கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

வானொலி தொழில்நுட்பத்தில் மறைந்து வரும் பிராந்திய குரல்கள்: சமூக வானொலிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

சச்சினி டி பெரேரா

வர்த்தக வானொலி மற்றும் பொது சேவை ஒளிபரப்பு (PSB) தவிர, சமூக வானொலி என்பது வானொலி சேவையின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது பகுதியாகும். ஒரு பிராந்திய எல்லைக்குள் வாழும் சமூகம் அல்லது சமூகத்திற்காக ஒரு சமூக வானொலி சேவையை தொடங்கவும் பராமரிக்கவும் ஆர்வமுள்ள இடங்களில் இந்த வானொலி சேவைகள் முதன்மையான நோக்கமாக உள்ளன. இதன் வானொலி சேவைகளின் உள்ளடக்கம் இலக்கு என்பன கேட்போரின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. சமூக வானொலி சேவையானது, குறிப்பிட்ட முழு சமூகத்திற்கும் சொந்தமானதுடன் அவ் வொட்டு மொத்த சமூகமும் அவ்வானொலி சேவையின் செயற்பாட்டாளர்களாகவும் காணப்படுவர். அந்த சமூகம் பெரும்பாலும் வருவாய் எதிர்பாராது இந்த சேவையை செய்கின்றது. அவர்கள் இயக்கும் வானொலி நிலையங்களில் தங்கள் கதைகள், அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதோடு, மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் கூட்டு தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

‘80 களின் முற்பட்ட காலப்பகுதியில், தெற்காசியாவின் முதல் வானொலி நிலையம் இலங்கையில் மகாவலி பிரதேசத்திற்கு அண்மையாக நிறுவப்பட்டது. 1983 இல் யுனெஸ்கோ அமைப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக (SLBC), மகாவேலி அதிகார சபை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் டெனிஷ் சர்வதேச திட்டத்துடன் இணைந்து இலங்கையின் ஆரம்ப சமூக வானொலி நிலையமான மகாவலி சமூக வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது. மகாவலி சமூக வானொலி சேவையின் கீழ், கிராந்துரு கோட்டே (1985), மஹ இலுப்பல்லம (1987) மற்றும் கொத்மலை (1988) ஆகிய  இடங்களிலும் பிற வானொலி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், ஊவா சமூக வானொலி சேவை மற்றும் ‘சரு’ சமூக வானொலி சேவை ஆகியன இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படுகின்றன.

சமூக வானொலி நிலையத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தையும், சிறுபான்மையினர் மற்றும் ஒதுக்கப்பட்டப்பட்ட சமூக குழுக்களை பலப்படுத்துவதாகும். மேலும் இது சமூக இலக்குகளின் சாதனை, சமூக சேவையை வளர்ப்பதோடு, சமூக தொடர்புகளை வலுப்படுத்துகிறது. ஏனைய நாடுகளில் சமூக வானொலி சேவைகள் அவற்றின் தொடர்புடைய தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சமூகத்தை பராமரித்தல் என்பது வானொலி சேவையில் எளிதான பணி அல்ல. சமூக வானொலி சேவையில் சில பொதுவான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில வருமாறு :-

(1) அரசியல் தலையீடு

(2) பங்குதாரர்களுக்கு இடையிலான சிக்கல்கள்

(3) பொருளாதார சிக்கல்கள்

மேலும், ஆசிரிய பீட சுதந்திரத்திரம் தொடர்பான சவால்கள், உரிமை மற்றும் ஸ்தீர நிலை போன்ற சிக்கல்களுக்கு ஒரு சமூக வானொலி சேவையில் தீர்வுகள் உள்ளன.

ஊடக சுதந்திரம் என்பது ஊடகத் துறையின் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும். இது பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக வரையறுக்கப்பட்டதக இருந்து வருகின்றது. இது சமூக வானொலி சேவைகளை பெரிதும் பாதிக்கிறது, ஏனெனில் அவை சிறிய ஊடகங்கள் என்பதோடு இந்த வெளிப்புற தாக்கங்களுக்கு எதிராக எழுந்து நிற்கும் திறன் குறைவாக கொண்டிருக்கின்றது. இது நேரடியாக ஊடக நிறுவனங்களின் உரிமையையும் பாதிக்கச் செய்வதாக இருக்கின்றது.

வானொலி அலை வரிசைகளை வர்த்தக சமூகத்தினருக்கு விற்பனை செய்யும் நிலை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், வர்த்தக சமூகத்தினரால் இத்தகைய வானொலி சேவைகளுக்கான அச்சுறுத்தல் நிலையும் அதிகரித்த வண்ணம் உளள்ன. இத்துறையில் எதிர்நோக்குகின்ற மற்றொரு பிரதான பிரச்சினையாக அமைவது வானொலி சேவைகளை தொடர்ந்து நடத்த போதிய நிதி வசதி இல்லாமை, இத்தகைய வானொலி சேவைகளை நடத்துவதில் நிதியீட்டம் செய்பவர்களது கேரிக்கைகள் மற்றும் தலையீடுகள் என்பன அவற்றின் நிகழ்ச்சி நிரல்களிலும் தாக்கம் செலுத்துவதாக அமைகின்றன.  இது ஊடக சுதந்திரத்தையும் பாதிக்கிறது. மறுபுறம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு அறியப்பட்ட சமூக வானொலியில் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிப்பது கூட இன்று ஒரு கடினமான பணியாகிவிட்டன. முதலீட்டாளர்கள் அவர்களுக்கு பயனளிக்கும் ஊடகத் திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள்.  ஒரு திட்டத்தின் இலக்கு சமூகத்திற்கு பொருத்தமானது , செயல் திறன் மிக்கது, பக்கச் சார்பற்றது மற்றும் நியாயமானது போன்ற தன்மைகளை வெளிப்படுத்தும் வகையிலான ஊடக பொறுப்புணர்வுகள் தற்போது குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலைகள் காரணமாக, சில பிரதேச மக்களின் குரலை அரசாங்கத்தாலும் நாட்டு மக்களாலும் செவிமடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சமூக வானொலி நிலையம் ஒன்றில் செய்தியாளர்களாக கிராமவாசிகள் அல்லது குறித்த சமூகத்தினரை ஈடுபடுத்துவதன் மூலம், வானொலி நிலையத்தின் பணி பாரபட்சமற்று காணப்படுவதோடு, பணிக்கான அர்ப்பணிப்பு வினைத்திறன் மிக்கதாகவும் வலுவானதாகவும் இருக்கும் அதே வேளை அரசியல் தலையீட்டிலிருந்து குறைந்த பட்ச இடர் அளவைப் பேணுவதற்கான வாய்ப்பாகவும் அமையும். இத்துறையில் படித்த மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள், குறிப்பாக இந்நோக்கத்திற்காக விரிவாகப் பயன்படுத்தலாம். இது ஒரு வேலைவாய்ப்பாக அமைகிறது அல்லது அவர்கள் பயிற்சிபெற நல்ல தொழில்முறை அனுபவத்தை வழங்குகிறது. மேலும், அத்தகையவர்களுக்கு வானொலி நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்கள் மற்றும்  தொழில்நுட்ப புரிதல் தொடர்பிலும் சரியான அறிவு வழங்கப்படுதல் ஒரு சமூக வானொலி நிலையத்தை பராமரிப்பதற்கு அவசியம்.

ஆனால் இது ஒரு திட்டமாகும், இது நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு வானொலி சேவைகள் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் பொது மக்களிடையே சமூக அதிகாரப் போராட்டம் நடை பெறவாய்ப்புள்ளது.  100 வீதம் சமூகத்திற்கு சேவையை வழங்குதல் என்பது சமூக வானொலி சேவைக்கு ஒரு நெருக்கடிதான். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு மேற்பார்வைக் குழு நியமிக்கப்படலாம் அல்லது இதனுடன் தொடர்புடைய அவ்வப்போது மாற்றப்படும் தன்னார்வ ஊழியர்கள் இருக்கலாம். மேலும், பயிற்சி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களை பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம் அவர்களை சமூகத்துடன் ஒத்துழைக்கச் செய்வதோடு, பல விதமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் அடிப்படையாக அமையலாம்.  ஏனென்றால், உயர் பதவிகளில் இருப்பவர்களை விட படித்த இளைஞர்கள் அதிகமாக இருப்பதன் மூலம் சமூகத்துடன் நெருக்கமானவர்களாக நட்பாக இயங்குவார்கள்.

சர்வதேச அரங்கில் கென்யா, தென்னாப்பிரிக்கா, ஈக்வடோர், ஜமைக்கா, இந்தோனேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள், சமூக வானொலியின் பின்னால் உள்ள தகவல் தொடர்பு பலத்தை தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தி வருகின்றன. சில உள்ளூர் நிபுணர்கள்  இலங்கையில் உள்ளூர் சமூக வானொலி சேவைகளை அபிவிருத்தி இலக்குகளுக்கு பயன்படுத்த ஏற்கனவே முன்மொழிவுகளை சமர்ப்பித்து உள்ளனர்.  ஆனால்,“மகாவலி சமூக வானொலி”(MCR) தொடங்கப்பட்டு மிகப் பெரிய வளர்ச்சிக்குப் பின்னர் இத்திட்டம் குறித்து எந்த நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை.

நிறுவனங்களின் ஊடக சுதந்திரத்துடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களை பராமரிக்கத் தவறியதன் காரணமாக வெளிப்புற சக்திகள் தலையிடுகின்றமை பல சமூக வானொலி நிலையங்களுக்கு இருக்கும் மற்றொருசிக்கல் நிலை ஆகும்.. இதற்கு தீர்வாக பின்வரும் விடயங்கள் அவசியமாகின்றன.

(1)    ஊடக நிறுவனத்திற்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் 

    ஒழுங்குமுறைகளைக் கொண்ட அரசியலமைப்பு

(2)    தனிப்பட்ட நிறுவன பொதுவிதிகளின் தொகுப்பு

(3)    சிக்கலான சூழ்நிலைகளுக்கு எழுதப்பட்ட நடைமுறை

(4)    ஒப்பந்தங்கள்

(5)    அவசரகாலங்களில் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் அறிக்கைகள்

போன்றவை முன்வைக்கப்பட வேண்டும். இது ஊடக ஊழியர்களின் தனிப்பட்ட நலனுக்காக தவறு செய்வது ஊடக துன்புறுத்தல் வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளை முன்வைக்க முடியும் என்பதற்கு ஆதாரமாக இருக்கும்.

தற்போது, சமூக வானொலி சேவைகளில் பார்வையாளர்களின் ஈர்ப்பு படிப்படியாக இழக்கப்படுவதற்கான காரணம் மாநில மற்றும் வணிக வானொலி சேவைகளுக்கான கேட்பவரின் தற்போதைய தேவை அதிகரித்து உள்ளமையாகும். இதற்கு தீர்வு பெரும்பாலான கேட்போர் கேட்கும் பிரபலமான அரசு மற்றும் தனியார் வானொலி சேவைகளின் மூலம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் சமூக வானொலி சேவைகளை ஊக்குவித்தல்.

இலத்திரனியல் ஊடகங்கள், வர்த்தக சேவைகள், மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பெருக்கம் காரணமாக இன்று நாம் காணும் ஊடக போக்குகள், சமூக வானொலியால் வழங்கப்படும் சிறந்த சேவையின் கவனம் சமுதாயத்தில் குறைந்து வருகிறது. சமூக வானொலி கலாச்சாரத்திற்கான ஏக்கம் போன்ற உணர்வு இனி இல்லாத நிலை நிலவுகிறது. சமூக வானொலி நிலையங்களின் மகத்தான வளர்ச்சியை நிறுவனத்தின் மூலம் இலங்கையில் ஒரு நிலையான வானொலி கலாச்சாரத்தை எளிதாக்க முடியும். அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறிப்பிட்ட குறிக்கோளுடன்  சமூக மேம்பாடு மற்றும் சமூகத்தின் குறிப்பிட்ட நிலை குறித்த அக்கறை, அதன் இருப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்தல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஒரு சிறந்த ஊடகவியல் நடைமுறையில் அவை செயல்படுத்தப்பட வேண்டும். சமூக வானொலி ஊடகவியல், துடிப்பான  தகவல் அமைப்பாக காணப்படும் அதே வேளை நாம் நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் ஒரு தகவல் பாலமாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts