கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மரண தண்டனையும் வாழ்வதற்கான உரிமையும்

சச்சினி டி பெரேரா

மக்கள் ஒழுக்கத்துடன் உயிர் வாழ்வதற்காகவும் வன்முறை மற்றும் நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பாதுகாப்பு பெறவும் என்று மனிதர்களால் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கொலை செய்யும் அளவிற்கு குற்றம் புரிந்து தண்டனை பெற்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது ஒழுக்கவியலின் நிலையை நெருங்குகிறதா, இல்லையா என கேள்வி எழுப்பப்படுகின்றது. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஒழுக்கநெறி குறித்து பல சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,தென் கொரியா உள்ளிட்ட பலநாடுகள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் சட்டத்தை மீறியவர்களுக்கு மரண தண்டனை நியாயமானது என்பதை ஏற்றுக் கொள்கின்றன. கொலையாளிகள் மற்றும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களை கொலை செய்த குற்றங்கள் மற்றும் சொத்து சேதங்களுடன் ஒப்பிடும்போது, மரணதண்டனையின் பின்னணியில் உள்ள ஒழுக்கநெறியில் அக்கறை கொள்வது முக்கியமல்ல என்ற கருத்தை அந்த அரச சட்ட வல்லுனர்கள் வலியுறுத்துகின்றார்கள். மிகவும் ஒழுக்கமான கலாச்சாரங்கள் கொண்ட சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூட கண்டனம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக நிற்கவில்லை. உளவு, தேசத்துரோகம், கடத்தல், ஆயுதக் கொள்ளை, வாடகைக்கு கொலை செய்தல் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குற்றங்கள் போன்றவை ஒரு நபரை தூக்கிலிட வலுவான காரணங்கள் என சில அரசாங்கங்கள் கூறுகின்றன. இந்த சர்ச்சைக்குரிய விவாதங்கள் இரண்டு அம்சங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. நீதி மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை உரிமைகளுக்காக மரண தண்டனையின் தார்மீக பயன்பாடு அல்லது வாழ்வதற்கான உரிமையை மீறியதற்காக குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது.
  2. குற்றவாளியின் சமூக உரிமையாக வாழ்வதற்கான அடிப்படை உரிமை அல்லது பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை உரிமையை மீறும் வகையில் மரண தண்டனையை ரத்து செய்தல்.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் 285 வது பிரிவின்படி, நாட்டின் ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் இடத்தில் குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 286 வது பிரிவின்படி, சம்பந்தப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படும் வரை குற்றவாளி சிறை கண்காணிப்பாளரின் காவலில் வைக்கப்படுவார். இலங்கையில் இறுதியாக மரண தண்டனை நிறைவேறற்ப்பட்டது 1976 ஜூன் 23 ஆம் திகதி ஆகும். ஒரு துசம் என்ற அடிப்படையில்  நாமும் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றோம். எங்கள் நாட்டு சட்டத்தின் அடிப்படையில் மரண தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளித்தாலும், மரணதண்டனை எப்போது நிறைவேறற்ப்படுவது என்று தெரியாத நிலையில் இத்தகைய தண்டனைக்கு உள்ளாகியவர்களின்  எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக உயர்வடைந்து கொண்டு செல்வதை காண முடிகின்றது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில்களில் அடைக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்.

மரண தண்டனையின் பின்னணியில் உள்ள கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை இன்றைய இது ‘நல்லது மற்றும் கெட்டது’ என்று நாம் கருதக்கூடிய அச்சுறுத்தல் நிலையை அவதானிக்க முடிகின்றது. ஒரு மனிதனின் எதிர் மறை மற்றும் நேர் மறை உரிமைகளுக்கு இடையில் கணக்கிட முடியாத வேறுபாட்டை இது சுயமாக சித்தரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளி ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் மரண தண்டனையும் ஒழுக்கமும் உலகில் இருக்கும் சிறந்த சட்ட நடை முறைகளைப் பயன்படுத்தினால் கூட ஒரு சரியான தீர்வைச் வழங்க முடியாது. ஒரு நாட்டின் சட்ட அமைப்பு வெளிப்படையாக நல்லொழுக்கம் மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட பொறுப்பு பற்றியும் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கின்றது. பல நிலையில் சட்ட அமுலாக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்தால் மேலும் பலவிதமான அநீதியை நாம் காணலாம்.

ஒரு குற்றவாளி எத்தனை முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் குற்றங்களைத் தேர்வு புரியும் நிலை இருக்குமானால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட நாட்டின் நடைமுறையில் உள்ள சட்ட அமுல்படுத்தலிலும் குறiபாடுகள் இருப்பதாக கருத முடிகின்றது. அலல்து மக்களை சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக வாழ்வதை நிர்ப்பந்திப்பதாக அமைய வேண்டும். அதன் மூலம் பிரசைகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். உண்மையில் பார்க்கின்ற போது  இது ஒருவகையில் சட்டத்திற்கும் ஒரு சமூகத்தின் தார்மீக இருப்புக்கும் இடையிலான போர் என்று கூறலாம்.

கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு ஒரு தகுதிகாண் காலமாக வழங்கப்பட்டு அவர்கள் திருந்தலாம் என்ற அடிப்படையில் சில நேரங்களில் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. எனவே, சில நாடுகளில் குறிப்பாக (பஹாமாஸ்,கியூபா, பிரான்ஸ், பெல்ஜியம், கத்தார், ஜமைக்கா, ஸிம்பாப்வே, உகாண்டா) ஒரு தடையை விதிக்கும் வகையில் மரண தண்டனைக்கு மறைமுகமான பதிலாக இல்லை’ என பதிலளிக்கிறது. (இங்கு மரண தண்டனையை தடுத்தல் என்பது ஒரு அரச கொள்கை அல்லது அரசாங்கத்தின் நடவடிக்கையை இடை நிறுத்துவதற்கான ஒரு இணக்கப்பாடாகும்) அல்லது அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையை வழங்கும் நடை முறையை பின்பற்றுவதாகும்.

ஏனெனில் மரண தண்டனை விதிகக்ப்பட்டவர்கள் தொடர்பாக தண்டனை விதிகக்ப்படுகின்ற முறைகளான தூக்கிலிடப்படுதல், துப்பாக்கிச் சூடு, கல்லெறிதல், மின்சார நாற்காலி, தலை துண்டிக்கப்படுதல், வாயு உள்ளிழுத்தல் மற்றும் ஆபத்தான ஊசி மருந்துகள் என்பன தங்களது மரபுரீதியான தார்மீக நம்பிக்கைகள் மற்றும் பிற சமூக கட்டமைப்புகளின் அடிப்படையில் மனிதாபிமானமற்ற முறைகளாக கருதுகின்றனர். சில நேரங்களில் குற்றவாளி குற்றவாளி அல்ல எனக் கண்டறியப்பட்ட சந்தர்ப்பங்களில், அப்பாவிகளின் வாழ்க்கை உரிமை மீறப்படுகிறது. சில வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சந்தர்பப்ங்களுமுள்ளன. உதாரணமாக, வீகிங்கான் (சீனா, 1984), ஹாரிக் ளீசன் (அயர்லாந்து, 1941), மஹ்மூத் ஹ_சைன் மட்டன் (பிரித்தானியா-1952) மற்றும் அலெக்ஸாண்டர் கிராவ் சென்கோ (ரஷ்யா, 1983) ஆகியவர்கள் மீதான தண்டனைகள் சட்டத்தினதும் அதன் மூலமான நீதி தீர்ப்பினதும் தவறான அல்லது கண்மூடித்தனமான பயன்பாட்டிற்கான சில உதாரணங்களாக கூறலாம். இத்தகைய சர்ச்சைக்குரிய வழக்குகள் ‘தார்மீக மற்றும் நியாயமான சட்ட நடவடிக்கைகளின் கருத்தாய்வுகளைத் திருத்தியுள்ளன. உதாரணமாக, அயர்லாந்தில் ஹாரி க்ளீசனின் மரண தண்டனை (1941)  பற்றி குறிப்பிடும் போது அவர் ஏழு குழந்தைகளின் தாயான மேரி மோல் மெக்கார்த்தியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். க்ளீசனின் மாமாவுக்கு சொந்தமான ஒரு பண்ணையில் அவள் தலையில் இரண்டு முறை சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால். வழக்கின் முதல் மதிப்பீட்டில், க்ளீசன் தான் கொலை காரன் என்பது தெளிவாகத் தெரிந்தது. க்ளீசனின் மகள் வழங்கிய சாட்சியங்களை ஆராய்ந்த போது, க்ளீசனின் மரண தண்டனை தொடர்பான நீதிமன்ற ஆய்வின் அடிப்படையிலஅவர் மீது தவறான அணுகுமுறையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக தெரிய வந்தது. அவர் மீதான தவறான தண்டனை வழங்கலின் பின்னர் மீண்டும் கவனம் செலுத்திய அரசாங்கம் அவருக்கு மன்னிப்பு வழங்கியது, பின்னர் ஐரிஷ் மனிதாபிமான அமைப்புகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததோடு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற  போராட்டங்களை ஆரம்பித்தன.இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், தார்மீக நீதியோ அல்லது மரண தண்டனையோ எதிர்கால குற்றங்களை தடுப்பதற்கான எளிதான வழிமுறையாக இல்லை என்பதாகும். இத்தகைய சிக்கலான சூழ்நிலைகள் மனித வாழ்க்கையின் பெருமதியை பல நிலைகளில் இருந்து கவனம் செலுத்தி தீர்மானங்கள் முடிவுகளை எடுக்க எம்மை நிர்ப்பந்திப்பதாக அமைகின்றது. சட்டமும் தார்மீக நீதியும் இரு புறமும் வெட்டும் ஒரு களிமண் உருளை போன்றது. ஒரு குற்றத்தின் ஈர்ப்பு, மரபுவழி சமூக-அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நடை முறைகள், மரணத்தின் பின்னணியில் உள்ள திகில் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் வெளிப்படைத் தன்மை ஆகியவை ஒருவரின் உரிமை தொடர்பாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் போது எமது சில வகையான முடிவுகளை எடுக்கும் நடைமுறைகளை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளுவதாக அமைகின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts