Uncategorized

மரமுந்திரிகை கைத்தொழில் துறை நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

சுனில் தென்னகோன்

மரமுந்திரிகை கைத்தொழில் மரமுந்திரிகையை சாப்பிடும் அளவுக்கு இலகுவானதல்ல, பொருளாதார ரீதியில் உயர் மட்டத்திலான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் வெற்றிகரமான வியாபாரமாக காணப்பட்டாலும், தேசிய மட்டத்திலான நுகர்வுக்கு தேவையான மரமுந்திரிகைகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாத நெருக்கடியான சவாலை மரமுந்திரிகை கைத்தொழிற்துறை இன்று எதிர்கொண்டுள்ளது. மரமுந்திரிகை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு மரமுந்திரிகை பயிர்ச்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதுடன், தோலுடனான மரமுந்திரிகைகளை  இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மரமுந்திரிகை கைத்தொழிலின் எதிர்காலம் பற்றிய ஆய்வு,

சுனில் தென்னகோன்


சிங்கள சமூகத்தின் மத்தியில் ‘ ஊரின் மரமுந்திரிகை (கஜூ) ஊராருக்கு என்ற வாய்மொழி வழக்கு உள்ளது. சிங்கள – இந்து புத்தாண்டு பிறப்பின் போது சுப நேரத்தில் சமைக்கப்படும் சோற்றுடன், மரமுந்திரிகையை சேர்த்து சமைத்த கறியையும் சேர்த்து சாப்பிடுவது கிராமத்து வழக்கம்.


புத்தாண்டின் போது இசைக்கப்படும் ரபான் மேள இசையும், மரமுந்திரிகையை (கஜூ) பற்றிய பாடல்களைக் கொண்டிருக்கும். அரிவாளுடன் தோட்டத்துக்கு செல்லும் போது வெட்டுக்கிளி ஒன்று மரமுந்திரிகை சாப்பிடுவதாக கிராமத்து இளம் பெண்கள் ரபான் இசைப்பார்கள்.

தமிழ் -சிங்கள புத்தாண்டின் போது சின்னஞ்சிறார்கள் (வல கஜு) தேர்லுடனான மரமுந்திரிகைகளை மண்ணில் புதைத்து அடித்து விளையாடுவார்கள். புத்தாண்டு முடிவடைந்ததன் பின்னர் ஊரில் உள்ள ஒருசில தாய்மார்கள் தம் பிள்ளைகள் அடித்துக் கொண்டு வந்த  மரமுந்திரிகைகளை சுட்டு அல்லது வெட்டி வாராந்த சந்தைக்கு, தேவாலய உற்சவ சந்தைக்கு, அல்லது  விகாரையில் இடம்பெறும் விளையாட்டு சந்தைக்கு கொண்டு செல்வார்கள். இது 1960 மற்றும் 1970 காலப்பகுதிகளிலாகும்.

சமூகம் இன்று பாரிய முன்னேற்றமடைந்துள்ளது.  அன்றைய தாய்மாரின் இடத்தை கைப்பற்ற புதிய முயற்சியாளர்கள் தோற்றம் பெற்றுள்ளனர். அன்று வியாபாரமாக காணப்பட்ட மரமுந்திரிகை இன்று கைத்தொழிலாக மாற்றமடைந்துள்ளது.

1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தை ஆரம்பித்தது நாடளாவிய ரீதியில் பரந்துப்பட்டிருந்த வியாபாரத்தை ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தது. 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் மரமுந்திரிகை உற்பத்தி புதிய பரிணாமம் அடைந்தது. கம்பஹா நெதகமுவ முயற்சியாளர்கள் உட்பட கிழக்கு ஏறாவூர் கைத்தொழிலாளர்கள், புத்தளம் கொண்டச்சி, பொலன்னறுவை கைத்தொழிலாளர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் பேர் வரை இந்த கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.


மரமுந்திரிகை செய்கையில் பெற்றுக்கொண்ட விளைச்சலை முயற்சியாளர்கள் விலைக்கு கொள்வனவு செய்து தமது தனிப்பட்ட களஞ்சியசாலைகளுக்கு கொண்டுச் சென்று கைத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். களஞ்சியசாலையில் மரமுந்திரிகைகளை களஞ்சியப்படுத்துவற்கு முன்னர் அவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். நன்கு காய்ந்ததன் பின்னர் மரமுந்திரிகைகளில் உள்ள பாலின் அளவு குறைவடையும். அதன் பின்னரே உலர்ந்த மரமுந்திரிகைகள் நன்கு பதமடையும்.மரமுந்திரிகையின் பால் உடலில் படாமல் இருப்பதற்கு பெண்கள் தமது உடலை முழுமையாக மறைத்துக் கொள்வார்கள்.

நடைமுறையில் மரமுந்திரிகை பிரித்தெடுக்கும் பெண் தொழிலாளர்களை காண முடிவதில்லை. மரமுந்திரிகைகளை பிரித்தெடுக்கும் பணியில் இருந்து பெண்கள் நீக்கப்பட்டு புதிய இயந்திரங்கள்

பயன்படுத்தப்படுகின்றன. அன்று பெண்கள் நாளொன்றுக்கு 1000 முதல் 1500 வரையான மரமுந்திரிகைகளை பிரித்தெடுப்பார்கள். இன்று தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அல்லது சுயமாக 5000 முதல் 6000 வரையான மரமுந்திரிகைகளை பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் தொழிற்றுறையில் பயன்படுத்தப்படுகிறது. அன்று பெண்களின் கைகளினால் பிரித்தெடுக்கப்பட்ட மரமுந்திரிகைகள் தேங்காய் சிரட்டைகளை எரித்து அதனூடாக உலர்த்தப்பட்டன. ஆனால் இன்று நவீன இயந்திரங்கள் ஊடாக மரமுந்திரிகைகள் உலர்த்தப்படுகின்றன.மரமுந்திரிகையை பதப்படுத்தவும்,உலர்த்தவும்,துண்டுத்துண்டுகளாக பிரிப்பதற்கும் அபூர்வமான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.படித்த இளைஞர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திறந்த பொருளாதாரம்  மரமுந்திரிகைக்கு சிறந்தது
 
1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் ஆரம்பமானதுடன் கைத்தொழிலுக்கு சிறந்த சூழல் தோற்றம் பெற்றது என்று முயற்சியாளர்கள் குறிப்பிட்டனர்.திறந்த பொருளாதாரம் நாட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியதுடன், பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தன. திறந்த பொருளாதார கொள்கையுடன் எமது பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. அதனுடன்  சுற்றுலாத்துறை வியாபாரம் மற்றும் ஹோட்டல் கைத்தொழிற்றுறை என்பன ஆரம்பமாகின.

 உலகளாவிய ரீதியில் முன்னெடுத்த பிரச்சாரங்களினால்  இலங்கை உலகில் பிரபல்யமடைந்த நாடாக மாற்றமடைந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகைத் தந்தார்கள். சுற்றுலா ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள், களியாட்ட விடுதிகள் என்பன நாடு முழுவதும் அமைக்கப்பட்டன.
அதுமாத்திரமல்ல நாடு முழுவதும் ஆரம்பமான ‘திருமணம்’ கலாசாரத்தினால் ‘வெடிங் ஹால்’ ஆரம்பமானது. காளான் பூப்பது போன்று நகரத்துக்கு நகரம் கேடரிங் சேவை ஆரம்பமானது. மரமுந்திரிகையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனங்கள் அனைத்தும்

ஆரம்பமாகின. சுற்றுலா பயணிகளுக்கு நொறுக்கு தீனி (பைய்ட்ஸ்) தயாரிப்பதற்கு மரமுந்திரிகை அவசியமானது.

