வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஸ்பேம் உடன் ஒப்பிடும் போது கேளிக்கைகளும் பரிகாசங்களும் தீங்கற்றது

சச்சினி டி. பெரேரா

ஒன்லைனில் இருக்கக்கூடிய மக்களுக்கு தகவல்களை அறிந்து கொளவதற்கான ஒரே வழிமுறை இணைய வசதி மாத்திமல்ல. மேலும் இணையம் தகவல் பரிமாற்றத்திற்கு மாத்திரம் பயன்படவில்லை. தற்காலத்தில் தொடர்பாடல், சேவைகளை பெற்றுக் கொள்ள, உற்பத்தி பொருட்களை வாங்கவும் விற்கவும் என்ற அடிப்படையில் மேலும் பல பயன்பாடுகளும் உள்ளன. டிஜிட்டல் ஆரோக்கியம், டிஜிட்டல் தனியுரிமை மற்றும், ஒட்டுமொத்த டிஜிட்டல் கல்வியறிவு தொடர்பாக குறைவான அறிவுடையவர்களை விரைவில் காவுகொள்ளும். பல சைபர் குற்றங்களை புரியும் ஏமாற்றுக் பேர்வழிகளை நாங்கள் காண்கிறோம். காட்டுத் தீயா க பரவும் இந்த சைபர் குற்றங்களில் பலர் சிக்கிக்கொள்வதோடு, அவர்களின் பணம், கௌரவம், தனித்துவம் அல்லது இவை அனைத்தையும் இழக்கின்றனர். இந்த இணைய அச்சுறுத்தல்கள் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் ‘மோசடி செய்தி’ வடிவத்திலோ, நண்பர்களிடம் இருந்து பகிரப்பட்ட தகவலாகவோ, சமூக நட்பு பக்கம் மற்றும் வேறு தனிப்பட்ட வழிமுறை களூடாகவோ வந்தடையலாம். பொப் -அப் விளம்பரங்கள் கூட உங்கள் இணையப் பாவனை அனுபவத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க முடியும். சில சந்தர்ப்பங்களில், தேவையற்ற கிளிக்குகள் உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உங்களது தரவு தொகுப்புகள் மற்றும் நேரத்தை மிக மோசமான முறையில் பாதிக்கக்கூடும். இன்றை காலகட்டத்தில், தீய விளையாட்டுகளின் பட்டியலில் தீம் பொருள் (spam) முதன்மையானது. 

ஸ்பேம் தாக்குதல் என்றால் என்ன?  ‘ஒழுங்கமைக்கப் பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரக் கணக்கான பாவனையாளர்களுக்கு செய்திகளை அனுப்ப பயன்படுகின்ற கணனி செயலி (அப்ஸ்) ஸபேம் என்று வரைவிளகக்ணப் படுத்தப்படுகின்றது. இந்த செய்திகள் போலியான அல்லது ஹேக் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து அனுப்பப் படுகின்றதோடு, உண்மையான பாவனையாளர்கள் (பயனர்கள்) பதிவு செய்யக் கேட்கப்படும் இணைப்புகள் மற்றும் உண்மையற்ற விளம்பரங்களையும் பெரும்பாலும் உள்ளடக்கியிருப்பவை ஸ்பேம் தாக்குதல்கள் என வரையறுக்கப் படுகின்றன.” (https://rb.gy/fxzh87). போலியான ஆதாரமற்ற அலல்து ஆபத்தான தகவல்களை பரப்பும் திறன் கொண்டதும், கடவுச் சொற்களை (பாஸ் வேர்ட்) ப் பெற, கிரெடிட் கார்ட் எண்கள், வங்கி கணக்கு விவரங்கள், முகவரி, வாழ்விடம்; மற்றும் பல தகவல்களை பெற இணைப்புகள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட ஸ்பைவேர் மற்றும் அப்ஸ்கள் பயன்படுத்தப்படுவது ஸ்பேம் எனப்படுகிறது. ஆண்மைக் காலங்களில், கோவிட் -19  தொற்று சூழலில் சமூக ஊடக தளங்கள் சைபர் குற்றங்களைப் புரியும் நபர்களுக்கு மிகவும் நெருக்க மாகியுள்ளன. இது தொடர்பான முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

  • இலவச தரவு பரிசு(Free data gifting)  (ரூபா 3000/= வரை பெறுமதியான இலவச கூப்பன் உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. உங்கள் இலவச பரிசை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்  https://www.xxxxxxxxx.com/invite/sa6t2u
  • வங்கிகளில் இருந்து பணம் வழங்கப்படுவது என்ற தகவல்  ( cjhuzkhf X  vd;w  வங்கி அதன் வாடிக்கையாளர்களளுக்கு 5000/= வழங்கவுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்ள உங்கள் கிரெடிட் கார்டுகளின் இரு புறமும் தெளிவான இரண்டு புகைப்படங்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சல் முகவரி- xxxxxxxxbank.pvt@gmail.com)
  • ஹாஷ்டெக் ஏற்படுத்தியுள்ள அச்சமும் சவாலும் (அதாவது #5 different lookschallenge> #tiktok dancechallenge 2020>#untagchallenge) இன்னும் பல 

“எங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின்; அடிப்படையில், சைபர் குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் முகப்புத்தகம், புலனம் (வாட்ஸ்அப்) மற்றும் viber குழு அரட்டைகளை பயன்படுத்தும் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர் சமூகம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களாகும். தீம் பொருள் பயன்பாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.” என இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் யாசிரு மேத்யூ கூறினார். ஊரடங்கின் போது பல சமூக ஊடக பயனர்கள் ஸ்பேம் செய்திகளைப் பெற்றதோடு, பலமுறை முட்டாளாக்கப் பட்டுள்ளனர். “பலவகையான ஸ்பேம் செய்திகள் உள்ளன” என மேலும் அவர் கூறினார்.  

  1. நிதி மோசடி ஸ்பேம்கள் (நைஜீரிய ஸ்பேம்கள்’என்று பிரபல்யம்  பெறற்வை)
  2. பொது நல நடவடிக்கைகளுக்காக உதவி நிவாரணம் கோரும் ஸ்பேம்கள் (Charity Appeal Spams)
  3. மோசடி நடவடிக்கைகள் (Malware) 

“இணையத்தில் காணப்படும் தகவல்களை உண்மையென்றும் நேர்மையான செய்திகளென்றும் நம்பும் தொழில்நுட்ப ரீதியாக போதுமான அறிவு இல்லாத பல சமூக ஊடக பாவனையாளர்கள் பலர் இத்தகைய மோசடி வலையில் விழுந்து நெருக்கடிக்குள் விழுந்துள்ளனர். நாங்கள் இன்னமும் தொழில்நுட்ப சகாப்தத்தை புதியதாக எண்ணி அனுபவிக்கின்றோம். ஆனாலும் இந்த செயற்பாட்டை ஸபேமர்கள்; தங்கள் இணைய பாவனை திறமைகளைக் கொண்டு தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். அப்பாவிகளை அடையாளம் கண்டு அவர்களின் பணத்தை சூரையாடுவதற்காக கடனட்டை விபரங்கள், தரவுகள், மின்னஞ்சல், வங்கிக்கணக்கு எண், இருப்பிடம் போன்ற மேலும் பல தகவல்களை அறிய தவறாக பயன்படுத்துகிறார்கள்.” என கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணினி பீட விரிவுரையாளர் கலாநிதி. கசுன் டீ சொய்சா தெரிவிக்கின்றார்.

திரு மெத்யூ மேலும் விளக்குகையில், தொழில்நுட்ப சாதனங்களில் ஏற்கனவே உள்ள பலவீனங்கள் காரணமாக ஸ்பேமர்களும் மேலும் நன்மைகளை பெறுகின்றார்கள். நவீன தொழில்நுட்பத்தில் சாத்தியமான திறன்கள் மற்றும் வரம்புகளைக் கண்டறிதல் நேரடி கண்காணிப்பு உபகரணங்கள் வழியாக எவருக்கும் பயணிப்பது எளிது. “சமூ கஊடகம் வழியாக ஒருவர் ஸ்பேம் செய்தியைப் பெறுகிற பொழுது, உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள பலருடன் செய்தியைப் பகிருமாறு அந்த தகவல் மூலம் கேட்டிருக்கலாம்.  (அதாவது xxxx ஆனது அனைவருக்கும் 3000 உணவுப் பொதிகளை வழங்குகிறது. உங்களுடையதை பெற்றுக் கொள்ள 15 நண்பர்களுக்கு இந்த செய்தியைப் பகிரவும்) இவை ஸ்பேம் செய்திகள் டென்ட்ரோகிராம் முறையின்படி வைரலாகின்றன.” என்பதாக கூறுகின்றார். “இணையத்தில் பல காரணங்களால் ஸ்பேம் செய்தியினை நீக்குவது கடினம். பாவனையாளர்களுக்கான ஆபத்தை குறைக்க பல முயற்சிகளை எடுக்கும் பணியில் நிபுணர் குழு இன்னும் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, ஸ்பேம் கோப்புறையின் சுத்தீகரிப்பாக (பில்டர்) காணப்பட்டாலும், அவை மின்னஞ்சல்களுக்கு வருவதால், பாவனையாளர்கள் தங்கள் இன்பாக்ஸில் இந்த ஸ்பேம் தகவலை பெறக்கூடியதாக இருக்கின்றது;.” என்று கலாநிதி டீ சொய்சா கூறினார்.

கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலை காலப்பகுதியில் இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. சமூக ஊடக பயனர்கள் பல ஸ்பேம் செய்திகளைப் பெறக்கூடியதாக இருந்திருக்கின்றன. காரணம் என்னவென்றால் பலர் தனிமைப்படுத்தலின் போது அதிக நேரம் ஒன்லைனில் செலவிடுகின்றனர் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் திரு அஜித் ரோஹான மற்றும் இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு (SLCERT) ஆகிய இரு தரப்பினரது அறிக்கைளிலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

“ஸ்பேம் என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுக்கின்ற வலுவான கணினி குற்றச் செயல்களை தடுப்பதற்கான சட்டங்கள் இதுவரையில் உரிய முறையில் வகுக்கப்படவில்லை. அத்தோடு ஸ்பேம் நடவடிக்கைகளை ஒரு குற்றமாக தேசிய சட்டம் வரையறுக்க வில்லை. மேலும் தேசிய பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், சைபர் பாதுகாப்பு சட்டமூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படாமல் கவலைக்குரிய நிலையாகும். அனால் வெளிநாடுகளில் மிகவும் உறுதியான முறையில் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்கள் செயல்படுத்தப் படுகிறன.”என திரு மேத்யூ கூறினார். “ஆனாலும், நாங்கள் வேறும் சில வகையான சட்டங்களை செயல் படுத்துகிறோம். இருந்தாலும் அவதூறுச் சட்டத்தின் கீழ், சைபர் குற்றச் செயல்கள் மற்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவை போதுமானதாக இல்லை” என கலாநிதி டீ சொய்சா தெரிவிக்கின்றார்.“ஒன்லைனில் பார்க்கும் அனைத்து தகவல்களையும் மக்கள் நம்பக் கூடாது, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை அறியப்படாத, விளம் பரங்கள், இணைப்புகள் மற்றும் நபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இந்த இணைய பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்க திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்;.” என கலாநிதி டீ சொய்சா குறிப்பிட்டார். “பாடசாலை பாடவிதானத்தில் தகவல் தொடர்பாடல் பாடம் உட்படுத்தப்பட்ட காலப்பகுதியை விட தற்போது மாணவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் ஒன்லைன் பற்றிய கல்வியறிவு மிகவும் முக்கியமானது. சேவை வழங்குநர்கள் தந்திரோபாயமான முறையில் அவர்களுக்கு தேவையான வாடிக்கை யாளர்களை அடையவும் அவர்களின் தனிப்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள், நண்பர்கள் பற்றிய விபரங்கள் பெயர்கள், தனிப்பட்ட தகவல் போன்றவற்றை அறிய தமது சேவையை யார் பயன்படுத்து கிறார்கள் என்பதை விழிப்புடன் இருந்து கண்காணிப்பதை விட சமூக ஊடக பாவனையாளர்கள் தமது செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புடன் இருக்கவேண்டும்” என திரு மேத்யூ மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts