பெண்களைச் சுற்றி பிண்ணப்பட்டுள்ள கதைகள்
ஐ.கே.பிரபா
ஆண்களை விட பெண்கள் சமூக ஊடகங்களை குறைவாகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதில் அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பின்னணியில், குறிப்பாக இலங்கை சமுதாயத்தில் ஒரு பெண் தவறு செய்தால், முழு பெண் சமூகத்தையும் இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதையும் காணலாம். அதே வேளை மத பின்னணியைக் குறைகூறச் செய்யும் வெறுக்கத் தக்க பேச்சு உள்ளடக்கங்களில் முஸ்லிம் பெண்கள் ஒரு முக்கிய இலக்காக இருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில், இணையத்திலும் ஊடகங்களுக்கு வெளியேயும் பெண்களைக் குறிவைத்து வெறுப்புணர்வை உருவாக்கும் போக்கு உள்ளது. மேலும் இது போன்றசம் பவங்களுக்கு பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும் கூட பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். (https://www.coe.int/en/web/human-rights-channel/-/no-to-online-hate-speech-against-wome-1)
சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (IFJ) மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆகியன உலகளவில் சுமார் 1200 பத்திரிகையாளர்களிடம் இருந்து தகவல்களை அல்லது கருத்துக்களை திட்டியதன் மூலம், வெறுப்புப் பேச்சு மற்றும் அது போன்றபல் வேறு முறைகேடுகளுக்கு இணையத்திலும் இணையத்திற்கு வெளியேயும், பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களும் ஆளாகியிருப்பதற்கு 20% ஆன சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக உறுதியாகி இருக்கின்றது. இந்த ஆய்விற்கு உட்படுத்தப் பட்டவர்களில் சுமார் ⅓ பங்கினர் அல்லது 73% வீதமானோர் இணையத்தில் வெறுக்கத்தக்க பேச்சால் உணர்ச்சி வசப்பட்டதாகக் கூறினர். பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் பெண்களின் உரிமைகளை மட்டுமல்ல, அவர்கள் மத்தியில் நிலவி வரும் மானிட அடிப்படையிலான பிணைப்புக்கள் மற்றும் சுயமான நம்பிக்கைகளையும் மீறுவதாக இருக்கின்றது என்றும் கூறலாம். (https://www.aljazeera.com/opinions/2020/11/25/women-journalists-are-facing-a-growing-threat/ )
அரசியல் அல்லது வேறும் வேறுபாடுகள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற தகைமை என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லா மனிதர்களும் உரிமை உள்ளவர்களாவர். மேலும், எவரும் அவர் சாழும் நாட்டில் அல்லது ஆள்புலத்தின் அரசியல், சட்ட்ம் அல்லது சர்வதேச அங்கிகார நிலைப்பாட்டின் அடிப்படையில் அது சுதந்திரமான, அல்லது மரபுகளை பின்பற்றும் நாடாக, அல்லது தன்னாதிக்கம் கொண்ட இறைமை உள்ள நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினும் எத்தகைய வேறுபாடுகளும் காட்டக் கூடாது.”
1979 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாட்டின் 5 வதுபிரிவு “பெண்களுக்கு எதிரான தவறான எண்ணங்களை நீக்கவும்”என மேலும் கூறுகிறது. 2020 பிப்ரவரி 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பெண்கள் உரிமைகள் மாநாட்டின் 43 வது அமர்வு நடைபெற்றது, இதில் பெண்களின் உரிமைகள் அரசியல் மாற்றாக இருக்கக் கூடாது என்று சுட்டிக் காட்டப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், நாட்டின் பிற குடிமக்களைப் போலவே பெண்களுக்கும் அதே உரிமைகள் மற்றும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்று நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்; என்று கூறுகிறது.
“2019- கொழும்பு சமூக ஊடக அறிவிப்பு” மூலம் நாட்டில் அவ்வப்போது சமூக ஊடகங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்பொழிவுகளுடன் டிஜிட்டல் கல்வியறிவு கொண்டதகவல் சமூகத்தை அணுகுவதற்கான உரிமையை உறுதி செய்வைத்தான் பொருட்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பொறுப்பான சமூக ஊடக பயனர்களை நல்ல முறையில் பயன்படுத்த ஊக்குவிக்க சமூக ஊடக பயன்பாட்டிற்கான தொடர் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக பல செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக அவற்றுள் சில வருமாறு : –
- அமெரிக்காவின் உப ஜனாதிபதியின் பிரமதம ஆலோசகர் ரோஹினி கொசொக்லு (https://m.facebook.com/BusinessNews.LK/photos/a.222104818429427/733283573978213/?type=3&sfnsn=mo )
- நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வனுஷி வால்டர்ஸ் (https://m.facebook.com/story.php?story_fbid=141540001060763&id=103699941511436&sfnsn=mo )
- கோவிட் வைரஸின் இரண்டாவது அலை மினுவாங் கொடா ஆடைத் தொழிற் சாலையில் பெண்களால் ஏற்பட்டது என்றும் பெண்கள் மற்றவர்களுக்கு நோய் பரவ காரணமாக இருந்தார்கள் என்றும் வெறுப்பூட்டும் கதைகளும் குற்றச் சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.(https:// www.facebook.com/Liveat8.lk/videos/2772897509702171/?sfnsn=wa )
- பெண்கள் கலைஞர்களின் தனிப்பட்டவாழ்க்கை (சதுரிக்கா பீரிஸ் உட்பட 14 கலைஞர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்) (https://www.gagana.lk/health/81/101288 )
- தாதியான புஷ்பா ரம்யானி சொய்சா மீது சமூகஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான செய்திமற்றும் வெறுக்கத்தக்க பேச்சு
- “பூமி ஹரேந்திரன்” மற்றும் “யாரா ஆலன” போன்றோர் ஒரு பெண்ணாக (திரு நங்கைகளாக) மாறியமைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்கள்.
- 15 வயது ஜப்பானிய பெண் மற்றும் அவரது இலங்கை காதலன் குறித்து இலங்கை சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
- “ஐ.டி. எச் மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஹிந்துரங்காலவில் ஒருவீட்டின் பின்னால் பிடிபட்டார” – திவய்ன 2020.11.23 செய்தி
- “கிரிபத்கொட சந்தையில் தேநீர் கடை நடத்திய கொரோனா தொற்றுக் குள்ளான பெண் காரணமாக 42 வர்த்தகர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர” – திவய்னா 2020.12.07 செய்தி
- “ஊமைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இரண்டு குழந்தைகளின் தந்தை 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டாரா” மௌபிம 06.11.2010
- இரண்டு பெண் அதிகாரிகளை ஆணையர்களாக இலங்கை விமானப்படையால் நியமிக்கப்பட்டமை.
IMAGE – 1 IMAGE – 2 IMAGE – 3 IMAGE – 4
மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பேஸ்புக் மற்றும் யூ டியூப்பில் வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகளையும், புகழ், பணம் மற்றும் ஒரு கருத்தை விரைவாக சமூக மயமாக்குவதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் ஒரு பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி செய்தி உருவாக்கப்படும் முறையையும் நீங்கள் அடையாளம் காணலாம். ஒருபெண் வெற்றி பெற்றால் அல்லது சமூக ஊடகங்களில் ஏதாவது நல்லது செய்தால் அதைவிட ஒரு பெண்ணைப் பற்றிய மோசமான மற்றும் பொருத்தமற்ற செய்திகள் சமூக ஊடகங்களிலும் பாரம்பரிய ஊடகங்களிலும் அதிகம் பகிரப்படுவதைக் காணலாம். அதன்படி, ஊடக பயன்பாட்டில் பெண்கள் எவ்வாறு கவனிக்கப் படுகின்றார்கள் என்பது குறித்து ஒருசிறப்பு ஆய்வு செய்யப்படவேண்டும்.
IMAGE – 5
தனக்கு துன்புறுத்தல் ஏற்படும் போதெல்லாம் பெண்கள் குரல் எழுப்பவேண்டும். சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது எப்படி என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் சார்பாக பெண்கள் தங்கள் கருத்துக்களை சமூக மயமாக்குவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், அதற்கு எதிராக ஒரு வலுவான சமூக கருத்தை உருவாக்குவதன் மூலமும் அவளுக்கு நேர்ந்த அநீதியை தட்டிக் கேட்க முடியும். தேசிய மற்றும் சர்வதேசஅளவில் பெண்களுக்காகப் பேசும் பலஅமைப்புகள் உள்ளன. அவையாவன :-
- செரோ ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு Sero Un Women
- ஆசியா மற்றும் பசிபிக்கின் ஐ.நா. பெண்கள அமைப்பு UN Women Asia and the Pacific
- பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச சமவாயம் International Convention for the Elimination of All Forms of Discrimination against Women – CEDAW
- பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார பிரிவு – குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம் பாட்டு பிரிவுகளை நிறுவுதல் Women and Child Affairs Division – Establishment of Child and Women Development Units
- தேசிய மற்றும் சிவில் சமூகம்ஃஅமைப்புகளுக்கான திறனை உருவாக்குதல் சனத்தொகை பெருக்க ஆரோக்கியத்திற்கான உரிமையை ஊக்குவித்தல் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் வன்முறைக்கு பதிலளித்தல் Capacity-Building for National and Civil Society / Organizations Promoting of the Right to Reproductive Health and Response to Violence Based on Gender – UNFPA
- மகளிர் உதவி நிறுவனங்கள் Women’s Aid Institutions
- சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் Women’s Movement for Freedom
- ‘அபிமானி’ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மன்றம் -‘Abhimani’ Women and Child Development Foundation
- மகளிர் முற்போக்கு சங்கம் Progressive Women’s Union
- உரிமைகளுக்காக பெண்கள் Women for rights
- ‘அலுத் பியாபத்’ பெண்கள் அமைப்பு ‘AluthPiyapath’ Women’s Organization
வதந்திகள், வெற்று வார்த்தைகள் அல்லது பெண்களை இலக்காகக் கொண்ட ஆபாசக் கதைகள் பரவுவதைத் தவிர்ப்பதன் மூலம் இலங்கை சமுதாயத்தின் பொது உறவுகள் மற்றும் மென்மையான நிகழ்வுகளை வெளி நாடுகளிலிருந்து மேம்படு த்துவதற்காக இது போன்ற பெண்ணிய உருவங்களைச் சுற்றி நேர்மறையான கதைகளை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாலினத்தை குறிவைக்கும் முறை கேடுகள், வெறுக்கத்தக்க பேச்சுமற்றும் போலி செய்திகள் பரவுவது குறித்து அரசாங்கம் சரியான நேரத்தில் கவனம் செலுத்த வேண்டும், இதற்கான உடனடி தீர்வுகளை உருவாக்குவதில் அரசாங்கம் முன்னிலை வகிக்க வேண்டும். பாலின சமத்துவம் மற்றும் வெறுக்கத் தக்க பேச்சு, வன்முறை மற்றும் தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராடுவதற்கான “ஹேஷ்டெக்” பிரச்சாரங்களைத் தொடங்க, பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களின் உரிமைகள் குறித்து அறிவுறுத்துவதற்கும் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பெண்களின் எதிர்காலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பத்திரிகைகள், தொலைக் காட்சிமற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துஷ்பிரயோகம் செய்யப்படும் அனைத்து பெண்களுக்கும் பேச உங்கள் பேனாவை ஒருஆயுதமாகப் பயன் படுத்துங்கள்!