 அதேபோல் ஹோட்டல், திருமண வரவேற்பறை, விடுதி, ஆகியவற்றில் இலங்கையின் மரமுந்திரிகைள் முன்னிலையில் இருக்கும். இதனை பல்வேறு முறைகளில் தயாரிப்பதற்காக விடுதி சேவையாளர்கள்  உருவாகினர்.அரச அனுசரணையுடன் தனியார் நிறுவனங்களிலும் விடுதி சேவையாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.


1979 ஆம் ஆண்டு மரமுந்திரிகை ஏற்றுமதி செய்ய ஆரம்பமானது.இதற்கு  தேவையான அடிப்படை வசதிகளை அரசு வழங்கியது. தனியார் முயற்சியாளர்களும் அதற்காக முன்னிலையாகினர். இந்த ஏற்றுமதி செயன்முறை 1980ஆம் ஆண்டு இறுதி பகுதி வரை இடம்பெற்றது. வருடத்துக்கு சுமார் 2000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுப்பதற்கும் முயற்சியாளர்களால் முடிந்தது. நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் பலமடைந்தது.
 
முயற்சியாளர்களின் குரல்

கம்பஹா நெதகமுவ படபொல பகுதியில் சந்தித்த திலக் பாலசூரிய என்பவர் ‘உலக உற்பத்தியுடன் போட்டியிட முடியாமல் போனதாலும், வடக்கு யுத்தத்தாலும் மரமுந்திரிகை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.
கொவிட் பெருந்தொற்று பூளோக மட்டத்தில் பரவலடைந்தத போது மரமுந்திரிகை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.இருப்பினும் விற்பனையில் பாரியதொரு வீழ்ச்சியை காண முடியவில்லை. உலகம் முழுவதும் கொவிட் தாக்கினாலும் எமது கிராமங்களுக்கு பெரிதளவில் பாதிப்பு இருக்கவில்லை. அரச நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. ஹோட்டல் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன.

 திருமண விருந்துபசாரங்களுக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்;டது. இவ்வாறான சூழலில் நாங்கள் கைத்தொழிலை முன்னெடுத்துச் சென்றோம். விற்பனையில் சற்று பின்னடைவு காணப்பட்ட போதும் வியாபாரம் முழுமையாக வீழ்ச்சியடையவில்லை. மரமுந்திரிகைகளில் உள்ள ஒருசில நோயெதிர்ப்பு சக்தியால் நோய் பாரியளவில் பரவலடையவில்லை என்று எமது கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள்.


2024 மார்ச் மாதமளவில் நாங்கள் பாரியளவிலான மரமுந்திரிகை தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்தோம். தோலுடனான மரமுந்திரிகையை இறக்குமதி  செய்ய நாங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரினோம். அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருப்பினும் வரிச்சலுகை வழங்காவிடின் முயற்சியாளர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். கைத்தொழிலை பாதுகாக்க வேண்டுமாயின் தற்போதைய சந்தர்ப்பத்தில் ஏற்றுமதி அத்தியாவசியமானது.


தேசிய நுகர்வுக்கு  இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம்  வரையிலான மெற்றிக் தொன் மரமுந்திரிகை தேவைப்படும். தேவைகளை பூர்த்தி செய்துக் செய்துக் கொள்ள முயற்சியாளர்களை தொடர்ச்சியாக கைத்தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.இதற்கு சுமார் 30000 மெற்றிக்தொன் வரையான மரமுந்திரிகைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்.


நடைமுறை சந்தையில் ஒரு கிலோகிராம் தோலுடனான மரமுந்திரிகையை 575 ரூபா முதல் 650 ரூபா சாதாரண விலைக்கு வாங்க முடியும். தோல் நீக்கிய ஒரு கிலோகிராம் மரமுந்திரிகையை பெற 5 கிலோகிராம் வரையாக தோலுடனான மரமுந்திரிகை தேவைப்படும்.மீன்களுக்கான ஒரு கிலோகிராம் மரமுந்திரிகையை 5500 ரூபா முதல் 6500 ரூபா வரையான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.


உலர்ந்த மரமுந்திரிகை 5560 ரூபாவாக இருக்கும். துண்டு மரமுந்திரிகை 4780 ரூபாவாகவும், பதப்படுத்திய மரமுந்திரிகை 6000 ரூபாவாகவும் விற்கப்படும். உலர்ந்த மற்றும் துண்டு மரமுந்திரிகைகளை சாதாரண மக்கள் விலைக்கு வாங்கி விசேட சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவார்கள்.
பொருளாதார பாதிப்பு கூட்டுத்தாபனத்துக்கு தடையல்ல,
 
நாடு வங்குரோத்து நிலையடைந்து, டொலரின் பெறுமதி உயர்வடைந்த போதும் கூட்டுத்தாபனம் நெருக்கடிக்குள்ளாகவில்லை. சிறந்த முறையில்  கைத்தொழிலை முன்னெடுத்துச் செல்வதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி உதார விஜேசிங்க தெரிவித்தார்.


 கடந்த சில ஆண்டுகளில் மரமுந்திரிகை கைத்தொழில் வீழ்ச்சியடைந்த போதும் கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்களின் அர்ப்பணிப்பினால் கூட்டுத்தாபானம் இலாபமடைந்தது. 2022 ஆம் ஆண்டு 14 மில்லியன், 2023 ஆம் ஆண்டு 4 மில்லியன் ரூபா கண்காணிப்பு இலாபம் என்ற அடிப்படையில் கூட்டுத்தாபனம் இலாபமடைந்துள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் மாத்திரம் வருமானம் 29 மில்லியனாக காணப்பட்டது. கூட்டுத்தாபனத்தில் தோட்டங்களில் மரமுந்திரிகைகளை மாத்திரம் விற்பனை செய்கிறோம். எமது செலவுகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். கூட்டுத்தாபனம் என்ற அடிப்படையில் நாங்கள் நல்லதொரு நிலையடைந்துள்ளோம்.


வியாபாரம் என்ற அடிப்படையில் நாங்கள் முன்னிலையில் உள்ளோம்.கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் எமது இரண்டு உற்பத்தி நிலையங்கள் செயற்படுகின்றன. இதற்காக 10 மெற்றிக்தொன் மரமுந்திரிகை தேவைப்படும். மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இது இலங்கையில் கரையோரங்களை அண்மித்த புத்தளம், பூநகரி, வெள்ளக்குளம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாந்தோட்டை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுத்து செல்லப்படுகிறது.


தற்போது விவசாயிகளை பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம்.அவர்களுக்காக எமது வியாபார பிரிவு ஊடாக நிவாரணங்களை வழங்குகிறோம்.பிரதேச செயலக பிரிவுகள் ஊடாகவும் பதிவு செய்கிறோம். மரமுந்திரிகை கன்று உள்ளிட்ட ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்குகிறோம். கூட்டுத்தாபனத்தின் கள  உத்தியோகஸ்தர்கள் ஊடாக அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் நிதியுதவிகளை வழங்குகிறோம். நாங்கள் தற்போது விதை பயிர்ச்செய்கையில் இருந்து விலகி இணைந்த பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளோம்.அதனூடாக பாரிய விளைச்சலை எதிர்பார்த்துள்ளோம்.


வருடக்கணக்காக இடம்பெற்ற யுத்தத்தால் கூட்டுத்தாபனத்தின் மரமுந்திரிகை தோட்டங்கள் அழிவடைந்தன.கொண்டச்சி தோட்டத்தில் மாத்திரம் 2200 ஏக்கர் உள்ளது. இதற்கு மேலதிகமாக புத்தளம்- கமன்தெவ்வ, எலுவன்குளம் பகுதியில் தோட்ட பயிர்ச்செய்கை உள்ளது. யுத்தத்தால் அழிவடைந்த பயிர்ச்செய்கையை மீட்டெடுக்க இன்னும் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் செல்லும். மரமுந்திரிகை மரத்தை நாட்டி 30 ஆண்டுகளுக்கு பின்னர் அதை நீக்க வேண்டும். சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்வதற்காக புதிய இணைந்த கன்று பயிர்ச்செய்கைகளை ஆரம்பித்துள்ளோம்.


