சமூக நீதி மற்றும் சுகாதார உரிமைகள்
அசங்க அபேரத்ன
ஐக்கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடுகளும் ஏப்ரல் 7ம் திகதியன்று சர்வதேச சுகாதார தினத்தை நினைவுகூர்கின்றன. “சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையாவது அங்கீகரித்துள்ளன. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு சுகாதாரபராமரிப்பு சேவைக்குமான மனித உரிமை என்பதுடன், சுகாதார சேவைகள், சுகாதார வசதிகள், சத்தான உணவு, பொருத்தமான வீட்டுவசதி, சுத்தமான சூழல் மற்றும் உடல் மற்றும் உள நல்வாழ்வு ஆகியவற்றுக்கான அணுகல் அடிப்படை மனித உரிமைகளாகின்றன.
குடிமக்களின் ஆரோக்கியத்திற்காக அரசாங்கங்கள் சட்டபூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார ஸதாபனத்தின் (1946) யாப்பின் பிரகாரம், ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாக மிக உயர்ந்த ஆரோக்கியத்தை அடைவதனை இந்த ஸ்தாபனம் இலக்காகக் கொண்டுள்ளது. அதன்படி, ஆரோக்கியம் ஒரு மனித உரிமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சுகாதார உரிமைகள் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தரமான, நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுகாதார சேவைகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் சட்டபூர்வமாக கட்டுப்பட்டுள்ளன. சுகாதாரத்திற்கு போதுமான நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் ஆரோக்கியத்தை அணுகுவதற்கான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு போன்ற சர்வதேச மனித உரிமை பொறிமுறைகளால் இந்த செயன்முறைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பல அரசாங்கங்கள் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளில் சுகாதார உரிமைகளை அங்கீகரித்தன. சுகாதார உரிமைகளை மீறுவது மரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சுகாதார உரிமைகள் மற்ற உரிமைகளை விட முக்கியத்துவம் வாய்ந்தவை.
சமமான சுகாதார சேவையின் தேவை
வயது, பாலியல் நோக்குநிலை, பாலினம், அடையாளம் மற்றும் குடிபெயர்வு நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் சுகாதாரபராமரிப்பு அபாயங்கள் அதிகமாகும். சுகாதாரப் பராமரிப்பு, சிகிச்சைகள், புனர்வாழ்வு மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலைத் தடுக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஓரங்கட்டப்படுதலை அதிகரிக்கின்றன. இருப்பினும், கொள்கைகள் மற்றும் திட்டங்களிற்கு பதிலாக உரிமை அடிப்படையிலான அணுகுமுறை பின்பற்றப்பட்டால் சமூக நன்மைகளை அடைந்திருக்க முடியும். சுகாதாரம் வசதிகள் மனித உரிமைகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ஓரங்கட்டப்படுதல் காரணமாக வறிய சமூகங்களுக்கு சுகாதாரபராமரிப்பு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு திட்டம் 2030 இல் இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.
உடல் மற்றும் உள ஆரோக்கியத்தின் அடிப்படையில் மிக உயர்ந்த தரத்தை அனுபவிக்கும் உரிமையை மீறும் பாகுபாடுகள், நோய் பரவலை துரிதப்படுத்துவதில் பங்களிக்கின்றன. எனவே, அடிப்படை சுகாதார உரிமைகளை அடைவதற்கு சமூக சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு பொது சுகாதார சேவையின் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சையை அணுகுவதற்கான சமமான உரிமை மேம்படுத்தப்பட வேண்டும்.
பெருந்தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் புதிய உலகளாவிய ஒற்றுமைக்கான முறையான வழிகாட்டுதல் மிக முக்கியமானது. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார உரிமையில் தொற்றுநோய்களைத் தடுப்பது, சிகிச்சையளிப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும். அதற்காக, மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சைக்கான உத்தரவாதம், மருத்துவ நிலையில் தேவையான உபகரணங்கள், சேவைகள் மற்றும் வசதிகள் என்பன அவசியமாகும். சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் மருத்துவ உபகரணங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான கூட்டு நடவடிக்கைகள் தேவை என்பதை பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டுகின்றது.
Social Justice And Health Rights
සමාජ සාධාරණත්වය සහ සෞඛ්ය අයිතිවාසිකම්