விரைவான “அன்டிஜென் டெஸ்ட்” கருவிகள் குறித்த சமூக ஊடக பரிசீலனை
ஐ.கே.பிரபா
கோவிட் -19 வைரஸைக் கண்டறிய தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அடுத்ததாக விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கிட் என்ற கருவிகள் மூலமாக மேற்கொள்ளும் பரிசோதனை மூலமும் வைரஸை துரிதமாக கண்டறிய முடியும். இலங்கைக்கு 500,000 சோதனை கருவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முன்வந்துள்ள நிலையில் இலங்கையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தால் இதே பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கும் செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் பிரதான மருத்துவ அதிகாரி டெடிஸ்ரோஸ் அவியானோமிகி ரெப்ரியாஸ், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக அடையாளம் காண இரண்டு பரிசோதனைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்குவதாக அண்மையில் அறிவித்தார். அந்த அறிக்கை பின்வருமாறு:-
“கடந்த வாரம் நாங்கள் ஒரு உயர்தர உடனடி “ஸ்டீராய்டு பரிசோதனை” க்கான ஒப்புதலுடன் மிக முக்கியமான சந்தர்ப்பத்திற்கு வந்துள்ளோம். அத்துடன் மேலும் விரைவான பரிசோதனைகள் அறிமுகமாக உள்ளன. எனக்கு இன்று ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த சோதனை சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் நம்பகமான முடிவுகளை அளிக்கிறது. இது மிகவும் குறைந்த செலவில் சிக்கலான தொழில்நுட்பம் இல்லாத கருவிகளின் மூலம் செய்யப்படுகிறது.”
இந்த முறையை உருவாக்கும் ‘எஸ்.டி பயோ சென்சர் மற்றும் அபோட் அனட் பயோ என்ற பெயரிலான இரண்டு நிறுவனங்களை இந்த முயற்சியை மேற்கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது. பி.சி.ஆர் சோதனையைத் தவிர, இலங்கையில் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க (02.11.2020) அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இலங்கையில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் நிறுவனம் 200,000 பரிசோதனைக் கருவிகளை இறக்குமதி செய்திருக்கின்றது. இந்த சம்பவம் வெளிப்படைத் தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்துள்ள பரிசோதனைக் கருவிகள் தொடர்பாக அது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அரசாங்கக் கட்சிகளுடன் இணைத்து நம்பகமானதும் தவறானதுமான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
“டெஸ்ட் கிட்டின் உண்மையான கதை…. நான் நேரடியாக பதிலளிபப்தாயின் இது ஓர் அவசர இறக்குமதி”
“விரைவான பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த பணத்தையும் செலவிடவில்லை – அனைத்தும் தனியார் துறையிலிருந்து செலவிடப்பட்டது.”
“உலக சுகாதார நிறுவனம் சுகாதார அமைச்சுக்கு 100,000 சோதனை கருவிகளை வழங்கியுள்ளது”
“இலங்கைக்கு தென் கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளன (10.11.2020)”
“மருந்து வகைகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அங்கீகாரம் இல்லாமல் மருந்துகள் மற்றும் எந்தவிதமான சுகாதார உபகரணங்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியாது”
“இந்த பரிசோதனை கருவிகள் தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே பயன்படுத் தப்படுகின்றன”
“ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன் அவை இலங்கையில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுததும் நோக்கில் கொண்டுவரப்பட்டன. இது முற்றிலும் ஒரு தனியார் துறை நிறுவனம் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு இடையில் நடக்கும் நடவடிக்கையே தவிர இந்த விடயத்துடன் அரசாங்கத்துக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை”
“இதனை இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்கள் அரசாங்கத்த்தால் கோரப்பட்டுள்ளன. அந்த பணிகள் இன்னும் பூர்த்திய செய்யப்படவில்லை. இவ்வுடன்படிக்கை இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த டென்டர் மூலம் யார் எந்த நிறுவனம் தெரிவு செய்யபப்டும் என்பது இதுவரையில் மர்மானதாக இருந்து வருகின்றது”.
“இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கிட்களைப் அரச மருத்துவ மனைகளில் பயன்படுத்துவதற்கும் டென்டர் கோரலுக்கும் இடையில் எந்ததொடர்பும் இல்லை”
அவற்றுள் “கொரோனாவுக்குப் பின்னால் ஒருடெஸ்ட் கிட் விளையாட்டு. உயர் மட்டங்களில்லிருந்து வந்த அறியப்படாத ஒழுங்கைப் பற்றி சுகாதாரத் துறைத் தலைவர்களுக்குத் தெரியாது!” என 08.11.2020 ஞாயிற்றுக் கிழமை “சண்டே திவயின ” வெளியிட்ட செய்தி பலசர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிக்ன்றது.
விரைவான ஆன்டிஜென் சோதனை குறித்து கருத்துத் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெரிவிகக் வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கின்றது.
“இந்த சோதனைகருவிகளின் தரமான சோதனையை விரைவு படுத்துங்கள். இது நாட்டுக்கு உகந்ததா இல்லையா என்பதை நிபுணர்கள் சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும். ஆனால் இந்த கருவிகளின் சில தொகுதிகள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு விஷேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை இதை பரிந்துரைத்ததா? துர ஆய்வு செயல் முறை முடிவதற்கு முன்னர் இது இறக்குமதி செய்யப்பட்டதா? அதற்கு அனுமதி கிடைத்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு பெரியபங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. வதந்திகள் கூட நிராகரிக்கப் படவில்லை. அன்டிஜென் டெஸ்ட் ஏன் திடீரென்று இவ்வளவு பெரிய விஷயமாக மாறியது? மேலும், தர உத்தரவாத சோதனை முடிவதற்கு முன்பே ஆன்டிஜென் சோதனை கருவிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், அது ஏன்? அதற்கு எவ்வளவு செலவாகியது? இந்த கேள்விகள் உட்பட இந்த முழு செயல் முறையின் வெளிப்படையான விவரங்களை அம்பலப்படுத்துவது முக்கியம் என்று அரச மருத்துவஅதிகாரிகள் சங்கமாக நாங்கள் கருதுகிறோம். மக்களின் நம்பிக்கையுடன் முன்னேற, இந்த முழு செயல்முறையும் வெளிப்படையாக நடக்கவேண்டும்.”
அடுத்த வாரம் முதல் தர உத்தரவாத சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ள போதிலும், இலங்கைக்கு சோதனை கருவிகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தின் தலைவர் தொடங்கிய பிரச்சாரமாக இருக்கலாம் என்று சமூக ஊடக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தை பெற்ற பின்னர், நாட்டின் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்த பொருத்தமான சோதனை கருவிகள் கிடைக்கும் என்று வைத்தியர் சமன் ரத்நாயக்க 11.11.2020 அன்று தெரிவித்தார்.
சில சமூக ஊடக கருத்துக்களின்படி விரைவானஆன்டிஜென் சோதனைக் கருவிகள் தொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதன் காரணமாக இந்த தனியார் நிறுவனம் மருத்துவ உபகரணங்களை விற்க இலவச விளம்பரம் பெற்றுள்ளது. இத்தகைய விரைவான ஆன்டிஜன்ட் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்வதில் அரசாங்க மட்டத்தில் கடுமையான ஊழல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டுவதில் இந்த வர்த்தகம் தொடர்பாக அரசாங்கத்தின் சில அரசியல் கட்சிகளும் முன்னணியில் உள்ளன என்பது தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டாகும்.
அரசாங்கத்தின் சார்பாக இந்த முறையில் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் சுகாதாரத் துறையிலிருந்து இரண்டு ஆண்டு பதிவுச் சான்றிதழைப் பெறவேண்டுமா என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அத்தகைய நடைமுறைக்கு உட்பட்டது அல்ல, இந்த சாதனங்கள் இலங்கை சூழ்நிலைக்கு பொருந்துமா என்பதைப் பார்க்க மாதிரி சோதனை நடத்துவதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டன. நிறுவனத்தின் கருத்துப்படி இது நிறுவனத்துக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் இடையிலான ஒரு பரிவர்த்தனை ஆகும். பதிவு செயல் முறைசரியான நேரத்தில் செய்யப்பட்டது என சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சன்ன ஜெயசுமனே சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழிமுறையில், மக்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் பரவும் போது, மக்கள் இயல்பாகவே அரச நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகங்களுடன் இருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது ஆரோக்கியத்திற்கான எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த, வெளிப்படையான உலகில் பொருளாதாரம், அரசியல் மற்றும் தகவல் அறியும் உரிமை (RTI), பொது மற்றும் தனியார் துறைகளில் அனைவரின் செயல்களையும் நாம் அறிந்திருக்கவேண்டும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்றவகையில் ஒரு நாடு தனது பொருளாதார இலக்குகளை அடைவதில் பராமரிக்க வேண்டிய பொருளாதார வெளிப்படைத் தன்மையைப் பாதுகாப்பது அதிகாரிகள், குடிமக்கள் மற்றும் ஊடகங்களின் பொறுப்பாகும். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் மற்றும் பலவிதமான கொள்வனவுகள் தொடர்பான டென்டர் அழைப்பு நாட்டின் செல்வத்தை ஏற்றுமதி செய்யும் போது வெளிநாட்டு உதவி பெறுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.