மறைத்தல் மற்றும் தேடல் ஊடகவியல் : பொதுமக்களின் தனிப்பட்ட விடயங்களிலான ஆக்கிரமிப்பு
சசினி டி.பெரேரா
மனித கண்களுக்கு புலப்படாத, புலன்களுக்கும் எட்டாத பல நுட்பமான விடயங்கள் நடை முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சமூக நிகழ்வுகள் உள்ளன. எதிர் மறையான சமூக விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்களின் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஊடகங் களின் பங்காகும். இதுபோன்ற நிகழ்வுகளின் யதார்த்தத்தை ஊடகங்கள் அதே வழியில் வெளிப்படுத்துகின்றன. அதாவது உண்மையை வெளிச்சம் போட்டு வெளிப் படுத்துகின்றன. மறைக்கப்பட்ட சமூக நடைமுறை பிரச்சினைகளில் ஈடுபடுபவர் களைப் பிடிக்க இரகசியஃமறைக்கப்பட்ட படப்பிடிப்பு கமராக்களை அல்லது பதிவு களைப் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்ற செய்திகளைப் பெறுபவர்களும் இந்த ஊடக ஒளிபரப்புகளைப் பார்க்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். மறுபுறம், கேமராவில் சிக்கியவர்களின் தனியுரிமை மீது மறைக்கப்பட்ட கேமரா அறிக்கையின் தாக்கம் மற்றும் ஊடக நெறிமுறைகள் மற்றும் பத்திரிகையின் ஜனநாயகம் பற்றிய கேள்வி விவாதத்திற்குரியது. ஆனால் இரகசிய படப்பிடிப்பு அல்லது பதிவு செய்தல் உண்மையை வெளிப்படுத்த பங்களித்தது, இதனால் புலனாய்வு செய்திகள் மூலம் பத்திரிகைகள் எதிர்மறை நடத்தைகள் அல்லது குற்றங்களுக்கு எதிராக தேவையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
ஒவ்வொரு மனிதரதும் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனித்துவம் என்பது ஐ.நா. அமைப்பின் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். மறுபுறம், தகவல் அறியும் உரிமை இந்த தனியுரிமை உரிமைகளுடன் முரண்படுகிறது. ஸ்பை கேமராக்கள், தேர்ந் தெடுப்பு அல்லது அகநிலை இல்லாமல் தரவைப் பிடிக்கின்றன. இது சில நேரங்களில் ஜனநாயக ஊடகக் கொள்கைகளின் கீழ் அல்லது வணிக நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்தப் படுகிறது. உளவு அல்லது சி.சி.டி.வி கமரா கருவிகளின் பயன்பாடு முதலில் நிறுவனங்களின் பாதுகாப்பையும் அவற்றின் பொருட்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப கருவியாக பயன்படுத்தப்பட்டது.
“இது ஒரு பொம்மை அல்ல. இரகசியமாக பதிவுகளை இடக்கூடிய மறைக்கப்பட்ட கமராக்களானது மிக முக்கியமான ஊடகவியல் உபகரணமாகும். அவற்றை இலேசாக கருதிவிட முடியாது.” என்பதாக லூரி பியூ (குளோபல் 16 ஒ 9 புலனாய்வு காட்சி)
பத்திரிகைத் துறையில் இரகசிய கமராக்களைப் பயன்படுத்துவதன் நோக்கம், உண்மையைக் கண்காணித்தல், உண்மையை வெளிப்படுத்துதல், ஆபத்தான சமூக நிகழ்வுகளைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பித்தல் மற்றும் கமரா லென்ஸ் அல்லது ஒலிப்பதிவு கருவிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தொடர்புடைய சமூக நிகழ்வுகளுடன் தொடர்புடைய உண்மையான பண்புகளையும் இயற்கை எதிர் வினைகளையும் வெளிப்படுத்துவதாகும். சிபிசி, குளோபல் நியூஸ், சிடிவி போன்ற ஊடக நிறுவனங்களில் ஊடக செயற்பாட்டில் அறிக்கையிடல் கடமையாளர்களாக பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இரகசிய கமராக்களைப் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இத்தகைய கமரா தொழில்நுட்பம் அவர்களால்; மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவர்களது வெளிப்படுத்தல் தொடர்பான பொறுப்பை குறித் ஊடக நிறுவனம் பொறுப்பேற்கின்றது.
ஹிரு டிவி செய்தி ஒளிபரப்பில் “சி.ஐ.ஏ” நிகழ்ச்சியும் டிவி தெரண செய்தி ஒளிபரப்பில் “உகுசா” நிகழ்ச்சியும் இதுவரை ரகசிய படப்பிடிப்பு மற்றும் பதிவு மூலம் இலங்கையில் புலனாய்வு தேடல் தகவல் வெளிப்படுத்தும் அறிக்கையிடல் ஊடக முறையை பயன்படுத்தி வருகின்றன. இந்த இரண்டு புலனாய்வுத் தேலடல் நிகழ்ச்சிகளும் சமுதாயத்தை சரியானதிசையில் வழிநடத்தவும், இது போன்ற ஒழுங்கீனமான வேலைகளi செய்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கவும் ஒரு சிறந்த சேவையைச் செய்கின்றன. இந்த சமூகநலச் சேவையின் போது,சமூகத்திற்கு உண்மையைக் காண்பிப்பதற்கும், இது போன்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்ளாமல் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கும் சில சமயங்களில் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு நபர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. சில தனி நபர்களின் (குறிப்பாக 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், திருமணமாகாத இளைஞர்கள், துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள், பிரபலங்கள் போன்றவர்களின்) தகவல்களின் இரகசியத் தன்மை காரணமாக, இந்த சமூக சேவை நிகழ்ச்சிகளும் கடுமையான சவால்களை எதிர் நோக்குகின்றன. மனித உரிமைகள், ஊடக ஒழுக்கக்கோவை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகள், ஆகியவற்றை கையாள்வதிலும் இத்தகைய சவால்களை சந்திக்க வேவுண்டி ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக, ஹிரு சி.ஐ.ஏ. நிகழ்ச்சியில் ஜா-எல பகுதியில் உள்ள ஒரு கலவன் பாடசாலையில் 63 வயதான பெண் ஒருவர் வார இறுதியில் சூதாட்டம் நடத்தியது மற்றும் அந்த பாடசாலை மாணவர்களுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசி உரையாடுவது தொடர்பில் 2019 ஜனவரி 28 அன்று அதன் செய்தியில் தகவலாக ஒளிபரப்பப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகளிலிருந்து, ஜா-எலவில் உள்ள இந்த கலவன் பாடசாலை பற்றிய தகவல்களை அல்லது பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் எளிதாக அடையாளம் காட்டும் வகையில் இருந்தது. இதன் காரணமாக, முழு பாடசாலையும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படும். அது நேரம் இது மீண்டும் நிகழாமல் தடுக்க இந்த சம்பவத்தின் ஒளிபரப்பு பாடசாலை நிர்வாகத்திற்கும் பாதுகாப்பு துறையினருக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அது எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியமானது என்பதைப் பார்க்க வேண்டும். இதன் காரணமாக அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பொறுப்பு குறித்து சிக்கல் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய ஒளிபரப்பானது பாடசாலையின் யதார்த்தமான நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது எனலாம். ஆனாலும் இந்த சம்பவம் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பாடசாலையின் மரியாதை, பற்று குறித்து தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஒருவதைமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம் இது இந்த வழியில் கூட இதுபோன்ற விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப் படாவிட்டால் ஊடகங்கள் அதன் பொறுப்பை புறக்கணித்து விட்டன என்று கருதலாம். இது மிகவும் சிக்கலான நிலைமையாகும்.
(காட்சி மூலம்- https://www.youtube.com/watch?v=-FGAuHcAS-Q )
2017 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி டி.வி. தெரணவில் உகுசா இரகசிய கமரா தகவல் பதிவு மூலம் திஸ்ஸமஹாராமா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் கடத்தல் சம்பவம் குறித்து இரகசியமாக பதிவு செய்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்த நோக்கத்திற்காக, பல இளைஞர்கள் தங்களுக்கு தினசரி வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டு வருவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு வருமான வழிகள் இல்லாததால் மணல் அகழும் தொழிலில் ஈடுபட்டு வந்த அதே ரேநம் அப்பிரதேச மக்களுக்கு இந்த மணல் அகழ்வு காரணமாக பலவிதமான சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மோசடி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் இளைஞர்கள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் கிராமவாசிகள் ஆகிய இருவரும் மோசடி மூலம் பொருளாதார பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். இவ்வாறான வசதியற்ற இளைஞர்கள் இதுபோன் தோழில்களில் ஈடபடும் வகையிலான நடவடிக்கைகளை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பதிவிட்டு வெளிப்படுத்தும் போது அவர்கள் பின்னர் வேறு தொழில்களில் ஈடுபட முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலைமைகளும் உள்ளன. ஆனால் இது போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படாத போது அது சுற்றுச் சூழலுக்கும் கிராம மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதே போல் ஊடகங்களும் அவர்களின் பொறுப்பை சரிவர நிறைவேற்றாத நிலையை உணரலாம். இது சிக்கலான மனிதாபிமான போர் ஆகும்.
(காட்சி மூலம்- https://www.youtube.com/watch?v=qHfWnhfVquM )
இரகசிய படப் பிடிப்பு அல்லது பதிவு செய்தலுடன் கூடிய புலனாய்வு அறிக்கை என்பது நமது சமூகத்தின் சம நிலையற்ற இருப்பை திறம்பட புலனாய்வு செய்ய ஒரு பிரதான விடயமாக அமைகின்றது. ஊடகங்களின் இந்த பாத்திரத்தின் மத்தியில், பத்திரிகை சுதந்திரம் தகவல் அறியும் உரிமை, மனித உரிமைகள், தனித்துவம் பற்றிய விளக்கங்கள் சமூக விவகாரங்கள், பொது சொற் பொழிவுகள், நற் பெயர் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு சிறந்த பெரிய காட்சியை வெளிப்படுத்த போராடுகின்றன.இரகசிய படப்பிடிப்பு அல்லது பதிவு செய்தல் தொடர்பான விடயங்கள் இரண்டு வழிகளில் மதிப்பிடப்பட வேண்டும். இரகசிய படப்பிடிப்பு அல்லது பதிவு மூலம் வெளிபப்டுத்தப்படும் விடயமானது ஊடக தர்மத்தையும் ஒழுக்கநெறிகளையும் மீறாத விடயம் என்பதை முன்வைக்கப்படுகின்ற தகவலோடு சம்பந்தப்படும் வகையில் ஆசிரியரின் அல்லது ஆசிரிய தலையங்கத்தோடு நியாயமானதாக முன்வைக்கப்பட வேண்டும். குறித் விடயத்தால் பொதுமக்களுக்கான பாதிப்புக்கள் பற்றி நியயமான முறையில் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையீடு செய்வது அல்லது தனித்துவத்தை பாதிக்காத வகையில் ஒளிபரப்பப் படுவதற்கு முன்னர் முகங்களை தெளிவாக காட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொருத்தமற்ற செயல்கள் அல்லது நடத்தைகளை வெளிப்படுத்தாமல் நடந்துகோள்ள வேண்டும். அல்லது ஒழுங்கமைக்க வேண்டும், அவை குறிப்பாக குழந்தைகளால் செய்துபார்க்க ஊக்கமளிக்கப்படுபவையாக அமையக் கூடாது.