அரச சேவை டிஜிட்டல் மயமாதலும் எதிர்கொள்ளும் சவால்களும்
-கவிஷ்க ஜெயவர்தன
இலங்கையில் அரச சேவை மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. வினைத்திறனான சேவை பெறுதல் தொடர்பில் பொதுமக்கள் திருப்தியடையாமல் இருப்பது அதற்கு பிரதான காரணியாகும். இதற்கான மாற்றீடாக டிஜிட்டல் தொழில்னுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எந்தளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறித்து ஆராய வேண்டும்.
டிஜிட்டல் நிர்வாகம் என்பது> அரச சேவை மற்றும் விநியோக செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனான முறையிலும்> நிலைபேறான விதத்திலும் கணினி மற்றும் தகவல் தொழில்னுட்ப முறைமையை பயன்படுத்தி முகாமைத்துவம் செய்வதாகும். 21 ஆம் நூற்றாண்டில் சரளமான விதத்தில் டிஜிட்டல் நிர்வாகத்துக்குள் செல்வது இன்றியமையாததாகும். இலங்கையில் அநேகமான அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிர்வாக முறைமை ஊடாக பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இருப்பினும் நடுத்தர வயதுடையோர் குறிப்பாக கிராம புறத்தைச் சேர்ந்த 40-60 வயதுக்குட்பட்டவர்கள் டிஜிட்டல் முறைமை தொடர்பான போதிய தெளிவில்லாத காரணத்தால் பல நெருக்கடிகளுக்கும்> அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
இலங்கையில் நடுத்தர வயதுடையோர் மத்தியில் டிஜிட்டல் பயன்பாடு குறைவான மட்டத்தில் காணப்படுகிறது. இலங்கை புள்ளிவிபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தின் (2021) மதிப்பீட்டுக்கமைய> 40-50 வயதுக்குட்பட்ட நபர்களில் 60 சதவீதமானோர் கணினி மற்றும் இணைத்தள பாவனை தொடர்பில் அடிப்படை தெளிவில்லாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு கணினி மற்றும் ஸ்மார்ட் தொலைபேசி பாவனைக்கான வசதிகள் ஏதும் கிடையாது. அரச டிஜிட்டல் சேவைகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் பாவித்தல் என்பனவற்றில் இவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
இலங்கையில் டிஜிட்டல் நிர்வாக முறைமையில்> கணக்கு செலுத்தல்> வரிச் செலுத்தல், மற்றும் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை பன்முகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பிரதான இலக்காக காணப்படுகின்றன. 2020 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை தொடர்ந்து மறுசீரமைப்புகளுக்கான முயற்சியாக இந்த நாட்டில் அரச துறையில் டிஜிட்டல் நிர்வாகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. அரசின் ICTA நிறுவனத்தின் தரப்படுத்தலுக்கமைய> 2021 ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சுக்களில் 75 சதவீதமானவை டிஜிட்டல் சேவைக்கு மாற்றமடைந்துள்ளன.
அந்த வகையில் டிஜிட்டல் நிர்வாகத்துக்கு முழுமையாக மாற்றமடைதல் என்பது நடுத்தர வயதுடையோருக்கு சவால்மிக்கதாக காணப்படுகின்ற நிலையில்> குறைந்தளவிலான டிஜிட்டல் திறன்> பொருளாதார நெருக்கடி> உளவியல் பிரச்சினை> ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பதால் எழும் பிரச்சினைகள் உள்ளிட்ட வெளிப்புற மற்றும் உள்ளக காரணிகளுக்கும் அவர்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் நிர்வாக முறைமையை பயன்படுத்திய நடுத்தர வயதுடைய தரப்பின் தரவு பங்களிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது
‘ டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக சேவையை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் பரீட்சைக்கு முகங்கொடுப்பதை போல் உணர்வதை’ விளங்கிக் கொள்ள முடிந்தது. டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்துவதில் காணப்படும் சிரமத்தால் அநேகமான சந்தர்ப்பங்களில் அரச நிறுவனங்களில் காலம் வீண்விரயமாகும். வேறு அரச சேவையை பெற்றுக் கொள்வதற்கு வருகை தருபவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் போது முறையான புரிதல்கள் இன்மை, ஒரு விடயத்தை திரும்ப திரும்ப செய்ய முற்படும் போது அவர்களும்> அரச உத்தியோகஸ்த்தர்களும் அசௌகரியங்களுக்குள்ளாகும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. இவ்வாறான நிலையில் அவர்ளின் சுய கௌரவமும் மலினமாகும் நிலையும் ஏற்படும்.
டிஜிட்டல் நிர்வாகம் ஊடாக அரச சேவை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும். இருப்பினும் அதனை ஆரம்பிக்கும் போது சாதாரன மக்களுக்கு டிஜிட்டல் பாவனை தொடர்பில் போதுமான தெளிவில்லாத காரணத்தால் பல சிக்கல்கள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவது விசேடமாக புலப்படுகிறது.
உதாரணமாக> கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தாத நடுத்தர வயதுடையவர்களுக்கு அரச சேவைக்காக இணையத்தளம் ஊடாக கணக்கியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்> பிரவேசித்தல்> மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது தடைகள் ஏற்படுகின்றன. 2021 ஆம் ஆண்டு தொகைமதிப்பு தகவல்களுக்கமைய> இலங்கையில் கிராம பகுதிகளில் 45 சதவீதமான பெண்கள் இணையத்தள வசதியை பயன்படுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நிர்வாக சேவையை பயன்படுத்துவதன் ஊடாக> நாட்டின் பொருளாதாரம்> சமூக நலன்புரி சேவைகள் வினைத்திறனாக்கப்பட்டுள்ளன. இந்த சேவைக்குள் பிரவேசிக்க முடியாத தரப்பினருக்கு கணினி தொழில்நுட்பம் > டிஜிட்டல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் முன்னேற்றகரமான தீர்மானமாக அமையும்.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண அரசாங்கமும்> தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து விரிவுப்படுத்தப்பட்ட மற்றும் முறையான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உதாரணமாக நடுத்தர வயதுடைய நபர்களுக்காக பயிற்சி பட்டறை> அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் இணையத்தள பாவனை தொடர்பில் நிகழ்நிலை முறைமை மற்றும் நேரடி பயிற்சிகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ICTA நிறுவனம் ஊடாக இலங்கையில் கிராம புறங்களில் வாழ்பவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த முயற்சிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பயன்பாட்டாளர்களில் குறைந்தளவான பயன்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இணங்கண்டு அரசாங்கம் அதற்கு தீர்வினை முன்வைத்தால் டிஜிட்டல் நிர்வாக கட்டமைப்பு மேலும் பலமடையும். அத்துடன் ஒரு தரப்பினரது சமூக> பொருளாதாரம் மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.