கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய டிஜிட்டல் கதைகள்

நிலுபுலி நாணயக்கார ஜயதிலக

கையில் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி அல்லது கமராவை வைத்திருப்பவரால் அவரது சமூக ஊடக பக்கத்தின் மூலம் செய்ய முடியுமான இந்த திறமையைதான் டிஜிட்டல் கதைகூறல் என்று அழைக்கப்படுகின்றது. வாழ்க்கையின் அனுபவங்கள், கருத்துக்கள், உணர்வுகளின் வெளிப்பாடு, விஷேடமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சாதாரணமாக நாம் கவனத்தில் எடுக்காத அல்லது கண்டுகொள்ளாத வித்தியாசமான முறையில் பார்க்கக்கூடிய அதிகமான நிகழ்வுகள், புகைப்படங்கள் போன்றவைகள் யாருக்கும் சுவையை தரவல்ல விடயங்களாக இருக்குமானால் அவை டிஜிட்டல் கதைகளாகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அதிகமானவர்கள் அவர்களால் கிளிக் செய்யப்படுகின்ற புகைப்படங்களுக்கு எழுதுகின்ற வித்தியாசமான கண்ணோட்டத்திலான தகவல்கள் மூலம் மாற்றத்தை நோக்கிய புதுவிதமான தகவலை வழங்க முடிகின்றது. சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அதிகமானவர்கள் தமது பக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்கின்ற புகைப்படங்களை தமது பக்கத்தில் பதிவேற்றம் செய்தாலும் அதற்கு சிறந்ததொரு விளக்கத்தை முன்வைப்பதன் மூலம் சமூகத்திற்கு சிறப்பாக தகவலொன்றை வழங்க இது சிறந்த வழிமுறையாகும். கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பரவியுள்ள இன்றைய சந்தர்ப்பத்தில் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் தொடர்பாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பரிமாறியதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக சமிஞ்ஞை கிடைக்காத பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் ஈ கற்கையின் போது ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் வகுப்புகளுக்கு சமூகமளிப்பதற்காக தமது பிரதேசத்தில் உள்ள மிக உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்று படிப்பதை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவின. இந்தோனேசியாவில் மாணவர்கள் தமது வீடுகளுக்கு சமிஞ்ஞை இல்லாதபோது தெருவுக்கு வந்து அமர்ந்து கல்வி கற்கும் காட்சிகளை நியுயோர்க் டைம்ஸ் இணையத்தளம் பின்வரும் புகைப்படங்களுடன் பதிவுகளை பிரசுரம் செய்திருந்தது பின்வரும் முறையில் ஆகும். 

இந்த புகைப்படங்களை கண்டவுடன் இலங்கையில் உள்ள சமூக ஊடக பதிவேற்றுனர்களும் அதுபோன்ற காட்சிகள் மற்றும் கதைகள் தொடர்பாக கவனம் செலுத்த முற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவை டிஜிட்டல் கதைகளின் சிறப்பம்சமாகும். அவ்வாறாயின் இவ்வாறான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நீங்கள் பயன்படுத்திய “ஹாஷ் டக்” நோக்கம் மூலம் நீங்கள் இணையத்தளத்தினுள் சந்திப்பதாக இருந்தால் எல்லோரும் ஒரு நோக்கத்தை உடையவர்கள் என்பது அர்த்தமாகின்றது.

.