கம்போடியாவில் புதிய விதை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எமக்கு அவற்றை நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியாது. காலநிலை தன்மைக்கு புதிய வகைகள் ஒத்திசையாது. கூட்டுத்தாபனத்தின் ஊடாக கண்டறியப்பட்ட மூன்று  புதிய விதைகளை தேசிய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவோம். அதனூடாக அதிகளவிலான விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.
மரமுந்திரிகையை ஏற்றுமதி செய்ய தயாராகவுள்ளோம். அந்நிய செலாவணியை நாட்டுக்கு கொண்டு வருவது பிரதான இலக்காகும்.

 முயற்சியாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கின்றன. நாட்டில் மரமுந்திரிகையின் விலையை நாங்கள் கட்டப்படுத்துவதில்லை. விலை நிர்ணயம் விலக்கப்பட்டுள்ளது. தனியார் தரப்பினர் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
விற்பனை வலைப்பின்னலை கூட்டுத்தாபனம் பலப்படுத்தியுள்ளது.

 வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் அதிகளவில் நடமாடும் கண்டி, பின்னவெல, மற்றும் காலி ஆகிய பகுதிகளில் புதிய விற்பனை நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மரமுந்திரிகையை தேடி நாடு முழுவதும் செல்லும் முயற்சியாளர்களுக்கு உயர்தரத்திலான மூலப்பொருட்களை வழங்க கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் தொழில்முனை முயற்சியாளர்கள் மற்றும் கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் போட்டித்தன்மையான சூழல் காணப்படுகிறது.
 
 
எனது கேள்விக்கு பதில் எங்கே?

முயற்சியாளரான நாதகமுவே சுஹத்ரா ஐராங்கனி எமக்கு சிறந்த விடயத்தை தெளிவுப்படுத்தினார். உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நாங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். நாளொன்றுக்கு 500 கிலோகிராம் வரை வேலை செய்தாலும் அடுத்த மாதம் ஆரம்பத்தில் (முதல் மாதம்)  உற்பத்தி செய்யப்பட்ட அளவினை  உற்பத்தி செய்ய முடியாது.

 ஏனெனில் எம்மிடம் மேலதிகமான உற்பத்திகள் ஒன்று சேரும். உற்பத்தி செய்யப்பட்டவை விற்பனை செய்ய முடியாமல் இருப்பது அதற்கான பிரதான காரணியாகும். இந்த கைத்தொழிலில் முகங்கொடுக்கும் சிக்கல் தான் அது.


இந்த பிரச்சினையை ஒரு பிரச்சினையாக காணப்படாத  போதும் கடந்த மாதம் உற்பத்திகள் மிகுதியானதால் அடுத்த மாதம் வேலை செய்யாமல் இருக்க முடியாது. இந்த பிரச்சினை குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை. பிரச்சினைகளை இனங்காணவும் எவருமில்லை. பணிகள் ஒருமாதம் நிறுத்தப்பட்டால் எமக்கும், எம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பார்கள். சந்தையை கட்டுப்படுத்தி கைத்தொழிலை முன்னெடுத்துச் செல்வோம்.


இலங்கையில் மரமுந்திரிகையின் விலை வானளவில் உயர்வடைந்துள்ளது. உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இது அதிகளவான விலையேற்றமாகும். மரமுந்திரிகை ஏழைகளின் உணவல்ல, நடுத்தர தரப்பினர் மரமுந்திரிகையை உணவுக்கு எடுத்துக் கொண்டிருந்தாலும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மரமுந்திரிகையின் விலையை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் பலமில்லை. உயர்வர்க்கத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள மரமுந்திரிகையை சுவைப்பதற்கு தமது நெருங்கியவர்களின் திருமண நிகழ்வு இடம்பெறும் வரை காத்திருப்பதற்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நேர்ந்துள்ளது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts