வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 11)
தனுஷ்க சில்வா
யுத்தத்தின் விளைவாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற விடயம் சர்வ சாதாரணமான விடயமாக மாறி இருக்கின்றது. யுத்தம் காரணமாக குடும்பத்தை வழி நடத்தக் கூடிய ஆண் துணை இல்லாமல் போனமை மற்றும் கணவன்மாறை இழந்துள்ள பெண்கள் போன்றவர்கள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு பாலியல் தொழிலுக்குள் பிரவேசித்துள்ளனர். வடக்கில் “மடு” பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பரவலாக காண முடிகின்றது.
இலங்கையில் யுத்தத்தால் ஏற்பட்ட எதிர் முரண் விளைவாக மாத்திரமன்றி இத்தகைய சூழ்நிலை அமையவில்லை. அவ்வாறே பெண்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களாகவும் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கக் கூடிய பெண்களை கொண்ட தேசம் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணமாகவும் அமைகின்றது. ஆனாலும் யுத்தத்தால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக துயர வாழ்க்கையை அனுபவித்தனர் என்பதை நாம் மனதில் வைத்தவர்களாக கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி சொந்தக் காலில் நிற்க முற்பட்டவர்கள் பெண்கள் என்பதும் நினைவு கூறப்பட வேண்டிய விடயமாகும்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பெண்கள் என்ற வகையில் அவர்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாக மனித உரிமை மீறல்கள், இன சார்பான அரசியல் மற்றும் ஆயுத முரண்பாடுகள் போன்றவாகும். அதன் காரணமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நோக்கில் உள் நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பு” (AWAW) என்ற தொண்டு நிறுவனங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த அமைப்பானது 2001 ஆம் ஆண்டு கண்டியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். அவ்வாறே உள்நாட்டு மட்டத்தில் “பெண்களது சமாதான கூட்டணி” மற்றும் சர்வதேச மட்டத்தில் ‘ICRC’. போன்ற அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுவதாயின் யுத்த நிறுத்தம் மீறப்பட்ட காலப்பகுதிகளில் இருதரப்பு பெண்களையும் ஒரே வழியில் ஒன்றிணைத்ததாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதார தேவைகள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றை நிறைவேற்றுவதற்காக முதுகெலும்பாக இருந்து செயலாற்றியதை குறிப்பிடலாம். துரதிஷ்டவசமாக இந்த அமைப்பானது பெண்களை அரசியல் ரீதியாக பலமான ஒரு சக்தியாக மாற்றியமைப்பதில் வெற்றி பெறாத அதே நேரம் மறுபுரமாக அரசியலில் கொள்கை வகுப்பாளர்களாக பெண்களை ஈடுபடுத்துவதற்கும் முடியாமல் போனது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பாக இலங்கையின் நிலையில் இந்த விடயமானது பெண்களின் நிலையில் இருந்து பார்க்கும் போது ஒரு பிரதான பின்னடைவாகும்.
அண்மைக் காலமாக நடைபெற்று வந்துள்ள அதிகமான முரண்பாட்டு சூழலில் உள்ளநாட்டு ஆயுத முரண்பாடானது பெண்களை சுயமாக செயற்படுபவர்களாக பொருளாதார ரீதியாக அவர்களை பலப்படுத்தவதற்காக போதுமான சுய பலத்தை கடந்த 30 வருட கால யுத்தம் விளைவாக தந்திருக்கின்றது. ஆனாலும் இந்த முரண்பாட்டின் அடிப்படையாக அமைவது பெண்களது வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவதில் பல தடைகளை சந்திக்க நேரிட்டதாயினும் இந்த போக்கானது நிலையான சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றி சிந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உந்து சக்தியாக அமைந்துவிட்டது.
இந்த ஆலோசனையானது மிகவும் பரந்தளவில் அவதானத்தை ஈர்த்த விடயமாகும் விஷேடமாக அரசாங்க தரப்பு மற்றும் விடுதலைப் புலிகளின் தரப்பை உள்ளடக்கிய பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக யுத்த நிறுத்த காலப்பகுதியில் பால் நிலை விவகாரங்களுக்கான இணைக் குழுக்களை ஏற்படுத்துதல் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசப்பட்ட விடயமாகும். முரண்பாட்டு தீர்வாக இத்தகைய செயற்றிட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமே வழங்கப்பட்டதாயினும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இதற்கு உயர்ந்த பட்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயம் என்று குமுதினி சாமுவெல்ஸ் சுட்டிக்காட்டி உள்ளார். யுத்த நிறுத்த காலப்பகுதியில் உடனடியாக சமாதானம் கட்டியெழுப்படவில்லை என்றாலும் பெண்கள் ஒரே மேசையில் அமர்ந்து யுத்தத்துடன் தொடர்புபட்ட பெண்கள் மீதான பாதிப்புக்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு வழிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முக்கியமான வெற்றிகளாக கருதக் கூடியவைகளாகும்.