எவ்வாறாக இருந்தாலும் ஒருவருக்கு உதவி செய்யும் வகையில் டிஜிடல் கதை சொல்வதாக வெறுமனே புகைப்படங்களை பிரசுரிப்பது அல்லது பதிவிடுவதால் அது டிஜிட்டல் கதையாக அமைவதில்லை. நீண்ட காலமாக சமூகத்தில் நிலவி வருகின்ற சிந்தனைப் போக்கை கூட மாற்றியமைக்க இத்தகைய டிஜிட்டல் கதைகளால் முடியுமாகின்றது. சர்வதேச உதாரணங்களை காட்டுவதை விட இலங்கைக்கு உள்ளிருந்தே உதாரணங்களை கூறுவதாக இருந்தால் “ நாம் முல்லைத்தீவு பிரதேசம் பற்றிய கதையை கூறுவதாக வைத்துக்கொண்டால் எமது நினைவுக்கு வருவது அப்பிரதேசம் பல வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் உடைந்து விழும் நிலையில் உருக்குளைந்த, சேதமடைந்த வீடுகள், வறுமையின் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வரட்சி போன்ற விடயங்களாகும். இன்ஸ்டர்கிராமில் everydaymullaitivu என்ற இணையத்தளத்தை  சென்று பார்க்கும் போது அப்பிரதேசத்தின் அழகிய மனோரம்யமான காட்சிகள், மக்களது வஞ்சகம் இல்லாத புன்னகை மற்றும் நாம் நினைத்துக் கூட பார்க்காத விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது. சில நேரங்களில் நீங்கள் மனதில் கற்பனை பண்ணிக்கொண்டுருக்கும் முல்லைதீவை விட அவை முற்றிலும் மாற்றமான காட்சிகளாக இருக்கலாம். R+everydaymullaitivu  இல் முல்லைத்தீவைச் சேர்ந்த அங்காடி வியாபாரி ஒருவரின் கதையை பதிவிட்டிருந்ததை படிக்க முடிந்தது. 

இன்னுமொரு உதாரணமாக நாம் சோமாலியா பற்றி கவனம் செலுத்தும் போது அந்நாட்டில் நிலவும் வறுமை, மக்களது துன்பகரமான வாழ்க்கை நிலை  மந்தபோசனம் போன்றவை நினைவுக்கு வருகின்றன. இவ்வாறு எங்களது மனதில் தோன்ற காரணம் பல வருடக் கணக்கில் நாம் சோமாலியா என்றவுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையில் மக்கள் வாழ வழி இல்லாது திண்டாடும் காட்சிகளையும் இன்னும் பலவிதமான கதைகளையும் கேட்டிருப்பதனால் ஆகும். “சோமாலியாவுக்கு பாண் கிடைத்தது போன்று” என்று நாம் பசியால் வாடிவிட்டு உணவு உண்ணும் போது கூறிக்கொள்வது வழக்கமாகும். அப்படியானால் எங்களால் நினைக்க முடிவது சோமாலியா மக்கள் பட்டினியால் வாடுவதும் மந்த போசனம் காரணமாக செத்து மடிவதாலும் அல்லவா? ஆனாலும் #everydaysomaliya என்ற இணையத்தளத்தை திறந்து பார்க்கும் போது நாம் நினைத்திருப்பதற்கு நேர் மாற்றமான காட்சிகளை காணலாம். கீழே காட்டப்பட்டிருப்பது அந்நாட்டில் ஹாஷ் டக் மூலம் பெறப்பட்ட ஒரு புகைப்படமாகும். அந்த புகைப்படம் சோமாலியாவை பற்றி நாங்கள் உண்மையாகவே நினைத்துக் கொண்டிருப்பதை விட மாற்றமான ஒரு கதையை சொல்வதாக இருக்கின்றது. 

நீண்ட காலமாக நாம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அல்லது தரப்பட்டுள்ள அறிவூட்டல்கள் மற்றும் சினிமா காட்சிகள் சித்திரங்களிலான காட்சிகளால் நாங்கள் எங்களுக்குள்ளேயே ஒருவிதமான கற்பனையை ஏற்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையிலே சிந்திக்க முற்படுகின்றோம். ஆனாலும் நாம் அந்த பிரதேசங்களுக்கு பிரயாணங்களை மேற்கொண்டு அந்நாட்டு சூழலை சரியாக அவதானித்து உண்மை நிலைமைகளை கண்டறியாத வரையில் யதார்த்தமான அறிவையும் புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் ஒரு சமூகத்திற்குள் இன்னொரு சமூகம் குறித்து நிலவி வருகின்ற நிலைப்பாட்டை மாற்றியமைக்க டிஜிட்டல் கதை வடிவம் சிறந்த ஆயுதமாக இருக்கின்றது. இலங்கை இளம் சந்ததியினருக்கு டிஜிட்டல் கதை வடிவம் பற்றி அறிமுகப்படுத்திய “Digital storytelling” டிஜிட்டல் கதை சொல்லல் அமைப்பின் ஸ்தாபகர் அந்த அமைப்பின் 75 ஆவது வருடாந்த கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு “எமது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளல்” என்ற நிகழ்ச்சியில் பல விடயங்களை பற்றி பேசுகின்றார். டிஜிட்டல் பிரஜாவுரிமை, இளமை, பன்முகத்தன்மை போன்ற  தலைப்புக்ககளின் கீழ் இத்துறையை ஊக்குவிப்பதோடு இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர்களுக்கே உரிமையான திறமைகளை வளர்ப்பதன் ஊடாக மாற்றமான ஒன்றை சாதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 2020 சர்வதேச தொண்டர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. அமைப்பின் இலங்கை பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் 19 கதையாக்க நிகழ்ச்சியின் இணைய வழிமுறை ஊடாக மாற்றமான கதைகள் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுப்பதாகும். இவ்வாறான நிலையில் நாட்டின் சமாதானம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில் டிஜிட்டல் கதை முறை ஊடாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய தொற்று நோய் பரவும் இன்றைய காலப்பகுதியில் அதிகமானவர்களால் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாக வைத்த தகவல்கள், இனத்துவேசமான கருத்து பரிமாறல்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், இன, மத, கற்பனை சார்ந்த கதைகள், போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டு வருகின்ற பாதிப்பை இத்தகைய டிஜிட்டல் கதைகள் மூலம் மாற்றியமைக்க முடியுமாகின்றது என்று எதிர்பார்க்கலாம். துஷான் என்பவர் மேலும் ஒரு உதாரணமாக வெளிப்படுத்தி இருப்பது கடந்த வருடம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அவரால் பதிவு செய்திருந்த புகைப்படம் மற்றும் அதன் பின்னணிக் கதையை ஆகும். 

(https://www.instagram.com/p/ByXXrLwuPtN/?igshid];uP1119jykrd3qqp)

பன்முகத்தன்மை என்பது எமது நாட்டில் நிலவி வருகின்ற அணிகலனாகும். நாட்டில் சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம், அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளிலான முன்னேற்றத்தை அடைய வேண்டுமாயின் நாட்டு மக்கள் இவ்வாறான இனங்களுக்கிடையிலான பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அவர்களால் அதனை மேற்கொள்வதற்கான இயலுமை இருக்க வேண்டும். அதற்கான மேலே காட்டப்பட்டுள்ள பலூன் வியாபாரியின் கதையும் முன்மாதியும் டிஜிட்டல் கதைகள் ஊடாக சமூக மயப்படுத்தல் இடம்பெற வேண்டும்.

இவ்வாறாக சமூக ஊடகங்கள் மற்றும் இன்டர்நெட் வசதி ஊடாக பிரசுரமாகின்ற ஒவ்வொரு புகைப்படத்தின் பின்னாலும் அதற்கே உரித்தான ஒரு கதை இருந்து வருகின்றது. அதிகமான சந்தர்ப்பங்களில்  அந்த கதைகளை அறிந்திருப்பது குறித்த புகைப்படத்தை பிடிக்கும் புகைப்படப்பிடிப்பாளர் அல்லது அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் மாத்திமாகும். அதிகமான சந்தர்ப்பங்களில் டிஜிட்டல் கதைகளை சொல்பவர்களால் முன்வைக்கப்படுகின்ற புகைப்படத்தில் அந்த விடயத்திற்கு நிகரான முறையில் தருகின்ற பின்னணி கதைகள் பற்றிய தகவல்களை அந்த கதையை பரிசீலனை செய்கின்ற போது அது பற்றிய போதுமான அறிவை பெற முடிகின்றது. அவ்வாறாயின் மேலே சொல்லப்பட்ட கதைகளை கவனத்தில் எடுக்கும் போது புலனாகின்ற விடயமாக அமைவது டிஜிட்டல் கதை கலாசாரத்தின் ஊடாக சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதாகும். ஏனெனில் தனி நபரது பார்வை ஊடாக நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருப்பதோடு அதனை மேலும் பிரதிபலன் தரக்கூடியதாக மாற்றியமைக்கும் சக்தி டிஜிட்டல் கதைகளுக்கு இருப்பதாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts