சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 4)

தனுஷ்க சில்வா

விஷேடமாக சமூக நிறுவனங்களில் தொடர்ந்தும் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சில நிறுவனங்களில் பெண்கள் பங்களிப்பு தொடர்பான சமூக பொறுப்புணர்ச்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போன்றே பெண்களாலும் பெண்களில் குரலை நிராகரித்து வருகின்ற நிலைமைகள் தொடர்கின்றன. 

சமூக நிறுவனங்கள் பெரியளவில் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. சில விடயங்களில் பெண்களின் பங்களிப்பு குறித்து சில நிறுவனங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. ஆச்சரியமான விடயமாக அமைவது பெண்கள் ஊக்குவிக்கப்படாத நிலை தொடர்வது போன்றே சில இடங்களில் பெண்களின் குரலுக்கும் உரிய இடம் வழங்கப்படுவதில்லை. உதாரணமாக முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிலையத்தின் கண்காணிப்பின் படி சமூகத்தில் சமாதானத்தின் தேவை குறித்து அரசியல் ரீதியாக பொது இடத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கூட மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து இலங்கைக்கு நீண்ட கால வரலாறு இருந்து வருகின்ற அதே நேரம் நிலையான மகளிர் பங்களிப்பு 10% வீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பெண்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குவது மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பாக சட்டங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் திருமணம் முடித்த பெண்கள் மிதான வன்முறைகள் குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்ப்படுவதில்லை. வீட்டுத்துறை சார்ந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமும் இதுவரையில் பலமான முறையில் அமுல்படுத்தப்படவில்லை. சில சமூகங்களில் இடம்பெறும் இளவயது திருமணங்கள் உட்பட பல விடயங்களில் திருத்தங்கள் அவசியமாகின்றது என்ற விடயத்தில் இன்னும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆவது மனித உரிமைகள் மாநாட்டு அமர்வில் சமர்ப்பித்த அறிக்கையின்படி இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் வன்முறைகளை விரைவில் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

நாம் உணர்வு பூர்வமாக சிந்திதால் இலங்கையை பொறுத்தவரையில் தந்தை வழி சமூக கட்டமைப்பில் நாட்டின் சமூக கலாசார தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியமாகின்றது. அத்தகைய மாற்றங்களானது துரிதமாக செய்யப்பட வேண்டி இருப்பதோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் மூலமான அங்கீகாரத்துடனான சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வாக அமைய வேண்டும். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமாதானத்தை கட்டியெழுப்புவது மற்றும் மீள்கட்டமைப்பு போன்ற விடயங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகமாக ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூக அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் “சட்டத்தின் விளையாட்டை” மாற்றியமைத்து நுன்பாக மட்டங்களில் இருந்தான பங்களிப்பை பெறுவதற்காக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது.  பெண்கள் தொடர்பான அரசியல் பொருளாதார துறைகளிலான முன்னேற்றம் மற்றும் திறன் விருத்தி உள்ளிட்ட விடயங்களில் பெண்களின் தங்கி இருக்க வேண்டிய பங்களிப்புக்கு உயரிய இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

முடிவுரை

இலங்கை வரலாற்றில் பல்துறைசார்ந்த நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற முக்கியத்துவமும் சந்தர்ப்பங்களும் குறுகிய மட்டத்திலே இருந்து வருவதோடு யுத்தத்தின் பின்னரான மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் பெண்களின் வழிநடத்தல் அவசியமாக தேவைப்படுகின்றது. தேசிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் பெண்களாலும் தலைமைத்துவம் வழங்கப்பட்டு பங்களிப்பை பலப்படுத்தும் வகையிலான விடயங்கள், சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற தேவைகளின் நிமித்தம் அரசியல் ரீதியான மாற்றங்கள் அவசியமாகின்றது. அதன் மூலமே நிலையான, சமாதானம் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அவ்வாறான மாற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே அகப்பை பிடிக்கும் கரங்களால் உலகை ஆள முடியும் என்ற கூற்றை உண்மைப்படுத்த முடியுமாகின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts