Uncategorized

வேலையற்ற பட்டதாரி இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்கள்

– சதீஷ்னா கவிஷ்மி

இந்த காலப்பகுதியில் காண முடியாவிடினும் கடந்த காலங்களில் பட்டதாரி இளைஞர், யுவதிகளின் போராட்டம் கொழும்பு நகரை மையமாக கொண்டு இடம்பெற்றதை காண முடிந்திருக்கும். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இலங்கை இளைஞர்கள் இவ்வாறான நெருக்கடிக்குள் ஏன் தள்ளப்பட்டார்கள். அவர்கள் போராட்டகாரர்களாக மாற்றமடைவதற்கான காரணம் என்ன ?

இலங்கையின் இளைஞர், யுவதிகள் தொழிற்றுறை கல்வியை பெற்றுக் கொள்வதும், அதன் பின்னர் தொழில் வாழ்க்கைக்குள் செல்வதும் வெறும் கனவாகவே உள்ளது. நாட்டுக்குள் உள்ள வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்கள் காரணமாக இளைஞர், யுவதிகள் நம்பிக்கையிழந்துள்ளார்கள். தமக்கான உரிமையை கோரி அவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சமூக கட்டமைப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல பட்டக்கல்வியை  பெற்றுக் கொண்டு அதனூடான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவே அனைவரும் கல்வி கற்கின்றனர். பட்டப்படிப்பின் பின்னர்  தொழில் வாய்ப்பு அல்லது நிலையான வருமானம் கிடைக்காமல் இருப்பது  இளைஞர், யுவதிகளுக்கு பாரியதொரு சவாலாகும். இதனால் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழிலின்மை பிரச்சினை சடுதியாக உயர்வடையும். அது சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

வேலையில்லா பட்டதாரிகளின் தற்போதைய நிலைமை

பல்கலைக்கழகங்கள் ஊடாக கல்வி கற்ற, திறமையான இளைஞர் யுவதிகள் தோற்றம் பெற்றாலும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கற்கை நெறிகள் ஊடாக அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்பட்டாலும் அவர்களின் திறமைக்கேற்ப  கைத்தொழில் மற்றும் நிறுவனம் மட்டத்திலான வாய்ப்புக்கள் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன.  காணப்படும் தொழிற்றுறைகளுக்கு பொருத்தமான தகைமைகளை பூரணப்படுத்த முடியாத தன்மையும் காணப்படுகிறது.

பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களை தொடர்புப்படுத்தி பாடத்திட்டங்கள் மற்றும் கைத்தொழில், தொழில்நுட்ப பாடத்திட்டங்கள் ஊடாக வழங்கப்படும் கல்வி தகைமை ஊடான தொழில் சந்தைகள் தோற்றம் பெறும். தொழில் சந்தையில் நடைமுறைக்கு சாத்தியமான திறன்களை உருவாக்குவது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கையில் தொழிலின்மை வீதம் 4.7 சதவீதமாக காணப்பட்டது. கல்வி பொதுத்தராதர சாதாரன தரம், உயர்தரம் மற்றும் உயர் கல்வி தகைமை பெற்றவர்களின் தொழில் இன்மை வீதம் 7.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பெண் பட்டதாரிகளில் 10 சதவீதமானோர் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் தொழிலின்மை பிரச்சினை உயர்வடைந்துள்ளது. இந்த  வீதம் 25.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இலங்கையின் அண்மைக் காலமாக பட்டதாரிகளுக்கான தொழில் பற்றாக்குறை தொடர்பில் தொடர்ச்சியாக சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன. (தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2024)

இதற்கு மேலதிகமாக, இலங்கையில் பட்டதாரிகளில் பெருமளவிலானோர் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தை நாடிச் செல்கிறார்கள். படித்த தொழிற்றுறையினருக்கான கேள்வி வெளிநாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சுகாதாரம், கல்வி மற்றும் பயிற்சி துறைகளில் வாய்ப்புக்களை தேடும் பெருமளவிலான இலங்கை பட்டதாரிகள் இந்த வலயத்தை நாடிச் சென்கின்றனர். விசேடமாக தேசிய மட்டத்தில் பதவிகளை பெற்றுக் கொள்ள முடியாத பட்டதாரிகள் நிலையான இடபெயர்வை தெரிவு செய்துள்ளார்கள்.2022 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிக்கையில் 200,000 இலங்கை இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். தேசிய மட்டத்தில் சிறந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.

