Uncategorized

வெளிநாடு செல்ல முன்னர் மீண்டும் சிந்தியுங்கள்……பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள்

 இலங்கையர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதால், பிள்ளைகளின் சமூக ஆளுமை வளர்ச்சி சிக்கல்குரியதாக மாறியுள்ளது.வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றோர் தமது குழந்தைகளின் உளவியல் வளர்ச்சி மற்றும் எதிர்கொண்டுள்ள  சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது கட்டாயமானது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

பெற்றோரின் நேரடி தலையீடு இல்லாமல் குழந்தைகள் வாழ்வது பெற்றோர் பிரிவு என்று குறிப்பிடப்படும். பல வழிமுறைகளில் பெற்றோரின் பிரிவு இடம்பெறும். தாய் அல்லது தந்தையின் பிரிவு,( சட்ட மற்றும் சட்டபூர்வமற்ற),தாய் அல்லது தந்தையின் மரணம், தாய் அல்லது தந்தை விட்டு செல்லுதல் உள்ளிட்ட காரணிகளால் பெற்றோரின் பிரிவு அல்லது இழப்பு தோற்றம் பெறும்.

இலங்கையில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களுக்காக செல்வதால் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் அந்நியப்படுத்தப்படுவது சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் பிள்ளைகளின் உளவியல் காரணிகள் குறித்து கவனம் செலுத்துவது அத்தியாவசியமானது. மேற்குலக நாடுகளில் ‘ஒற்றை பெற்றோர்’ என்ற எண்ணக்கருவிற்கமைய பிள்ளை பெற்றோரில் ஒருவரிடம் மாத்திரம் இருப்பது அவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையாது. வெளிநாடுகளுக்கு பெற்றோர் செல்வதால் பிள்ளைகளின் உளவியல் பாதிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய ஐந்து வயதுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள பெற்றோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வரையறைகள் விதிக்கப்பட்டன.

சமூக கட்டமைப்பு மற்றும் தத்துவார்த்த பின்னணி காணப்பட்ட போதிலும் குழந்தைகளின் உளவியல் மற்றும் உடல் வளர்ச்சியில் பெற்றோரின் இருப்பு  மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது தெளிவாகுகிறது.

ஆளுமை வளர்ச்சியின் தாக்கம்.

பெற்றோரின் பிரிவு பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல்கள் ஆகியன கிடைக்காத போது பிள்ளைகளின் உளவியல் மற்றும் சமூக வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். பெற்றோரை பிரிந்த பிள்ளைகளின் கல்வி, நன்னடத்தை மற்றும் உளவியல் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கள் மற்றும் சனத்தொகை தரவு

இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (2012) சனத்தொகை தரவுகளுக்கமைய, வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இந்த பெண்களில் பெரும்பாலானோரின் பிள்ளைகள் பெற்றோர் பிரிவுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதேபோல்  2015- 2022 வரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தின் பதிவுகளுக்கமைய, தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

பாதுகாப்பு மற்றம் பாதுகாவலர்கள் தொடர்பான சிக்கல்

பெற்றோரை பிரிந்த பிள்ளைகளின் பாதுகாவலர்கள் தொடர்பில் ஆராய்கையில் பல சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பினரிடம் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு தாய் வெளிநாட்டுக்கு செல்லும் போது அந்த பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நபர் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்களா என்ற பிரச்சினை காணப்படுகிறது. அதேபோல் தாய் வெளிநாடு செல்லும் போது பிள்ளைகளின் பாதுகாவலராக தந்தை காணப்படுவார். தந்தை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போது அதனால் அந்த பிள்ளைகள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

செலவு கட்டுப்பாடு மற்றும் குடும்ப மேம்பாடு தொடர்பில் தெளிவான அறிவு மற்றும் புரிதல்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பொருளாதார ரீதியில் நிலையற்றவர்களாக உள்ளனர். இவ்வாறான காரணிகளால் பிள்ளைகள் உளவியல் ரீதியிலும், ஆளுமை விருத்தியிலும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டலாம்.

தாய் வெளிநாட்டில் இருந்து திரும்பும் போது தந்தை மறுமணம் முடித்திருத்தல்,  பிள்ளைகளுக்கு சித்தியின் ( மாற்றாந்தாய்) தொந்தரவு, வெளிநாட்டில் இருந்தும் பணத்தை வீண்விரயமாக்குதல், முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளால்  சமூக அலகுகளில் மிகச்சிறிய அலகாக இருக்கும் குடும்பம் பல சிக்கல்களுக்கு முஙக்கொடுக்க நேரிடும் இது சமூக வளர்ச்சியை பாதிக்கும்.

இத்தமைகய சூழ்நிலைகளில் பிள்ளைகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதுடன், முற்போக்கான சமூக நடத்தைகளை பிரதிபலிக்க முடியாத  நிலை ஏற்படும்.பிள்ளைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவது குறித்து பொறுப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தீர்வு மற்றும் யோசனை

பெற்றோரை பிரிந்த  பிள்ளைகளில் ஆளுமையை மேம்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

1 சமூக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு

பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக சமூக மற்றும் பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பு வழங்குதல்

2- கல்விக்கான ஒத்துழைப்பு

பிள்ளைகளின் கல்வி மேம்பாடுக்காக விசேட செயற்திட்டங்கள் மற்றும் வழிகாட்டல் வழங்கல்

3 உளவியல் மற்றும் சுகாதார ஒத்துழைப்பு

 பிள்ளைகளின் உளவியல் சுகாதாரத்துக்காக ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்கல்

4-  சமூக ஒத்துழைப்பு

 சமூக ஒத்துழைப்பை வழங்கி, பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான சூழலை ஏற்படுத்தல்

 மதிப்பீடு

  பெற்றோரை பிரிந்துள்ள பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியின் போது முகங்கொடுக்கும் சிக்கல்கள் சமூகத்தின் முக்கிய சிக்கலாக காணப்படுவதுடன், அதற்கு தீர்வு காண்பதற்கு சமூக, பொருளாதார, மற்றும் கல்வி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக சமூகத்தில் உள்ள சகலரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவது கட்டாயமானது.

1- தோகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (2012), இலங்கை தொகைமதிப்பு மற்றும் வீடுகளின் எண்ணிக்கை (2022), ஆரம்ப தரவு அறிக்கை .கொழும்பு : இலங்கை அரசு

2- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் -2022 கொழும்பு

3- கல்வி அமைச்சு (2021), சமூக ஒழுக்கவியல் மோதல்கள் மற்றும் உளவியல் சுகாதாரம் தொடர்பான அறிக்கை 2021. கொழும்பு : கல்வி அமைச்

4- ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம் (யுனிசெப் 2019), இலங்கையில் பிள்ளைகள் மீதான இடப்பெயர்வின் தாக்கம். கொழும்பு

5- உலக வங்கி குழுமம் :(2020) தெற்காசியாவில் குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்வில் பெற்றோர் இல்லாததால் ஏற்படும் விளைவுகள்  –வாஷிங்டன் டி.சி உலக வங்கி

6- நெவில் ஆர். புpரனாந்து எஸ் (2015) இலங்கையில் வெளிநாட்டு குடிபெயர்வால் ஏற்படும் சமூக சிக்கல்கள் ‘ சமூக விஞ்ஞான ஆய்வு , 12(1), 45-60

7- இலங்கை மத்திய வங்கி (2022), ஆண்டறிக்கை (2022)  தொழிலாளர் குடியகல்வு மற்றும் குடும்ப நல்வாழ்வு.கொழும்பு

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts