நிமல் நித்யாவாக மாறியமை மற்றும் இலங்கையில் LGBTIQ+ சமூகத்தினர்
– கமல் சிறிவர்தன
இலங்கை அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இந்நாட்டின் சமூகத்துக்குள் வாழும் ஒரு தரப்பினருக்கு அமுல்படுத்தாமல்; இருப்பதால் மோசமான நிலைக்கு நாடு என்ற ரீதியில் இன்றும் முகங்கொடுத்துள்ளோம். அந்த சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் மலினப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இருப்பினும் அது அவ்வாறு இடம்பெறவில்லை. விஞ்ஞான ரீதியில் உடலியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக அவதானிக்காமல் அறிவியல் ரீதியில் அதனை விளங்கிக் கொள்ள தவறியுள்ளமை சமூகம் என்ற அடிப்படையில் நாம் உள்ள குறுகிய மனநிலையை வெளிப்படுத்துகிறது. இது புறக்கணிக்கப்பட வேண்டியதொரு நிலைமை.
தற்போது பூளோள மட்டத்தில் LGBTIQ+ சமூகத்தின் நிலைமையை கணிசமான அளவில் முன்னேற்றமடைந்துள்ளதுடன், அவர்களின் உரிமை மற்றும் சிறப்புரிமைகளை மேம்படுத்த உலகில் பெரும்பாலான நாடுகள் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை சிறந்ததொரு நிலைமையாகும்.
LGBTIQ+ சமூகத்தின் நபர்களை நடத்துவது தொடர்பில் பல்வேறு சமூக இணக்கப்பாடுகள் உலகளாவிய ரீதியில் காணப்படுவதுடன் இந்த சமூகத்தினருக்கு தாக்கம் செலுத்தும் சிக்கலான நிலைமைகளை தீர்ப்பதற்கு மற்றும் வேறுப்படுத்தி பார்க்கும் கொள்கை மற்றும் சட்டத்தை மாற்றுவதற்கு பெரும்பாலான மேற்குலக நாடுகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
அந்த காரணிகளால் தென்னாசிய வலயத்தில் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்திய சட்டங்கள் ஊடாக இந்த சமூகத்தினரை நெருக்கடிக்குள்ளாக்குவதை மாற்றியமைக்க இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து தன்பாலினத்தவரின் திருமணத்தை சட்ட ரீதியில் அங்கீகரித்த முதலாவது தென்னாசிய நாடாக நேபாளம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதுடன், LGBTIQ+ சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் வலயத்துக்குள் இடம்பெறும் இவ்வாறான இன்றியமையாத சம்பவங்கள் ஊடாக அவர்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து முன்னோக்கி பயணிக்கும் முறைமை தொடர்பில் எமக்கும் ஏதேனும் படிப்பினை கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
LGBTIQ+ சமுகத்தினர் எமது சமூகத்தில் இன்னல்களுக்கு உள்ளாகும் விதம் தொடர்பில் சிறந்த தெளிவை பெற்றுக் கொள்வதற்கு நாம் நித்யாவின் கதைக்கு அவதானம் செலுத்துவோம்.
நித்யா கொழும்பில் பிரதான நிலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணி புரியும் அழகான இளம் பெண். நிறுவனத்தில் அனைவருடனும் இணக்கமாக செயற்படும் நித்யாவை காணும் அனைவரும் அவர் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அதிஷ்டசாலி என்று கருதுவார்கள். நித்யாவை சந்தித்த முதல் நாள் எனக்கும் அவ்வாறான எண்ணம் தோன்றியது. இவ்விடத்தில் இருந்து நான் உங்களுக்கு நித்யாவின் கதையை குறிப்பிடுகிறேன்.
‘ நான் தற்போது கொழும்பில் வாழ்ந்தாலும். பதுளை, ஹெம்மாதகம என்ற மிகவும் கஸ்டமாக கிராமம் எனது பிறந்த இடம். என் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறந்த எனக்கு பெற்றோர் நிமல் என்று பெயர் சூட்டினார்கள். ஒன்றும் ஆச்சரியமடைய தேவையில்லை. உண்மையில் ஆண் குழந்தையாக பிறந்ததால் தான் எனக்கு அந்த பெயரை சூட்டினார்கள். இருப்பினும் ஆணாக பிறந்தாலும் பெண் பிள்ளைகளுடன் இருப்பதற்கும், பெண் பிள்ளையை போல் நடந்துக் கொள்வதையும் விரும்பினேன். பிள்ளை பருவத்தில் எனது பெற்றோரும், அயலவர்களும் இதனை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் நான் வளர்ந்து வரும் போது எனது இந்த நடத்தைகள் சமூகத்துக்கு பிரச்சினையாக ஆரம்பித்தது. என்று குறிப்பிட்டு நித்யா மீண்டும் அந்த இருண்ட கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தார்.
‘ எனக்கு நினைவில் உள்ளது. பாடசாலையில் ஒன்பதாவது தரப்பில் கல்வி கற்கும் போது ஒருநாள் ஆசிரியர் ஒருவர் என்னை மிக மோசமான முறையில் திட்டிய போது அந்த வார்த்தைகள் மனதை பாதித்தது. அன்று அந்த ஆசிரியர் என்னை வெளிப்படையாக ‘ நீ கோழை தானே பெண்களுடனே இருக்கிறாய்’ என்று அவமதிக்கும் வகையில் பேசினார். சிறுபிள்ளையான எனக்கு அந்த வார்த்தைகள் மிக மோசமாக பாதித்தன.
அச்சந்தர்ப்பத்தில் முன்னேற்றமடைய வேண்டுமானால் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் எந்த தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து சாதாரன தரத்தில் சித்தியடைந்து அதன் பின்னர் உயர்தரம் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானேன்.’ நித்யா மிகவும் பெருமையாக சிரிப்புடன் அவ்வாறு குறிப்பிட்டார்.
‘இருப்பினும் பல்கலைக்கழகம் செல்லாமல் உயர்கல்வியை தொடர தீர்மானித்தேன், ஏனென்றால் அந்த காலத்தில் எனது உடலியல் தோற்றம் ஆண் மகனை போல் இல்லாமல் பெண்ணின் தோற்றத்தை போன்று காணப்பட்டது. அவ்வாறான நிலையில் பல்கலைக்கழகத்துக்கு சென்றால் எவ்வாறான நிலை ஏற்படும் என்று எனக்கு மிக பெரிய அச்சம் தோன்றியது. அதற்கு பிரதான காரணம் என்னை போன்று அக்கா ஒருவர் பல்கலைக்கழகத்துக்கு சென்றதன் பின்னர் அங்கு அவருக்கு மிகவும் மோசமான பகிடிவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் நான் அரச பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் தனிப்பட்ட முறையில் பட்டப்படிப்பை தொடர தயாரானேன்.
தனியார் நிறுவனத்தில் தொழில் செய்துக் கொண்டு உயர்கல்வியை தொடர்ந்தேன். இவ்வாறான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கும் சென்றேன். அங்கு எனக்கு சரியான மற்றும் தெளிவான ஆலோசனைகள் கிடைத்தன. எனது உடல் கட்டமைப்பினை முறையாக மாற்றியமைத்து ஒரு பெண்ணாக செயற்பட முடியும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் நான் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டேன். அதற்கிடையில் பட்டப்படிப்பை நிறைவு செய்து தற்போது தொழிலுக்கு வந்துள்ளேன்.
உண்மையில் தற்போது தான் நான் வாழ்கிறேன் என்பதை உணர்கிறேன். ஒரு இடத்துக்கு செல்லும் போது பெண் என்ற அடையாளத்துடன் இருக்கிறேன்.தற்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்.
‘இருப்பினும் இவையொன்றும் எனக்கு இலகுவில் கிடைக்கவில்லை. பல நாட்கள் இரவு முழுவுதும் தனிமையில் அழுதுள்ளேன். அதேபோல் எனது பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது என்று தற்போது குறிப்பிட முடியாது. எனது வாழ்க்கையில் மிக பெரிய சவால் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் எனது காதலன், அன்பானவர் என்னை பற்றிய அனைத்தையும் அறிவார். ஆனால் அவரது குடும்பத்தார் எனது கடந்த காலத்தை அறியவில்லை. என்னை பற்றிய உண்மை தெரியும் போது அவர்கள் எந்த வகையில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் எனக்கு உள்ள மிகப்பெரிய பயம்’ நித்யா பெருமூச்சுடன் குறிப்பிட்டார்.
‘ நான் நினைக்கிறேன் நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பில் மக்களின் எண்ணங்களையும், நிலைகளையும் மாற்றியமைக்க வேண்டும்’ என நித்யா இறுதியாக குறிப்பிட்டார்.
உண்மையில் சிறுவயதில் இருந்து சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டாலும் பிறப்பால் நிமலாகி பின்னர் நித்யா என்று தனது சமூக அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளமை வெற்றியாகும். இவர் எதிர்காலத்திலும் மேலும் பல சவால்களை எதிர்க்கொள்வார் என்பது தெளிவாகுகிறது.
பொதுவாக எடுத்துக் கொண்டால் பால் என்பது நபர்களின் மிகவும் தனிப்பட்டதொரு காரணியாகும். இந்த நாட்டில் மாத்திமல்ல உலகில் பெரும்பாலான நாடுகளில் …. சமூகத்தினர் தொடர்பில் சரியான தரவுகளை முன்வைக்க முடியாத நிலையிலும், சசிதி என்ற சர்வதேச ஆய்வு கணிப்பு நிறுவனம் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட நியதியான கணிப்புக்களின் ஊடாக பூகோள மட்டத்தில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோர் தன்பாலினத்தவர்கள் , இருபாலினத்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளது. அதேபோல் உலகில் 80 சதவீதமானோர் இருபாலினத்தவர்களாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஆராய்கையில், LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பில் இந்த நாட்டில் செயற்படும் அமைப்புக்களில் உயரளவிலான செயற்பாட்டினை வெளிப்படுத்தும் மிகசவ்வ மற்றும் சமவுரிமை ஸ்ரீ லங்கா ஆகிய இரு அமைப்புக்கள் இந்த நாட்டில் LGBTIQ+ சமூகத்தினருக்காக சிறந்த பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளதுடன், அந்த சமூகத்தினரது உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஊடக நெறிக்கோவைகளையும் வெளியிட்டுள்ளன. அதேபோல் பிரிட்ஜ் டு ஈக்குவெல்டி 2021.ஆகஸ்ட் மாதம் முதல் 2023 மார்ச் வரை LGBTIQ+ நபர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கையின் பிரகாரம் 235 சம்பவங்களுக்கு உரிய குற்றவாளிகள் தொடர்பில் பார்க்கையில் அவர்களில் பெரும்பாலானோர் அதிகாரம் கொண்ட பொலிஸ் மற்றும் பொது மக்களுக்கு சேவை வழங்கும் அரச உத்தியோகஸ்தர்களாக காணப்படுகின்றனர்.
அதேபோல் சமவுரிமை ஸ்ரீ லங்கா,.. அமைப்பு முழுமையான கண்காணிப்புடன் சமூக அறிவியலாளர்கள் சங்கத்தினரால் இந்த நாட்டில் LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பில் மேற்கொண்ட முதலாவது விஞ்ஞானபூர்வமான ஆய்வு கணிப்பான ‘இலங்கையில் வாழும் LGBTIQ+சமூகத்தினரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்’ என்ற ஆய்வு கணிப்பின் ஊடாக எமது நாட்டில் வாழும் இந்த சமூகத்தினர் தொடர்பில் மிகவும் முக்கியமான பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாக குறிப்பிடும் வகையில், பூகோள புதிய பரிமாணத்துடன் சமூக ஊடக செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான பல்வேறுப்பட்ட நபர்களின் சமூக தனித்துவம் மற்றும் பால்நிலை காரணமாக LGBTIQ+ சமூகத்தினர் இந்த நாட்டில் சன சமூகத்தில் நெருக்கடிக்குள்ளாகுவதை நடைமுறையில் இல்லாதொழிக்க முடியும்.
இந்த நாட்டில் பாரம்பரியமான சிந்தனைகள் மற்றும் நிலைப்பாடுகள் புதிய பூகோள வளர்ச்சி ஊடாக மாற்றமடையும் காலம் தோற்றம் பெற்றுள்ளதாக நவீன தலைமுறையினர் விளங்கிக் கொள்ளும் நிலையில் LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பில் இவற்றை காட்டிலும் வெளிப்படையான மற்றும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதுடன் சமூகத்தில் வாழும் சகல நபர்களும் தமது விருப்பத்துக்கமைய தமது பால்நிலை அல்லது சமூக நிலை அடைளாளத்தை வகிப்பதற்கு எவ்விதமாக வேறுபாடுகளுமில்லாமல் உரிமைகளை வழங்க வேண்டும்’ என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.