பின்னடைவுகள் மற்றும் தோல்விகள்

இலங்கையின் கல்வி முறைமைக்கமைய பாடநெறிகள், வகுப்புக்கள் மற்றும் சோதனைகள் ஊடாக கற்பிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு  பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்கு பின்பற்றப்படும் கல்வி முறைமை, நிறைவேற்று மற்றும் முகாமைத்துவ திறன்களை காட்டிலும்  பாடத்திட்டம் அடிப்படை வழிமுறையாகும். இந்த நிலைமை திறமையை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளுக்கான சிறந்த சூழலை தோற்றுவிக்காது.

இளைஞர்கள் தொழில் வாய்ப்புக்களை தேடும் போது உளவியல் ரீதியிலும், பொருளதாரம் மற்றும் சமூக மட்டத்திலும் பாதிக்கப்படுகிறார்கள். தொழில் இன்மையானது வெளிநாடுகளுக்கு புலம்பெயர்தல், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லல் ஆகியவற்றுக்கு பிரதான காரணியாக உள்ளது. அது நாட்டின் அபிவிருத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எதிர்கால சவால்கள்

பட்டதாரிகளில் பெரும்பாலானோருக்கு தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டல் பற்றாக்குறையினால் அவர்களின் எதிர்காலம் சவால்மிக்கதாக காணப்படுகிறது.

சர்வதேச முரண்பாடுகள் மற்றும் யுத்த சூழல்

தொழிலின்மை பிரச்சினை தீவிரமடைவதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காணப்படும் முரண்பாடான சூழலும் பிரதான ஒரு காரணியாக உள்ளது. பட்டதாரிகளை கைத்தொழில் , தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் காணப்படும் பகுதிகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. பூகோள காரணிகளால் இளைஞர்கள் சிறந்த வாய்ப்புக்களை இழக்கின்றனர்.

கல்வி கட்டமைப்பு மறுசீரமைப்பு

கல்வி கட்டமைப்பில் நடைமுறைக்கு சாத்தியமான திறன்கள், தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன், அதிகளவான வாய்ப்புக்களை வழங்கல் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட இலகுவான மதிப்பீடு செய்தல் ஆகியன கல்வி கட்டமைப்பில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.இந்த செயன்முறை பல்கலைக்கழக மட்டத்தில் திறன் பயிற்சிகள் ஊடாக மேம்படுத்த வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருதிட்டம் மற்றும் கல்வி ஆராய்ச்சி

கல்வி ஆராய்ச்சிகள் அல்லது புதிய தொழில்நுட்பம் அல்லது அபிவிருத்தி வினைத்திறன்களை பெற்றுக் கொள்வதன் ஊடாக சர்வதேச நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவதன் ஊடாக இலங்கையானது உயரளவான சேவையை வழங்கும்.

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மற்றும் புதிய கருத்திட்டம் ஆரம்பம்

இளைஞர், யுவதிகள்  வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கல், அரசாங்கத்தின் முழுமையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல் ஊடாக மேலதிக தொழிற்றுறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு விசேட திட்டங்களை அமுல்படுத்துவதுடன் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கல்.

தொழில்நுட்பம் மற்றும் இணையம்

நவீன யுகத்தில் இளைஞர், யுவதிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி  புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்கிறார்கள். இணையத்தளம் ஊடாக நிதி திரட்டல், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல், திறன்களை பகிர்ந்துக் கொள்ளல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இணையத்தள வசதிகள் அல்லது தொழில்நுட்ப திறன்களுடன் பணிகளை முன்னெடுப்பதற்கு இயலாத தரப்பினர் குறித்து அவதானம் செலுத்தல். கிராமபுறம் தொடக்கம் நகர்புறம் வரை தொழில்வாய்ப்புக்கள் குறித்து ஆலோசனை செயலமர்வுகளை நடத்துதல் சிறந்ததாக அமையும்.

வேலையற்ற பட்டதாரி இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அவர்களின் திறமைகளை பயனுள்ள மற்றும் நிலையான வகையில் பயன்படுத்துவது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. நடைமுறை திறன்கள் மற்றும் தொழில் பயிற்சியுடன் கூடிய கல்வி முறையின் நவீனமயமாக்கல் ஒரு யதார்த்தமான மாற்றத்திற்கு வழிவகுத்தது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான காரணங்களாக இருக்கலாம். மேலும், வேலை வாய்ப்புகளை நவீனப்படுத்துதல், உற்பத்தியற்ற வெளிநாட்டுக் குடியேற்றத்தைத் தடுப்பது மற்றும் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆதரவை வழங்குதல் அரசாங்கம்  மற்றும் தனியார் துறைகளின் கடமையாக இருத்தல் வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts