிங்கள

பத்திரிகை இச்சம்பவத்தை இவ்வாறான முறையில் வெளியிட்டுள்ளமை வருந்தத்தக்கது. ஒரு பத்திரிகையானது சமூக,  பொருளாதார மற்றும் சட்ட அம்சங்களில் வாசகரின் கவனத்தை மையப்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். சில நேரங்களில் பத்திரிகைகள் பாலியல் மற்றும் ஏனைய கற்பனைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் செய்திகளை பரபரப்பாக்குவதன் மூலம் வாசகர்களின் உணர்வுகளையும் தூண்டுகின்றன. ஆனால், அரசுக்கு சொந்தமான பத்திரிகையொன்றில் இருந்து இவ்வாறான செய்தி அறிக்கையிடலை நாம் எதிர்பார்க்க வேண்டுமா?

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts